சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Go down

Sticky சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:23

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு.

டெல்லி, டிச 19-
பாராளுமன்ற மக்களவையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “இந்தியாவில் 25 கோடிக்கும் மேல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆன பிறகும் அவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிர ஜாதியப்போக்கு உள்ளவர்களால் அந்த கிராமங்கள் சூறையாடப்பட்டன” என்று தெரிவித்தவர், “தாழ்த்தப்பட்டோரின் பொருளாதாரத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தடுக்க காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போதும் அந்த இடங்களில் மக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:24

உக்ரைனில் மைனஸ் 17 டிகிரிக்கு கீழ் கடும் உறைபனி: 37 பேர் பலி.

கீவ், டிச. 19-

ஐரோப்பாவின் கிழக்கில் உள்ள உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக பனிப் பொழிந்து வருகிறது. அங்கு தட்பவெட்ப நிலை மைனஸ் 17 டிகிரிக்கும் கீழே சென்று உள்ளது. அங்குள்ள மக்களின் உடல் வெப்பம் மிகவும் குறைந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த மாதத்தில் மட்டும் அங்கு 37 பேர் இறந்துவிட்டனர்.

வயதானவர்களும் வீடுகள் இல்லாதவர்களும் இதில் பலியாகிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் மக்கள் தங்கி உணவு அருந்த 1500 தற்காலிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கொட்டும் கடும் பனிப்பொழிவிற்கு ரோடுகள் தடுக்கப்பட்டுள்ளன. 100-க்கணக்கான வாகனங்கள் அப்படியே ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளன.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:26

அமெரிக்காவில் தாக்குதல் ஆயுதங்களை தடை செய்ய அதிபர் ஒபாமா ஆதரவு.

வாஷிங்டன், டிச. 19-

அமெரிக்கா கனெக்டிகட் நியூடவுன் பள்ளியில் அதி நவீன துப்பாக்கிகளை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 20 பேர் ஒன்றும் அறியாக் குழந்தைகள். இச்சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நியூ டவுனில் நடந்தது.

அதில் கலந்துகொண்ட அதிபர் பராக் ஒபாமா பிஞ்சு குழந்தைகள் இறந்ததற்கு கண்ணீர் வடித்தார். இந்நிலையில், அதிபர் பராக் ஓபாமா இதுபோன்று சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நவீன தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம் கொண்டுவர விரும்புவதாக கூறியுள்ளார்.

இதற்காக வரும் நாடாளுமன்ற முதல் கூட்டத்திலேயே, தடை செய்வது குறித்து மசோதா கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:27

உத்தர பிரதேசத்தில் 100 பேரை கொன்று குவித்த கூலிப்படை ரவுடி சுட்டுக் கொலை.

காசியாபாத், டிச. 18-

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான்.

கூலிப்படையாக செயல்பட்டு சுமார் 100 பேரை கொன்ற ஜோகிந்தர் என்ற ஜக்கு பகல்வன், இன்று காலை ஒருகாரில் சென்றான். டிலா மோர் என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு காரில் வந்த 3 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஜோகிந்தரும் திருப்பி சுட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த ஜோகிந்தர் மற்றும் டிரைவர் சந்தீப் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோகிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டிரைவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை வழக்குகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி ஜோகிந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பின்னர் கடந்த மாதம் 16-ம்தேதி ஜாமீனில் வெளியே வந்து, விசாரணைக்கு ஆஜராகி வந்தான். இதனை நோட்டமிட்ட எதிரிகள் இன்று தனியாக சென்றபோது தீர்த்து கட்டியுள்ளனர்.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:29

கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு.

கொல்கத்தா, டிச. 18-

கொல்கத்தாவில் உள்ள ரிஷி அரபிந்தோ பாலிகா வித்யாலயா பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் மாணவிகள் 29 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று மாலை தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீமதி கோஷ் மற்றும் சில ஆசிரியைகளை சிறைபிடித்தனர். அப்போது தங்களுக்குதேர்ச்சி மதிப்பெண் அளித்து, பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த மாணவிகள் தங்கள் வினாத்தாள் சரியாக திருத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். அவர்களுடன் சில மாணவிகளின் பெற்றோரும் சேர்ந்துகொண்டனர். மேல்நிலைக் கல்வி வாரியம் அனுமதியில்லாமல் பள்ளியால், அந்த மாணவிகளை தேர்ச்சி பெற வைக்க முடியாது என்று தலைமை ஆசிரியை கூறினார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இரவு முழுவதும் ஆசிரியைகள், மாணவிகளின் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மேற்கு வங்க மேல்நிலை கல்வி வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராடும் மாணவிகளின் விடைத்தாள்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன்பின்னர் யார் யாருக்கு பாஸ் மார்க் போட முடியும் என்பதை முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தனர். இதற்காக நாளை அனைவரையும் கல்வி வாரியத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் 24 மணி நேரத்திற்குப் பிறகு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டனர்.

பிளஸ்2 மாணவிகளைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு மாணவிகளும் தங்கள் விடைத்தாளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:31

இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல்

புதுடெல்லி, டிச. 18-

இந்திய பிராந்தியத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு இடத்தை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று பேசிய உள்துறை இணை மந்திரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த 5180 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனாவுக்கு கொடுத்துவிட்டது. இந்தோ-வங்கதேசம், இந்தோ-சீனா, இந்தோ-நேபாள், இந்தோ-பூடான் மற்றம் இந்தோ-மியான்மர் எல்லைகள் வழியாக எந்த வெளிநாடுகளும் அத்துமீறவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதில் இந்தியா விழிப்புடன் உள்ளது என்றும் ராமச்சந்திரன் கூறினார்.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:33

காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் நிலவில் மோதிய இடத்துக்கு அமெரிக்க வீராங்கனை பெயர்.

கலிபோர்னியா, டிச. 18-

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின.

கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்த ஆய்வில் நிலவின் ஆழமான பகுதியில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உடைந்த திடப்பொருட்களின் கழிவுகள் படிந்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் 487 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிலவை ஆய்வு செய்த இந்த விண்வெளி ஓடங்கள், 1,14,000 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 2 விண்வெளி ஓடங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்தது. சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து 11 கி.மீ தூரத்தில் சுற்றி வந்த, இந்த 2 விண்வெளி ஓடங்களின் இயக்கமும் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த விண்வெளி ஓடங்களை, ஒன்றன் பின் ஒன்றாக நிலவின் மேற்பரப்பில் உள்ள மலைகளின் மீது மோதி வெடிக்கச் செய்ய நாசா திட்டமிட்டது. இதனையடுத்து நாசா விண்வெளி நிலையத்திலிருந்தபடி 'எப்', 'பிளோ' என பெயரிடப்பட்ட அந்த 2 விண்வெளி ஓடங்களையும், நிலவின் மேற்பரப்பில் உள்ள மலையின் மீது மோதச்செய்து, அமெரிக்க விஞ்ஞானிகள் தகர்த்தனர்.

30 வினாடி இடைவெளியில் எப்-பும், பிளோ-வும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி வெடித்துச் சிதறின. இருளான நேரத்தில் இந்த மோதல் நிகழ்ந்ததால், பூமியில் இருந்து இதை பார்க்க முடியவில்லை. இந்த விண்வெளி ஓடங்கள் மோதி தகர்ந்த இடத்திற்கு, அமெரிக்காவின் முதல் விண்வெளி பெண் வீராங்கனையான சேல்லி ரைட்-டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மரணமடைந்த சேல்லி ரைட் நினைவாக, இந்த பெயரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையங்கள் அங்கீகரிக்க வேண்டும் என நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:34

14 பேருக்கு கோர்ட்டு வழங்கியுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு சர்வதேச அமைப்பு கோரிக்கை

புதுடெல்லி, டிச. 18-

'அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல்' என்றழைக்கப்படும் சர்வதேச பொது மன்னிப்பு சபையில் தலைமை அலுவலகத்தின் மூத்த செயல் அலுவலர், ஜி. அனந்த பத்மநாபன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

தங்களின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ள 14 கருணை மனுக்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். குறிப்பாக, 2001-பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பான முன் விசாரணைகள் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் கொள்கைக்கு வேறுபட்டவையாக உள்ளது.

1995-ம் ஆண்டில் ஆட்டோ சங்கர், 2004-ம் ஆண்டில் தனன்ஜாய் சாட்டர்ஜி ஆகியோர் தூக்கிலிடப்பட்ட போது, பொதுவான அறிவிப்புக்கு பிறகுதான் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், அஜ்மல் கசாப் விவகாரத்தில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை. மனித உரிமை ஆர்வலர்களால் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அவரை தூக்கில் போட்டதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை கருதுகின்றது.

தாங்கள் விதித்த 13 மரண தண்டனைகள் தவறுதலாக வழங்கப்பட்ட தீர்ப்பு என ஓய்வு பெற்ற 14 நீதிபதிகள், தங்களுக்கு (ஜனாதிபதி) மனு செய்துள்ளதையும் தாங்கள் சீராய்வு செய்ய வேண்டும்.

தங்களின் பரிசீலணையில் உள்ள கருணை மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து, அனைத்து மரண தண்டனைகளையும் ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை தங்களைக் கேட்டுக் கொள்கின்றது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:36

கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம்

புதுடெல்லி, டிச. 18-

நீங்கள் இந்தியாவின் மாநகரங்கள் பலவற்றில் வசித்திருந்தால் எந்த நகரம் பெண்களுக்கு பாதுகாப்பானது என சொல்ல தேவையில்லை. அது உங்களுக்கே தெரியும்.

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லி நகரத்தோடு ஒப்பிடும்போது மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது இந்த தகவலை தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவிக்கிறது.

டெல்லியைவிட மும்பையானது சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையை அதிகம் கொண்டிருந்தாலும் டெல்லியை ஒப்பிடுகையில் மும்பையில் பாதி அளவே கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.

தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76 மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான். கடந்த ஆண்டு டெல்லியில் ஒரு லட்சம் பெண்களில் 7 பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அரியானாவில் 6 பெண்களும், ராஜஸ்தானில் 5 பெண்களும், உத்தர பிரதேசத்தில் 2 பெண்களும் கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் அதிகரிக்க அதன் அண்டை மாநில மக்களின் போக்குவரத்து அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம் என தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு கூறுகிறது.

டெல்லியில் ஒரு லட்சம் பெண் மற்றும் சிறுமிகளில் 7 பேர் கற்பழிப்புக்கு பாதிக்கப்படுவதை ஒப்பிடுகையில், மும்பையில் 3 பெண்களும், பெங்களூர் மற்றும் சென்னையில் 2 பெண்களும் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆனால் கொல்கத்தாவைப் பொறுத்தவரை 3 லட்சம் பெண்களில் 2 பேர் மட்டுமே கற்பழிப்புக்கு இரையாகின்றனர். இந்த விதமான போக்கில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை. டெல்லி மட்டும் கற்பழிப்பு குற்றங்களில் முதலிடத்தையே வகித்து வருவது குறிப்பிடக்தக்கது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 7:52

மெக்சிகோவில் கடைகளை திறக்க வால்மார்ட் லஞ்சம் கொடுத்தது: அமெரிக்க பத்திரிகை தகவல்.


நியூயார்க், டிச.19-
சில்லரை வர்த்தகத்தில் உலக ஜாம்பவன் ஆக அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் திகழ்கிறது. இது இந்தியாவில் கால்பதிக்க ரூ.125 கோடியை செலவிட்டு ஆதரவு திரட்டியதாக புகார் கூறப்பட்டு அது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சீனா, பிரேசில் நாடுகளிலும் புகாரில் சிக்கி இருக்கிறது.

இதுபோல அந்த நிறுவனம் வேறு சில நாடுகளிலும் தனது கடைகளை திறக்க லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளி வந்தபடி இருக்கின்றன. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் கடைகள் திறக்க வால்மார்ட் நிறுவனம் அங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்சமாக பல மில்லியன் டாலர்களை வாரி வழங்கியதாக புதிய பரபரப்பு தகவல் ஒன்றை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

மெக்சிகோ நாட்டில் இந்த நிறுவனம்(வால்மார்ட்) வால்மெஸ் என்ற பெயரில் செயல்படுகிறது. அங்கு 2004-ம் ஆண்டில் கடையை திறக்க முயன்ற போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடைகளை திறப்பதற்காக உள்ளூர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது. 19 தடவை இந்த பணம் கைமாறி இருக்கிறது.

தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு ஒரு மைல் தொலைவில் இருக்கும் தெதிஹயாகான் என்ற இடத்தில் கடை திறக்க 2 லட்சம் டாலரும், பாசிலிகா என்ற இடத்தில் கடை திறக்க 3 லட்சம் டாலரும், மெக்சிகோ சிட்டியில் குளிர்பதன பெட்டி சேமிப்பு கிடங்கு அமைக்க 7 லட்சம் டாலரும் லஞ்சம் கொடுத்துள்ளது.

மொத்தத்தில் அங்கு சுமார் ரூ.40 கோடியை லஞ்சமாக கொடுக்க அந்த நிறுவனத்தின் நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. ஆனால் அதை விட மிஞ்சி ரூ.120 கோடி வரை லஞ்சம் வழங்கி இருக்கிறது. இது குறித்து அமெரிக்காவின் பல்வேறு துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள்.

ஆனால் மெக்சிகோ அட்டர்னி ஜெனரல் அலுவலக அதிகாரிகள் கூறுகையில் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினோம். போதுமான சான்றுகள் இல்லாததால் அதை முடித்து வைத்து விட்டோம் என பதில் அளிக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து வால்மார்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் டேவிட் தோவார் பதில் அளிக்கையில்,

இது பற்றி எங்கள் நிறுவனம் அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. அத்துடன் நீதித்துறை, செக்யூரிட்டி மற்றும் எக்சேஞ் கமிஷனுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என கூறினார். இந்த லஞ்சப்புகார்கள் வெளிவந்ததன் எதிரொலியாக வால்மார்ட் நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 9:06

பணத்துக்காக தீர்ப்பு அளிக்கப்படுவதாக கடும் விமர்சனம் எதிரொலி: சாந்தமாக பேசுமாறு மம்தாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை

கொல்கத்தா, டிச.19-

பணத்துக்காக தீர்ப்பு அளிக்கப்படுவதாக மம்தா செய்த விமர்சனத்துக்காக அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கொல்கத்தா ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இருப்பினும், சாந்தமாக பேசுமாறு மம்தாவுக்கு அறிவுரை கூறியுள்ளது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி அம்மாநில சட்டசபை விழாவில் பங்கேற்று பேசினார்.

அப்போது, நீதித்துறை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். பணத்துக்காக, நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்காக, அவர் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மூத்த வக்கீல்கள் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, சுப்ரதா முகர்ஜி ஆகியோர் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மம்தாவின் பேச்சு அடங்கிய வீடியோ படத்தையும் தாக்கல் செய்தனர்.

ஆனால் அந்த வழக்கை விசாரித்த பெஞ்சின் தலைவரான நீதிபதி சென்குப்தா, உத்தரகாண்ட் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதனால், தலைமை நீதிபதி அருண்குமார் மிஸ்ரா, ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இவ்வழக்கை புதிதாக விசாரித்தது. அப்போது வாதாடிய வக்கீல் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, விமர்சனத்துக்கான 'லட்சுமணரேகையை' மம்தா தாண்டிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

கோர்ட்டை விமர்சித்த மந்திரி பேகாரம் மன்னா மீது நடவடிக்கை எடுத்தது போல மம்தா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அதைத் தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மம்தா பானர்ஜி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பிரயோகிக்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், அம்மனுவை தள்ளுபடி செய்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:-

மந்திரி பேகாரம் மன்னா, ஒரு குறிப்பிட்ட உத்தரவு பற்றி விமர்சித்தார். அதனால் அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மம்தா பானர்ஜி எந்த குறிப்பிட்ட உத்தரவு பற்றியோ, கோர்ட்டு பற்றியோ விமர்சிக்கவில்லை. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்காததால், மம்தாவின் செயலை நாங்கள் அங்கீகரித்ததாக கருதக்கூடாது. பேசியவர், இந்த மாநிலத்தின் முதல்-மந்திரி. அவரது பேச்சில் சாந்தம் கலந்திருக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 9:12

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மட்டுமே தகுதியானவர்: அரசு அறிவிப்பு.

சென்னை, டிச.19-

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2013-ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் 31.3.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவு எடுத்துள்ளது.

எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றுள்ளவர்கள் (குழந்தைகள் உள்பட), அவரவர்களுடைய பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடியாகக்கூடிய காலத்தை சரிபார்த்து, செல்லுபடியாகும் காலம் 31.03.2014 வரை இல்லையென்றால் அந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக குறைந்தபட்சம் அருகருகே 2 பக்கங்கள் காலியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஹஜ் 2013-க்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய நிதி அமைப்பு (ஐ.எப்.எஸ்.) குறியீட்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கவிருக்கும் மனுதாரர்கள் ஐ.எப்.எஸ். குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குமாறும், அவ்வாறு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக காசோலை ஒன்றினை (ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டு) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 9:31

ஹைதரபாத் விமான நிலையத்தில் தீ விபத்து: 100 கோடி சேதம்

ஹைதரபாத், டிச. 19-

ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதரபாத் பேகம்பேட் பழைய விமானத்தளத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பயிற்சி விமானங்களும் 1 ஹெலிகாப்டரும் எரிந்து சாம்பாலாயின. இதன் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும் மற்றும் ஏர்போர்ட் நிர்வாக தீயணைப்பு வண்டிகளூம் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதுகுறித்து உயர்மட்ட சி.ஐ.டி. விசாரணைக்கு முதல் மந்திரி கிரண் குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சார்ட் சர்க்கியூட் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 9:59

டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

புதுடெல்லி, டிச. 19-

டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோ தெரபி படித்து வரும் 23 வயது மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். தன் நண்பருடன் தெற்கு டெல்லியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த மாணவிக்கு இந்த கொடூரம் நேர்ந்தது.

வீடு திரும்ப ஆட்டோ கிடைக்காததால் அந்த மாணவியும், அவரது நண்பரும் அந்த வழியாக வந்த ஒரு பள்ளிக்கூட பஸ்சை நிறுத்தி ஏறினார்கள். அப்போது அந்த பஸ்சில் 6 இளைஞர்கள் மது போதையுடன் இருந்தனர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரை இரும்பு கம்பியால் தாக்கி ஓரம் கட்டி விட்டு மாணவியை கற்பழித்தனர். அதன் பிறகு அந்த 6 பேரும் மாணவியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவரையும் அவரது நண்பரையும் ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விட்டு சென்று விட்டனர்.

சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை போலீசார் மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து திங்கட்கிழமை வீடு திரும்பி விட்டார். ஆனால் மாணவி கற்பழிக்கப்பட்டதோடு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

போதையில் இருந்த காம கொடூரர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் அந்த மாணவி குடல் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. திங்கட்கிழமை அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் நேற்று திடீரென அந்த மாணவியின் உடல் உள் உறுப்புக்களை அழுகச் செய்யும் தொற்று பரவியது. இதனால் மாணவியின் உடல் உறுப்புகளின் செயல்பாடு முடங்கியது.

நேற்றிரவு மாணவி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி உடல் உள் உறுப்புகளில் ரத்த கசிவு நீடிப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக மாணவிக்கு சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் இரண்டு அறுவை சிகிச்சைக்களை மேற்கொண்டனர். என்றாலும் மாணவி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மாணவியின் உறவினர்கள் மருத்துவ மனையில் சோகத்துடன் உள்ளனர். இதற்கிடயே மாணவியை கற்பழித்து ஈவு, இரக்கமின்றி தாக்கியவர்களை பிடிக்க டெல்லி போலீசார் மேற்கொண்ட மின்னல் வேக வேட்டைக்கு பயன் கிடைத்தது. குற்றவாளிகள் 6 பேரும் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. ராம்சிங், பஸ் டிரைவர்.

2. முருகேஷ். இவன் ராம் சிங்கின் தம்பி. ஒரு ஜிம்மில் உதவியாளராக உள்ளான்.

3. விஜய் சர்மா, பழ வியாபாரி.

4. பவன்குப்தா, உதவியாளர்.

அக்ஷய் தாக்கூர், ராஜு ஆகிய 2 வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க டெல்லி தனிப்படை போலீசார் பீகார், ராஜஸ் தான் மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகள் 6 பேரும் டெல்லியில் ஆர்.கே.புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் 6 பேர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது.

குற்றவாளிகள் 6 பேர் மீதும் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 377 (செக்ஸ் சித்ரவதை) மற்றும் 365, 376 (கடத்தி கற்பழித்தல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சில கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்தி நேற்று பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகளை உயிருடன் விடக்கூடாது என்று நாடெங்கும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் தீவிரமாகியுள்ளன.

மாணவி கற்பழிக்கப்பட்டது பற்றி 2 வாரத்துக்குள் அறிக்கை தரும்படி டெல்லி மாநில அரசை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய உள்துறை புதிய நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மாணவி கற்பழிப்பு குறித்து தினமும் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதற்கு ஏற்ப டெல்லி போலீசாரும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் கூறுகையில், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட நாங்கள் பரிந்துரை செய்யப் போகிறோம் என்றார். எனவே மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பது உறுதியாகி உள்ளது.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by ahmad78 on Wed 19 Dec 2012 - 11:03

தேவையான பதிவு

நன்றி முஹம்மத்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் on Wed 19 Dec 2012 - 19:47

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Sun 30 Dec 2012 - 21:54

விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2! கமல் அறிவிப்பு

விஸ்வரூபம்
படம் இன்னும் 10நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்தபடியாக
விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2-வை எடுக்க போவதாக கமல் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3
மொழிகளில் ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்பங்களுடன்
ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூம்.
பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமலுடன் பூஜா
குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜனவரி 11ம் தேதி இப்படம்
ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக உலகில் எந்த ஒரு சினிமா கலைஞரும்
செய்திராத புதுமையாக இப்படத்தை டி.டி.எச்.,ல் திரையிட இருக்கிறார்
கமல்ஹாசன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்‌பை கமலும் அறிவித்துவிட்டார்.
ஜனவரி 10ம் தேதி இரவு விஸ்வரூபம் படம் டி.டி.எச்-.ல் ஒளிப்பரப்பாக
இருக்கிறது.

இந்நிலையில் விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாகி வரும்
சூப்பர் சிங்கர் டுவென்டி-20 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும், பூஜா குமாரும்
பங்கேற்றனர். அப்போது கமலிடன் விஸ்வரூபம் படம் பற்றி பல்வேறு கேள்விகள்
கேட்கப்பட்டன. அதற்கு கமலும் பதிலளித்தார். அப்போது விஸ்வரூபம் படத்தின்
பார்ட்-2 பற்றிய பேச்சை படத்தின் ஆரம்பித்தார் நாயகி பூஜா குமார். உடனே
கமல் நானே இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தனியாக பிரஸ்மீட் வைத்து
சொல்லலாம் என்று நினைத்தேன். இப்போது விஜய் டி.வி. மூலமாகவே அதை
தெரிவிக்க‌ிறேன். விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன் என்றார். அது
எப்போது என்ற கேள்விக்கு விஸ்வரூபம் முதலில் வெளியாகட்டும். பிறகு பார்ட்-2
பற்றி சொல்கிறேன் என்றார்.

-தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Sun 30 Dec 2012 - 22:01

டில்லியில் இதுவரை 635 கற்பழிப்பு; 1க்கு மட்டும் தண்டனை

புதுடில்லி:
இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 கற்பழிப்பு
வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என
தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்
மூலம் தெரிய வந்துள்ளது.

2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம்
வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 கற்பழிப்பு வழக்குகள்
தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி
விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட
விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம்
பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193
வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள்
வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி
விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து
வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை, தண்டனை என்ற போதிலும்
குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.

ஆண்டு வாரியாக விவரம் :


கடந்த
ஆண்டில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள்
வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 )
, 466 ( 2008) .


கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் கற்பழிப்பு
தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட்
தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர்
விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37
பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம்
இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள்
இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009
ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு
ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

-தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by ahmad78 on Mon 31 Dec 2012 - 6:41

தண்டனைகள் வலுவாகாமல் தவறுகள் குறையாது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் on Mon 31 Dec 2012 - 9:50

ahmad78 wrote:தண்டனைகள் வலுவாகாமல் தவறுகள் குறையாது
குற்றகளுக்கு கேற்றவாரு தண்டனைகள் அழிக்கப்பட வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Muthumohamed on Thu 10 Jan 2013 - 21:56

பெண் குரங்கை கவர சாகசம் செய்யும் ரோமியோ குரங்கு

ஜெர்மனியில் உள்ள கெர்பெல்டு நகரில் மிருககாட்சி சாலை ஒன்று உள்ளது. இங்கு
கடந்த ஏப்ரல் மாதம் டென்மார்க்கில் இருந்து 12 வயது மனித குரங்கு கொண்டு
வரப்பட்டது. அந்த குரங்குடன் 2 பெண் குரங்குகளும் அடைக்கப்பட்டன.

இந்த
குரங்குக்கு கயிற்றில் நடக்க கற்று கொடுத்து உள்ளனர். 2 கால்களாலும்
மனிதன்போல் கயிற்றில் நடந்து சாகசம் செய்கிறது. ஆனால் 2 பெண் குரங்குகளும்
அதை கவனிக்கும்போது மட்டுமே இந்த சாகசத்தை செய்கிறது. பெண் குரங்குகள்
பார்க்காத நேரத்தில் சாகசம் செய்ய மறுத்து விடுகிறது.

இளைஞர்கள்
பெண்களை கவர சில ரோமியோ நடவடிக்கைளை மேற்கொள்வதுபோல் இந்த குரங்கின்
செயல்பாடுகளும் உள்ளன என்று குரங்கின் பராமரிப்பாளர் கூறுகிறார்...

மாலைமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum