சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மந்திரி....

Go down

Sticky மந்திரி....

Post by Atchaya on Wed 20 Jul 2011 - 16:48

(மூலம்: நெதர்லாந்து)

ஒரு சிற்றூரில் மாணிக்கம் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவனது வளமான நிலங்களிருந்து அவனுக்கு நல்ல வருமானம் வந்ததால் அவன் மிகுந்த செல்வந்தனாக இருந்தான். ஆனால் உலக அறிவே இல்லாத மூடனாக இருந்தான் அவன்.

ஒரு சமயம் நகரில் இருந்த பல்கலைக் கழகத்தைப் பற்றி யாரோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு அவனது நண்பனிடம், "அந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தால் மிகவும் புத்திசாலியாகிவிடலாமாமே?" என்று கேட்டான்.

நண்பனும் விளையாட்டாக, "ஆமாம் அவர்கள் கழுதையைக் கூட அறிவாளியாக்கிவிடுவார்கள்" என்று பதிலளித்தான்.

நண்பன் சொன்னதை இரவெல்லாம் யோசித்த மாணிக்கம் தன்னிடமிருந்த கால்நடைகளில் ஒன்றினைப் படிக்க வைக்க முடிவு செய்தான். ஏர் பூட்டிய உடன் தன்னாலேயே நடக்க ஆரம்பிக்கும் தன் காளை தான், தன் கால்நடைகளிலேயே புத்திசாலியானது என்றெண்ணி மறுநாள் அதனை ஓட்டிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குச் சென்றான் மாணிக்கம்.

அவன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் காளையுடன் நுழைந்ததைப் பார்த்த மாணவனொருவன், "ஐயா, என்ன காரணத்துக்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?" என்று வினவினான்.

"என் காளையை இங்கே படிக்க வைக்க விண்ணப்பம் செய்ய வந்தேன்" என்று அப்பாவியாக பதில் கூறினான் மாணிக்கம்.

மாணிக்கத்தின் அறியாமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்ட அந்த மாணவன், "வாருங்கள், உங்களை நானே முதல்வரிடம் அழைத்துச் செல்கிறேன்" என்று கூறி விடுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

விடுதியிலிருந்த காசி என்ற தன் நண்பனை முதல்வர் என மாணிக்கத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தான் அந்த மாணவன்.

காசி மாணிக்கத்திடம், "உங்கள் நோக்கம் மிகவும் உயர்வாக இருப்பதால் உங்களுக்காக கட்டணத்தைக் குறைத்துக் கொள்கிறோம்" என்று கூறி பெருந்தொகை ஒன்றினைக் கட்டணமாகக் குறிப்பிட்டான்.

அவன் கூறிய தொகையைக் கேட்டு மாணிக்கம் அதிர்ச்சியுற்றாலும், 'கல்விக்காகத்தானே' என்று மனதைத் தேற்றிக் கொண்டு காசி கேட்ட தொகையை எடுத்துக் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட காசி, "உங்கள் காளை இன்றே கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம். நீங்கள் சென்று வாருங்கள்" என்று மாணிக்கத்தினை அனுப்பி வைத்தான்.

ஒரு மாதம் கழித்து தன் காளையின் கல்வி நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக பல்கலைக் கழகம் சென்றான் மாணிக்கம். அவனை வரவேற்ற காசி, "அடடா, காளை வகுப்புக்குச் சென்றிருக்கிறதே! நீங்கள் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே!" என்றான்.

"இருந்து பார்த்துவிட்டே செல்கிறேன், ஐயா" என்றான் மாணிக்கம்.

"உங்கள் காளை கடின உழைப்பாளி. வகுப்பு முடிந்த பின்னும் கூட வெளியில் எங்காவது அமர்ந்து படித்துவிட்டு நடுநிசிக்குப் பின் தான் திரும்பும்" என்றான்.

தன் காளையின் கடின உழைப்பில் பூரிப்படைந்த மாணிக்கம், "சரி, ஐயா. நான் அடுத்த மாதம் மீண்டும் வருகிறேன்" என்று கிளம்பினான்.

"இந்த மாதப் படிப்பிற்கு நீங்கள் பணம் கட்ட வேண்டுமே!" என்று கூறி மீண்டும் ஒரு பெருந்தொகையை வசூலித்துக் கொண்டான் காசி.

அடுத்தடுத்த மாதங்களும் இவ்வாறே நடந்தன. தன் காளையைப் பார்க்க முடியாத கவலையிலும் பெரும் பணம் செலவாகிற வருத்தத்திலும் மாணிக்கம் உழன்று கொண்டிருந்தான். இப்படியே ஓராண்டு ஓடிவிட்டது. கண்டிப்பாக எப்படியும் அன்று காளையைப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவது என்று சபதம் செய்து கொண்டு பல்கலைக் கழகத்தை அடைந்தான் மாணிக்கம்.

"இன்று என் காளையைப் பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று மாணிக்கம் காசியின் அறையின் முன் அமர்ந்துவிட்டான்.
நன்றி.....(1 )
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum