சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீமை நிறுத்த ஜனாதிபதி திட்டம்

Go down

Sticky கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீமை நிறுத்த ஜனாதிபதி திட்டம்

Post by முனாஸ் சுலைமான் on Mon 9 Apr 2012 - 20:42


கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கும் அரசு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஆலோசித்து வருகிறார் என்றும் ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் அரசுக்கான வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என அவர்களிடம் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார் என்றும் அத்தக வல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்குரிய ஒருவராக ஹக்கீம் இருப்பதால், அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அவரை நிறுத்துவதே கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றுவதற்கான சரியான நகர்வாக அமையும் என்று ஜனாதிபதி அந்த அமைச்சர்களிடம் கூறியுள்ளாராம்.இத்தகவலை அறிந்த அரசுடன் இணைந்துள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள், முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை என்று அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி தமது கட்சிகளின் ஆலோசனைகளை உள்வாங்கியே இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்று முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்று “சுடர் ஒளி”யிடம் தெரிவித்தனர்.கிழக்கில் தமது கட்சிகளுக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளதால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் முக்கிய இடத்தை வகிக்கப்போகின்றோம். ஆகவே, அரசு எடுக்கும் தீர்மானத்தில் எமது கருத்துகள் உள்ளடக்கப்படவேண்டும் என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென்ற ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே என்றும் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான சரியான நகர்வு இதுவென்றும் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.முதலமைச்சர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன் பிள்ளையான் அறிவிப்பு கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலொன்று வருமாயின், முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நானே போட்டியிடுவேன். அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு நேற்று “உதயனி”டம் தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டால், அடுத்த முதலமைச்சர் பதவிக்காகப் போட்டியிடுவீர்களா எனக் கேட்டபோதே மேற் கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.”கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுமா என்பது பற்றி எனக்கு இதுவரை எந்தத் தகவலும் அறியக்கிடைக்கவில்லை. எவரும் என்னுடன் அதைப்பற்றிப் பேசவுமில்லை. நீங்கள் கூறுவதன்படி மாகாணசபை கலைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். இப்போது முதலமைச்சராக நான் பணியாற்றுகிறேன். அடுத்த முறையும் போட்டியிடுவேன். இதில் வேறு கேள்விக்கே இடமில்லை” என்றார் முதலமைச்சர் சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விடயம் தொடர்பில் ஏதாவது விட்டுக் கொடுப் பைச் செய்வீர்களா எனக் கேட்டபோது பதிலளித்த அவர், “முதலில் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டுமே. பின்னர் எனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்” என்றார்.இதேவேளை, கிழக்கு மாகாணசபை ஜூலை மாதமளவில் கலைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு வட்டாரங்கள் நேற்று மீண்டும் “சுடர் ஒளி”யிடம் உறுதியாகத் தெரிவித்தன.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum