சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியமாயிருக்கும்

Go down

Sticky தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியமாயிருக்கும்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 14 Oct 2011 - 8:16


நம்மில் பலருக்கும் தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லறை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அநேகம்.


* தண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோருக்கும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


* உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது. உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும் (வியர்வை, சிறுநீர் வடிவத்தில்) தண்ணீர் இருந்தால் தான் முடியும் உடம்பின் வெப்பநிலையை (கோடையிலும்) சீராக பராமரிக்க தண்ணீர்தான் அவசியம்.

* போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

* விளையாட்டு வீரர்களுக்கு தசைச்சோர்வு ஏற்படவும் அவர்கள் திறமையை சரிவர வெளிக்காட்ட இயலாது போவதும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான். நாம் திரவபதார்த்தங்கள், பானங்கள் உட்கொள்கிறோம் என்பதற்காக ஒரேயடியாகவும் தண்ணீரை ஒதுக்கி விட முடியாது.

* மற்ற குளிர்பானங்களைப் போல் தண்ணீரில் செயற்கை நிறமூட்டியோ, மண மூட்டியோ கிடையாது. காபி, டீயில் காஃபின் என்ற நச்சுப் பொருள் பற் சொத்தைக்கு காரணமாகசர்க்கரை எல்லாம் உண்டு.

* தாகம் தணிக்க சிறந்தது எது? தண்ணீர் தான். உடற்பயிற்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, தண்ணீர் தான் உட்கொள்ள ஏற்றது. சில இன்சுவை பானங்கள் குடித்ததுமே தாகம் தணிவதாக உணர்கிறோம்.

* உண்மையில், அந்த பானங்கள் நம் தசைகளிலுள்ள ஈரப் பசையை நீராக்கி குடல் வழி செலுத்துகிறது. இதனால் உள்ளுக்குள் வறட்சிதான் விளைகிறது. நோயாளிகள் திட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது.

* திரவரூபமாக உட்கொள்வது எளிது. அத்திரவ உணவுகள் சத்துக்களோடு, நீர்த்தன்மையும் கொண்டவை என்பதும் சவுகரியம் இயல்பான உடல்நலம் உள்ளவர்கள் தம்மால் முடிந்த அளவு தண்ணீரை குடிக்கலாம் அதில் கொழுப்பு (கயவ) இல்லை .

* நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது அவரவர் உடலமைப்பு, உணவுப் பழக்கம், வேலை, வாழ்கிற சீதோஷ்ண நிலை போன்ற அநேக விஷயங்களை பொறுத்தது.

* இந்தியா மாதிரி உஷ்ணப் பிரதேசத்தில் வசிக்கிறவர் உடம்பிலிருந்து நிறைய தண்ணீரை இழக்கிறார். ஈடு செய்ய வேண்டியவராகிறார். வாந்தி வயிற்றுப் போக்கின் போதும் நிறைய தண்ணீர் இழக்கப்படுகிறது.

* சுமார் 60 கிலோ எடையுள்ள ஒருவர் பத்து க்ளாஸ், திரவ ரூபமாக உட்கொள்ள வேண்டும். (ஒரு வேளைக்கல்ல ஒரு நாளைக்கு) அதில் முக்கால் வாசி தண்ணீராக இருக்க வேண்டும்.

* சிறுநீரின் நிறம் அடர்ந்து காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்து கொள்ளலாம். சிறுநீரக சம்பந்தமான பழுது இருதய கல்லீரல் கோளாறுள்ளவர்கள் தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உறுப்புகளின் அப்போதைய கழிவுகளை வெளியேற்றும் திறன் குறைந்திருக்கும்.50 முதல் 60 கிலோ எடை கொண்டவர்கள் 24 மணி நேர தேவைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். இது வெறும் தண்ணீர் மட்டும் என்றில்லை. காய்கறி, பழங்கள், ஜூஸ், கூட்டு, குழம்பு, சாம்பார் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

* உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது.

* சுவாசம் வழியாக 300 முதல் 400 மி.லி. நீர் வெளியேறுகிறது. வியர்வை மூலம் 300 முதல் 400 மி.லி. வெளியேறுகிறது. இதை சரிக்கட்டத்தான் நாம் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டியிருக்கிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும்.

* ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும்.

* கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இப்போது கோடைகாலம் என்பதால் வெயில் அனலாய் கொளுத்துகிறது. மதிய நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.* இந்த வெயில் காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் டீஹைடிரேஷன் என்கிற நீர்ச்சத்தின்மை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மூளை, இதயம், சிறுநீரகம் ஆகிய உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.

* டீஹைடிரேஷன் ஆரம்ப நிலையில் இருந்தால் தண்ணீர் மற்றும் பழச்சாறு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதனால், தண்ணீர் நிறைய குடியுங்கள். முக்கியமாக, அதை சுத்தமாக குடியுங்கள். இந்த சீசனில் என்னென்ன பழங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள்.

வெயிலில் அதிக நேரம் அலையாதீர்கள். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றினால் நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள் வராது.


தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் பயக்கும்.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியமாயிருக்கும்

Post by risana on Fri 14 Oct 2011 - 9:58

illa sir alavukku minjinal nanju sir ellam nanjuthan hassim sir ithu unmaiya
avatar
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியமாயிருக்கும்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 14 Oct 2011 - 10:05

risana wrote:illa sir alavukku minjinal nanju sir ellam nanjuthan hassim sir ithu unmaiya

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அதனை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள் என்பது புலப்படுகிறது இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நன்மை இருக்கிறது என்று அறிந்தால் அதை நாம் விடுவதில்லைதானே அதாவது எவ்வளவு அதிகமாக நன்மைகள் செய்கிறோமோ அது மர்மையில் நன்மை தருவதில்லையா அது போல் எடுத்துக்கொள்ளலாம் ஆராய்ச்சிகளில் சொல்லப்படுபவைகள் அனைத்தும் உண்மை என்றும் எடுத்துக்கொள்ள முடியாதுதான் அவற்றில் எது நமக்கு பிரயோசனமாக உள்ளதோ அதை மட்டும் எடுத்துக்கொள்வது நமது பகுத்தறிவுத் திறன் என நான் கருதுகிறேன் நன்றி தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியமாயிருக்கும்

Post by risana on Fri 14 Oct 2011 - 10:07

நேசமுடன் ஹாசிம் wrote:
risana wrote:illa sir alavukku minjinal nanju sir ellam nanjuthan hassim sir ithu unmaiya

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அதனை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள் என்பது புலப்படுகிறது இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நன்மை இருக்கிறது என்று அறிந்தால் அதை நாம் விடுவதில்லைதானே அதாவது எவ்வளவு அதிகமாக நன்மைகள் செய்கிறோமோ அது மர்மையில் நன்மை தருவதில்லையா அது போல் எடுத்துக்கொள்ளலாம் ஆராய்ச்சிகளில் சொல்லப்படுபவைகள் அனைத்தும் உண்மை என்றும் எடுத்துக்கொள்ள முடியாதுதான் அவற்றில் எது நமக்கு பிரயோசனமாக உள்ளதோ அதை மட்டும் எடுத்துக்கொள்வது நமது பகுத்தறிவுத் திறன் என நான் கருதுகிறேன் நன்றி தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு
thank you ur information cassim sir
avatar
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியமாயிருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum