சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது

Go down

Sticky மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 5:25

கிழக்கு மாகாண ஆளுநரின் கல்முனை விஜயம் ரத்துச் செய்யப்பட்டமைக்கும் தமக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்

இந்த விவகாரத்துடன் தம்மைத் தொடர்புபடுத்தி கல்முனை மாநகர மேயர் கருத்து வெளியிட்டிருப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதோடு இக்குற்றச்சாட்டு ஓர் அநாகரீகமான அரசியல் நடவடிக்கையாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மேலும் கூறியதாவது; 'கிழக்கு மாகாண ஆளுநரின் கல்முனை விஜயம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. ஆளுநரின் கல்முனை விஜயம் தடைப்பட்டமைக்கு நாங்கள் தான் காரணம் என தலைவர் ரவூப் ஹக்கீம் மீதும் எங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது அபாண்டமான குற்றச் சாட்டாகும்.

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ், அதாவுல்லாவின் தேசிய காங்கிரசைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம், றிஸாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் முபீத் போன்றோர் பகிரங்கமாகவே பத்திரிகைகளில் எம்மீது வீண் பழி சுமத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியது என்பதோடு இதில் வேறு சக்திகளின் வழிநடத்தல்கள் இருக்கக் கூடும் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மேயர் சிராஸ் அரசியலுக்கு புதியவர். அவரை வேறு யாரோ எமது கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக பயன்படுத்துகின்றனரோ என்று நாம் சந்தேகிக்கின்றோம்.
அவர் இவ்விடயம் தொடர்பில் எம்முடன் கலந்து பேசியிருக்கலாம். ஆனால் செய்வதை எல்லாம் செய்து விட்டு அவரது இயலாமையை மறைப்பதற்கு
இப்போது எம்மீது பழி போட எத்தனிப்பது கண்டிக்கத்தக்க கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கையாகும்.

உண்மையில் கல்முனை மாநகர சபை மேயரின் சில நடவடிக்கைகள் தொடர்பாக எமது தலைவர் ரவூப் ஹக்கீமிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முறையிட்டிருந்ததைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி நீதியமைச்சில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் மேயர் சிராஸ் பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோருடன் நாமும் கல்ந்து கொண்டிருந்தோம். தமிழ் வர்த்தகர் குழுவொன்றும் வந்திருந்தது.

கல்முனை பஸ் நிலைய கடைகள் மற்றும் சாப்பு சட்ட நடைமுறை தொடர்பில் தமிழருக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அவர்கள் முறையிட்டனர்.

இந்நிலையில் தமிழர்களுக்கு நியாயம் வழங்க வேண்டியதன அவசியத்தை வலியுறுத்திய தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் மேயருக்கு சில பணிப்புரைகளை வழங்கினார்.

ஆனால் பத்திரிகைகளில் வந்த செய்திகள் தலை கீழாகவே உள்ளன. அந்த செய்திகளில் சில வதந்திகளும் புரளிகளும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதோடு தலைவர் மீதும் கல்முனையை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களாகிய எம்மீதும் வீண் பழி போடப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல ஆளுநரின் வருகை தடுக்கப்பட்டதனால் கல்முனை மாநகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவிருந்த 350 மில்லியன் ரூபா இழக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கின்றனர். எனினும் ஆளுநரினால் நேரடியாக நிதியொதுக்கீட்டினை மேற்கொள்ள முடியாது என்பதே எமக்குத் தெரிந்த விடயம். ஆகவே இதுவும் ஒரு கட்டுக் கதையாகும்.

இந்த விவகாரத்தில் எம்மீது பழி போடப்பட்டிருப்பதால் ஆளுனரை நாம் சந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்துவதோடு அவரை கல்முனைக்கு அழைத்து வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

நாம் அபிவிருத்திகளைத் தடுத்து நிறுத்தி பழக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் எமது மாகாண சபை மூலம் நிறைய வேலைகளை செய்துள்ளோம். நாங்கள் சம்மந்தப்படாமலும் சில வேலைகள் நடந்துள்ளன. அவற்றை நாங்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் நான் அத்தகைய செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபட்டது கிடையாது. அபிவிருத்திக்காக அனைவருடனும் கூட்டிணைந்து செயற்பட நான் என்றும் தயாராகவே உள்ளேன்' என்று தெரிவித்தார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 5:25

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 5:25

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 5:26

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum