சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

Payanam பயணம்

Go down

Sticky Payanam பயணம்

Post by நண்பன் on Thu 8 Sep 2011 - 16:25




விமானக் கடத்தல் கதை.

மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி ஒரு வித்தியாசமான தமிழ் சினிமா
அனுபவத்தை கொடுக்க முனைந்திருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமான
விதத்தில் கொடுப்பதில் ஆர்வமுள்ள ராதா மோகன், அதில் ஜெயித்திருக்கிறார்
என்றே சொல்ல வேண்டும். படத்தின் மூன்றாவது காட்சியிலேயே கதையை
ஆரம்பித்துவிடுகிறார். மெல்ல மெல்ல விமானத்தில் உள்ளவர்களை
அறிமுகப்படுத்தி, அவர்களின் பிரச்சினைகளையும், சொல்லி படத்தில் உட்கார
வைத்து விடுகிறார்.

சென்னையிலிருந்து டெல்லிக்கு போகும் ஸ்டார்
ஜெட் விமானம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது. விமானத்தை
பாகிஸ்தானுக்கு கடத்த முயலும் தீவிரவாதிகளோடு துணை கேப்டன் நடத்திய
போராட்டத்தில், தீவிரவாதியின் துப்பாக்கிக் குண்டு வெடித்து விமானத்தில்
இன்ஜின் பழுதாகி வேறு வழியில்லாமல் திருப்பதியில் தரையிரங்குகிறது.
தீவிரவாதிகளின் தலைவன் யூசுப் கானையும், 100 கோடி ரூபாய் பணமும் கேட்டு
தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர். அரசு அதிகாரிகள் பிரகாஷ்ராஜ் தலைமையில் கூடி
மாய்ந்து மாய்ந்து விவாதிக்க, கமாண்டோ படை தலைவரான நாகார்ஜுன் அதிரடியாய்
உள்நுழைந்து எப்படி விமானத்தில் உள்ள பயணிகளை காப்பாற்றினார் என்பதை
சுறுசுறுவென சொல்லியிருக்கிறார்கள்.

விதவிதமான மனநிலையில் உள்ள விதவிதமான மனிதர்கள் ஒரு விமானத்துக்குள்
சிறைப்பட்டிருக்கிறார்கள். காத்திருக்கும் நேரம், நாட்களாக நீள்கிறது.
அப்போது அவர்களது ரியாக்ஷன்களும், ஏற்படும் மனமாற்றமும் அழகாகச்
சொல்லப்பட்டிருக்கின்றன. முதல் பாதியில் கடத்தல்காரர்களினால் கடத்தப்படும்
பிரச்சினையும், பயணிகளின் மனநிலையையும் மெல்ல, தன் போக்கில் விவரிப்பது
கொஞ்சமே கொஞ்சம் லெதார்ஜிக்காக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தூக்கி
சாப்பிடும்படியான இரண்டாம் பாதியிருப்பதால் இந்த குறையெல்லாம் தெரியவில்லை.
எல்லாம் வழக்கப்படி போகிறதே என்று நினைக்கும் போது, இடைவேளையின் போது
வரும் ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதைத்தொடர்ந்து கதையின்
போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன்
சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன. படத்தில் பாடல்களே
இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு என்று அங்கங்கே
அழகியல் அம்சங்கள்.

டாக்டரான ரிஷி, இளம் பெண் சனாகான், ஏர்ஹோஸ்டஸ் பூனம் கவுர், சர்ச் பாதர்
எம்.எஸ்.பாஸ்கர், அரசுத்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ், கமாண்டோவான
நாகார்ஜுன், ஒரு நடிகரின் தீவிர விசிறியான சாம்ஸ், எக்ஸ் கர்னலான தலைவாசல்
விஜய், வாஸ்து சாஸ்திர நிபுணர் மனோபாலா, மிமிக்ரி படவா கோபி, வேலை தேடி
இன்டர்வியூக்கு போகும் குமரவேல், சினிமா டைரக்டர் பிரம்மானந்தம் என்று ஒரே
நட்சத்திர பட்டாளம். அனைவருமே சிறிது நேரம் வந்தாலும் தம்தம் பாத்திரங்களை
சிறப்பாக செய்துள்ளார்கள்.

குறிப்பாக நாகார்ஜுன் வரும் இரண்டாவது
பாதி அருமை. அதிலும் கடைசி இருபது நிமிடங்கள் நல்ல விறுவிறுப்பாக போகிறது.
நாகார்ஜுனை பொறுத்தவரை கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பாகத்
தெரிந்தாலும் பெஸ்ட் ஜாப். பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில்
நிற்கும் நடிப்பு. படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர
வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு
அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு. படத்தில்
சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம்
கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித
நேயங்களுக்கும், உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்ஷன்
படத்தில்கூட தனது பாணியில் மாறாமல் டைரக்ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம்
பாராட்டத்தக்கது.

தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் விடும் சூப்பர் ஸ்டார்களை கிண்டல்
செய்திருக்கிறார் பாருங்கள் அது தூள். சாம்ஸூம், பிருதிவிராஜும்(பப்லு)
கலக்கல். (டீலா நோ டீலா)ரிஷிக்கும், சனாகானுக்குமான காதல் ரொம்ப கேஷுவல்.

குறையென்று பார்த்தால், தமிழ், தெலுங்கு என்று ரெண்டு மொழிகளில்
எடுத்திருப்பதால், நிருபர்களின் வசனங்களில் டப்பிங் சிங்க் ஆகாமல்
இருப்பதும், பயணிகளில் ஒரு பாதிரியாரும், இருதய நோய் குழந்தையும், லொட லொட
மாமா, மாமியும் கேரக்டர்கள்தான். அது மட்டுமில்லாமல் கடத்தப்பட்ட
விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பயணக்கைதியாக இருக்கிறோம் என்ற
உணர்வே இல்லை. முக்கியமாய் துணை நடிகர்களிடம். பிருதிவிராஜ்(பப்லு) சாம்ஸ்
பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை பாருங்கள். எவன் கடத்தினால்
எனக்கென்ன சாப்பாட்டைக் கொடுத்தால் போதும் என்று சாப்பிட்டுக்
கொண்டிருப்பது. கடத்திய மூன்றாவது நாளில் தாடி வளர்வதும், பின் ஐந்தாவது
நாளில் ஷேவ் செய்யப்பட்டது போல முகங்கள்... அசிஸ்டென்ட் டைரக்டர்கள்
கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

அதே போல் படம் படு சீரியஸாக செல்லும்போது ஆங்காங்கே வரும் காமெடிகள்
படத்தின் வேகத்துக்கும், டெம்ப்போவுக்கும் ஸ்பீடு பிரேக்கர் ஆகி
இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா மனிதரும் நல்லவரே என்ற
இயக்குநரின் கான்செப்ட் பிரமாதம் தான் என்றாலும் இவரது படங்களில் வரும்
அனைவரும் நல்லவர்களாகவே வருவதும், தத்துவம் பேசுவதும் களைய வேண்டிய
குறைகள்.

ரெட் ஒன் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவாளர்
கே.வி.குகன் தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார். அதே போல எடிட்டர்,
பின்னணியிசை அமைத்த பிரவீன்மணி போன்றவர்களின் உழைப்பும் கச்சிதம். பாடல்கள்
இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் படம்
பார்த்த திருப்தியைத் 'பயணம்' தருகிறது.

பயணம் - டயர்ட்லெஸ் ஜர்னி!






நடிகர்கள்
நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், சனாகான், பூனம் கவுர், ரிஷி, எம்.எஸ். பாஸ்கர், பப்லு, சாம்ஸ், 'தலைவாசல்' விஜய், மனோபாலா, பிரம்மானந்தம்
இசை
பிரவீன்மணி
இயக்கம்
ராதா மோகன்
தயாரிப்பு
பிரகாஷ்ராஜ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: Payanam பயணம்

Post by பர்ஹாத் பாறூக் on Thu 8 Sep 2011 - 17:02

படம் சூப்பர் ..
மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி ஜெயித்திருக்கிறது..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: Payanam பயணம்

Post by Atchaya on Thu 8 Sep 2011 - 17:06

வாவ்...பின்னூட்டமும் முன்னோட்டமும் சூப்பர்... :!+: :!+:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: Payanam பயணம்

Post by நண்பன் on Thu 8 Sep 2011 - 17:07



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: Payanam பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum