சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் என்பவருக்கு மணிமண்டபம்

Go down

Sticky முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் என்பவருக்கு மணிமண்டபம்

Post by *சம்ஸ் on Tue 10 Jan 2012 - 6:30

- முதல்வர் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தனது சொந்த நிதியினையும் செலவு செய்த ஆங்கிலேய பொறியியலாளர் பென்னிகுக் நினைவை போற்றும் வகையில் ஒரு கோடி ரூபாய் செலவில் அவரது உருவ சிலை யுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப் படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக மக்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதில் தென் தமிழக மாவட்டங்களான மதுரை, தேனீ, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக் கல் ஆகிய மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை யில் பெய்யும் மழை நீர், முல்லை ஆறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள மாநிலத்தில் ஓடி வீணாக கடலில் கலப் பதைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட முல் லைப் பெரியாறு அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.

இந்த மாவட்டங்களின் குடிநீர், தேவை யும், இந்த அணை மூலம் பெருமளவு நிறைவு செய்யப்படுகிறது. இந்த முல் லைப் பெரியாறு அணையை உருவாக்கிய வர், கர்னல் பென்னிகுக் என்ற ஆங்கிலேய பொறியியலாளர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக மேற்கு புறமாக ஓடி அர பிக் கடலில் வீணாகச் சென்று கலந்தது. இதை கிழக்குப் புறமாகத் திருப்பி விடு வதன் மூலம் வைகை நதி நீரை மட்டும் நம்பியுள்ள பல இலட்சம் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் என கருதி அணை ஒன்றைக் கட்ட பென்னிகுக் திட்டமிட்டார்.

இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு அவை கிழக்கு முகமாக திருப்பி விடப் பட்டு அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்கு திருப்பி விடப்படுகிறது.

இதற்காக திட்டம் ஒன்றினைத் தயாரித்து, ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற் றார். பொறியியலாளர் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியியலாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். அணை பாதி கட்டப்பட் டுக்கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளம் காரணமாக கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்தத் திட்டத்தை தொடர்வதற்கு ஆங்கில அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலகட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

இந்த அணையை அதே ஆண்டு அக்டோபரில் சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் திறந்து வைத்தார். முல்லைப் பெரியாறு அணையால் தேனீ, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட் டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

அந்த காலத்திலேயே பென்னிகுக் இந்த அணையை சுண்ணாம்பு சுருக்கி கலவையால் கருங் கல்லினால் புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டியுள்ளார். புவி ஈர்ப்பு விசை அடிப் படையில் கட்டப்பட்ட அணைகள், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்ற வற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்வதால் இந்த அணை இன்றும் உறுதியுடன் இருக்கிறது.

இந்த அணையைக் கட்டியதன் மூலம் நூற்றாண்டு கடந்தும் இன்றும் தமிழக மக்களின் நினைவில் பென்னிகுக் நிற்கின்றார்.

உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும், செலவு செய்த பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ் நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் 2,500 சதுரடி பரப்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் அவரது உருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும். மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதன் திறப்பு விழாவிற்கு பென்னி குக்கின் பேரன் அழைக்கப்படுவார் இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum