சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

இலங்கையில் 40 ஆயிரம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள்!!!!!

Go down

Sticky இலங்கையில் 40 ஆயிரம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள்!!!!!

Post by ahmad78 on Thu 6 Dec 2012 - 15:36

நாம் எங்கே போகிறோம்? இலங்கையில் 40 ஆயிரம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள்!!!!!


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, சிறுவர்கள் நாட்டின் கண்கள் என ஒருபுறம் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூமியில் உதயமாவதற்கு முன்னரே சில காம அரக்கர்களினால் சிறுவர்களின் வாழ்க்கை அஸ்தமனமாக்கப்படுகின்றது.


காலம் காலமாக என்னதான் விழிப்புணர்வூட்டினாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு மூலையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன. காம ஆசையை சிறார்களிடம் காட்ட முயற்சிக்கும் காம அரக்கர்களிடமிருந்தே சிறார்களை நாமே பாதுகாக்க வேண்டும்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதாரம், அபிவிருத்தி ஆகியன ஒருபுறம் வளர்ந்துகொண்டிருக்க சிறுவர் துஷ்பிரயோகமானது அசுரவேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.

இதை எண்ணி வருத்தப்படுவதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும் என்பார்கள். சம்பவம் இடம்பெற்று ஓரிரு நாட்கள் அழுது புலம்புவதைவிட காம அரக்கர்களின் கண்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே புத்திசாலித்தனமாகும்.

யுனிசெப் மற்றும் புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதியன்று தெரிவித்திருந்தார். மேலும் இவ்வருடத்தில் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிராக 4,ஆயிரத்து 414 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. இளம் வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான எண்ணிக்கை புள்ளிவிபரங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் இந்த அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல் இருக்கின்றது. உணர்வு, உள ரீதியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுவர்கள் உள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

முக்கிய காரணியாக தாய்மார்கள் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லவது. தனது பிள்ளையின் எதிர்காலம், வறுமை, குடும்ப சுமை என பல சுமைகளுடனும் கனவுகளுடனும் இலக்குகளுடனும் தனது பிள்ளையை தந்தையிடமோ, உறவினர்களிடமோ விட்டுச் செல்கின்றனர். இருவருடங்களுக்குப்பிறகோ அல்ல சில வருடங்கள் கழிந்தோ வீட்டுக்கு திரும்பி வரும் தாய்மார் தனது பிள்ளை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது என அறியவந்தால் அந்த சோகத்தை நினைத்துதான் பார்க்க முடியுமா?.

ஆம் இதுதான் உண்மை. அதாவது தனது பிள்ளைகளை உறவினர்களிடமோ தந்தையிடமோ பாதுகாப்பாக இருப்பார்கள் என எண்ணி விட்டு வெளிநாடுகளுக்கு தாய்மார்கள் சென்று விடுகின்றனர். இதற்கு பின்னர் சிறிது காலத்தில் பிள்ளைகள் பெற்ற தந்தையினாலும், சித்தப்பாவினாலும் மாமாவாலும் தாத்தாவினாலும் பக்கத்து வீட்டுக்கரராலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு பல கசப்பான விடயங்கள் இடம்பெற்றமை நாம் அறிந்ததே.

சிலர் தனது பிள்ளைக்காகவே உழைத்து பாழாய்ப் போகின்றனர். ஆனால் போதைக்கும் காமத்துக்கும் மாத்திரம் அடிமையாகிய சில நயவஞ்சகர்களே எவ்வித பரிதாபமும் இன்றி இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றனர்.

மேலும், சிறுவயதில் திருமணம் செய்பவர்கள் வெகுவிரைவாக விவாகரத்து செய்துகொள்ளுவதாலும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதாவது பக்குவம் இல்லாத வயதில் திருமணமானவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளால் பிள்ளைகள் அநாதரவாக்கப்படுகின்றனர். இதனை சாதகமாக வைத்துக்கொள்ளும் சிலர் தமது இச்சைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெற்றோர்களின் கவனக்குறைவும் சிறுவர்கள் நாசமாவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அதாவது தமது பிள்ளைகள் பாடசாலைக்கோ, உறவினர்கள் வீடுகளுக்கோ, நண்பர்களிடமோ சென்றால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என எண்ணி அசமந்தப்போக்காக இருந்து விடுவார்கள்.

ஆனால் இது போன்ற இடங்களிலேயே சிறுவர்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மாணவரை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது, சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய சித்தப்பா கைது, சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்த 60 வயது தாத்தா கைது என ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் ஏதோ ஒரு செய்தி நமது காதுக்கு எட்டுகின்றது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பது போல் பாதிக்கப்பட்ட பிறகு மாத்திரமே அதற்கு வழிகளைத் தேடுகின்றோம்.
சிறுவர்களின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணியாக தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒன்றாக உள்ளது. கணனியோ, தொலைக்காட்சியோ, அல்லது கையடக்கத்தொலைபேசியோ இல்லாத வீடுகள் இல்லை. சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என எண்ணி பெற்றோரும் இவர்களை தனிமையாக்கி விடுகின்றனர்.

ஆனால் தனிமையாக இருந்து என்ன செய்கின்றார்கள் என்பதை யாரும் கவனித்து பார்ப்பதில்லை. உதாரணமாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகம் இல்லாதவர்களே இல்லை எனலாம். வீதியில் இரு 4,5 ஆம் ஆண்டு படிக்கும் சிறுவர்கள் கதைத்துக்கொண்டு செல்கின்றனர். ‘மச்சான் ஏன்டா நேற்று பேஸ்புக் சற்டுக்கு வரல, இன்றைக்கு ஒன்லைனுக்கு வா சட்ற் பண்ணுவோம் என்ன..” என்கின்றார்கள் .
இதை பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. தற்போதைய உலகில் தகவல் பரிமாற்றம் என்பது முக்கியம் . சிறுவர்கள் என்பவர்கள் ஒன்றும் அறியாதவர்கள். எது நன்மை எது தீமை என அறியாது பல விடயங்களில் ஈடுபடுவர். சிலவேளை முகப்புத்தகத்தில் சிறுவர்களை காமப் பார்வையில் பார்க்கும் சிலரின் பார்வையில் சிறுவர்கள் சிக்கிவிட்டால் எப்படியாவது அவர்களின் வாழ்க்கையை அழித்து விடுவார்கள்.

எனவே இன்றைய காலகட்டத்தில் யாரையும் நம்ப முடியாமல் உள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக சம்பவங்கள் நடந்தேறிவிடுகின்றன. எனவே காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு என்பது தாய்மாரே தமது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அரணாக இருக்க முடியும்.

1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தை இலங்கை அரசானது 1991 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது.

இந்தச் சமவாயம் சிறுவர்கள் சிறப்பான மதிப்புக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய நன்மைகள், அவர்கள் பெறவேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றை வரை முறைப்படுத்துகின்றது. இச்சமவாயத்தில் 54 உறுப்புரைகள் சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் எனபல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் நமது நாட்டில் பூஜ்ஜியமாகவே உள்ளன.

மேலும் இந்த சமயவாயத்தின் உறுப்புரை 18 இல் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தின் அடிப்படையில் ‘பிள்ளையை வளர்க்கும் முக்கிய பொறுப்பு தாய், தந்தை ஆகிய இருவரையும் சார்ந்ததாகும். அரசாங்கம் இது விடயத்தில் அவர்களுக்கு ஆதரவு அளித்தல் வேண்டும். பிள்ளைகளை வளர்ப்பதில் அரசாங்கம் பெற்றோருக்குத் தகுந்த உதவி வழங்குதல் வேண்டும்” என பெற்றோர் பொறுப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்களின் பாதுகாப்பு மற்றவர்கள் கைகளில் இல்லை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்க வேண்டும்.

யுனிசெப், புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படியென்றால் இன்றைய சிறுவர்கள் நாளை தலைவர் என்பது மறைந்து இன்றைய சிறுவர்கள் நாளை விபசாரிகளா? என்ற கேள்வி எழுகின்றது.

காரணம் இவ்வாறு சிறுவர்கள் விபசாரிகளும் விபசாரத்திற்கும் உட்படுத்தப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். இத்தப்புகளை புரிபவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு இருந்தால் மேலும் மேலும் குற்றச்செயல்கள் அதிரிக்குமே தவிர கட்டுப்படுத்த முடியாது. அதாவது ஒரு சிறுவனின் வாழ்க்கையை அழித்தவனுக்கு 3 மாதகால சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் தான் தண்டனை. ஆனால் அழிந்த வாழ்க்கை மீண்டும் வருவதில்லை. சிறையிலிருந்து வரும் நயவஞ்சகனின் பார்வை அடுத்த சிறுவனையும் இலக்கு வைக்காது என்பதற்கு என்ன உறுதி இருக்கின்றது.

இந்நிலையில், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத் தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கடந்த (2012-11-22 ) சபையில் தெரிவித்திருந்தார். உண்மையில் வரவேற்க கூடிய விடயம்.

இது ஏட்டு சுரக்காயாக மாத்திரம் இருந்து விடாது நடைமுறைக்கு வந்தால் நன்மையாக இருக்கும். மேலும் இக்குற்;றங்கள் புரிபவர்கள் பிணை எடுக்க முடியாத குற்றங்களாக ஆக்கப்பட வேண்டும்.

அப்போதே அடுத்த சந்ததியின் வீரிய விதைகளான சிறார்களை விளைச்சல் மிக்க சந்ததியினராக உருவாக்க முடியும்.


நன்றி வீரகேசரி, எம்.டி.லூசியஸ

http://www.myoor.com/sri-lanka-has-40000-child-prostitutes/படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum