சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

10 ஆயிரம் முஸ்லிம் மக்களுடன் மோடி விரதம்:அமைதி- சமூக ஒற்றுமை ஏற்பட வித்தியாச களம்

Go down

Sticky 10 ஆயிரம் முஸ்லிம் மக்களுடன் மோடி விரதம்:அமைதி- சமூக ஒற்றுமை ஏற்பட வித்தியாச களம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Sep 2011 - 7:35

ஆமதாபாத்: நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற கருத்தை மையப்பொருளாக முன்வைத்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 3 நாள் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார். இந்த விரதத்ததில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருடன் முஸ்லிம் மக்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
பிரதமர் பதவிக்கு கூட முன்நிறுத்தப்படலாம் : குஜராத் மாநிலத்தின் முதல்வர் மோடி தற்போது உலக அளவில் பேசப்படும் தலைவராக உருவகம் பெற்று வருகிறார்.இவரது ஆட்சி காலத்தில் குஜராத் மாநிலம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி பெற்று வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழில்வளர்ச்சியில் முன்னணி பாதை நோக்கி சென்று மாநில வளர்ச்சிக்கு மோடி பெரிதும் துணையாக இருந்து வருவதாக பல புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குஜராத் வன்முறை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த விவகாரத்தில் கீழ்கோர்ட்டே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பா.ஜ.,வுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை தெளிவுப்படுத்துவதாக பா.ஜ., அறிவித்தது. வரும் காலத்தில் மோடி பிரதமர் பதவிக்கு பா.ஜ., முன்நிறுத்தும் ஒரு நபராக திகழ்வார் என அமெரிக்க பார்லி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்வானி உள்ளிட்ட தலைவர்கள பங்கேற்பு : இவ்வாறு மோடியை சுற்றி தேசிய அரசியல் காற்று வீசிக்கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மோடி 3 நாள் தொடர் உண்ணாவிரதத்தை இன்று ( சனிக்கிழமை ) காலையில் ஆமதாபாத்தில் துவக்குகிறார். குஜராத் பல்கலை., வளாகத்தில் நடக்கும் உண்ணாவிரத ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இதற்கென மேடையில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரதத்தின் முதல்நாளில் பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத்சிங், மோடியின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக இருக்கும் அருண்ஜெட்லி, மற்றும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். மாநிலத்தின் 5 மண்டல பகுதிகளில் இருந்து தலா 2 ஆயிரம் முஸ்லிம் மக்கள் வீதம் 10 ஆயிரம் பேர் இந்த விரதத்தில் பங்கேற்கின்றனர் என மாநில பா.ஜ., சிறுபான்மை அமைப்பு கன்வீனர் காதர்ஷேட் கூறியுள்ளார்.

ஜெ.,தனது பிரதிநிதிகளை அனுப்புகிறார்: தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் எம்.பி.க்கள் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோரை தனது பிரதிநிதிகளாக கலந்துகெள்ளுமாறு முதல்வர் ஜெ., பணித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் : இந்த போராட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ., மற்றும் குஜராத் அரசு ஆதரவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கமாக இந்த போராட்டத்தில் திரளான முஸ்லிம் மக்கள் தாங்களாக பங்கேற்கின்றனர் என மாநில பா.ஜ., தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் நீதி கிடைக்க பாடுபடுவேன் மோடி கடிதம்: கடந்த 10 ஆண்டுகளில் எனது உண்மையான தவறுகள் சுட்டிக்ககாட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டில் இனக்கலவரம் , மோதல் எவ்வித நன்மையையும் இந்த சமூகத்திற்கு ஏற்படுத்தாது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு எனது மாநில அரசு செயல்பட்டு வருகிறது. எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். இதனால் இந்த விரத போராட்டத்தை துவக்குகிறேன் என அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

காங்., போட்டி உண்ணாவிரதம்: மோடி போராட்டம் அறிவித்ததையடுத்து காங்., போட்டி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப்போவதாக அறிவித்துள்ளனர். சபர்மதி ஆசிரமம் அருகே சங்கர்சிங் வகீலா தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. இது நகைப்புக்குரியது , அரசியலில் தரம்தாழ்ந்த செயல் என்று பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum