சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

எண்ணங்கள் உறுதியானால் இலட்சியத்தை அடைய முடியும்

Go down

Sticky எண்ணங்கள் உறுதியானால் இலட்சியத்தை அடைய முடியும்

Post by *சம்ஸ் on Tue 24 Jan 2012 - 6:30

எண்ணங்கள் உறுதியானால் இலட்சியத்தை அடைய முடியும்
‘கணித ஆசான் கனகசுந்தரத்தை ஈன்ற யாழ். மண்ணை வணங்குகிறேன்’
- யாழ். பல்கலையில் கலாம்
தி. சிவகுமார்
எண்ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாகமாறி, நாம் எண்ணிய இலட்சியத்தை அடையமுடியும் என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்றிருந்த அப்துல் கலாம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக சமூகம், மாணவர்கள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இராமேஸ்வரத்தில் தான் ஐந்தாம் ஆண்டு படிக்கும்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணித ஆசிரியரான கனகசுந்தரம் என்பவரிடம் கணிதம் கற்றதை நினைவுகூர்ந்தார்.

அவர் ஒரு கணிதத் துறவி. காலை 5 மணிக்கு எழுந்து பணிசெய்தால் அந்தக் கல்வி நம் மனதில் நீடித்து நிலைக்கும் என்ற நல்ல வழிமுறையையும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் என்னுடைய ஆசிரியர் பிறந்த இடமாக இருப்பதால், அந்த யாழ்ப்பாணத்தை வணங்குகின்றேன் என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார். ‘புயலைத் தாண்டினால் தென்றல்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய அப்துல் கலாம் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

ஒவ்வொருவரின் வாழ்விலும், பல புயல்களையும், சில தென்றல்களையும் எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும்போது, பல புயல்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும், அந்த இன்பம் பெறவேண்டு மானால் பல புயல்களைக் கடக்கும் உள்ள உறுதியைப் பெறவேண்டும். நம் எண் ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாக மாறி, நாம் எண்ணிய இலட்சியத்தை அடையமுடியும்.

அறிவிப்புரட்சி ஒன்று தன் சமுதாய மறுமலர்ச்சிக்கான அடிப்படையாகும். ஜாதி, மத, மொழி மற்றும் இன வேற்றுமை களில் இருந்து விடுபட்டு மனித இனம் என்ற நிலைக்கு மனித சமுதாயத்தை எடுத்துச் சென்றால் தான், ஒரு சமதர்ம சமுதாயத்தை, மேடு பள்ளம் இல்லாத சமுதாயத்தை, வளர்ந்த சமுதாயத்தை, அமைதியான சமுதாயத்தை அமைக்க முடியும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்து பணியாற்றும் துறையில் சிறப்பாக பணியாற்றி சிறந்து விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, இலட்சியக் கனவைப் பார்க்கின்றேன். அப்படிப்பட்ட இலட்சியம், கனவு உங்கள் கண்களில் பிரகாசிப்பதைப் பார்க்கின்றேன்.

இளைஞர்கள் என்ற ரீதியில் தனித்து வமான திறமையிருக்க வேண்டும். மன எழுச்சியடைந்துள்ள இளைஞர்கள், ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க, நாட்டின் வளர்ச் சிக்கு வித்திட நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும் என்று அப்துல் கலாம் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

முற்பகல் யாழ் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த அப்துல் கலாமைப் பார்வையிடுவதற்கான ஏராளமான மாண வர்களும், கல்விமான்களும், ஊடகவிய லாளர்களும் திரண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் குறிப்பிட்ட கல்வி மான்கள் மற்றும் அரசியல் பிரமுர்களைச் சந்தித்த அப்துல் கலாம் அவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் பற்றிக் கலந்து ரையாடினார். இதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரிக்குச் சென்ற அப்துல் கலாம், அங்கு பிரார்த்தனை மண்டபத்தைத் திறந்துவைத்த துடன், கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் சிறப்புச் சொற்பொழிவாற்றியிருந்தார்.

இந்த நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக். கே. காந்தா, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் மகாலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum