சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நிரந்தரமாக நியமிக்காவிடில், தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப்போகிறம்! – டொக்டர் எஸ். மதனழகன்

Go down

Sticky நிரந்தரமாக நியமிக்காவிடில், தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப்போகிறம்! – டொக்டர் எஸ். மதனழகன்

Post by mufees on Thu 31 May 2012 - 13:08

May 31st, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குரிய கண் சத்திர சிகிச்சை நிபுணரை அடுத்த வாரத்திற்கிடையில் நிரந்தரமாக நியமிக்காவிடில், தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் டொக்டர் எஸ். மதனழகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குரிய கண் சத்திர சிகிச்சை நிபுணரை சுகாதார அமைச்சு இன்னும் முறையாக நியமனம் செய்யாதுள்ளது.

வைத்திய நிபுணர்களுக்கான 2012ம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் பிரகாரம், அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.டி.டயஸ் என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் திருமதி எஸ்.திவாகர் பலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கந்தளாய் ஆதார வைத்திய சாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த இடமாற்ற ஒழுங்கு முறையாக பின்பற்றப்பட்டப்படாமல் சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் டாக்டர் மகிப்பாலவினால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் கடமையாற்றிய கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் திருமதி திவாகருக்கு எமது மட்டக்களப்பு போதனா வைத்தயிசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. முருகானந்தத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன்பு இடமாற்ற விடுகை வழங்கப்பட்டது.

இதன் பின்னர் அம்பாறை பொது வைத்தயசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் டயஸ் வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் மாத்திரம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் பதில் கடமை புரிந்து வருகின்றார்.

இந்த முறையற்ற இடமாற்ற நடவடிக்கையினால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமக்குரிய கண் சிகிச்சை சேவைகளை பெறமுடியாத இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் மட்டக்களப்பு வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை என்ற வகையில் மருத்தவ பீட மாணவர்களுக்கான கண் சத்திர சிகிச்சை பாடவிதானங்களையும் தொடரமுடியாத துப்பார்க்கிய நிலை தோன்றியுள்ளது.

சுகாதார அமைச்சின் இந்த இடமாற்ற நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்ட அனைத்து இன மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகவே எம்மால் காணமுடிகின்றது.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளருடன் நடந்த கூட்டத்தின் போது எமது அதிருப்பதியை தெரிவித்ததுடன் எழுத்து மூலம் அறிவித்த போதிலும் எவ்வித ஆக்க பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனையும் வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கூட்டம் நேற்று (30.5.2012) நடை பெற்ற போது இது தொடர்பாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தின் போது இந்த நடவடிக்கையை வண்மையாக கண்டிப்பது என தீர்மானிக்கப்பட்டதுடன் இதற்குரிய தீர்வு வழங்கப்படாத விடத்து அடுத்த வாரம் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையன்று அடையாள தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குரிய கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் டயஸ் அவர்களை உடனடியாக அம்பாறை பொது வைத்தயிசாலையிலிருந்து விடுவிக்க கோரியும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் சுகாதார அமைச்சின் பல முக்கிய அதிகாரிகளுக்கும் அவசர கடிதமொன்று அனுப்புவதென இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, கடிதம் உடனே அனுப்பப்பட்டுள்ளதாகவும் டொக்டர் எஸ்.மதனழகன் மேலும் தெரிவித்தார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum