சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பொம்மிம்மா ..............!

Go down

Sticky பொம்மிம்மா ..............!

Post by பானுஷபானா on Wed 19 Oct 2011 - 15:15



என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து,
தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன்
வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!

குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!

பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச்
சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத
இடம் பார்த்து… தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில்
சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!

என் கல்லூரி விடுமுறை நாட்களில்,
அப்பாவுக்குத் துணையாக நான் கல்யாணப் பந்தல் போடப் போகிறபோதெல்லாம்…
என்றாவது ஒரு நாள் உனக்கும் திருமணம் நடக்கும்… அந்தத் திருமணத்தில்
இப்படிப் பந்தல் போடுவதுதான் என் பங்காக இருக்கும் என்று நினைப்பேன்.
ஆனால்… ஆனால்… என் உள் மனதின் ஆழத்தில் அந்த மணப்பந்தலில் மாப்பிள்ளையாக
அமரப் போவதே நீதானடா! என்று எப்போதும் ஒரு பட்சி சொல்லும்.

என் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் என்னை அழைத்தார் உன் தந்தை. தம்பி… நம்ம மில்லைப் பாத்துக்கிறீங்களா? என்றார்.

சரிங்க! என்று வேலையை ஆரம்பித்தேன்.

அடுத்து வந்த பொங்கல் திருநாளில்… உங்கள் வீட்டுக்கு வந்த என்னை உள்ள
போய்ச் சாப்பிட்டு வாங்க தம்பி என்றவர், திரும்பி உன்னை அழைத்து தம்பிக்கு
சாப்பாடு போடும்மா என்றார். ஆடிப்போய்விட்டேன் நான்.

பொங்கல் வைத்து அம்மனுக்குப் படையல் போடுவதைத்தான் இதுவரை
பார்த்திருக்கிறேன். ஆனால், நீ பரிமாற வந்தது, அம்மனே எனக்குப் படையல்
போடுவதைப் போல இருந்தது. நம்ப முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்தேன்.

வேற என்ன வேணும் தம்பி? என்றார் உன் தந்தை.

ஒண்ணும் வேணாங்க… பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதுங்க எனக்கு என்றேன்.

சிரித்தபடி என்னைப் பார்த்த உன் தந்தை, அந்த தேவ வார்த்தைகளை உதிர்த்தார்…
பொம்மியை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சா கண் கலங்காமப் பாத்துப்பீங்களா..?
கண்கள் கலங்கின எனக்கு. உள்ளுக்குள் இருக்கும் பட்சியோ சொன்னேன்ல என்று கூவிக் குதிக்க ஆரம்பித்தது.

திருமணம் முடிந்த அடுத்த நாள் அதிகாலை சட்டென்று விழிப்பு வந்து,
வேகவேகமாக முகம் கழுவிக்கொண்டு நான் கிளம்புகையில், பால் எடுத்துட்டு வரவா
கௌம்பிட்டீங்க என்றாய் ஒரு மர்மப் புன்னகையோடு.

ஆமாம் என்றேன்.

அதெல்லாம் உங்க அம்மா எடுத்து வந்து கொடுத்துட்டாங்க என்றாய்.

அடடா! என்றேன்.

ஏன் ரொம்பக் கவலைப் படறீங்க… அந்த மூணு சொட்டுப் பால் போயிடுச்சின்னா என்றாய் சிரித்தபடியே.

தெரியுமா? என்றேன் வியப்பாக.

எப்பவோ! என்று புன்னகைத்துவிட்டு, மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை
வெச்சிக்கிட்டு… ?பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதும்?னு வசனம் பேசுனீங்க
என்று கிள்ளினாய். ஆஹா… ராணி வம்சக் கிள்ளல் அது.

மூணு சொட்டு இனிமே மறந்துடுங்க. சொம்பு நிறைய பால் காய்ச்சித் தர்றேன்.
மூச்சு முட்டக் குடிங்க! என்று என் கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தாய்.

அனுபவிடா! என்று கூப்பாடு போட்டது என் பட்சி.

பொம்மைக் கடைப் பக்கம் போகாதே
என்றால் கேட்கிறாயா
பார்…
குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம்பிடிப்பதை

இன்று
காதல் ஜெயந்தி
முழிக்காதே….
இன்று உன் பிறந்தநாள்.

தபூ சங்கர்-
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பொம்மிம்மா ..............!

Post by நண்பன் on Wed 19 Oct 2011 - 16:45

கதை சூப்பரப்பு பகிர்வுக்கு சினிமாப் படம் பார்த்த உணர்வு சிறு கதையாக இருந்தாலும் நிறையக் காட்சிகள் கண்டேன் அருமை
:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொம்மிம்மா ..............!

Post by பர்ஹாத் பாறூக் on Wed 19 Oct 2011 - 18:12

நண்பன் wrote:கதை சூப்பரப்பு பகிர்வுக்கு சினிமாப் படம் பார்த்த உணர்வு சிறு கதையாக இருந்தாலும் நிறையக் காட்சிகள் கண்டேன் அருமை
:!+: :!+:

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பொம்மிம்மா ..............!

Post by முனாஸ் சுலைமான் on Wed 19 Oct 2011 - 18:14

நண்பன் wrote:கதை சூப்பரப்பு பகிர்வுக்கு சினிமாப் படம் பார்த்த உணர்வு சிறு கதையாக இருந்தாலும் நிறையக் காட்சிகள் கண்டேன் அருமை
:!+: :!+:
@. @. :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பொம்மிம்மா ..............!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum