சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கிaஸ் மனிதன் அடாவடி தொடர்ந்தும் பெண்கள் பீதி

Go down

Sticky கிaஸ் மனிதன் அடாவடி தொடர்ந்தும் பெண்கள் பீதி

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 4:55

கிaஸ் மனிதன் அடாவடி தொடர்ந்தும் பெண்கள் பீதி
ஒலுவில், மஸ்கெலியா, ஹாலிஎல பதுளை தினகரன் விசேட நிருபர்கள்
கிaஸ் மனிதனின் அடாவடித்தனம் தலவாக்கலை, பூண்டுலோயா, பதுளை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் தொடர்ந்தும் காணப்படுவதனால் அப்பகுதியில் மக்கள் பெரும் பீதியும் பரபரப்பும் அடைந்துள்ளனர்.

இதேவேளை கிaஸ் மனிதனைக் கைதுசெய்யக் கோரி பதுளையில் பெண்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஒலுவில் அக்கரை பிரதேசத்தில் கிaஸ் மனிதர்கள் புகுந்து விட்டதாக பரவிய தகவலையடுத்து இரவு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூட்டம் கூட்டமாக நின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது; ஒலுவில் நான்காம் பிரிவு அக்கரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு (07.08.2011) 9.00 மணியளவில் கறுப்பு உடையுடன் உடல் முழுவதும் கிaஸ் பூசிக்கொண்டு நான்கு பேர் பெண்கள் இருக்கும் வீடுகளை நோக்கி செல்வதாக தகவல் பரவியதைடுத்து இப்பகுதியில் பெரும் பதட்டமும் பர பரப்பும் ஏற்பட்டது.

இதனால் நோன்பு கால ‘தறாவீஹ்’ தொழுகைக்குச் செல்லாது அதிகமான பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தனர்.

இந்த கிaஸ் மனிதர்களை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதிகமான இளைஞர்களும் பொது மக்களும் இரவு முழுவதும் கத்திருந்தனர். எனினும் இதுவரை எவரும் பிடிபடவில்லை.

கிaஸ் உடம்பெங்கும் பூசப்பட்ட மர்ம மனிதனின் தாக்குதலினால் பெருந்தோட்டப் பகுதி இளம் பெண்ணொருவரினது உடம்பெங்கும் நகக் கீறல் காயங்களுடன் அப்பெண் பதுளை அரசினர் மருத்துவ னையின் 11வது வாட்டில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் நேற்று (8-8-2011) முற்பகல் 11 மணியளவில் பதுளை பசறை வழியில் மூன்றாம் மைல் கல்லருகேயுள்ள இங்குரு அமூல பெருந்தோட்டத்தில் இடம்பெற் றுள்ளது. இச்சம்பவத்தில் தேவிகா ஜோசப் என்ற 30வயது நிரம்பிய இளம் பெண் ணொருவரே, கிaஸ் உடம்பெங்கும் பூசப் பட்ட மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகி, பதுளை அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவராவார்.

இப் பெண் தனிமையில் வீட்டிலிருந்த போதே தாக்குதலுக்கிலக்கானார். கிaஸ் மனிதன் தாக்கிய போது இப்பெண் எழும் பிய சத்தத்தையடுத்து, அயலவர்கள் கூடிய தும், கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதனின் தனது பிடியிலிருந்து பெண்ணை விட்டு, தப்பியோடியுள்ளான்.

பதுளைப் பகுதியில் கிaஸ் பூசப்பட்ட மர்மமனிதனின் நடமாட்டங்கள் இருந்து வரும் பெருந்தோட்டங்களில் பாதுகாப்புக் களை பலப்படுத்துமாறு, பெருந்தோட்ட முகாமைத்துவத்தினரிடமும் தோட்ட நிருவாகிகளிடமும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதம ஆலோசகர் டி.வி. சென்னன் கேட்டுள்ளார்.

இது தொடர்பான விசேட கூட்டமொன்று, இ.தொ.கா. பதுளைப் பணிமனையில் 8.8.2011 முற்பகல் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்தினை இ.தொ.கா.வின் ஆலோசகர் ஏற்பாடு செய்ததோடு, பது ளைப் பகுதி பெருந்தோட்ட முகாமையா ளரின் மற்றும் தோட்ட நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதனின் நடமாட்டமிருந்து வரும் பதுளைப் பகுதி பெருந்தோட்டங்களில் பாதுகாப்புக்களை பலப்படுத்தும் வகையில், தோட்ட முகாமைத்துவத்தினரும், தோட்ட நிருவாகிகளும் நடவடிக்கைகளை எடுத் துள்ளனர்.

தலவாகெல பூண்டுலோயா பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சீன் தோட்ட பகுதிக்குள் கிaஸ் பூசிய மனிதன் ஒருவன் அங்குள்ள தோட்ட பெண் ஒருவரை கத் தியை காட்டி பயமுறுத்தியதாக பூண்டு லோயா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் மத்திய மாகாண சபை உறுப் பினர் முரளி ரகு நாதனுக்கும் அறிவித் துள்ளனர்.

இது சம்பந்தமாக நுவரெலிய பொலிஸ் தலைமை காரியாலய மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட அத்தியட்சகர் பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுடன் தொடர்பு கொண்டு உடன் அத்தோட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொண்டதுடன் இது சம்பந்தமான உண்மை நிலையை கண்டறிந்து சம்பந்தப் பட்டவர்களை இனம் கண்டு உடன் கைது செய்யுமாறு பணித்துள்ளார்.

முரளி ரகுநாதன் மேலும் நேற்று இரவு கந்தபனை தோட்ட பகுதியில் இவ் வாறான மனிதர்கள் நடமாடியதாகவும் அப்பகுதி மக்கள் மிகவும் பீதியுடன் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

பெண்களை பயமுறுத்தி பல அடாவடித் தனங்களில் ஈடுபடும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை உடனடியாக நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க கோரி பதுளை 2வது மைல்கல் பிரதேச பெண்கள் (8) நேற்று பகல் 2.00 மணியளவில் எதிர்ப்பு பதுளை 2வது மைல்கல் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் டயர்களை எரித்தும் கோஷங்களை எழுப்பியும் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிaஸ் மனிதன் அடாவடி தொடர்ந்தும் பெண்கள் பீதி

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 8:22

பிடி பட்டால் உடனே அடித்தே கொல்ல வேண்டும் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum