சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.

Go down

Sticky ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 12:29

கோடு(code) எழுதிக் களைத்துப் போன ஸாப்ட்வேர் மக்கள் பப்(pub) பக்கம் ஒதுங்க நினைக்கும் மாலை நேரம். தலைதுவட்டியவண்ணம் கடிகாரம் பார்த்தேன். மணி சரியாக ஐந்தேகால். உடை மாற்றிக் கிளம்பினால் சரியாக இருக்கும். நேற்றே அனைவரிடமும் சொல்லிவிட்டேன் இன்று எனது பிறந்தநாள் விருந்து என்று. மேன்சனில் இருந்தும் மது அருந்தாத என் போன்ற தர்திகளுக்காக இந்த விருந்து. குடிமக்கள், பெருங்குடி மக்கள் எல்லாம் தனியாக அழைத்துப் போகவேண்டும் இந்த ஞாயிற்றுக் கிழமை. ஞாயிற்றுக்கிழமை நினைத்தாலே பயமாக இருந்தது.

நான், கௌதமன், சௌந்தர்,(நம்ம நிலா முற்றம் சவுந்தர் இல்லை. இவர் எமது மேன்சன் நண்பர்.) அரவிந், சபரி, ரகு மற்றும் பலர் கிளம்புவதாய்த் திட்டம். பாபு சாரை அழைக்கலாம். என்ன மனிதர் "வெள்ளைப்பல்லி" (தமன்னா) படம் போட்ட டி-ஷர்ட்டும், நாலு முழ வேட்டியுமாய் வந்து நிற்பார்.அது அவரிஷ்டம். ஆனாலும், "இராஜா இனிமே ட்ரீட், அது இதுனு ஸாரக் கூப்புடாதீங்கப்பா, அவரு பாட்டுக்கு கண்டதையும் சாப்டுட்டு வந்துட்டு ரெண்டு நாள், மூனு நாள் ஸ்டொமெக் அப்ஸட் ஆகி என்னப் படுத்தி எடுக்கிறார்" என்ற அண்ணியின் கோரிக்கையை ஏற்று பாபு ஸாரைக் கூப்பிடவில்லை. கனேஷை அழைக்கலாம். ஆனால் எல்லோரும் பேச்சுலர்கள். அவர் மட்டும்... இன்னொரு நாள் அவரை அழைத்துச் செல்லலாம்.

ஒருவழியாகக் கிளம்பினோம் மேன்சனைவிட்டு. வெளியே வந்ததும் இரண்டு சூப்பர் ஃபிகருகள் தமிழ்முரசு பேப்பர் போல் ( சும்மா நச்சுனு இருக்கு) எதிர்ப்பட்டன. என்னடா இது நம்ம ஏரியால இப்டி அல்ட்ரா மாடர்ன் ஃபிகருகளா என்று ஆச்சர்யப்படனர் என்னைத்தவிர மற்ற அனைவரும். பொதுவாக நான் ஸைட் அடிப்பதில்லை என்பதால் அங்கே அப்படி இரண்டு பெண்கள் வந்ததே தெரியாமல் என் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். பார்த்தவர்கள் சொன்னார்கள் " ராஜா ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், லோஹிப் ஜீன்ஸுமா ரெண்டு ஃபிகருங்க ராஜா. நல்ல சகுனம்" என்று. ம்ஹூம். எங்கள் ஈ.வெ.ரா. பெரியாரே மறுபடி வந்தாலும், மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை நல்ல நேரம் பார்த்து தொடங்க வைத்துவிடுவார்கள் இவர்கள். தமிழர்கள். நொந்தபடியே நடந்தேன்.


லாம்சியில் மசால் டீ குடித்துவிட்டு நடையைக் கட்டினோம். சிவன் கோவில் முக்குத் திரும்பும் முன் சந்தி சிரித்தது. இல்லையில்லை சந்தியில் நின்று நாங்கள் சிரித்தோம். சிரிக்க வைத்தது சவுந்தரின் காமெடி. இந்த மனிதரின் உடலில் ஒவ்வொரு துளி இரத்ததிலும் காமெடி தான் இருக்கும் போல. இவருடன் அமர்ந்து சேரன், தங்கர் பச்சான் படங்கள் பார்த்தால் கூட நாம் குலுங்கிச் சிரிப்பது உறுதி. அதிலும் ஒன்பது ரூபாய் நோட்டு என்கிற படத்தைப் பார்த்தபோது இவரின் காமடியில் அந்தத் திரையரங்கமே சிரித்தது. இடைவேளையின் போது ஸ்நாக்ஸ் கவுண்டரில் தியேட்டர் ஊழியர்கள் "ஸார் இது சீரியஸ் படம் சார். ஆனாக்க இம்மாங் காமடியா ஓடுனது இந்த ஷோ தான் சார்" என்றூ சொல்லி சவுந்தருடன் கைகுலுக்கினார்கள். அப்பேற்பட்டவர் சவுந்தர்.

அரவிந்த். வாட்டசாட்டம் என்ற வார்த்தைக்கு டிக்ஷ்னரியில் இருக்க வேண்டிய பெயர்.காசிவிநாயகாவோ ஆந்திரா மெஸ்ஸோ எனக்குச் சரியாக் கம்பெனி குடுப்பவர். இவர் அநியாயத்துக்கு நல்லவர். வாயில் வைக்கப் போவதைப் பிடுங்கித் தன்றால் கூட கொடுத்துவிட்டுச் சிரிப்பார். உங்களுக்கு இல்லாததா ராஜா என்பார். நைட் இரண்டு மணிக்கு அடித்து எழுப்பி என்ன அரவிந்து தூக்கமா என்றால் கூட கோபப்படமாட்டார். ஆமாங்க இராஜா, நீங்க தூங்கலையா என்று பரிதாபமாகக் கேட்பார். ஆனால் என்ன மனிதருக்கு தாமதமானால் பொறுக்காது. ஐந்து நிமிடம் லேட்டாய் வந்தால் கூட நாம் தொலைந்தோம். கத்திக் குவித்து களேபரம் செய்து விடுவார். எனவே இன்று அவரையும் கூட்டிக்கொண்டே கிளம்பிவிட்டாச்சு.

சபரி. நல்ல கலர். நல்ல உத்யோகம். நல்ல சம்பளம். ஆனால் நாய்ப் பிழைப்பு. ஆம். நான் மிருகங்களில் சிங்கமாகவும், பட்சிகளில் கருடனாகவும் இருக்கிறேன் என்றெல்லாம், கீதையில் சொன்ன கண்ணன், ஜொள்ளர்களில் சபரியாக இருக்கிறேன் என்று சொல்லாமல் விட்டது அந்தக் கண்ணனின் குற்றமேயன்றி எங்கள் சபரியின் குற்றமல்ல. சபரி அப்பேற்பட்ட ஜொள்ளன். அவன் செல்பொனின் அட்ரஸ் புக்கில் இருக்கும் நம்பர்களில் அவன் தகப்பனாரின் நம்பர் ஒன்று தவிர மற்ற எல்லாம் பெண்கலுடையதே. கேட்டால் "ப்ரென்ட்ஷிப், பிரதர்ஹுட்" என்று லெக்ஸர் அடிப்பான்.
avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 12:32

கௌதமன் - இவர் வழக்கம் போல் அன்றும் அலுவலகத்திலேயே உழைத்துக் கொட்ட, மற்றவர்களை டிராபிக்கும் இன்ன பிறவும் நாக் அவுட் செய்ய நாங்கள் கிளம்பிவிட்டோம். மவுண்ட்ரோடு சாந்தி தியேட்டர் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் தான் விருந்து. சாந்திதியேடர் சிக்னலை விடுத்து, புஹாரி ஹோட்டல் எதிரே சென்று சாலையைக் கடக்க முயன்றோம். எப்பப்பா. ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு வருவதற்குள் சாலையக் கடந்து விடவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். எப்பா சாமி. பொறியியல் பட்டதாரிகளும், மேலான்மை முதுகலைப்பட்டதாரிகளும் சேர்ந்து சாலையை கடப்பது என்பது, மனைவியை அழைத்துக் கொண்டு T.நகர் சென்றுவருவதை விடக் கஷ்டம் என்று புரிந்தது.


ஒருவழியாக சாலையைக் கடந்து, ஹோட்டல் காம்ப்ளக்சை அடைந்தோம். லிப்டிற்குக் காத்திருக்கையில், எதிர்ப்பட்டனர் சாரி சாரியாய். ஆம் சபரிக்கு மிகவும் பிடித நார்த் இந்தியன் ஆன்டிகள். அவன் டேஸ்டே அப்படித்தான். திருமணமான 35 வயதுகுட்பட்ட ஆன்டிகளென்றால் சபரி லாஸ் ஆப் பேயில் லீவு போட்டு ஸைட் அடிப்பான். இன்று அவன் காட்டில் மழை. ஆனால் மனதை உறுத்தியது ஒரு விஷயம். அவர்கள் கைகளில், காதுகளில், கழுத்துகளில், கால்களில் அட சேலைகளில் கூட பளபளா.
"எல்லாம் வட்டிக்கடையில சம்பாதிச்ச காசு ராஜா. உழச்சு சம்பாதிச்சா இப்டிலாம் மினுக்கிட்டுதிரிய மனசு வருமா?" சவுந்தர் ஃபீலிங்ஸாய்க் கேட்டார். எங்களுக்குத் தெரிந்து சவுந்தர் வாழ்க்கையில் பேசிய ஒன் அன் ஒன்லி சீரியஸ் டயலாக் இது தான். சண்டாளப் பாவி ரகு, இதற்கும் சிரித்தான். புல்டாகு.(bulldog) எதற்குச் சிரிப்பதென்று வேண்டாமா? கோபமாய், ஆதாரவு கேட்கும் பாணீயில் அரவிந்தைப் பார்க்க அவரும் சிரித்துக் கொண்டிருந்தார். வேறு வழியின்றி நானும் சிரித்துத் தொலைத்தேன். சபரி? அந்த உறையூர் ஊர்க்காளி மாடு, இது எதையும் கவணிக்காமல், தங்கு தடையின்றி மேய்ந்துகொண்டிருந்தது ராஜஸ்தானி மக்காச் சோளக்கதிர்களை.

உள்ளே சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். எங்களுக்கு எதிர்வரிசையில் ஒரு நார்த் இந்தியக் குடும்பம். சுமார் 20 பேர் இருப்பார்கள். மேலே இருக்கும் பத்தியில் சவுந்தர் சொன்னதை உறுதிபடுத்திக் கொண்டிருந்தது. நாங்களோ ஆர்டர் செய்தோம். அளப்பரை செய்தோம். ரவுண்டு கட்டிணோம். ரவுசு காட்டினோம். ஏழ்ரை செய்தோம். காப்ராக்கூட்டினோம்.சபரி திடீரென்று சொன்னான்
" ராஜா அந்த ஆன்டியப் பாருங்களேன்"
"டேய் இதெல்லாம் உன்னோட நிப்பாட்டிக்கோ, மரியாத கெட்ரும்"
"இல்ல ராஜா, நீங்க தேவத கவித எழுதுனீங்கலே அதுல ஒரு கவிதைல சொல்லுவீங்கள்ல "அடர் நீல நிறப் பாட்டியாலா"அது இது தான"
அவன் சொன்ன பெண்மனியைக் கவணித்தேன். கோபமாகச் சொன்னேன் " டேய் லூஸு, இது மயில் ப்ளூ, அதுவும் ஸாரி. இது கூடத் தெரியாத உனக்கெல்லாம் எத்தன கேர்ள் பிரண்ட்சு, வாராவாரம் டேட்டிங்கு. ம்ம்ம் இந்தியால பெண்கள நிலை உயரவே உயராதுரா"
"ஹலோ உங்களூக்கு எதும் பிகரு சிக்கலன்னு பொறாம"
அப்போது தான் கவணித்தேன் அந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் அல்ல. சட்டென்று நினைவுக்கு வந்தது.avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 12:55

அப்போது நாங்கள் 9- படித்துக் கொண்டிருந்தோம். அரையாண்டுப் பரிட்சை லீவு. நானும், மாரியும் சாவடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அபோது ஓடோடி வந்தனர் பாலுவும், இருளான்டி (@) இருளனும். கேட்டோம் " என்னா பாலு, என்னா இருளு எதும் ஏழ்ரையா?"
இல்ல பங்களிகா. இங்க வாங்கடா.
எங்கடா.
டேய் பொக்குனு வாங்கடா சீக்கிரமா.

சென்றோம். மதுரையின் கீழச் சித்திரை வீதியை சென்னையின் சௌகார்பேட்டுக்கு ஒப்பிடலாம். வடநாட்டில் இருந்து பிழைக்க வந்து, வந்த புதிதில் எங்களுக்குக் கூளைக் கும்பிடு போட்டு, பின்னர் நாலு காசு சேரவும் அளப்பரை செய்து கொண்டிருக்கும் நார்த்திந்திய நன்னாரிகள் அங்கே அதிகம். அதை தான்டிச் சென்றோம். மதுரையின் பிரபல ஜவிளுக்கடைகளின் பின்புறச் சந்து. பெரும்பாலும் லோரு ஏற்ற, இறக்க மட்டும் திறக்கப்படும் பெரிய கதவுகள். அந்தச் சந்தின் கடைசியில் சென்று " கருப்பசாமி நாடர் ஜவுளிக்கடை"யின் குடவுன் சுரை ஏறிக் குதித்தால் எங்கள் பள்ளியின் பின்புறச் சுவரை அடயலாம். ஏறிக் குதித்தோம். அடைந்தோம்.
பாலு சொன்னான் " மாப்ளைகளா சத்தம் போடாம் வாங்க" போனோம். எங்கள் பள்ளியின் பழைய சத்துணவுக் கட்டிடம். ஓட்டுக் கூரை சிதிலமடைந்து கிடக்கும். அதனுள்ளே நிழலாடுவது தெரிந்தது. அருகே சென்று உற்றுக் கவணித்தோம். எற்கனவே உற்றுக் கவணீத்துக் கொண்டிருந்தனர் கந்தரகோலமும், உரெழவும். "வந்துட்டீங்களா" என்றான் கந்தரகோலம். "எலேய்க் கந்தரு, என்னடா இது". "சத்தம் போடாமப் பாருங்க". பார்த்தோம்.உள்ளெ எங்கள் வயதை ஒத்த ஒரு ஆணும், பெண்ணும். இல்லையில்லை சிறுவனும், சிறுமியும். எங்களுக்கோ உடல் நடுங்கியது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டனர். பின்னர் மறுபடியும். பின்னர் மறுமறுபடியும். நாங்கள்? பார்த்தோம், வியர்த்தோம், துடித்தோம், தவித்தோம் மற்றும் இன்ன பிறா தோம் தோம். விறுவிறுவெண்று உள்ளே நுழைந்தோம். சத்தாமாய்க் கேட்டேன் " யார்ரா நீங்க". என்னாடா செய்ரீங்க எங்க பள்ளியோடத்துல" அவள் துடித்தாள். எப்படியும் தப்பிக்க முடியாது. வாசலில் "ஊரெழவு". மகாமுரடன். பாவ புண்ணியம் பார்க்காமல் அடிப்பான் என்பதும், மண்டையைத் திறப்பதில் ஸ்பெசலிஸ்ட் என்பதும் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வாழும் எங்கள் வயதை ஒத்த அனைவருக்கும் தெரியும். அப்பேற்பட்ட கர்னகொடூரன்.

பின் அவன் கேட்டான். "யாருங்க நீங்கலாம்"
" டேய் எங்க பள்ளிகொடத்துக்குள்ள வந்துட்டு எங்கள யாருனு கேக்குற". வடக்கு மாசி வீதிடா. கேள்விபட்ருப்பேல. நீ எந்த ஏரியா" மாரி துளைத்தான்.
"வடக்கு மாசி வீதிடா" என்ற வார்த்தை அவன் முகத்தில் பயத்தை படரச் செய்தது. சொன்னான். " இங்க தாங்க. கில ஸித்ர வீதி"
"டேய் அது கீழச் சித்திர வீதிடா. இங்க என்னடா செய்றீங்க" கர்ஜித்தான் இருளன்.

இல்லங்க இது தாங்க எங்க பழக்கம்.

எதுடா பள்ளிக்கொடத்துல ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுறதா? சீறினான் பாலு.

அப்புறம் அவன் விளக்கினான். அதாவது அவர்கள் இருவரும் காதலர்களாம். அவர்கள் சம்பிரதாயப்படி இது சகஜமாம்.மற்றும் நிறையச் சொன்னான்.வேணும்னா எங்க வீட்ல வந்து கேட்டுக்கோங்க என்றான். எங்களுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சரி, சரி ரெண்டு பேரும் கெளம்பு இனிமே இந்தப் பக்கமே வரக்கூடாது. என்று சொல்லிப் பத்தி விட்டோம்.

வெளியில் நின்ற ஊரலு (ஊரெழவு) கேட்டான். டேய் என்னடா அவய்ங்கள விட்டுட்டீங்க. விளக்கினோம். அவர்கள் பழக்கத்தை. ஊரலு சொன்னான் நல்ல்ல்ல்ல பழக்கம்டா இந்த ஸேட்டய்ங்களுக்கு. இருளன் பதறினான் "டேய் இல்லடா இது கெட்ட பழக்கம்டா" அனைவரும் சிரித்தோம்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் ஆட்டொரலைக் கரைத்துவிட்டு, அம்மிக்கல்லைத் தேய்த்துவிட்டு, வெயில் வீணாகப் போகிறதே என்ற சமூக அக்கறையில் அலைந்து கொண்டிருந்தோம். மாரி வியர்க்க, விறுவிறுக்க வந்து சொன்னான். டேய் கண்டு பிடிச்சுட்டேன்டா. என்னாடா என்ற போது தெரிந்தது.
அந்தப் பையன் பேரு *********. அவன் யாருன்னா "நமக்சந்த் கட்டாரிலால் என்று ஆரம்பித்து இடையில் சிலபல சந்துகளும் ஏகப்பட்ட லால்களும் வந்து மீர்மல் ஜெயின்" என்று முடியும் ஒரு ஸேட்டின் மகனாம். அந்தப் புள்ள? விசாரிக்கச் சென்ற "தலப்பெரட்டும்", "கந்தரகோலமும்" வந்து சொன்ன செய்தி. "அந்தப் புள்ள பேரு ***. எழுகடல் தெருவுல ஜிகினாப் பேப்பர் கடவச்சிருக்க ஸேட்டு மகளாம், வீடு அன்னக்குழி மண்டபத்தெருவுல, ரெண்டு பேரும் சொந்தக்காராய்ங்க தானாம். அவன் ஒன்பதாப்பு, அந்தப் புள்ள எட்டாப்பு".
"சொந்தக்காரய்ங்க தானா. அப்ப அவய்ங்க சொன்னது நெசமாத்தானப்பா இருக்கும். விடுங்க" என்று மதுரை மாநாகரின் கலாச்சாரக் காவலர்களான நாங்கள் முடிவெடுதோம்.

ஒருவாரம் சென்றிருக்கும். ஒருநாள் ஏரியா சுள்ளாய்ங்களிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தபோது "தலப்பெரட்டு" வந்து அவன் ( ஸேட்டு மகன்) எங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதாய்ச் சொன்னான். எதற்கு என்று தெரியாமல் குழம்பினோம்.சற்று நேரத்தில் அவன் வந்தான். ஹீரோ ரேஞ்சர் ஸ்ரெயிட் ஹாண்டில்பார் வைத்த சைக்கிளில். (ம்ம்ம்ம்ம் பணக்காரன்).avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 13:02

அதாவது அவர்களிருவருக்கும் நடுவில் புகுந்து ஆட்டையக் குளைக்க ஒரு அக்ரஹாரத்து ஜந்து முயற்சிப்பதாகவும், நாங்கள் தான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சொன்னான். நாங்கள் முடிவெடுத்தோம். "உண்மை காதல்"க்கு உதவுவதாய். அந்த ஜந்து எதுவெண்ரு அடையாளம் கண்டோம். அன்று முற்பகலே "வருவன உரைக்கும் மதியூகி" கூழுப்பான தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, பின்னர் மதியம் "கொரவள கூத்தாட கொலச்சு அடஞ்சுட்டு", "பொம்பளப்புள்ள,ஆம்பளப்பயனு பாக்காத அதம்பனும், கெழவன், கெழவியைக்கூட மண்ணிக்காத கல்நெஞ்சனுமான, ஈடு இனையற்ற கர்னகொடூரத் தளபதி" மாவீரன் ஊரெழவு தலைமையில் வடக்குமாசிவீதிப் படைகள் அணிவகுத்தன இலட்சுமி நாரயணபுர அக்ரஹாரம் நோக்கி.


வடக்குமாசிவீதிப்படைகள் போருக்கு வருவது தெரியாமல் பருப்பு உசிலி, தயிர்ச்சாதம், வத்தல்கொழம்பு, மற்றும் பலதைத் தின்றுவிட்டு குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தது அக்கிரகாரம். தெருவின் இரண்டு முனைகளிலும் தலா இரண்டுபேர் நின்று கொள்வது. ஒருவன் சென்று அவனைப் பேச்சுக் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவது. மற்றவர்கள் அனைவரும் "கொரில்ல" முறையில் அக்கம்பக்கத்து வீட்டுத் திண்ணைகளில் பதுங்கி இருப்பது. தாக்குதலுக்குத் தலமையேற்றிருக்கும் தளபதி "ஊரெழவனார்" வலக்கையை இருமுறை உயர்த்தி ( சைகை) உடன் அனைவரும் ஏககாலத்தில் கூடி அவன் மேல் பாய்ந்து நாசகாரித் தாக்குதல் நடத்த வேண்டியது. "வில்லங்கம்" தலைமயில் ஒரு படைப்பிரிவு வேறு யாராவது அவனுக்கு ஆதரவாகவோ, காப்பாற்றவோ வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தத் தயாராய் இருப்பது. இவ்வாறு வியூகம் அமைத்துக் கொடுத்தார் தளபதி. அவனை வெளியில் அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேரே சென்று அவன் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவன் தான் திறந்தான். "சாமீ இங்க ஷடகோபய்யங்கார் வீடு"
"யெஸ் இது தான். என்ன வேணும்?"
"சாமீ நாங்க மக்காய்ந்தோப்புல இருந்து வாரோம். சாமியப் பாககனும்"
"மக்காய்ந்தோப்பா? அவள்லாம் வியாசர்புர அக்ரஹாரத்துக்குனா போவா, அது இங்கேர்ந்து மேற்க போகனும். படித்துறை இருக்கோன்னோ, அதுக்கு மேற்குப்பக்கமா, பேச்சியம்மன் கோவில் இருக்கும். அத ஒட்டி போற ரோட்ல போங்கோ. அங்க ஒரு அக்ரஹாரம் இருக்கு" பூணூலைச் சரி செய்தபடியே சொன்னது அந்த ஜந்து. உள்ளுக்குள் ஆயிரம் கோபம் இருந்தபோதும், அக்ரஹாரத்துவாசிகளை முன்னிலையில் "சாமீ" என்றே அழைக்கப் பழக்கித் தரப்பட்டிருந்தோம்.

"இல்லைங்க சாமீ, அதுதேன் இந்தத் தடவ மொளப்பாரில மனஸ்தாபமாகிப் போச்சுல அதுதேன். நாளைக்கு நம்ம வீட்டுல தாத்தாவுக்கு தெவசம். தாணங் குடுக்கனும். ஐயருக ஒரு பதினோரு பேரு வேணும் சாமீ"
"சரி அப்பா தூங்கிண்டு இருக்கா. இப்பத்தான் படுத்தா. நீங்க போயிட்டு சாயந்தரமா வாங்கோ" பதறிவிட்டேன். " சாமி பெரியவக எல்லாம் வந்துருக்காக. அந்தா அங்க அனுமார் கோவில் மண்டபத்துல காத்துக்கிட்டு இருக்காக" என்றேன். ஒர்கவுட் ஆனது.
"அட்டா பெரியவாள காக்க வைக்கப்படாதே. அது மஹாப்பாவம், இருங்கோ. நான் சட்டைய மாட்டிண்டு வர்றேன். செத்த நாழி இருங்கோ" உள்ளே சென்றது.
நான் பதுங்கியிருந்த எம் படைவீரர்களுக்கு "வெற்றி" என்று குறிப்பாலுணர்த்திணேன்.
வந்தான். " ரொம்ப நேரமாக் காத்திருக்காளா? "
"ஆமாங்க சாமி. வீடு தெரியாமத் தெணறிட்டோம்." மனதுக்குள் கறுவியபடியே அழைத்து வந்தேன்.


தாக்குதலுக்காக குறித்து வைக்கைப்பட்டிருந்த இடம் வந்ததும் சட்டென்று நின்றேன். அவன் கேட்டான் " என்ன நின்னுட்டேள். வாங்கோ" நானோ தளபதியின் உத்தரவுக்காய் காத்திருந்தேன். சைகை செய்தான் உத்தமன் ஊரெழவு.
சற்றே பின்னேறி வலக்காலை நன்றாக உயர்த்தி "நங்" என்று எத்தினேன் அவன் நடு நெஞ்சில். எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்தான். சுருண்டு விழுந்தான். கத்தினேன் "ஏன்டா ------ நாயே. அவய்ங்களேப் பாவம் வட நாட்ல இருந்து பொழைக்க வந்து, மீனாட்சி புண்ணியத்துல பொழைக்குறாய்ங்க, நீ என்னாடான்னா எடவாரத்துல ஒரு கொடவாரமுன்னு கோனக்கலப்ப சாத்துறியா?" பளாரென்று அறைந்தேன். படைகள் திரண்டன. துவம்சம் செய்தோம். அதற்குள் சத்தம் கேட்டு ஓடோடி வந்தன ஏழெட்டு அக்ரஹாரவாசிகள். யுத்தம் துவங்கியது.

கொடல்கொழம்பு, கோழிச்சாறு, தலக்கறி, நெஞ்செலும்பு, சொவரொட்டி, தேளி மீனு ஒரு புறம். மறுபுறமோ பருப்பு, நெய், அவரைக்கா சாம்பார், புடலங்காய்க் கூட்டு, மிளகு ரசம், தயிர்சாதம் நார்த்தங்கா ஊறுகாய்.ம்ம்ம் வழக்கம் போல அசைவமே வென்றது. அநியாயம் தோற்றது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு "உண்மையான காதலுக்காக " போர்புரிகிறோம் என்கிற நினைப்பு அதிக உத்வேகத்தைக் கொடுத்தது.

முன்னால், பின்னால் என் இருபுறமும் டயர்கள் கொண்டதும், பெல்லைத் தவிர மற்ற எல்லா ஸ்பேர்பார்ட்ஸும் சவுண்டு கொடுக்கும் பெருமைக்கு உரியதுமான தனது ஆஸ்தான வாகனமான அந்த "ஹெர்குலிஸ்" சைக்கிளை விட்டு அவசரமாய் இறங்கி, ஸ்டாண்டு போடக் கூட நேரமின்றி ஒரு வீட்டின் சுவரின் சாய்த்து வைத்துவிட்டு, தளபதியே நேரடியாகக் களமிறங்கி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கலை எடுத்து ஒருவன் மண்டையைத் திறந்து மீனாட்சிக்கு மாவிளக்கெடுத்தார். தெறித்து ஓடியது காக்காய் கூட்டம். நின்று விளையாடின "கடிச்சாத் திரும்பாத கருநாகக் குட்டிகள்".


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 13:10

மறுபடியும் அவன் தனியாய். விசயத்தை விவரித்துக்கொண்டே வெளுத்தோம். அவன் துடியாய்த் துடித்தான். நாங்கள் மிகவும் ரசித்தோம். அவன் வாயில் இருந்து ஒழுகிய எச்சிலையும், ரத்தத்தையும் துடைத்தவண்ணம் வலியால் துடித்த வண்ணம் சொன்னான் "அவா ரெண்டு பேரும் ஏதேதோ பொய் சொல்லிண்டு, ஏடாகூடாமத் தப்புப்பண்ணின்டிருக்கா. இவள்லாம் என்ன எதுனே தெரியாம அவாளுக்கு வெலக்குப் புடிக்குறா. டேய் விடுபயலுகளா அப்டி என்னடா வடக்குமாசி வீதில பஞ்சம் வந்துடுத்து, ஒயின்ஷாப்பு, வட்டிக் காசுனு நல்லாத்தானே இருக்கேள். என்ன கேடுன்னு இப்டிக் கூலிக்கு வெளக்குப்புடிக்கிற அளவுக்கு வந்த்துட்டேள்"

இந்த வார்த்தைகள் எங்களை மேலும் வெறியேற்ற, கொலைவெறியுடன் தளபதி அவனை நோக்கி முன்னேற மாரி தடுத்தாட்கொண்டான். "விடு ஊரலு, நீ போ நாங்க பாத்துகிறோம். அதுவேற செத்துக்கித்துப் போயிர போறயான். அப்புறம் பிரம்மஹத்திம்பாய்ங்க" நான் இடைமறித்தேன் "போயிட்டுப் போகுது மாரி. பிரம்மஹத்தின்னாப் பயந்துருவோமா. இருக்கவே இருக்கு இராமேஸ்வரம் போயித் தீத்தமாடிட்டுப் போறோம்" என்றவாறே தரையில் அரைஉயிராய்க் கிடந்த வனை மறுபடியும் நங்கென்று எத்தினேன். ஆம் எல்லாமே ஒரு உண்மைக்காதலுக்காக. அவன் உரக்கச் சொன்னான் " டேய்ப் பாவி சண்டாளா. தாணங்குடுக்க ப்ராமனா வேனும்னு சொல்லிக் கூட்டிடு வந்துட்டு இப்டி நடுரோட்ல போட்டு அடிக்கிறயேடா நம்பிக்க துரோகி. நீ எல்லாம் மனுஷனே இல்லடா. நீயெல்லாம் பொறந்ததே தப்புடா. மனுஷ்ய குலத்துக்கே அபவாதம்டா. லோகத்துகே துஷ்டிடா நீ. பத்துவீடு தள்ளீ எங்காத்துல எல்லாருந்தூங்கிண்டு இருக்கா. இங்க நா அநாதமாதிரி தெருவுல அடிவாங்கிண்டிருக்கேனே. பகவானே நாராயனா என்னால முடியாதுடா. நீயே பாத்துக்கோ இந்த அட்டூழியத்த"
அருகே சென்றேன் " டேய் உங்க பெருமாலு என்னா மொட்டமடிலயாடா இருக்காரு. மேல பாத்துக் கத்துற. தெக்க திரும்புடா எங்க மீனாட்சியும் சொக்கரும் சிரிச்ச வானைக்கு வருவாக" என்றான் கந்தரகோலம். நான் சொன்னேன் " டேய் மரியாதையாப் போயி அந்தப் பயகிட்ட மண்ணிப்புக் கேட்ரு இல்ல வக்காளி கருமாதிக்கு எலும்பிருக்காது" அவன் சீறினான் " டேய் மாஹாப்பாவி, ராட்சஸபயலே, நம்பிக்கத்துரோகி, அயோக்கியப் பயலே. உன்ன நம்ம்ம்பி வந்தேனேடா இப்டி நடுதெருவுல போட்டு அடிகிறயேடா. டேய் நா எதுக்குடா மண்ணிப்புக் கேக்கனும். நீ தான்டா கேக்கனும் பகவாங்கிட்ட. நம்பிக்க துரோகம் பஞ்சமாபாதகத்துல ஒன்னுடா. ஆனா மண்ணிப்புக் கேக்கக் கூட ஒனக்கெல்லாம் தகுதி இல்லடா களவானிப் பயலே. என்கிட்ட மண்ணிப்புக் கேக்க உனக்குத் தோனும்டா ஒருநாள். ஆனா உன்னாடி கேக்க முடியாதுடா. மண்ணிப்புக் கேக்கனும்னு ஏங்குவடா. தூக்கம் வராமாக் கெடந்து தவிப்படா நாசாகாரப் பயலே".

பொறுமை இழந்தோம் நாங்கள். துவம்சம் தொடர்ந்தது.

முடிவாய் அவனை எச்சரித்தோம். அவன் மரியாதயாய் "ஸேட்டு மகனிடம்" மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், அந்த உண்மைக் காதலுக்கு இனி குறுக்கே வரக் கூடாதென்றும். மீறினால்?.. செந்தமிழிலே சொல்வதானால், அவன் அவனுடய தாயாரிடத்திலே பருகிய தாய்ப்பாலைக் கக்கும் வரை அடிப்போம் என்றும், அவன் தாய் பத்தினி அல்ல என்றும் அர்த்தம் வரும் வகையில் "மதுரை தமிழில்" எச்சரித்து விட்டு வந்தோம்.

அப்புறம் +1 சேர்ந்து, இரண்டாவது நாள் அந்த ஜந்து எங்கள் பள்ளிக்கு வந்தது. அதுவும் நாங்கள் படித்த ஃபர்ஸ்ட் க்ரூப், பயோ மேத்ஸே சேர்ந்தது. நாங்களோ எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அப்புறம் தான் விஷயம் தெரிந்தது. அவனுக்கு உடல் நிலைக் கோளாறாம். இரண்டு சிறு நீரகங்களும் பழுதடைந்து விட்டனவாம். ஆனாலும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 430+ மார்க் வாங்கிவிட்டான். ஆனால் அவன் படித்த பள்ளியில் இவனுக்கு வியாதி இருப்பது தெரிந்து சேர்க்க வில்லை அதனால் இங்கே வந்துவிட்டான். நாங்க மனம் மகிழ்ந்தோம். "வரனும்டா இவனுக்கெல்லாம் இன்னும் பெரிய பெரியா சீக்கா வரனும்டா, அப்பத்தான்டா நாட்ல தப்புப் பண்றவய்ங்க பயப்டுவாய்ங்க" என்றான் ஏழ்ர. அனைவரும் ஆமோதித்தோம்.


ஒருவாரம் சென்றது. ஒருநாள் மதிய உணவு முடித்துவிட்டு வகுப்பு தொடங்கும் முன் வகுப்பறையில் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அது வந்தது எங்களிடம். ஆம் நாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதி ஆன்டு வரை கடைசி பெஞ்சின் காவலர்கள். அவன் கேட்டான். என்ன ராஜா எப்டி இருக்கேள். என்னத் தெரியர்தா. நான் மாரியிடம் திரும்பிச் சொன்னேன். இதுக்குதான்டா மாரி அப்பவே அடையாளம் இருக்க மாதிரி எதாவது செய்வோம்டானு, கேட்டியா. இன்னைக்குப் பாரு கருடா சவுக்கியாமானு கேக்குது. இது சத்துக்கு.

அவன் மறுபடி சொன்னான். இல்லங்க, நான் அதெல்லாம் மறந்துட்டேன். நீங்க ஏன் இன்னும் அதையே ஞாபகம் வச்சுட்டு. இது உங்க ஸ்கூல். நா வேற புதுசா வந்திருக்கேன். எங்க ராகிங் பண்ணுவாளோன்னு பயந்துட்டு இருந்தேன். இப்ப தைர்யம் வந்துடுத்து. அதான் நீங்க இருக்கேளே. நேக்கென்ன.
எங்கள் தளபதி டென்சனாகிவிட்டார். டேய் கதவச் சாத்துடா என்று கர்ஜித்தான். அனைவரும் சேர்ந்து கெஞ்சிக், கதறி, கூத்தாடி தளபதியை சாந்தப்படுத்தினோம். அவனிடம் சொன்னோம். இன்னொரு தடவ எங்க பக்கம் வந்து பேசனும்னு நினைச்சா, எத்துர எத்துல அவன் ஈரக்குளை வாய் வழியே தவ்வி வெளியே வந்துவிடுமென்று. அவன் சென்று விட்டான். அடுத்த நாள் இருந்து அவன் பள்ளிகூடம் பக்கமே வரவில்லை.


இப்போது அதே ****** (ஸேட்டு மகன்) அவன் மனைவியுடனும், அந்தப் பெண் அவள் கணவனுடனும், இவர்கள் பயதையொத்தா இன்னும் மூன்று ஜோடிகளும். அனைவரிடமும் குழந்தைகள்.

அந்த ஹோட்டலின் ஏர்கண்டிஷனையும் மீறி எனக்கு வியர்த்தது. மனம் துடியாய்த் துடித்தது. ஆம் நாங்கள் அனைவருமே ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அதோடு இப்ப அவன் மனைவியும், அவள் கணவனும். செயலபடமுடியாமல் தவித்தேன். நேரே சென்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி பளரென்று அறைந்து கேட்க வெண்டும் " ஏன்டா மேட்டருக்கு ஒருத்தி, மீட்டருக்கு இன்னொருத்தியா" என்று. இப்போது சொல்வான் " இல்லங்க இது தாங்க எங்க பழக்கம் என்று"

இது எதுவும் தெரியாமல் இங்கே ந்ண்பர்கள் கும்மாளம்.
ரகு வழக்கம்போல் " ண்ணா, நறுக்குனு கடிச்சு, சக்கு சக்குனு மென்னு திங்குற மாதிரி கெட்டிய தண்ணி கிடைக்குமானா"
சவுந்தரோ இன்னும் ஒரு படி மேலே போய் " அண்ணே நல்லா நெய் நெறையா ஊத்தி, முறுகலா ஒரு நெய் ரோஸ்ட் போடுங்க. அத அப்டியே எடுதுட்டுப் போய் யாரு கேகுறாங்களோ அவங்களுக்குக் குடுங்க. அதே கல்லுல ஒரு சாதா தோச போட்டு எனக்க்குக் கொண்டு வாங்க" என்று ஆளாளுக்கு அந்த ஹோட்டல் சப்ளையர்கள் வாயில் விழுந்துகொண்டிருந்தார்கள். என் மனமோ சொல்லவொண்ணா வேதனையில்.

சவுந்தர் அடித்த " ஏ தம்பி சிகப்புச் சட்ட " காமெடியில் கூட மனம் லயிக்கவில்லை. ஆனாலும் சம்பிரதாயாமாய்ச் சிரித்து வைத்தேன் சந்தேககம் வரக் கூடாதென்று.

டெஸர்ட், ஃபுரூட் ஸாலட் என்று ஒருவழியாய் பில் வந்தது. கொடுத்தேன். டிப்ஸ் வைத்தேன். கிளம்பினோம். நடந்து வரும் போதே யோசித்தேன். இந்தத் தறுதலைக இப்டித் திரியுதுக. பாவாம் அந்த ஐயர் வீட்டுப் பையான். சுரீரென்றது மனது.
இப்போதைக்கு இந்தியாவில் இருக்கும் இரண்டே தறுதலைகல் நானும், மாரியும் தான். மாரியை அழைத்தேன்.
"என்னய்யா பிறந்தநாள்க்காரரே என்ன செய்றீங்க"
"நல்லாருக்கேன் மாரி" அப்புறம் சம்பிரதாயப் பேச்சு வார்த்தைகள், முடிந்து விசாரித்தேன்.
ஏன்டா மாரி ஒனக்கு ஞாபகம் இருக்கா அந்த ஸேட்டு வீட்டுப் பையனும், புள்ளையும்...
ம்ம்ம்ம் அதுவா, அதுக ரெண்டும் பெரிய ரூட்டுக மாப்ள. நம்மதான்டா என்னா ஏதுனு தெரியாமப் பாவம் ஐயரு வீட்டுப் பயல மந்திரிச்சுவிடுட்டோம்.
யாரடா என்றேன், தெரியாதது போல.
டேய் உண்மையில்யே தெரியாதா? அவன் எங்களக் கூடப் பொதுவாத்தான்டா பேசுனான். உன்னத் தான் " நீயெல்லாம் பொறந்ததே தப்புடா"ன்னு சொன்னான்.
மாரி இப்ப அவன் எங்கடா இருக்கான்.
மாரி சிரித்தான் " எங்க இருப்பான்"
சொல்லுடா மாரி எங்கடா இருக்கான். அவனப் பாக்கனும்டா. அவங்கிட்ட மண்ணிப்புக் கேக்கனும் போல இருக்குடா மாரி.

எதுக்குடா ராஜா. திடீருனு..
இல்ல மாரி அவனப் பாக்கனும். அவங்கிட்ட, அவன் கண்ணப் பாத்து மண்ணிப்புக் கேகனும்டா.
டேய் ஏன்டா. உனக்குத் தெரியாதா? அவன் நம்ம +2 படிக்கிறப்பவே உடம்பு சுகமில்லாம இருந்து, போய்ட்டான்டா, மீனாட்சியே மஞ்சத்தண்ணி ஊத்திட்டாடா.
ஐயய்யோஒ பெருங்குரலில் கதறினேன். போனில் எதிர்பக்கம் மாரியும், சுற்றியிருந்த நண்பர்களும் பதறினார்கள்.
ஒன்னுமில்ல சும்மா.. கத்துனா என்னா பண்றீங்கனு பாத்தேன்.
சமாளித்தேன். சரி மாரி நீ துங்கு. போனைக் கட் செய்தேன்.

அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன...


அவா ரெண்டு பேரும் ஏதேதோ பொய் சொல்லிண்டு, ஏடாகூடாமத் தப்புப்பண்ணின்டிருக்கா. இவள்லாம் என்ன எதுனே தெரியாம அவாளுக்கு வெலக்குப் புடிக்குறா.

டேய்ப் பாவி சண்டாளா. தாணங்குடுக்க ப்ராமனா வேனும்னு சொல்லிக் கூட்டிட்டு வந்துட்டு இப்டி நடுரோட்ல போட்டு அடிக்கிறயேடா நம்பிக்க துரோகி. நீ எல்லாம் மனுஷனே இல்லடா. நீயெல்லாம் பொறந்ததே தப்புடா. மனுஷ்ய குலத்துக்கே அபவாதம்டா. லோகத்துகே துஷ்டிடா நீ. பத்துவீடு தள்ளீ எங்காத்துல எல்லாருந்தூங்கிண்டு இருக்கா. இங்க நா அநாதமாதிரி தெருவுல அடிவாங்கிண்டிருக்கேனே. பகவானே நாராயனா என்னால முடியாதுடா. நீயே பாத்துக்கோ இந்த அட்டூழியத்த

டேய் மாஹாப்பாவி, ராட்சஸபயலே, நம்பிக்கத்துரோகி, அயோக்கியப் பயலே. உன்ன நம்ம்ம்பி வந்தேனேடா இப்டி நடுதெருவுல போட்டு அடிகிறயேடா. டேய் நா எதுக்குடா மண்ணிப்புக் கேக்கனும். நீ தான்டா கேக்கனும் பகவாங்கிட்ட. நம்பிக்க துரோகம் பஞ்சமாபாதகத்துல ஒன்னுடா. ஆனா மண்ணிப்புக் கேக்கக் கூட ஒனக்கெல்லாம் தகுதி இல்லடா களவானிப் பயலே. என்கிட்ட மண்ணிப்புக் கேக்க உனக்குத் தோனும்டா ஒருநாள். ஆனா உன்னாடி கேக்க முடியாதுடா. மண்ணிப்புக் கேக்கனும்னு ஏங்குவடா. தூக்கம் வராமாக் கெடந்து தவிப்படா நாசாகாரப் பயலே


வார்த்தைகள் ஒவ்வொன்றும் சயனைட் குப்பிகளாய்க் கொன்றன. மேன்சனுக்கு வந்தோம். நிறிது நேரம் அரட்டையடித்துவிட்டுப் பிரியாவிடை பெற்றது நட்பு.

ரூமில் நான் தனியே. யோசித்தேன். அவன் புத்திசாலி. தீர்க்கதரிசி. என்னைப் பார்த்துக் கேள்வி கேட்டிருக்கிறான். நம்பி வந்தேனே, இப்டித் துரோகம் பண்ணிவிட்டாயே என்று. என்னிடம் பதிலில்லை. அப்போது அடித்தேன். இப்போது நினைத்துப் பார்த்து அழுகிறேன்.

ஆம் நான் பிறந்ததே தவறு தான் போல. எனக்கு மண்ணிப்புக் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. அனால் யாரிடம் கேட்க. மனது தவித்தது. தூக்கம் வரவில்லை.

ரேடியோ கேட்கலாம் என்று F M ஆன் செய்தேன் பாடல் ஓடியது " ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ"

மதுரை ராஜா.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum