சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சுபாவ வளர்ச்சி

Go down

Sticky சுபாவ வளர்ச்சி

Post by Atchaya on Wed 20 Jul 2011 - 16:30

சுபாவ வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டியது போற்றக்கூடிய குணங்கள். அதாவது “சாந்தம், ஸமாதானம், பொறுமை, தன்னம்பிக்கை, தைர்யம், ச்ரத்தை, கடமை உணர்ச்சி, விடாமுயற்சி, மனோ நியந்தரணம், ஸூக்ஷ்ம புத்தி, பாசம், வினயம், அன்பு, பக்தி, தயை, கருணை, ஒற்றுமை உணர்ச்சி, பரோபகாரக் கொள்கை, ஸாமுதாயிக மனப் பான்மை, தன்னலமற்ற சுபாவம், வாழ்வின் லக்ஷியம்” எனப்படும். என்ன? இவைகளைக் கேட்டதும் மலைப்பாக இருக்கிறதா? பயப்படாதீர்கள். ஓவ்வொன்றையும ஆராய்ந்து பார்ப்போம்.
சாந்தம்: (Calm & Quiet)
எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பதட்டமில்லாமலும், எந்த இக்கட்டைச் சந்திக்க நேர்ந்தாலும் அதிர்ச்சியடையாமலும், தெளிவான மனத்துடனும் நம்மை நோக்கி நிற்கும் காரியத்தை ஆராய்து பணிபுரியும் தன்மைக்குப் பெயர் “சாந்தம்”. அதாவது நமது மனம் அலைபாயாது ஒரு நிலைப்பட்டுத் தெளிவாக இருப்பது எனப் பொருள்.
ஸமாதானம்: (Peace)
நாம் எடுத்துக்கொண்ட அல்லது நினைத்த காரியத்தில், யாதொரு சிக்கல் வந்தாலும், எந்தவித எதிர்ப்பு வந்தாலும் அல்லது தடங்கல் வந்தாலும், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் அந்தக் காரியத்தை ஸுலபமாக, யாருக்கும் ஒரு தீங்கும் ஏற்படாமல் செய்யும் ஆற்றலுக்குப் பெயர் “ஸமாதானம்”. அதாவது நாம் செய்யும் காரியங்களில் பதட்டமில்லாமல், யாருக்கும் தீங்கிழைக்காமல் செயல்புரிவது எனப் பொருள்.
பொறுமை: (Patience)
நாம் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தடங்கலை எதிரிடலாம், முடிவு நினைத்தபடி அமையாமல் போகலாம், அல்லது நினைத்த நேரத்தில் நிகழாமல் போகலாம், அல்லது எதிர்ப்புகள் காரணம் தாமதமாக முடியலாம், மற்றவுர் ஒத்துழைப்பு நினைத்தபடி அமையாமல் ஆகலாம். ஆனாலும் எப்பொழுதும் நாம் நிலை குலயாமல் திடமாக இருப்பதற்குப் பெயர்தான் “பொறுமை”. அதாவது எந்த நிலையிலும் நாம் சஹிப்புத் தன்மை உள்ளவர்காளாகத் திகழ வேண்டும் எனப் பொருள்.
தன்னம்பிக்கை: (Self-Confidence)
எத்தருணத்திலும், எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதை நம்மால் விஜயகரமாக முடிக்க முடியும், அதற்கு வேண்டிய உழைப்பு நம்மால் தர முடியும், அதற்கு வேண்டிய சாமார்த்தியம் நம்மிடம் இருக்கிறது என்ற நம் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கைக்குப் பெயர்தான் “தன்னம்பிக்கை”. அதாவது நம் கழிவாற்றலில் நமக்கு இருக்கும் அசைக்க முடியாத அபிப்பிராயம் எனப் பொருள்.
தைர்யம்: (Courage)
ஒரு காரியத்தைச் செய்யும் முன் அதன் பலாபலன்களைச் சிந்திக்கும் பொழுதும், அதன் விளைவில் பயன் இல்லாமல் போகும்பொழுதும், எந்த ஒரு இக்கட்டான தருணம் வந்தாலும் அதைக் கலங்காமலும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு செயல் புரிவது, அதன் விளைவுகளைத் துணிவுடன் எதிர்கொள்ளுதல் போன்ற தன்மை நம்மை ஊக்குவிக்க வேண்டும். அதுதான் “தைர்யம்” எனப்படும். அதாவது எததருணத்திலும் மனம் தளர்ச்சியடையாமல் உறுதியுடன் செயல் படுவது எனக் கருத்து.
ச்ரத்தை: (Attentive)
நாம் செய்யும் காரியத்தில் அல்லது நாம் கிரஹிக்கும் விஷயங்களில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்துதல், அதன் பொருளை நன்றாக உணர்ந்து செயல்படுதல், செய்யும் அல்லது கிரஹிக்கும் விஷயங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்தல் போன்ற தன்மையை உருவாக்கிக்கொள்வதற்குப் பெயர் “ச்ரத்தை” எனப்படும். அதாவது நம் கவனததைச் செலுத்தும் காரியத்தில் அல்லது கிரஹிக்கும் விஷயத்தில் ஏக மனதாக நிலை நாட்டுவது எனப் பொருள்.
கடமை உணர்ச்சி: (Duty Bound)
எந்த ஒரு பணியில் ஈடுபடும்போதும் அது நமது கடமை அல்லது அது நம்மால் ஆக வேண்டிய ஒரு பணி, அல்லது அது நம்மால் செய்யப்பட வேண்டிய ஒரு கர்மம் அல்லது அது நம்மைச் சார்ந்த ஒரு வேலை, நாம் அதைச் செய்யவில்லையானால் அது மற்றவருக்குச் சாதகமாக அமையாமல் விரோதமாக அமையும் என்ற உணர்வுக்குப் பேர் “கடமை உணர்ச்சி” அதாவது அது நம்மைச் சார்ந்த ஒரு பொறுப்பு என்ற பாவனை எனப் பொருள்.
விடாமுயர்ச்சி: (Stead Fastness)
ஒகு பணியில் ஈடுபடும்பொழுது இடையில வரும் இக்கட்டுகளை வென்று, மனம் தளராமல், நம் கடமையிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடனும், ஊக்கத்துடனும், கருத்துடனும் செயல் புரிந்து காரியத்தில் வெற்றி பெற நாம் புரியும் சாதனைக்குப் பெயர்தான் “விடாமுயற்சி” எனப்படுகிறது. அதாவது, தோல்வியைக் கண்டும்கூட மனம் தளராமல், மீண்டும் வெற்றிக்காகப் போராடுவது எனக் கொள்ளலாம்.
மனோ நியந்த்ரணம்: (Mind Control)
சராசரி மனிதர்கள் மனம் போன போக்குப்படி செயல் புரிபவர்கள். ஆனால் மனதை நம் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அதெப்படி? ஆசா பாசங்கள், ஸுக துக்கங்கள், திடுக்கிடும் சைய்திகள் முதலியன நம் மனதை ஆட்கொள்ள இடம் தராது, அத்தருணங்களில் புத்திபூர்வமாகச் சிந்தித்து மனம் போன போக்கில் நமது விசாரங்களின் பிடியில் அகப்படாது செயல் புரிந்தால் “மனோ நீயந்த்ரணம்” ஆகிவிடும், அதாவது, மனம் நம் சொற்படிச் செயல் படுவது எனப் பொருள். மேலே கூறின குணங்கள் நமக்கு இருந்தால் மனோ நியந்தரணம் தானே வரும்.
ஸூக்ஷ்ம புத்தி: (Sharp Intellect)
விசாரங்கள் மனதில் உதிக்கின்றன. அவைகளைத் தரம் பிரித்து அதற்குத் தகுந்த செயல் புரிய நாம் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். நம் புத்தி நமக்குச் செயல் பட வழி காட்டியாக இருக்கும் ஓர் உறுப்பு. கிடைத்த விஷயத்தை நன்றாகச் சிந்தித்துப் பார்த்து நம் கொள்கைக்கு உகந்தபடி செயல் புரியத் தூண்டுவது புத்தி. இந்த புத்தி நாம் கற்கும் ஞானத்தால் மிகவும் கருத்துடனும் உஷாராகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் இதுதான் “ஸூக்ஷ்ம புத்தி” எனக் கூறப்படுகிறது. அதாவது, நம் புத்தியை தீக்ஷ்ணமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனப் பொருள்.

மேற்கூறிய அடிப்படைக் கோப்புகளுடன் நமது மனம் அமைய வேண்டும் என எடுத்துக்காட்டுகிற்து. அதெப்படி முடிய்ம்? இவை நாம் சிறு வயதிலிருந்தே கற்க வேண்டிய விஷயங்கள். நம் மாதாபிதாக்கள், குருநாதர்கள், பந்துக்கள், சினேகிதர்கள் முதலியோரிடம் பழகும்பொழுது நம் மன அமைபபை இந்த விதம் உருவாக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இது ஸ்வயம் ப்ரயத்தினத்தால் தான் இயலும்.

நன்றி...
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum