சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சுயநலமற்ற சேவையை வழங்கத் தவறின் உள்@ராட்சி அதிகாரம் ஆணையாளரிடம்

Go down

Sticky சுயநலமற்ற சேவையை வழங்கத் தவறின் உள்@ராட்சி அதிகாரம் ஆணையாளரிடம்

Post by *சம்ஸ் on Wed 7 Dec 2011 - 6:39

விருப்பு வாக்குக்கான செயற்பாட்டை விட்டு மக்களுக்கு சேவையாற்றுங்கள் -ஜனாதிபதி
லோரன்ஸ் செல்வநாயகம்
சுயநலமற்ற சேவையை மக்களுக்கு வழங்கத் தவறினால் உள்ளூராட்சிச் சபைகளின் அதிகாரங்களை ஆணையாளர்களுக்குக் கையளிக்க நேரிடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

விருப்பு வாக்குக்காக செயற்படுவதை விடுத்து நாட்டின் மீது அக்கறைகொண்டு செயற்பட முன்வரவேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி; பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் புதிய உள்ளூராட்சிச் சபைச் சட்ட திட்டங்களுக்கேற்ப தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற தேசிய உள்ளூராட்சி மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் ஏ. எல். எம். அதாவுல்லா, பசில் ராஜபக்ஷ, எஸ். பி. நாவின்ன உட்பட அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் நாடளாவிய ரீதியிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :-

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பயணத்தில் முழுமையான பங்களிப்பை உள்ளூராட்சிச் சபைப் பிரதிநிதிகள் வழங்கி வருகின்றனர். அதனால் தான் அரசாங்கம் உள்ளூராட்சிச் சபைகளுக்கு அதிகளவு நிதியினை வழங்கி வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள்; அமைச்சர்களுக்கு வழங்கப்படும் நிதியை விட அதிகமான நிதி உள்ளூராட்சிச் சபைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் அலரி மாளிகையில் பல புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளிக்க வருகை தந்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே எமது நகர்ப்புறங்களின் எழிலையும் தூய்மையையும் வியந்து பாராட்டினர். அதனைக் கேட்க பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

சகல நகரங்களையும் கிராமங்களையும் அவ்வாறு வைத்திருக்க முடியுமானால் எவ்வளவு நல்லது. எமக்கு நீண்ட வரலாறு உள்ளது. கடந்த காலங்களில் கிராம சபைகள் மூலமே மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டன. ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக செயற்பட எம்மால் முடிந்துள்ளது. ஆசிரியர்களுக்கு உரிய சன்மானம் வழங்கும் பழக்கத்தை எமது அரசர்களே ஆரம்பித்துள்ளனர்.

தற்போது சில உள்ளூராட்சிச் சபைகளில் மோசடிகள் நடக்கின்றன. நிதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை. வாக்குகளை நோக்கமாகக் கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வாக்குகள் சில குறையுமென்றால் கிடைக்கவுள்ள பதவி பறிபோகாது. அந்த விடயத்தில் உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் பயப்படத் தேவையில்லை. விருப்பு வாக்கு முறையை நாம் தொடர்ச்சியாக வைத்திருக்கப் போவதில்லை. விருப்பு வாக்கை மறந்து நாட்டு மக்களுக்கு முறையாக சேவை செய்வதில் அக்கறை கொள்ளுங்கள்.

30 வருடங்களுக்குப் பின் வடக்கு கிழக்கு உட்பட சகல உள்ளூராட்சிச் சபை பிரதிநிதிகளும் இம் மாநாட்டுக்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக வடக்கு பிரதிநிதிகள் வந்துள்ளனர்.

எந்தக் கட்சியில் இருந்தாலும் மக்களிடம் குரோதம், வைராக்கியத்துடன் செயற்பட வேண்டாம். பிரிவினை ஒருபோதும் வேண்டாம். அத்தகைய செயற்பாடுகள் நாட்டையே சீரழித்து விடும்.

இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனியும் அனைவரும் அதனை உணர்ந்து செயற்படுவது அவசியம். ஒத்துழைப்புடன் செயற்படுவோம் ஒரே தாயின் பிள்ளைகள் போல் இணைந்து மக்களுக்காக உழைப்போம் எனவும் ஜானதிபதி மேலும் தெரிவித்தார்.

சில நிமிடங்கள் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி; மக்கள் சேவை மிக முக்கியமானதும் பொறுப்பு வாய்ந்ததுமாகும். நாம் எல்லோரும் அதற்காக ஒன்றுபட வேண்டும். அதற்கான சகல உதவிகளையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சிச் சபைகளின் முகாமைத்துவச் செயற்பாடுகள், திண்மக் கழிவு அகற்றலில் சிறப்பாகச் செயற்பட்ட சபைகளுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் பணமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா மேற்படி மாநாட்டைக் குறிக்கும் நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுயநலமற்ற சேவையை வழங்கத் தவறின் உள்@ராட்சி அதிகாரம் ஆணையாளரிடம்

Post by jasmin on Wed 7 Dec 2011 - 9:48

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum