சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சுவரொட்டி மனிதர்கள்

Go down

Sticky சுவரொட்டி மனிதர்கள்

Post by Muthumohamed on Fri 1 Feb 2013 - 17:44

சுவரொட்டி மனிதர்கள்
(சிறுகதை)

இரவு 10.00 மணி.

வழக்கம்
போல அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் கூடியிருக்க மூன்று அடுப்புகளில் பசை
தயாராகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அடுப்பாகச் சென்று பசையின் பதத்தைச்
சோதித்துக் கொண்டிருந்த சிவனாண்டியின் மனதிற்குள் தங்கை காமாட்சியின் அழுகை
முகம் வந்து வந்து போனது. அதன் காரணமாய் அவனிடத்திலும் வழக்கமான கலகலப்பு
காணாமல் போயிருந்தது.

அன்று இரவுக்குள் ஒட்டி முடிக்கப்பட வேண்டிய
போஸ்டர்கள் ஒரு புறம் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, காண்டிராக்டர் செல்வம்
யார் யாருக்கு….எந்தத் தெரு….என்ன போஸ்டர் என்பது குறித்த விபரங்களை
உத்தரவாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்.

'அண்ணே…பசை ரெடி எல்லோரும்
அவங்கவங்க பக்கெட்டை எடுத்திட்டு வாங்க…” சிவனாண்டி குரல் கொடுக்க,
தங்களுக்கான விபரங்களைத் தெரிந்து கொணடவர்கள் பக்கெட்டுடன் அவனை நோக்கிச்
சென்றனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் திசைக்கொருவராய்ப் பறந்து விட அந்த இடம் வெறிச்சோடியது.

'சரி…சிவனாண்டி….நானும்
பொறப்படறேன்…நீயும் கௌம்பு…போகும் போது மறக்காம அடுப்புக்களை அணைத்து
விட்டுப் போ..” சொல்லியபடியே காண்டிராக்டர் செல்வம் தன் புல்லட்டில் ஏறி
அமர அது படபடத்துக் கிளம்பியது.

மீதமாகிப் போன பசையை ஒரு
பக்கெட்டில் ஊற்றி தன் சைக்கிளின் ஹேண்டில் பாரில் தொங்க விட்டவன்
அடுப்புக்களை மீண்டுமொரு முறை கூர்;ந்து பார்த்து விட்டு சைக்கிளில் ஏறி
மிதித்தான்.

'ஹூம்…ஒரே தங்கச்சி நல்லா இருக்கணும்னு
ஆசைப்பட்டுத்தான் கவருமெண்டு வேலைல இருக்கறவனுக்குக் குடுத்தேன்…அவன்
இப்படிப் பணத்தாசை பிடிச்சவனா இருப்பான்னு கொஞ்சம் கூட நெனச்சுப்
பார்க்கலை…”

'த…ம்….பீ”

யாரோ அழைப்பது போல குரல் கேட்க காலை
ஊன்றி நின்று திரும்பிப் பார்த்தான். ஒல்லியான முகத்தில் அடர;த்தியான
குறுந்தாடியோடு நின்று கொண்டிருந்த அந்த நபர் இவனை நோக்கி நடந்து வந்து
சிநேகிதமாய்ச் சிரிக்க,

'என்னையா கூப்பிட்டீங்க?” கேட்டான்.

அந்த நபர; மேலும் கீழுமாய்த் தலையாட்டி விட்டு பார்வையை நாலாப்புறமும் ஒட்டியவாறே 'போஸ்டர் ஒட்டுற ஆளுங்கெல்லாம் போய்டடாங்களா?”

'ஓ..அப்பவே கௌம்பியாச்சே…ஏன் உங்களுக்கு ஏதாவது போஸ்டர் ஒட்டணுமா?”

'ம்ம்ம்…..” சில விநாடிகள் யோசித்தவர் 'ஆமாம்” என்றார்.

'அடடே…காண்டிராக்டர் கூட இப்பத்தான் போனார்…கொஞ்சம் முந்தி வந்திருந்தீங்கன்னா இன்னிக்கே ஒட்டியிருக்கலாம்…இனி நாளைக்குத்தான் ஆவும்”

;இங்க மொத்தம் எத்தினி பேர் போஸ்டர் ஒட்டுறாங்க?”

'ம்ம்ம்…எட்டு பேர் என்னையும் சேர்த்து…ஆனா இன்னிக்கு போஸ்டர் குறைவு..அதனால எனக்கு வேலை இல்லாமப் போச்சு”

'சரி….வேலை நான் தர்றேன்…செய்யறியா?”

'அய்யய்ய…அப்படியெல்லாம் ஒட்டக் கூடாது!...காண்டிராக்டர் மூலம்தான் வரணும்”

'பச்…த
பாருப்பா….இது கொஞ்சம் விவகாரமான போஸ்டர்;….காண்டிராக்டர் மூலமாவெல்லாம்
வர முடியாது…நீ ஒட்டறேன்னு சொல்லு…ஒரு பெரிய அமௌண்ட் வெட்டறேன்”

'என்னது…வெவகாரமான போஸ்டரா?…பலான படமா?”

'இல்லை”

'அப்புறம்?” அப்பாவியாய்க் கேட்ட சிவனாண்டியைப் பார்த்து முறுவலித்த அந்த நபர்,

'எங்க
இயக்கத்தோட வாசகங்கள் கொண்ட போஸ்டர்…நாளைக்குக் காலைல நகரையே
பரபரப்பாக்கி….காவல் துறையைக் கலவரமாக்கி….யார் அடிச்சது?…யார் ஒட்டினது?
ன்னு எல்லோரையும் தலையைப் பிய்ச்சுக்க வைக்கற போஸ்டர்..” சொல்லும் போதே
அந்த நபரின் கண்களில் ஒரு வெறி தாண்டவமாடியது.

'நீ…நீங்க…தீவிர வாதியா?” சிவனாண்டியின் குரல் நடுங்கியது.

'அப்படின்னு
காவல் துறையும்…கவர;ன்மெண்ட்டும்தான் சொல்லுது…ஆனா..எங்களைப் பொறுத்தவரை
நாங்க தீவிரவாதிங்க இல்லை…இந்த நாட்டை…இந்த சமுதாயத்தைத் திருத்தறவாதிங்க”

'அய்யா..சாமி…ஆளை விடுப்பா…” என்று கை கூப்பி விட்டுத் திரும்பிய சிவனாண்டியை அந்த நபர் சொன்ன அடுத்த வார்த்தை இழுத்து நிறுத்தியது.

'வேணும்னா பத்தாயிரம் வாங்கிக்கப்பா…”

மதியம் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சி சிவனாண்டியின் மனத்திரையில் ரீப்ளே ஆனது.

'த பாருய்யா…இருபத்தஞ்சாயிரத்தோட உன் தங்கச்சிய அனுப்பினா அனுப்பு…இல்லையா…இங்கியே வெச்சுக்க” கவருமெண்டு மாப்பிள்ளை கறராய்ச் சொல்ல,

'மாசம் பூராவும் போஸ்டர் ஒட்டினாலும் எனக்கு அஞ்சாயிரத்துக்கு மேல வராது…நான் எப்படி மாப்பிள்ளை திடீர்னு இருபத்தஞ்சாயிரம்…”

'அதைப்
பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது… எனக்குத் தேவை இருபத்தஞ்சாயிரம் பணம்
..ரெடியானதும் சொல்லியனுப்பு..நானே வந்து கூட்டிட்டுப் போறேன்” சொல்லி
விட்டுப் பறந்தது கவருமெண்டு காகம்.

'என்னப்பா யோசிக்கறே?…பத்தாயிரம் போதலைன்னா கேளு…கூட தாரேன்”

தான் செய்வது சரியா?…தவறா?…என்று யோசிக்கக் கூட தோணாதவனாய் 'ஒரு இருபத்தியஞ்சு…தேறுமா?” கேட்டே விட்டான்.

சிறிதும்
யோசிக்காமல் தன் கையிலிருந்த பையைத் திறந்து பணக்கட்டுகளை எடுத்து
சிவனாண்டியின் முகத்தருகே அந்த நபர் நீட்ட 'படக்” கென வாங்கிக் கொண்டான்.

'போஸ்டரைக் குடு சார்”

அந்த நபர் தான் கொண்டு வந்திருந்த பெரிய பண்டலை அவனிடம் தந்து 'இதுல மொத்தம் ஐநூறு இருக்கு…அத்தனையையும் ஒட்டிடு”

'சரி சார்”

'ஏமாத்திடலாம்னு மட்டும் நெனைக்காதே….நாங்க நம்பிக்கை துரோகிகளை விட்டு வைப்பதில்லை”

'அதே மாதிரிதான் இந்த சிவனாண்டியும்…கை நீட்டிக் காசு வாங்கிட்டா ஏமாத்தறதில்லை”

மறுநாள் காலை.

காவல்துறை உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தில் அனல் பறந்தது. கமிஷனர் காரசாரமாய்க் கத்திக் கொண்டிருந்தார்.

----

இருபந்தைந்தாயிரம் ரூபாயைத் தன் தங்கையிடம் கொடுத்து விட்டு மாப்பிள்ளைக்கு போன் செய்து கொண்டிருந்தான் சிவனாண்டி.

'ஓ..அப்படியா?…மொத்தப்
பணமும் ரெடியாயிடுச்சா?…ஓ.கே…ஓ.கே…நாளைக்கே வந்து என் கண்மணியை
அழைச்சிட்டு வந்திடறேன்” போனிலேயே இளித்தது அந்த கவருமெண்டு காகம்.

-----

'யோவ்…நீதான்யா சுக்ரவார்பேட்டை போஸ்டர் காண்டிராக்டர்,” இன்ஸ்பெக்டர் விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்க,

காண்டிராக்டர் செல்வம் 'ஆ..மா…ம் சா…ர்..” நடுங்கியபடியே சொன்னார்.

'அப்படின்னா உனக்குத் தெரியாம எப்படிய்யா அங்க அந்தப் போஸ்டர் வந்தது?”

'தெரியலையே சார்”

'தெரியாதுடா…உன்னைய
ஸ்டேஷன்ல வெச்சு விசாரிக்கற மாதிரி விசாரிச்சா தானா தெரிய வரும்”
சொல்லியபடியே அவனுடைய சட்டைக் காலரைப் பற்றி ஜீப்பை நோக்கி இழுத்துச்
சென்றார் இன்ஸ்பெக்டர்.

கதறியது காண்டிராக்டர் செல்வத்தின் குடும்பம்

-----
இரவு 11.00 மணி.

'அண்ணே...யாரோ கதவைத் தட்டுற சத்தம் கேட்குது” தங்கை காமாட்சி சொல்ல,

எழுந்து சென்று கதவைத் திறந்த சிவனாண்டி அதிர்ந்தான்.

போலீஸ்!

சட்டென்று தாவி அவன் தலை முடியைக் கொத்தாகப் பற்றி இழுத்துச் சென்றது.

-----

'சொல்லுடா…யாரு குடுத்தது அந்தப் போஸ்டரை?”

தரையில் அமர;ந்திருந்த சிவனாண்டி பதிலேதும் பேசாது மௌனமாய் அண்ணாந்து பார்த்தான்.

அவனின்
அந்த அலட்சியம் இன்ஸ்பெக்டரின் கோபத்தைத் தூண்டி விட அவரின் இடது கால்
அவன் முகத்தை அசுர வேகத்தில் தாக்கி விட்டுத் திரும்பியது.

கன்னத்தில்
ஷூவின் அடி அச்சு அப்பிக் கொள்ள, வாயோரத்தில் புளித்த ரத்தத்தைத் தொட்டுப்
பார்த்து விட்டு 'சார் சத்தியமாலுமே சொல்றேன் சார்…அவன் யாருன்னே எனக்குத்
தெரியாது சார்”

சற்றும் எதிர்பாராத நேரத்தில் பக்கத்தில் நின்று
கொண்டிருந்த கான்ஸ்டபிளின் லத்தி சட்டையில்லாத அவன் வெற்று முதுகில்
முரசறைய ரத்தக் கோடுகள் அவனை வரிக்குதிரையாக்கின.

தொடர்ந்து உதைகளையும், அடிகளையும் சரமாரியாக வழங்கி விட்டு, அவனைத் தூக்கி லாக்கப்பின் மூலையில் எறிந்தது காவலர் குழாம்.

தாங்க முடியாத வலிகளோடு, தூங்க முடியாத அவஸ்தைகளோடு, அன்றிரவு முழுவதும் முனகியபடியே கிடந்தான் சிவனாண்டி.

-----

மறுநாள்
காலை பதினோரு மணிவாக்கில், போலீஸ் ஜீப்பில் கோர்ட்டுக்கு அழைத்துச்
செல்லப்பட்ட சிவனாண்டிக்கு அதிகபட்ச வலி மற்றும ரணங்களின் காரணமாய்
காயச்சல் கண்டிருந்தது. வெயிலைக்கூட நிமிர;ந்து பார்க்கத்
திராணியில்லாதவனாய் ஜீப்பின் பின்புற இருக்கையில் சுருண்டு கிடந்தான்.

'இந்தப் பயலென்ன சுத்த சோதாப்பயலா இருக்கான்…ஒரு நாள் வைத்தியத்திலேயே இப்படித் துவண்டு போயிட்டான்” 402 சொல்ல,

'பயலுக்கு இதெல்லாம் புதுசு போலிருக்கு”

”இன்னும் நாலு தாங்கு தாங்கியிருந்தா செத்திருப்பான்”

ஜீப் டவுன்ஹால் சிக்னலில் நிற்க மெல்லத் தலையைத் துhக்கி வெளியில் பார்த்தான் சிவனாண்டி.

பக்கத்தில்
நின்று கொண்டிருந்த பேருந்தின் ஜன்னலில் தங்கை காமாட்சியும் அவள் கணவனும்
ஜாலியாய் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சியை கண்டதும் பூரித்துப்
போனான்.

போலீஸ் அடிகளின் ரணம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

வலியால் விளைந்த காய்ச்சல் செடி தானாகவே கருகிப் போனது.

துவண்டு கிடந்தவன் துள்ளியெழுந்து 'ஹா…ஹா…ஹா” என்று வாய் விட்டுச் சந்தோஷமாய்ச் சிரிக்க,

'அடக் கெரகமே…தலையில் எக்கச்சக்கமாய் அடிக்கப் போய் மறை கழண்டுடுது போலிருக்கே” 402 அங்கலாயக்க,

'கிரீன் சிக்னல் விழுந்திடுச்சு…வண்டிய நகர்த்துங்க சார்” உற்சாகமாய்க் கூவினான் சிவனாண்டி.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சுவரொட்டி மனிதர்கள்

Post by ansar hayath on Sun 3 Feb 2013 - 1:55

:!+: :!+:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum