சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

'எமனுக்கே எமன்டா!'

Go down

Sticky 'எமனுக்கே எமன்டா!'

Post by veel on Sat 3 Nov 2012 - 23:43


'எமனுக்கே எமன்டா!'

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதற்காகச் சென்று
பார்த்துவிட்டே வரலாம் என்று முடிவெடுக்கவும் இயலாது. எமலோகத்தில்
இப்போதெல்லாம் எல்லாம் நவீன மயம். நரகம் தவிர மற்ற பகுதிகள் ஏ.ஸி. வசதி
செய்யப்பட்டுவிட்டன. சொர்க்கவாசிகளுக்கு இலவச இண்டர்னெட், டிஷ் டிவி.
வசதிகளும் உண்டு. மரணங்களின் வரவு செலவுக் கணக்கெல்லாம் இப்போது
கம்ப்யூட்டரில். தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் வாசலில் இறந்தவர்களாகவே
இருந்தாலும் மெட்டல் டிடக்டர் வைத்துச் செக் செய்தபின்தான் உள்ளே நுழையவே
இயலும்.

திருத்தியமைக்கப்பட்ட நரகத்தைப் பார்வையிட எம தர்ம ராஜன் வருகை
புரிந்தார். பல்வேறு புதுவகை சித்ரவதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நரகம்
ஜொலித்தது. புதிய கொள்கையின்படி இந்தியர்களை மா நிலம் வாரியாகப்
பிரித்திருந்தார்கள். எமன் முதலில் நுழைந்தது கர் நாடகா பகுதியில். அப்போது
சித்ரவதைகளுக்கிடையேயான அரைமணி நேரம் ஷார்ட் ப்ரேக் என்பதால் கர்
நாடகர்கள் ஓய்வாகப் படுத்தபடி மிகவும் கவலையான முகங்களுடன்
புலம்பிக்கொண்டும், அழுது அரற்றிக்கோண்டும் இருந்தார்கள். "தண்டனைகள் ரொம்ப
அதிகமோ?" என்றார் எமன். எமனின் செக்ரட்டரி சொன்னான் :

"மஹா பிரபு... இவர்களை நம்பாதீர்கள். இவர்கள் சொர்க்கம் சென்றால் கூட
இப்படித்தான் அழுது புலமிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் குணம் அப்படி.
ஏனெனில் தான் துன்பப்படுவது பற்றி அவர்கள் கவலைப்பட்டதில்லை. அடுத்தவன்
மகிழ்ச்சியாக இருப்பதுதான் அவர்களுக்கு மிகவும் துன்பமளிக்கும் செயல்.
எல்லா வளங்களும், வசதிகளும் கொண்ட இவர்கள் பக்கத்து மா நிலத்திற்குக்
குடிக்கத் தண்ணீர் கூட தராமல் வஞ்சித்தவர்கள். இங்கு மற்ற மா
நிலத்துக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து இந்தக் கவலை..."

எமனின் மீசை துடித்தது. "அட அற்பர்களே... இவர்களை நரகத்தில் வைத்திருப்பது
கூடப் பாவம்... இது நரகத்திற்கே அவமானம்... இப்போதே ஒழித்து விடுகிறேன்
இவர்களை..." என்று சடாரென்று கையசைக்க அனைவரும் மறுபடியும் மடிந்தனர்.

அடுத்துச் சென்றது கேரளா பக்கம். அங்கும் அதே கதை. கர் நாடகத்தவர்களை விட
கேரளத்தவர்கள் இன்னும் கடுமையாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். எமனின்
குறிப்பறிந்து செக்ரட்டரி "... இவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். கர்
நாடகாவை விட இவர்கள் செழிப்பானவர்கள். வீட்டிற்கொருவர் வெளி நாடு சென்று
சம்பாதித்துப் பணம் அனுப்பி அ ந் நியச் செலாவணி பெருக்குபவர்கள். முழுமையான
கல்வியறிவு பெற்றவர்கள். அனைவரின் வாய்ப்பையும் தட்டிப்பறித்து இமயமலையில்
கூட ஒரு ஹிமாச்சலியை விட அதிகமான டீக்கடை போட்டிருப்பவர்கள். இவர்கள் மா
நிலத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆரோக்கியமான அரசியல் கொண்ட மா நிலம்.
பல விஷயங்களில் இந்தியாவிற்கே வழிகாட்டி எனலாம். ஆனால் சமீப காலமாக
மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள். இந்தியாவின் மதுபானத் தலை நகரம்
திருவனந்தபுரம்தான். வீட்டிற்குச் சென்றால் கூட காஃபி, டீக்குப் பதில்
மதுதான் தருவார்கள். அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒன்றாய்
அமர்ந்து மதுவருந்தும் காட்சி இங்கு சில வீடுகளில் காணலாம். இங்கு மது
கிடைக்கவில்லை என்பதால் இந்தச் சோகம்..." என்றார். எமன் மண்டை காய்ந்து "
மது கிடைக்கவில்லையென்று சோகமா? என்ன அவமானம்?" கையசைப்பில் கேரளா காலி.

அடுத்தது ஆந்திரா. அவர்களும் மிக்க புலம்பல் மற்றும் அழுகை. செக்ரட்டரி
"... அது வந்து பிரபு... இவர்கள் சினிமா ப்ரியர்கள். மற்றபடி விவசாயத்தில்
முதன்மை பெற்ற மா நிலம். இவர்கள் விளைவித்த அரிசியைச் சாப்பிடத இந்தியர்களே
இல்லை எனலாம். உணவு வகைகளும் ஏராளம். க்ருஷ்ணா, கோதாவரி என்ற கடல் போன்ற
இரு நதிகளாலும், திருப்பதி ஏழுமலையானின் அருளாலும் குறைவற்ற வாழ்வு
வாழ்பவர்கள். கடுமையான உழைப்பாளிகள். ஆனால் இங்கு சிரஞ்சீவியின் சினிமா
பார்க்கக் கிடைப்பதில்லை என்று இந்தக் கவலை..." என்றார். வெறுப்புடன் எமன்
கையசைக்க ஆந்திரா ஆல் அவுட்.

அடுத்து... யெஸ்... நாம்தான். ஆனால் இங்கு வினோதம். ஷார்ட் ப்ரேக்
முடிந்து சித்ரவதைகளும் ஆரம்பித்து விட்டன. எல்லோரும் மிகவும்
மகிழ்ச்சியுடனும், வாய்கொள்ளா சிரிப்புடனும் சித்ரவதைகளை அனுபத்து என்ஜாய்
செய்து கொண்டிருந்தார்கள். ஒரே சந்தோஷக் கூச்சல். கோலாகலம். கும்மாளம்.
தான் இருப்பது சொர்க்கத்திலா, நரகத்திலா என்று சந்தேகமே வந்து விட்டது
எமனுக்கு. செக்ரட்டர் அவசரமாக. " குழப்பம் வேண்டாம் மஹா பிரபு... தாங்கள்
இருப்பது நரகத்தில்தான்... இவர்கள் யாருக்கும் புரியாத புதிர்...
வஞ்சிக்கும் இயற்கை, பொய்த்துப்போகும் மழை, மக்களைச் சென்றடையாத அரசுத்
திட்டங்கள், லஞ்சம், இமாலய ஊழல், பெருகும் கொலை, கொள்ளைகள், அருவறுப்பான
அரசியல்வாதிகள், பொய்க்கால் குதிரை சினிமா ஹீரோக்கள், அழுகை வளர்த்து,
அறிவை மழுங்க வைக்கும் மீடியாக்கள், எங்கும் கலப்படம், வருமானத்தை மீறிய
அடிப்படைத் தேவைகளுக்கான செலவு, எலிகள் சிசுக்களைக் கடித்த்க் குதறும் அரசு
மருத்துவமனைகள், பள்ளிக்குழந்தைகளைப் பலியாக்கும் வாகனங்கள், சுய நலம்,
தான் வாழப் பிறாரைக் கெடுக்கும் வஞ்சகம், காசு வாங்கித் தவறானவர்களுக்கு
ஓட்டளிக்கும் நீசத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நாளில் முக்கால்வாசி
நேரம் மின் தடையால் நசிந்து போன தொழில்கள் மற்றும் வாழ்க்கை... இவற்றிலேயே
உழன்றதால் இவர்களுக்கு நரகம் கூட சந்தோஷத்திற்குரிய இடமாகத் தோன்றுகிறது...
இதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை..." செக்ரட்டரி முடிக்குமுன்
ஒருவன் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பறைக்குள்ளிருந்து ஒருகை எண்ணையை எடுத்து
எமனின் மேல் வீசினான். "... தலைவா... கொஞ்சம் கவனிங்க... இங்கயும் ஊழல்...
ஒரு வாரமா எண்ணையை மாத்தாமப் பழைய எண்ணையிலேயே எங்களை ஃப்ரை பண்றாய்ங்க..."

செக்ரட்டரி திகைப்புடன் எமனைப் பார்க்க, எமன் அதிர்ச்சியில் இறந்து போயிருந்தார் - நிரந்தரமாக.நன்றி- முக நூல்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum