சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி

Go down

Sticky ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி

Post by முனாஸ் சுலைமான் on Wed 22 Feb 2012 - 5:36

ஐ.நா நோக்கிய மூன்று இளைஞர்களின் இலட்சியப் பயணம், எமது இனத்திற்கு சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட கொடுமையை சர்வதேசம் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும். அவர்களின் உயரிய இலட்சியத்தில் புலம்பெயர் மக்கள் அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பா. உ எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தாயகத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்தியாவினதும் சில உலக நாடுகளினதும் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நசுக்கிக் கொண்டிருந்தபோதும் அப்பாவிப் பொதுமக்கள் மீது இன அழிப்பைச் செய்து கொண்டிருந்தபோதும் அதைத் தடுத்து நிறுத்துமாறு புலம்பெயர் மக்கள் அந்தந்த நாடுகளில் இரவு பகல் பாராது வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

தமிழகத்தில் முத்துக்குமாரனில் தொடங்கி ஐ.நா திடலில் முருகதாசன் வரை தீக்குழிப்புகளும் நடந்தன. எனினும், எந்த உலக நாடுகளோ ஐக்கிய நாடுகள் சபையோ இப்போராட்டங்களைக் கவனத்தில் எடுக்கவில்லை.

எனினும், எமது மக்கள் தொடர்ந்து போராடினார்கள். 2009 மே 19 ஆம் திகதியுடன் போர் முடிவுக்கு வந்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததுடன் இனிமேல் தலையிடி தீர்ந்ததென சிங்கள பேரினவாத அரசு போர் வெற்றியில் துள்ளிக் குடித்தது.

ஆனால் சிறிலங்கா அரசோ சர்வதேசமோ சற்றும் எதிர் பார்க்காதவகையில் எமது புலம் பெயர் மக்கள் அப்போராட்டத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்டனர். தமிழினப் படுகொலையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான சர்வதேச விசாரணைக்குழு அமைத்து அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கொண்ட தமிழீழமே தீர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச சமுகம், ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்பனவற்றுக்கு தொடர்ந்து அழுத்தங்களை பல வகையிலும் கொடுக்கத் தொடங்கினர்.

புலம் பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையும் அதன் பலத்தையும் கண்டு சிறிலங்கா அரசு திணறிப்போனதுடன் சர்வதேசம் எமது இனத்தின் மீது தனது பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளது.
இதில் ஒரு ஆரம்பப் புள்ளியாக எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

இம்முக்கியமான தருணத்திலேய எமது மூன்று இளைஞர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். எமது மக்களுக்கு நடந்த படுகொலைக்குத் தீர்வு வேண்டும் எமது இனம் சுதந்திரமாக தம்மைத் தாமே ஆழக்கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட தனிநாடு அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தியும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்நடைப்பயணத்தை இவர்கள் மிகவும் துணிச்சலுடன் தொடர்ந்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவும் கடும் பனிக்குளிரான காலநிலையின் மத்தியிலும் உயரிய இலட்சியத்தைத் தமது தோள்களில் சுமந்து செல்கின்றனர். எமது தேசியத் தலைவரின் சிந்தனையும், மாவீரர்களின் தியாகமும் மக்களின் உயிர்கொடையும் இவர்களை மேலும் வீச்சுடன் முன்னேறிச் செல்ல வைத்திருக்கின்றது.

அத்துடன் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் தினமும் இவர்களுடன் இணைந்து தமது ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கி வருகின்றனர்.
அன்பான எனது புலம்பெயர் உறவுகளே!

இன்றைய காலகட்டம் எமக்கானது. இச்சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை காலமும் நீங்கள் நடத்திய போராட்டங்களும் ஒத்துழைப்புகளும் பெறுமதியானவை. அதே வீச்சுடன் தொடர்ந்து போராடவேண்டியது எமது காலத்தின் தேவை. இதற்கு சர்வதேசம் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எனவே இம்முறையும் மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில், எமது மக்களின் பலத்தையும் போராட்ட வீச்சையும் ஐ.நா திடலில் காட்ட வேண்டும். ஆகவே இவர்களின் நடைப்பயணம் ஐ.நா. மன்றத்தின் முன்னால் முருகதாசன் திடலில் எதிர்வரும் 05.03.2012 ஆம் திகதி முடிவடையும் தினத்தன்று எமது புலம் பெயர் மக்கள் பெரும் தொகையில் அங்கு ஒன்று கூடி நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு எமது பலத்தைக் காட்ட வேண்டும்.

நிச்சயமாக எமது புலம் பெயர் உறவுகளாகிய நீங்கள் அன்றைய தினம் எமது பலத்தை அங்கு காட்டுவீகள் என்ற நம்பிக்கை உண்டு. நாம் இன்னும் வீழ வில்லை. எமது இலட்சியத்தை அடையும் வரை முழு மூச்சுடன் போராடுவோம் என்ற செய்தியை சர்வதேசம் மட்டுமல்ல எமது இனத்தை அழித்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் காட்ட வேண்டும். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 22 Feb 2012 - 5:42

உலகநாடுகளி்ன் கண்ணடைப்பும் கண்துடைப்பும் தான் இன்றய நாடுகளின் வீழ்ச்சியும் உயர்ச்சியும் தற்போதய இலங்கையின் வீழ்ச்சியா உயர்ச்சியா என்று ஏங்கும் நிலையும் உருவாகியிருப்பதும் உண்மை காலம் பதில் சொல்லும்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி

Post by முனாஸ் சுலைமான் on Wed 22 Feb 2012 - 5:56

நேசமுடன் ஹாசிம் wrote:உலகநாடுகளி்ன் கண்ணடைப்பும் கண்துடைப்பும் தான் இன்றய நாடுகளின் வீழ்ச்சியும் உயர்ச்சியும் தற்போதய இலங்கையின் வீழ்ச்சியா உயர்ச்சியா என்று ஏங்கும் நிலையும் உருவாகியிருப்பதும் உண்மை காலம் பதில் சொல்லும்
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum