சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அ.தி.மு.கவுடன் பா.ஜ.கை கோர்க்கிறது

Go down

Sticky அ.தி.மு.கவுடன் பா.ஜ.கை கோர்க்கிறது

Post by *சம்ஸ் on Wed 18 Jan 2012 - 6:24

அ.தி.மு.கவுடன் பா.ஜ.கை கோர்க்கிறது
அ. தி. மு. க. – பா. ஜ., கூட்டணி வருமா வராதா என்ற பேச்சு தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது. கூட்டணி உறுதி என, பா. ஜ. மூத்த தலைவர் அத்வானியே சொல்லிவிட்ட பிறகு, இதில் வேறு கேள்விக்கே இடமில்லை. ஆனால் கூட்டணி வரும் லோக்சபா தேர்தலில் அல்ல. தேர்தல் முடிந்த பிறகு தான் அமைய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் போகி அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சகிதம் கலந்துகொண்ட பா. ஜ. மூத்த தலைவர் அத்வானி, ‘அ. தி. மு. க.வும், பா. ஜ. வும் இயல்பான கூட்டணிக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிகாரபூர்வமாக அ. தி. மு. க. இல்லாவிட்டாலும், முக்கிய பிரச்சினைகளில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது’ என மறைமுக நெருக்கம் குறித்து விடயத்தை விட்டார்.

அ. தி. மு. க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு பா. ஜ. விரும்புகிறது என்ற தகவல், அத்வானியின் இந்த பேச்சுக்கு பிறகு, பட்டவர்த்தனமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இரு கட்சிகளும், ஏற்கனவே கூட்டணி அமைத்தவை தான். அதுவும் தவிர இப்படி ஒரு விடயம் எதிர் காலத்தில் நடக்கக் கூடும் என்பதை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தன் கட்சி பொதுக்குழுக் கூட்டத்திலேயே சூசகமாக குறிப்பிட்டார்.

‘மாநிலத்தில் மட்டுமல்லாமல், மத்திய அரசியலிலும் முக்கிய பங்கு வகிப்போம்’ என பேசிய அவர், தன் பங்களிப்போடு 1998ல் வாஜ்பாய் தலைமையிலான ‘பொற்கால ஆட்சி’ அமைந்ததையும் நினைவு கூர்ந்தார். இரு தரப்பும் முழு விருப்பத்தைத் தெரிவித்துவிட்ட நிலையில், பா. ஜ. வும், அ. தி. மு. கவும் கூட்டணி சேர்வதில் எந்தத் தடையுமில்லை. ஆனால் 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்போ தேர்தலின் போதோ இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்பது தான் அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக இருக்கிறது.

தற்போதைய நிலையில் சமத்துவ மக்கள் கட்சி குடியரசுக் கட்சி உள்ளிட்ட குட்டிக்கட்சிகள் தவிர அ. தி. மு. க. கூட்டணியில் எந்த பெரிய கட்சிகளும் இல்லை. தற்போதுள்ள கட்சிகளுக்கு லோக்சபா தேர்தலில் ஆசனம் கொடுக்க வேண்டிய நிலை இல்லை.

தே. மு. தி. த. வும் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பில்லை காரணம் ‘தே. மு. தி. க.வும் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பில்லை காரணம் தே. மு. தி. க. வால்நம் கட்சிக்கு பெரிய நன்மை இல்லை என ஜெயலலிதா கருதுவது தான். அதனால் தான், உள்ளாட்சித் தேர்தலில் தே. மு. தி. க., உள்ளிட்ட கட்சிகளை எந்த முன்னறிவிப்பும் இன்றி கழற்றி விட்டார்.

அதே கணக்கு தான் லோக்சபா தேர்தலிலும் சரி, தேர்தலுக்கு முன்பே பா. ஜ. வை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அந்தக் கட்சிக்கு நான்கு அல்லது ஐந்து ஆசனங்களையாவது கொடுக்க வேண்டியிருக்கும். தனித்துப் போடியிட்டால் அத்தனை இடங்களை வெல்லும் நிலையில் அந்தக் கட்சி இல்லை மாறாக பா. ஜ. வின் துணை இல்லாமலேயே கூட அந்த இடங்களை அ. தி. மு. க. வெல்லக்கூடும் எனவே தேர்தலுக்கு முன் பா. ஜ. வுடன் கூட்டணி என்பது தேவையில்லாத சுமை.

தேர்தலுக்கு பிந்தைய உறவுகளில் எந்தத் தடையும் இருக்காது என்பது அ. தி. மு. க.வின் எண்ணமாக உள்ளது. வரும் 2014 லோக்சபா தேர்தலின் முடிவில் பா. ஜ. தான் அதிக இடங்களைக்கொண்ட தனிப் பெரும் கட்சியாக வரும். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான அளவு இடங்களை பெறுமா என்பது சந்தேகமே. அப்போது அ. தி. மு. க. வின் தேவை முக்கியமாக இருக்கும்.

40 ஆசனங்களிலும் அ. தி. மு. கவே போட்டியிட்டால் தான் 30க்கு குறையாத இடங்களில் வெல்ல முயும் 30க்கும் மேற்பட்ட ஆசனங்களை வைத்திருந்தால் தான் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி, பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்கால சந்தர்ப்பங்களை விட முக்கிய இடத்தைத் தன்னால் பெற முடியும் என்பது ஜெயலலிதா போடும் கணக்கு. எனவே, அ. தி. மு. க., பா. ஜ. கூட்டணி அமையப் போவது உறுதி ஆனால், தேர்தலுக்கு பிறகு!

இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது அகில இந்திய அளவில் பா.ஜ. வுக்கு மிகப் பெரிய நன்மையை விளைவித்தாலும், தமிழகத்தில் அக்கட்சிக்கு இழப்பையே ஏற்படுத்தும். அ. தி. மு. க.வுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைந்தால் தான் அக்கட்சிக்கு ஆதாயம். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமையும் பட்சத்தில் ‘பா. ஜ.வுக்கு போட்டால் வாக்கு வீணாகிவிடும்.

இப்போது அ. தி. மு. க.வுக்கு அளிக்கும் வாக்கு பிறகு பா. ஜ. வுக்குக் தானே பயன்படப்போகிறது’ என்ற எண்ணத்தில் அந்தக் கட்சிக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய வாக்குகள் கூட கிடைக்காமல் போகும். இதனால், இந்தப் புதிய உறவை என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறது மாநிலத் தலைமை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum