சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

கடவுள் என் பக்கம் - சேவக்

Go down

Sticky கடவுள் என் பக்கம் - சேவக்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Dec 2011 - 8:27

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், 153 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3&1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. கேப்டன் சேவக் 219 ரன் விளாசி உலக சாதனை படைத்தார். இந்தியா & வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2&1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது போட்டி இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ஷர்மா அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சேவக், கம்பீர் களமிறங்கினர். பேட்டிங்குக்கு சாதகமான களத்தில், இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். குறிப்பாக, சேவக் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த தொடரில் இதுவரை பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறியதால் நெருக்கடியுடன் களமிறங்கிய சேவக், வட்டியும் முதலுமாக வெளுத்து வாங்கினார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கதிகலங்கி செய்வதறியாது திக்பிரமை பிடித்து நின்றனர்.

சேவக் & கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22.5 ஓவரில் 176 ரன் சேர்த்து அசத்தியது. போலார்டு வீசிய 23வது ஓவரில் 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சேவக் சதம் கடந்தார். அடுத்த பந்திலேயே, கம்பீர் 67 ரன் (67 பந்து, 11 பவுண்டரி) எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னாவும் சேவக்குடன் இணைந்து அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் இறக்கை கட்டிப் பறந்தது.

ரெய்னா 55 ரன் (44 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ரன் அவுட் ஆனார். ஜடேஜா 10 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், ருத்ரதாண்டவத்தை தொடர்ந்த சேவக் 140 பந்தில் இரட்டைசதம் அடித்து அமர்க்களப்படுத்த ஹோல்கர் ஸ்டேடியம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. ரஸ்ஸல் வீசிய 44வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்த சேவக், ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன்,

சச்சினின் உலக சாதனையையும் (200*) முறியடித்து பிரமிக்க வைத்தார். அவர் 219 ரன் (149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து போலார்டு பந்துவீச்சில் மார்டின் வசம் பிடிபட்டார். ரோகித் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் இது இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. கோஹ்லி 23, பார்திவ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து 50 ஓவரில் 419 ரன் குவித்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணி 49.2 ஓவரில் 265 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சிம்மன்ஸ் 36, சாமுவேல்ஸ் 33, ரஸ்ஸல் 29, ராம்டின் 96 ரன், சுனில் 27* எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அறிமுக வீரர் ராகுல் ஷர்மா, ஜடேஜா தலா 3, ரெய்னா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3&1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடக்கிறது.

சச்சினை முந்தினார்

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்ற சேவக், முன்னதாக சச்சின் படைத்த உலக சாதனையை (200*) முறியடித்து அசத்தினார். அவர் 149 பந்தில் 219 ரன் விளாசி (25 பவுண்டரி, 7 சிக்சர்) புதிய சாதனை படைத்தார். சேவக் 170 ரன் எடுத்திருந்தபோது, ராம்பால் பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை கேப்டன் சம்மி நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.

விளாசிய விதம்...

50 ரன் & 41 பந்து
100 ரன் & 69 பந்து
150 ரன் & 112 பந்து
200 ரன் & 140 பந்து

u இந்தியா 22 போட்டிகளுக்குப் பிறகு முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தது.
u சேவக் 2 ரன் அவுட், 2 கேட்ச் வாய்ப்புகளில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
u இந்தியா ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை (50 ஓவரில் 418/5) பதிவு செய்தது.
u சேவக் தனது முந்தைய அதிகபட்ச ஸ்கோரான 175 ரன்னை (உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக) முந்தினார்.
u 191 ரன்னில் இருந்து பவுண்டரி விளாசியபோது, சேவக் ஒருநாள் போட்டிகளில் 8000 ரன் கடந்தார்.
u சேவக் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கை குலுக்கி அவரது உலக சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சச்சின் வாழ்த்து
u ஆஸ்திரேலியா சென்றுள்ள சச்சின், தனது உலக சாதனையை சேவக் முறியடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சேவக்கின் சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உலக சாதனையை மற்றொரு இந்திய வீரரே முறியடித்திருப்பது திருப்தியாக உள்ளது’ என்றார்.
u அதிரடி வீரர்கள் கிறிஸ் கேல், யுவராஜ் சிங், டேவிட் வார்னர் ஆகியோரும் சேவக்கின் சாதனையை புகழ்ந்துள்ளனர்.
u கடினமான ஆஸ்திரேலிய தொடர் தொடங்க உள்ள நிலையில், சேவக் இரட்டை சதம் விளாசியுள்ளது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சாதனை படைத்துள்ள அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் & கங்குலி

கடவுள் என் பக்கம்: சேவக் கூறுகையில், ""இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சமீபத்தில் சரியாக விளையாடாத நிலையில், இந்த போட்டிக்காக எனது "பேட்டிங் ஸ்டைலை' மாற்றிக் கொள்ளவில்லை. நான் கொடுத்த "கேட்ச்சை' சமி கோட்டைவிட்ட போதே, கடவுள் என்பக்கம் இருந்தார் என்று தெரிந்தது,'' என்றார்.

319, 219: டெஸ்டில் "டிரிபிள்' சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த, உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சென்னை டெஸ்டில் 319 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 219 ரன் களும் எடுத்து உள்ளார்.
சமி பரிதாபம்: பொதுவாக "டாஸ்' போட்டு முடிந்தவுடன் யார் வென்றாலும், இரு கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்வர். நேற்று தொடர்ந்து நான்காவது முறையாக சேவக் "டாஸ்' வென்றார். இதையடுத்து வெறுத்துப் போன சமி, சேவக் கைகொடுக்க வந்த போதும், அதை ஏற்காமல் சிரித்துக்கொண்டே விலகிக் கொண்டார். இருப்பினும் அவரது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கடவுள் என் பக்கம் - சேவக்

Post by அப்புகுட்டி on Fri 9 Dec 2011 - 10:17

வாழ்த்துக்கள் செவாக் மற்றும் எங்கள் சூப்பர் ஹீரோ சச்சின்
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: கடவுள் என் பக்கம் - சேவக்

Post by kalainilaa on Fri 9 Dec 2011 - 16:38

வெறுத்துப் போன சமி, சேவக் கைகொடுக்க வந்த போதும், அதை ஏற்காமல் சிரித்துக்கொண்டே விலகிக் கொண்டார். இருப்பினும் அவரது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது
முன் அறிவா இருக்கும்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கடவுள் என் பக்கம் - சேவக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum