சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தெற்கைப்போல் வடக்கையும் பார்ப்பவன் நான் பிரிந்து நிற்காமல் இணைந்து செயற்படுவோம்

Go down

Sticky தெற்கைப்போல் வடக்கையும் பார்ப்பவன் நான் பிரிந்து நிற்காமல் இணைந்து செயற்படுவோம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 2 Oct 2011 - 6:09

1,800 முன்னாள் புலி உறுப்பினர்களை பெற்றோரிடம் கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி அழைப்பு

ஒரு சிலரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இலட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலியிட இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கடந்த கால கசப்பான சம்பவங் களைக் கிளறி பகைமையையும் குரோதத்தையும் தோற்றுவிப்பதை விடுத்து ஒரு தாய் மக்களாக நாம் அனைவரும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நான் வடக்கு, கிழக்கு என பிரித்துப் பார்ப்பவனல்ல. எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் எமது மக்கள். தெற்கைப் போலவே வடக்கையும் பார்ப்பவன் நான். நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளதால் பிரிந்து நிற்காமல் நாம் இணைந்து செயற்பட்டு நம் தாய் நாட்டை முன்னேற்றுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1800 பேரை அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள், மதத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்து உரையாற்றிய ஜனாதிபதி:

இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். உங்களைப் போன்றே நானும் மகிழ்ச்சியுறும் நாள். இக்காலம் இந்து மதத்தவரின் விசேட காலமாகும். இந்து மக்கள் நவராத்திரியை அனுஷ் டிக்கும் வாரம் இது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமொன்றில் புனர்வாழ்வு பெற்று சமூகத்தோடு இணையும் உங்களை அலரி மாளிகையில் வரவேற்பதை சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன்.

உங்களை நான் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று இந்த நல்ல நாளில் உங்கள் எதிர்காலம் சிறப்பதற்காகவும் ஆசிகளையும் வாழ்த் துக்களையும் வழங்குகின்றேன்.

நாம் அனைவரும் இந்த நாட்டு மக் கள். வரலாற்றில் நம் மத்தியில் சிறந்த நல்லிணக்கம் இருந்தது. அதை சீர்குலைக்கும் வகையில் சில பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் நாடு என்ற வகையில் நாம் ஒன்றாக வாழ்கிறோம். ஒன்றாகவே செயற்பட்டோம். எமது தலைவர்கள் அதற்கான வழிகாட்டலை வழங்கினர்.

வரலாற்றில் சில குறைபாடுகள் நிகழ்ந் துள்ளன. அதனை நாம் மறந்து தவறுகளை சரி செய்து கொண்டு சுதந்திரமாக வாழ் வோம். நாம் எமது உறவுகளுடன் வாழ்கிறோம். எனினும் உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது. இது உங்கள் தவறினால் நிகழ்ந்ததல்ல. அந்த கடந்த கால சம்பவங்களைக் கிளறுவதில் பயனில்லை. அந்த இருளிலி ருந்து மீண்டு ஒளியில் புது வாழ்வு வாழ்வேம்.

உங்கள் அபிலாஷைகளை நாம் என்றோ அறிந்து கொண்டோம். அதனால்தான் உங்களை மீட்டு பாதுகாத்து புனர்வாழ்வு வழங்கினோம். 12,000 பேருக்கு நாம் புனர்வாழ்வளித்துள்ளோம். அதில் பெருந்தொகையினர் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலரே மீதமுள்ளனர்.

துப்பாக்கிகளுடனன்றி வாழ்க்கைக்கான தொழிற் பயிற்சிகளும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அது உங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். சமூகத்தில் எவ்வித தடையுமின்றி நீங்கள் இனி வாழ முடியும்.

இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது எம்மிடம் வந்த மூன்ற இலட்சம் மக்களில் 12 ஆயிரம் பேருக்கு நாம் புனர்வாழ்வளித்துள்ளோம். இது எமக்கு பெரும் சவாலாக அமைந்த விடயம். சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்கவே இந்த புனர்வாழ்வளிப்பு செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

உங்களை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் விரோதியாகப் பார்க்கவில்லை. உங்களை சரியான வழியில் வழி நடத்தினோம். இதில் பிழை கண்டுபிடிக்க சில குழுக்கள் காந்திருந்தன. அவர்களின் தவறான எண்ணங்களை எம் செயற்பாடுகளின் மூலம் நாம் சரிசெய்தோம்.

எம்மிடம் புனர்வாழ்வு பெற்றவர்களை நாம் நல்ல நோக்கத்துடனேயே பார்க் கின்றோம். சமூகம் என்பது மலர் மெத் தையல்ல. நீங்கள் சமூகத்துடன் இணைந்து வாழும் போது உங்களைத் தவறான வழியில் இட்டுச் செல்ல பல அமைப்புக்கள் வரலாம். நீங்கள் இனி தவறான வழிக்கு சென்று விடக்கூடாது.

பல்வேறு திறமை படைத்த நீங்கள் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வர்களாக வாழ வேண்டும். உங்கள் எதிர்காலத் தேவைகளை நாம் கவனிப்போம். உங்கள் ஊருக்கு நீங்கள் செல்கையில் அங்கு பல மாற்றங்களை காணமுடியும். அங்கு இப்போது குண்டு வெடிப்புகள் இடம்பெறாது. யுத்தம் இல்லை. தவறான வழியில் நீங்கள் சென்றதால் துயரங்கள், கஷ்டங்களை அனுபவித்தீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு சுய தொழிலுக்கான கடன்களை வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத் துள்ளோம். உங்கள் வளமான எதிர்காலத் திற்கான அனைத்தையும் நாம் நிறை வேற்றுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளர் தனபாலா ஜனாதிபதிக்குப் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். புனர் வாழ்வு பெற்ற இளைஞர் இருவர் வரைந்த நல்லிணக்கம் தொடர்பான ஓவியம் ஒன்றை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்த போது ஜனாதிபதி அவர்கள் அவர்களுக்குக் கைலாகு கொடுத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum