சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஷேவாக் வருகையால் இந்தியா எழுச்சி பெறுமா?

Go down

Sticky 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஷேவாக் வருகையால் இந்தியா எழுச்சி பெறுமா?

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 11:02


டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்டில் இந்தியா தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்திலும், நாட்டிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் 319 ரன்னிலும் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பிஸ்டன் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணி மிகவும் மோசமாக தோற்றதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. நாளைய டெஸ்டிலும் தோற்றால் தொடரை இழந்துவிடும். அதோடு “நம்பர் 1” இடமும் பறிபோகும்.

காயம் காரணமாக யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோர் தொடரின் பாதியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக வீராட் கோலி, ஒஜா, ஆர்.பி.சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டு அணியில் இணைந்து உள்ளனர்.

இந்த டெஸ்டில் அனைவரது கவனமும் ஷேவாக் மீதே இருக்கிறது. முதல் 2 டெஸ்டில் விளையாடாத அதிரடி பேட்ஸ்மேனான அவர் நாளைய டெஸ்டில் இடம் பெறுவார். அவரது வருகையால் இந்தியா அணி எழுச்சி பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடரை சமன் செய்வதற்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும். முதல் டெஸ்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது டெஸ்டில் விளையாடாத காம்பீர் நாளைய டெஸ்டுக்கு உடல் தகுதி பெற்று விட்டார். அவர், ஷேவாக்குடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்குவார்.

பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் நீக்கப்படுகிறார். முதல் 2 டெஸ்டிலும் அவரது ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இந்தியாவின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் மீது மட்டுமே அதிக நம்பிக்கை உள்ளது. முதல் இரண்டு டெஸ்டிலும் அவர் சதம் அடித்து இருந்தார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் இங்கிலாந்து மைதானத்தில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. முதல் டெஸ்டில் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் அரை சதம் அடித்தார்.

கேப்டன் டோனியின் பங்களிப்பு இந்த தொடரில் மிகவும் மோசமாக உள்ளது. 7-வது வீரராக களம் இறங்கும் போது 2-வது புதிய பந்து வீசப்படுவதால் அவர் திணறி விடுகிறார். இந்த டெஸ்டிலாவது அவர் சிறப்பாக ஆடவேண்டும்.

இதேபோல லட்சுமண், ரெய்னா ஆகியோரது பேட்டிங்கில் மேலும் முன்னேற்றம் தேவை. ஹர்பஜன்சிங் இல்லாததால் அமித் மிஸ்ரா இடம் பெறுவார். ஆடுகளம் தொடக்கத்தில் ரிவர்ஸ் சுவிங்குக்கு சாதகமாக இருக்கும். பின்னர் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் வேகப்பந்து வீரர்கள் தேர்வு அதற்கு தகுந்தவாறு இருக்கும்.

பிரவீண்குமார், இஷாந்த் சர்மா இடம் பெறுவதில் சிக்கல் இருக்காது. ஸ்ரீசாந்த் இடம் பெறுவாரா அல்லது அவரது இடத்தில் ஆர்.பி.சிங்குக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே கேள்வி.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் அபாரமாக உள்ளது. ஆண்டர்சன், ஸ்டூவர்ட், பிராட், பிரெஸ்னென் முத்திரை பதித்து வருகிறார்கள். டிரெம்லெட் முழுமையான உடல் தகுதியுடன் இல்லாததால் பிரெஸ்னெனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.

பேட்டிங்கில் பீட்டர்சன், இயன்பெல், பிரையர், மார்கன் நல்ல நிலையில் உள்ளனர். காயம் காரணமாக டிராட்டுக்கு பதிலாக ரவிபோபரா சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி “டிரா” செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். அந்த அணி 4 டெஸ்டிலும் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டுள்ளது.

நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum