சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பெண்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் விவாகரத்து சட்டம்

Go down

Sticky பெண்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் விவாகரத்து சட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Nov 2011 - 16:37

சீனாவில் சமீபத்தில் விவாகரத்து சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தம், அங்குள்ள பெண்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டத் திருத்தத்தால், பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவைப் போலவே சீனாவிலும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தான் இருந்தது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக அங்கு, கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறியது. தொடர்ந்து தனிக் குடித்தனம் துவங்கியது. மேலும், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியால், பல்வேறு சிக்கல்களும் தோன்றியுள்ளன.

அதிகரிக்கும் விவாகரத்து: ஒரு காலத்தில் சீனாவில், விவாகரத்து என்பது மோசமான வார்த்தையாகக் கருதப்பட்டது. இன்று அதே சீனாவில், மாறி வரும் பொருளாதாரச் சூழலில், விவாகரத்து மளமளவென அதிகரித்து வருகிறது. இந்தாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 28 லட்சம் தம்பதியர் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் கடந்த ஐந்தாண்டுகளில், விவாகரத்து 7 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், நாட்டில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை, தற்போது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, சீன பொது விவகார அமைச்சகத்தின் கணக்குப்படி, சராசரியாக ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் விவாகரத்துகள் நடக்கின்றன.

புதிய சட்டத் திருத்தம்: இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி, விவாகரத்து சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிவித்தது. அதன்படி, விவாகரத்து பெற்ற பின், அந்தத் தம்பதியர், ஒரே வீட்டில் வசிக்க முடியாது. அல்லது அந்த வீட்டை பாதியாகப் பிரித்துக் கொள்ளவும் முடியாது.

வீடு கிடையாது: இருவரில், யார் அந்த வீட்டைச் சொந்தமாக வாங்கியுள்ளாரோ, அவர் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்க முடியும். மற்றவர், அதை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதாவது கணவன், தனது காசில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தால், விவாகரத்து பெற்ற பின், அந்த வீட்டின் மீது மனைவி உரிமை கொண்டாட முடியாது.

பெண்களுக்கு பாதிப்பு: இந்த சட்டத் திருத்தத்தால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். சீனாவில் பாரம்பரியமாக, கணவன் அல்லது அவரது பெற்றோர் தான் ஒரு வீட்டை சொந்தமாக வாங்குவர். ஆனால், சமீப காலமாக பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், வீடு மற்றும் நிலத்தின் விலை விண்ணை முட்டிவிட்டது. இதனால், பெண்கள் பலர் சொந்த வீடுள்ள ஆணையே திருமணம் செய்து வருகின்றனர். இந்த புதிய விவாகரத்து சட்டம், ஆண்களுக்குத் தான் சாதகமாக உள்ளது. சொந்த வீடுள்ள கணவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக, மனைவி வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பெயரளவில் பெண் உரிமை: யாங் யியான்,31, என்ற பெண் இதுகுறித்துப் பேசும் போது,"எங்களுக்குத் திருமணம் ஆகும் முன்பே, எனது முன்னாள் கணவர், ஒரு அபார்ட்மென்ட் வாங்கியிருந்தார். சமீபத்தில் எங்களுக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது. தற்போதைய திருத்தப்பட்ட சட்டத்தின்படி, எனக்கு அந்த வீட்டில் உரிமை இல்லை. அதாவது, நான் வீடிழந்தவளாகி விட்டேன். எனினும், எனது சேமிப்பை வைத்து ஓரளவுக்கு சமாளித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு இல்லத்தரசியாக (ஹவுஸ் ஒய்ப்) இருந்திருந்தால் கஷ்டம் தான்' என்றார்.

சீனாவின் நீதித் துறையில், 13 ஆண் நீதிபதிகளுக்கு ஒரு பெண் நீதிபதி என்ற அளவில் தான், பெண் உரிமை உள்ளது. அதே போல் தான், குடும்ப விவகாரங்களிலும் பெண் உரிமை என்பது, வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் விவாகரத்து சட்டம்

Post by ஹம்னா on Sat 19 Nov 2011 - 19:05

என்ன கொடுமையடா இது. {))


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum