சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நரக வாழ்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டும்! – கைதான ஈழதமிழர்கள்

Go down

Sticky நரக வாழ்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டும்! – கைதான ஈழதமிழர்கள்

Post by mufees on Wed 6 Jun 2012 - 13:21

June 6th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


“நரக வாழ்விலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டுமென்பதே எமது நோக்கம். அதற்காகவே எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த பணத்தைக் கொண்டு ஆஸி. செல்ல முற்பட்டோம்.”

என கேரளாவில் கைதான வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

கேரளா கடற்பிராந்தியத்துக்கூடாக அவுஸ்திரேலியாவை நோக்கி சட்ட விரோதமாகப் படகில் புறப்பட்ட 151 இலங்கை அகதிகள் ஞாயிற்றுக்கிழமை கொல்லத்தில் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் முகவருக்கு இரண்டு இலட்சம் ரூபாவைக் கொடுத்து விட்டே தன் பயணத்தை ஆரம்பித்தார் என துணைப் பொலிஸ் ஆணையாளர் தோம்ஸன் ஜோஸிடம் தெரிவித்துள்ளார்.

“ஜூன் மாதம் 2ஆம் திகதி எனது மனைவியுடனும், மூன்று பிள்ளைகளுடனும் வவுனியாவிலிருந்து புறப்பட்டேன். இதற்கு முன்னர் முகவருக்கு இரண்டு இலட்சம் ரூபா கொடுத்துள்ளேன். எங்கள் உடைமைகளை எல்லாம் விற்றுத் தீர்த்தே இத்தொகையைத் திரட்டியுள்ளேன்” என்றும் அவர் விசாரணையின் போது துணைப் பொலிஸ் ஆணையாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் விமானம் மூலம் சென்னையை வந்தடைந்தோம். பின்னர் மதுரை செங்கோட்டை மார்க்கமாக கொல்லத்தை நோக்கி வந்தோம் என்றும் துணைப் பொலிஸ் ஆணையாளர் தோம்ஸன் ஜோஸிடம் விவரித்துள்ளார். சென்னை அகதிகள் ஆணையாளருடன் தொடர்பு கொண்டுள்ளோம். இந்த அகதிகளை மீள முகாம்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல பகுதிகளிலுள்ள அகதிகள் முகாம்களில் கடுமையான கெடுபிடிகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை சுமுகமாக இல்லை. அகதிகள் தப்பியோடுவதற்கு இதுவே காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லத்தில் கைதுசெய்யப்பட்ட அகதிகள் நகர பொலிஸ் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அதேவேளை, தாங்கள் முன்னர் நரக வேதனைகளை அனுபவித்த முகாம்களுக்கு மீளத் தங்களை அனுப்பிவைக்க வேண்டாமென்றும் கேரள பொலிஸாரை மன்றாடியுள்ளார்கள்.

அந்த முகாம் ஒரு நரகம். நாங்கள் அவர்களுக்கு அகதிகள் மாத்திரமே. எங்களைப் பராமரிக்கும் கியூ பிரிவுக் கிளை எம்மை மனிதப் பிறவிகளாகவே நோக்குவதில்லை. இதற்கு முன்னர் தப்பிச்செல்ல முயன்ற அகதிகள் பிடிக்கப்பட்டு, குரூர தண்டனைகளுக்குப் பின்னர் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொருநாளும் காலை 6 மணிக்குப் பின்னர் நாங்கள் வெளியேசெல்ல அனுமதிக்கப்படுகிறோம். எனினும், இரவு 8 மணிக்கு முன்னரே திரும்பிவிட வேண்டும். எங்களுக்குப் போதிய பங்கீட்டுப் பொருட்கள் வழங்கப்படமாட்டா.

பிள்ளைகளுக்கான முறையான கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதர வசதிகளும் அளிக்கப்படுவதில்லை என ஓர் அகதி தனது அவல நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்களைச் சந்தித்த முகவர்கள் குடியேற்ற நடைமுறைகளை எங்களுக்கு விளக்கவில்லை. குடியேற்றத் திட்டத்தில் அடங்கியுள்ள அகதிகளின் எண்ணிக்கையையும் குறிப்பிடவில்லை. பின் விளைவுகளை நாம் எண்ணவில்லை. நரக வாழ்விலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டுமென்பதே எமது நோக்கமாகும் என்றும் அகதிகள் தெரிவித்துள்ளார்கள்.

“படகுக்குள் ஏறுவதற்கு முன்னர் பணம் வசூலித்த நபரை என்னால் அடையாளப்படுத்த முடியாது. படகில் ஏறிய ஒருவர் பதறிப்போய் இறங்கினார். அவுஸ்திரேலியாவுக்கருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவுகளை அடைய 18 நாட்கள்வரை ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தலைக் கேட்டே அந்நபர் இறங்கிவிட்டார்” என ஓர் இளம் அகதி, துணை ஆணையாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.

எங்களை மீள அனுப்பாதீர்கள். அப்படி அனுப்பினால் சித்திரவதைகளுக்குள்ளாவோம். அவற்றுக்குத் துணை ஆணையாளரே பொறுப்பாவார். முகாமிலுள்ள அதிகாரிகள் சித்திரவதைகளுக்குள்ளாக்குவர் என்றும் அகதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். அகதிகளில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள்.

பலருக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உறவினர்கள் இருக்கிறார்கள்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum