சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வாத்து மடையன் – சிறுகதை

Go down

Sticky வாத்து மடையன் – சிறுகதை

Post by rammalar on Mon 15 Oct 2012 - 3:10


--

“அக்கா வாத்து………. தங்கை வாத்து………….’ என்ற இரண்டு
வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.

குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு
உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள்
என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்!
ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது.

”நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?!
சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள்
போனால்கூட மரணம் நிச்சயம்’’ என்று எச்சரித்தது அக்கா வாத்து.

”மடமனிதன் என்று என்னைச் சொல்கிறாயே……?!
மனிதர்கள்தானே “வாத்து மடையன்’ என நம்மை வைத்து
அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள்?’” என்று சற்று கோபமாகக்
கேட்டது தங்கை வாத்து.
-
”மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..’ என நீ சொல்லும்போது
எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இந்தக் கதையை நான்
சிறு வயதாக இருக்கும்போது நம் பாட்டி வாத்து எனக்குச் சொன்னது’’
என்றது அக்கா வாத்து.
-
”அப்படியா..?! நம் பாட்டி சொன்ன கதையா…?!சீக்கிரமாகச் சொல்லு’’
என்று ஆர்வமானது தங்கை வாத்து.
-
”ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். வீட்டில் பல வாத்துகளை
வளர்த்து வந்தான். அதில் பொன் நிறத்தில் ஒரு வாத்து இருந்தது.
இந்த வாத்து நீரில் நீந்தும்போது சூரியக்கதிர்கள் அதன் இறகுகளில்
பட்டுத் தெறித்து பளபளக்கும்.

அவனிடம் பல தவறான பழக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று கஞ்சத்தனம்!
நம் வாத்துக் கூட்டத்துக்கு சரியாக உணவே கொடுக்க மாட்டான்.
எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலக்காரன்.

இந்த மனிதனைத் திருத்துவதற்காக மற்ற தோழர்களோடு சேர்ந்து
பொன் நிற வாத்து ஒரு திட்டம் தீட்டியது. திட்டப்படி, பொன் நிற
வாத்து முட்டைகளைப் பளபளப்பாக பொன் நிறத்தில் இட்டது.
-
அந்த முட்டைகளை விற்று நிறைய லாபம் பார்த்தான். அந்த லாபத்தில்
நன்றாகத் தின்று அவன் கொழுத்தே போய்விட்டான். அப்போதும்
வாத்துகளுக்கு நன்றாக உணவு கொடுக்க வேண்டும் என்று அவன்
நினைக்கவே இல்லை. இந்த நிலையில், ஒரு நாள் பேராசைப்பட்டு
பொன் நிற வாத்தின் வயிற்றில் நிறைய முட்டைகள் இருக்கும் என
எண்ணி அந்த வாத்தின் வயிற்றைக் கிழித்தான்.

அவனது பேராசையால் அந்த வாத்து இறந்ததுதான் மிச்சம்!
இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவன் திருந்தினான்.
பேராசைப்படுவதால் யாருக்கும் லாபமில்லை என்பதை உணர்ந்தான்.
பின்னர் ஏனைய வாத்துகளை நன்றாகப் பராமரித்தான்’’
என்று கதையைச் சொல்லி முடித்தது அக்கா வாத்து
-
-
”அக்கா, இப்போது நினைத்தாலும் வருத்தமாக உள்ளது. அந்தப் பொன்
நிற வாத்து எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது’’ என்று
உணர்ச்சிவசப்பட்டது தங்கை வாத்து.
”இது போன்ற அறிவில்லாத செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான்
வாத்து மடையன் என மனிதர்கள் அழைக்கிறார்கள்’’ என்றது அக்கா
வாத்து.
-
”சரி. வாத்தை கொன்ற அந்த மனிதனுக்கு ஏதாவது தண்டனை கிடைத்ததா..?!
என்றது தங்கை வாத்து.

”அந்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் சேர்த்து
நாம் ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறோமே… அதாவது, நாம்
முட்டையை அடைகாத்து குஞ்சுகள் பொறிப்பதையே விட்டுவிட்டோம்.

நம் முட்டைகளை கோழிகளின் முட்டைகளோடு வைத்து அவற்றை
ஏமாற்றித்தான் மனிதர்கள் வாத்துக் குஞ்சுகளைப் பெறுகிறார்கள்.

இதில் கோழிகளுக்கு இருக்கும் பெருந்தன்மையையும் மனிதர்கள்
அறியமாட்டார்கள்’’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது அக்கா வாத்து.
-
============================================

நன்றி நட்பூ – இணைய இதழ்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாத்து மடையன் – சிறுகதை

Post by மீனு on Mon 15 Oct 2012 - 8:37

சிந்திக்க வேண்டிய கதை சிறப்பாக உள்ளது நல்ல வேளை மடையன் என்று சொல்லி விட்டார்கள் ஹி ஹி
:,;: :,;:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum