சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Go down

Sticky குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:03

கோவா என்றாலே விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு உன்னத சுற்றுலாத் தலம் என்பதை
யாருக்கும் சொல்லத் தேவையில்லை.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:04

கோவாவில் பீச் எப்படி ஒரு அடையாளமோ, அதேபோல் மது, மற்றொரு அடையாளம். மாநில கலால் வரி குறைவு என்பதால், இங்கு மதுவின் விலை மிகக் குறைவு. டீ கடை , பெட்டிக்கடைகளிலும் மது விற்பனை உண்டு. ஹோட்டல்களில் முதலில் மது வகை குறித்த விலைப் பட்டியல் தான் கொடுக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக கோவாவின் பாரம்பரியம் முறையில் முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் கேஷ்வ் பென்னி, ஓராக் எனும் இருவகை மது இங்கு ரொம்பவே பிரபலமாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் கோவாவிற்குப் படையெடுக்கின்றனர்.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:05

அதுவும், கிறிஸ்மஸ் பண்டிகையையும், ஆங்கில புத்தாண்டுப் பிறப்பையும் கோவாவிற்கு வந்து கொண்டாடும் ஐரோப்பிய நாட்டவர் - குறிப்பாக போர்ச்சுக்கீசியர்கள் மிக அதிகம். எனவே டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரையிலான காலத்தில் கோவா ஒரு ஐரோப்பிய நாடாகவே காட்சியளிக்கும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை கோவா கவர்ந்துள்ளது.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:05

அவர்களுக்குத் தக்கவாறு ஒன்று இரண்டல்ல, பதினாறு அழகிய கடற்கரைகள் உள்ளன. வட கோவாவில் உள்ள ஆரம்போல், மாண்ட்ரம், மோர்ஜிம், வகாட்டர், அன்சுனா, பாகா, காலங்குட்டா, சிங்கரின், மிராமர் ஆகியனவும், தென் கோவாவில் மஜோர்டா, பெடால்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அன்சுனா, காலங்குட்டா, மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:06

அரபிக் கடலையொட்டியுள்ள இந்தக் கடற்கரைகளில் மாலை வேளைகளில் - அதுவும் தங்கள் அன்பு இணையுடன் பொழுதைக் கழிப்பதில் மயங்காத அயல் நாட்டு நெஞ்சங்களே இல்லை எனலாம். சூரியன் மறையும் வேளை மிகவும் அழகானதாகும். ‘குடி’ மகன்களுக்கு இந்த நேரம் அலாதியானது. காலங்குட் பீச்சில் நீர் விளையாட்டுகள் நிறைய இருக்கின்றன. பாராசூட்டில் பறப்பது, கடலில் மோட்டர் பைக்கில் செல்வது போன்ற விளையாட்டுகள் அங்கே உள்ளன.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:07

வெறும் 15 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய மாநிலமான கோவா, அரபிக் கடலிற்கும், மேற்கு மலைத் தொடர்ச்சிக்கும் இடையே அமைந்துள்ளதால் அதன் இயற்கை எழில் மட்டுமின்றி, இங்கு வாழும் மக்களும் பண்பாட்டளவில் மிகவும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். உணவு, உடை, பேச்சு, பாவனை அனைத்தும் தனித்தன்மையுடன் உள்ளது.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:09

கடற்கரை மட்டுமின்றி, இந்த அழகிய மாநிலத்தை திராகோல், சாபோரா, மாண்டோவி, ஜூவாரி, சால், தால்போன் ஆகிய ஆறுகளும் செழுமைப்படுத்துகின்றன. பழைய கோவாவையும், புதிய கோவாவையும் மாண்டோவி (இதனை மண்டோதரி என்றும் கூறுகின்றனர்) ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றில் அந்தி சாயும் பொழுதில் பெரும் படகுகளில் மிதந்துகொண்டு கேளிக்கையில் ஈடுபடுவதும் பெரிதாக நடக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளின் நிர்வாண சூரியக் குளியல், கடற்குளியல் போன்றவை ஒருகாலத்தில் இங்கு இருந்துள்ளது. இப்போது முற்றிலுமாக தடைச் செய்யப்பட்டுள்ளது. டூபிஸ் உடையில் குளிக்கிறார்கள். அவர்களுக்கான பிரத்தியோக கடைகள் அந்த கடற்கரை கிராமங்களில் உள்ளன. தங்கும் குடிசைகள், மேலைநாட்டு உணவுவிடுதிகள் கோவாவாசிகளால் நடத்தப்படுகிறது. தலைநகரில் ஓடும் மான்டொவி ஆற்றில் ஆடம்பரப் படகு பயணங்கள் வெகுவாக கவர்ந்திழுக்கிறது. இதில் தனியார் படகுகளும் ஈடுபடுகின்றன. அரசு சாந்த மோனிக்கா என்ற சொகுசு படகை இயக்குகிறது. மாலையில் இந்த பயணங்கள் தொடங்குகின்றன. படகில் அந்தக்கால‌ கோவா மற்றும் போர்த்துகீசிய மக்களின் பாரப்பரிய நடனங்கள் நடைபெறுகின்றன. நடனங்கள் கோவா மக்களின் அன்றைய ஆடை அணிகலன்களை விளக்குவதோடு, அவர்களது பாடல், பிர‌தான தொழிலாக இருந்த‌ மீன் பிடித்தலையும், கோவாவின் இயற்கை வளத்தையும், காதலையும் வர்ணிக்கிறது. இவற்றைப் பார்க்க மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இடையிடையே பார்வையாளர்களும் இந்தக்கால குத்தாட்டத்தை ஆடுகிறார்கள். அதுதான் சகிக்கவில்லை.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:09

இயற்கை எழிலை அழித்த முன்னேற்றம்

33 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கோவாவிற்குச் சென்றபோது கண்ட காட்சிகள், காலத்தின் ஓட்டத்தில் பெரிதும் மாறியிருக்கின்றன. இதில் கோவாவின் அழகிய சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு அழகிய ஓவியம் போல் கோவா தோற்றமளித்தது. ஆனால், இன்று வானளாவிய கட்டடங்களும், அகலமான விரைவு சாலைகளும் அந்த எழிலை அழித்துவிட்டன. ஆனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் ஏற்பட்ட ‘முன்னேற்ற’ மாற்றத்தினால் சற்றும் தன்னை இழக்காமல் இருப்பது பழைய கோவாதான். பரபரப்பற்ற சாலைகளும், நிதானமான மக்கள் போக்கும், வரலாற்றை சுமந்து நிற்கும் தேவாலயங்களும், அதனையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளும் மனதிற்கு அதே மகிழ்வைத் தருகின்றன.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:10

போம் ஜூசஸ் பசிலிகா

கோவாவிலுள்ள தேவாலயங்களில் மிகவும் பழைமையானதும், மிகுந்த போற்றுதலிற்குரிய கட்டடக்கலைச் சான்றாகவும் திகழும் இந்த தேவாலயம், குழந்தை ஏசுவிற்கானதாகும். மிக உயர்ந்த விதானமும், அழகியச் சிற்பங்களைக் கொண்டதுமான இந்த தேவாலத்தின் உள்ளே சென்றால், உள்ளரங்கின் உச்சத்தில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும். அனைத்தும் மரத்தில் செதுக்கப்பட்டவை. உயர்ந்த தூண்களில் செதுக்கப்பட்டுள்ள மாடங்களில் குழந்தை ஏசுவுடன் மரியா இருக்கும் காட்சியும், மற்ற மாடங்களில் தேவதைகளின் சிறபங்களும் வடிக்கப்பட்டுள்ளது.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:11

இந்தத் தேவாலயத்தில்தான் புனித ஃபிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இத்தேவாயலத்தில் ஒரு கூடத்தில் மாட்டப்பட்டுள்ள ஏசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:11

போம் ஜூசஸ் தேவாலயத்திற்கு எதிரில் அமைந்துள்ள மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்கது புனித ஃபிரான்சிஸ் அசிசி தேவாலயம் ஆகும். 1517இல் கட்டப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த மாடங்களுடன் கூடிய பிரம்மாண்டமான தோற்றத்துடன் கூடியது. இந்தத் தேவாலயத்தின் உட்புறமும் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் சான்றாக உள்ளன.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:13

இவை மட்டுமின்றி, நமது ரோசரி அன்னை தேவாலயம், புனித கதீட்ரல், புனித அகஸ்டின் (இப்போது இடிந்து சிதைந்து ஒரு பக்கம் மட்டுமே நிற்கிறது) ஆகியனவும் கலை, வரலாற்றுப் பெருமைமிக்க தேவாலயங்களாகும்.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:14

கோவாவிலுள்ள தேவாலயங்கள் அனைத்தும் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். கோவா செல்லும் சுற்றுலா பயணிகள், அதன் மெய்யான அமைதி சூழலை அனுபவிக்க வேண்டுமெனில், இங்குதான் தங்க வேண்டும். தங்கு விடுதிகளின் வாடகையும் இங்கு குறைவு. புதிய கோவாவிற்கு போனால், ஆயிரம் ரூபாய்ககு நூறு ரூபாய் மதிப்புதான் இருக்கும் என்பதை அறிக.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:14

தேவாலயங்கள் மட்டுமல்ல, இம்மாநிலத்திலுள்ள கோவில்களும் மிகச் சிறப்பானவை, அழகாக வடிவமைக்கப்பட்டவை. அவைகளும் இயற்கை சூழலில் எழிலுடன் அமைந்துள்ளன. பாண்டாவில் இருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள மஹாலட்சுமி கோவில், தலைநகர் பான்சிமில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் பெர்மம் என்ற இடத்தில் அமைந்துள்ள துர்க்கைக் கோவில், மர்மகோவாவில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள தத்தா மந்திர், சாங்குவேம் தாலுக்காவிலுள்ள மஹாதேவ் கோவில். இது 13வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்படி ஏராளமான கோவில்களும் கோவாவில் நிறைந்திருக்கின்றன.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 23:17

மற்ற எந்த ஒரு சுற்றுலாத் தலத்தையும் விட, கோவா கொண்டிருக்கும் சிறப்புத் தன்மை யாதெனில், இங்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தங்கலாம். தங்குவதற்கு மட்டும் மற்ற சுற்றுலாத் தலங்களை விட இங்கு கூடுதலாக செலவாகிறது.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 23:53

என்னைவிடவா
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 23:55

எனக்கும் கோவாக்குப் போக ஆசையாக உள்ளதுப்பா ஹாசிம் அழைத்துச்செல்ல மாட்டீரா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by kalainilaa on Thu 15 Sep 2011 - 9:03

நண்பன் எனக்கும் கோவாக்குப் போக ஆசையாக உள்ளதுப்பா ஹாசிம் அழைத்துச்செல்ல மாட்டீரா?


கோ வா ................................... :,;: :,;: :,;: சொல்லிப்பாருங்க வரும் ,போகும் . :,;: :,;: :,;:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 9:25

நண்பன் wrote:எனக்கும் கோவாக்குப் போக ஆசையாக உள்ளதுப்பா ஹாசிம் அழைத்துச்செல்ல மாட்டீரா?

நான் கூட்டிட்டுப் போறன் டிக்கட் போடுங்க நீங்க நல்ல சுத்திக் காட்டுவன் தெரியுமா
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum