சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

சுட சுட செய்திகள்...ராகவா

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

Sticky சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Wed 6 Feb 2013 - 1:39

தினசரி செய்திகள் இந்த பகுதியில் இடமெறும்...

ஆய்வை முடித்தது மத்தியக் குழு: நாளை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிப்பு


புதுடில்லி: காவிரி டெல்டா பகுதிகளில் நீரின்றி வாடும் நெற்பயிர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக, இன்று அப்பகுதிக்கு வந்த மத்தியக்குழு தனது ஆய்வை முடித்தது. இதையடுத்து இந்த அறிக்கை நாளை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகிறது.

"காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு செய்தது. இந்த வழக்கின், முந்தைய விசாரணையின் போது, "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, ஜனவரி மாத இறுதிக்குள், அரசிதழில் வெளியிடப்படும்' என, மத்திய அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும், மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி, லோதா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மாதம், 20ம் தேதிக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும். காவிரியில், உடனடியாக, தமிழகத்துக்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். அங்கு, தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காப்பதற்கு, உடனடியாக, கர்நாடக அரசு, இந்த தண்ணீரை திறந்து விட வேண்டும். மத்திய நீர் வள ஆணையம், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு, தேவையான நீர் எவ்வளவு என்பதை, அந்த மாநிலங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதன்படி, இன்று காலை மத்திய வேளாண் அமைச்சகத்தின் துணை கமிஷனர் (பயிர்கள்) பிரதீப்குமார் ஷா தலைமையில், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர்கள் ஜேக்கப், மகேந்திரன், கண்காணிப்புப் பொறியாளர் தங்கமணி அடங்கிய மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் ஓடும் உய்யக்கொண்டான் பகுதியில் தங்களது ஆய்வைத் துவக்கியது.


தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் யூனியனில் கோவில்பத்து பகுதிகளில் கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து மத்திய குழுவினர்கள் குணமங்கலம், ராயந்தூர் ஆகிய இடங்களிலும், வயல்பரப்பில் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டனர். அப்போது ராயந்தூரில் தீபன் என்ற விவசாயி, தன் வயலுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். தொடர்ந்து மத்தியக்குழுவினர் தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு, சொக்கனாவூர் ஆகிய பகுதிகளில் பயிர்களை பார்வையிட்டனர். மத்தியக்குழுவினருடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சந்தீப் சக்சேனா, வேளாண்மைத்துறை கமிஷனர் சிவதாஸ்மீனா, கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய்த்துறை நிர்வாக கமிஷனருமான ஸ்ரீதர், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

மத்தியக்குழுவை சேர்ந்த மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நெற்பயிர்களை பார்வையிட்டோம். பயிர்கள் கருகியுள்ளது தெரியவருகிறது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டுள்ளோம். பயிரை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து பாய்ச்சுவதையும் பார்த்தோம். விவசாயிகள் கஷ்டப்படுவதை பார்வையிட்டோம். தண்ணீர் தேவை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை அறிக்கை தாக்கல் செய்வோம்.

தினமலர்


Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 7:44; edited 2 times in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Wed 6 Feb 2013 - 1:40

பொங்கலூர் அருகே விபத்து: 3 பேர் பலி

பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர். கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சும் , ஒரு காரும் மோதிக்கொண்டது. இதில் காரில் இருந்த 3 பேர் பலியாயினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by மீனு on Wed 6 Feb 2013 - 10:14

நல்ல விசயம் தொடருங்கள் சூப்பர்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Wed 6 Feb 2013 - 10:15

உத்தரவு கிடைத்தாச்சு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by *சம்ஸ் on Wed 6 Feb 2013 - 11:33

தொடரட்டும் செய்திகள் ....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by kalainilaa on Wed 6 Feb 2013 - 13:07

nanri
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 15:06

மது அருந்தும் வயது: மகாராஷ்டிரா அரசு உத்தரவிற்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை: மது அருந்தும் வயதினை அதிகரி்த்து உத்தரவிட்ட மகாராஷ்டிரா அரசுக்கு
எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில், அரசு உத்தரவிற்கு இடைக்கால
தடைவிதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.
மகாராஷ்டிரா மாநில அரசு, மது
அருந்துவோர் சட்டபூர்வ வயதினை 21-ல்இருந்து 25 ஆக அதிகரித்து கடந்த
2009-ம் ஆண்டு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் பாலிவுட்
நடிகர் இம்ரான்கான், மும்பை ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு பொதுநல வழக்கு
தொடர்ந்தார்.அதில் அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என
கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மோஹித்ஷா, மேத்தா ஆகியோர் முன்பு
விசா‌ரணைக்கு வந்தது. விசாரணை‌க்கு ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு ஆணைக்கு
தடைவிதிக்க முடியாது , இது தொடர்பாக ஏப்.15-ம் தேதிக்கு மகாராஷ்டிரா அரசு
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 15:07

ஓவாய்சி காவல் நீட்டிப்பு

ஐதராபாத் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்டுள்ள
ஆந்திர எம்எல்ஏ அக்பருதீன் ஒவாய்சிக்கு காவல், வரும் 12ம் ‌தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த
ஆந்திர எம்எல்ஏ அக்பரூதீன் ஒவாய்சி, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர்
தற்போது அடிலாபாத் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான
மற்றொரு வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஒவாய்சிக்கு,
வரும் 12ம் தேதி வரை காவலை நீட்டித்து ‌நீதிபதி உத்தரவிட்டார்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 15:10

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : பாக்.,கை வீழ்த்தியது இந்தியா


கட்டாக் : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6
விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் உலகக்கோப்‌பை கிரிக்கெட்
தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணி,
பாகிஸ்தான் பெண்கள் அணியை எதிர்‌கொண்டது. முதலில் பேட்டிங் செய்த
பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193
ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 46 ஓவரில் 4
விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து 195 ரன்களை எடுத்தது. இதன்மூலம், இந்திய
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by மீனு on Thu 7 Feb 2013 - 15:20

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் :!+:
பாக் அணிக்கு அனுதாபங்கள் :’|:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 15:21

மீனு wrote:இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
பாக் அணிக்கு அனுதாபங்கள்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 16:10

ரசிகர்களின் அன்பிற்கு எதுவும் ஈடாகாது : கமல்


சென்னை : ரசிகர்களின் பேரன்பிற்கு எதுவும் ஈடாகாது என்று நடிகர்
கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம், இன்று தமிழ்நாட்டில்
வெளியானது. திரைப்படம் குறித்து சென்னையில் கமல்ஹாசன் பத்திரி‌கையாளர்களை
சந்தி்ததார். அப்போது அவர் கூறியதாவது, படத்தை‌ வெற்றி பெறச் செய்த
ரசிகர்களுக்கு முதல் நன்றி. படம் எதிர்பார்க்காத அளவில் வெற்றி
பெற்றுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் ரசிகர்கள‌ே ஆவர். அவர்களின்
பேரன்பிற்கு முன் எதுவும் ஈடாகாது. ரசிகர்களும், தமிழக மக்களும் காட்டிய
அன்பில், நான் பாடம் கற்றேன். நான் கடனாளியாகி விடுவேன் என்பதை பொறுக்க
முடியாத எனது ரசிகர்கள், தங்களது வீட்டுச்சாவி, பத்திரங்களை எனக்கு
அனுப்பினர். இதன்மூலம் என் மீது அவர்கள் வைத்துள்ள பேரன்பு
வெளிப்பட்டுள்ளது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது, எனக்கு
பங்காளியாக செயல்பட்டு துயர் துடைக்க உதவிய ஊடகங்களுக்கும் தனது நன்றியை
தெரிவி்ததுக் கொள்வதாக அவர் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவை விரைவில்
சந்திப்பேன் என்றும், விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கி
விட்டதாக அவர் மேலும் கூறினார்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 16:12

பெண்ணை தாக்கி நகை கொள்ளை

ஆத்தூர்: ஆத்தூரில் சைக்கிளில் வந்த பெண்ணை தாக்கி ந‌கையை
கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், ஆத்தூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.
சேலம் மாவட்டம் ஆத்தூர், தேவியா குறிச்சியைச்சேர்ந்த நிஜாமுதீன், மனைவி
ரவுலத் (29). இவர் சைக்கிளில் அருகே உளள வங்கிக்கு பணம் கட்ட சென்றார்.
அப்போது பின்னால் பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ரவுலத்தை தாக்கிய
கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்றனர். தலைவாசல்
போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 16:14

மோடிக்கு ஆதரவு ஏன்? : விஹெச்பி விளக்கம்
அலகாபாத் : லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர்
நரேந்திர மோடியை பரிந்துரைப்பதற்கான விளக்கத்தை, விஷ்வ இந்து பரிஷத்
அளித்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது சமீபத்தில்
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடி, 4வது முறையாக
முதல்வர் ஆசனத்தில் அமர்ந்துள்ள நரேந்திர மோடி, தேர்தலின் போது,
முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், அம்மதத்தினர் யாருக்கும்
போட்டியிடுவ‌தற்கு வாய்ப்பு கொடுக்காமலேயே, மாபெரும் வெற்றியை
பெற்றுள்ளார். இதன்மூலம், அவர் மீது அனைத்து தரப்பு மக்களுக்கும்
நன்மதிப்பு உள்ளது புலனாகிறது. இந்த காரணத்தினாலேயே, மோடியை பிரதமர்
வேட்பாளர் பதவிக்கு பரிந்துரைப்பதாக விஹெச்பி தெரிவித்துள்ளது.
-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 16:18

பாலம் இடிந்து மூவர் பலி : 3 பேர் கைது


மும்பை : மும்பையில் பாலம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள்
பலியானதைத் தொடர்ந்து, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேரை, மும்பை
போலீசார் கைது செய்துள்ளனர்.மும்பை சர்வ‌தேச விமான நிலையம் அருகே புதிய
பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு, பாதி
நிலையில் கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒருபகுதி திடீரென்று இடிந்து
விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ
இடத்திலேயே பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். போலீசார் இதுகுறித்து
வழக்குபதிவு செய்து விசாரணையை துவக்கினர். பால கட்டுமான பணியை செய்து வரும்
கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 16:20

மோடி எனது நண்பர் : மோகன் பகவத்


அலகாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, எனது நண்பர் என்று
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அலகாபாத்தில்
பத்திரிகையாளர்களை, மோகன் பகவத் சந்தித்தார். பிரதமர் ‌வேட்பாளர் பதவிக்கு
மோடியை தாங்கள் பரிந்துரைப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,
மோடி எனது நண்பர். நான் அரசியல்வாதி அல்ல. நான் பிரதமர் பதவிக்கு மோடிய‌ை
பரிந்துரைப்பதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என்று கூறினார். பாரதிய
ஜனதா கட்சியில் உள்ள பல முன்னணி தலைவர்களும், மோடியை பிரதமர் வேட்பாளர்
பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவது
குறிப்பிடத்தக்கது.


-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 20:16

பேஸ்புக்கிலிருந்து வெளியேற மகளுக்கு கப்பம் கட்டிய தந்தை

சிட்னி : சமூகவலைத் தளமான பேஸ்புக்கிலிருந்து வெளியேற, தனது மகளுக்கு
200 டாலர்கள் அவரது தந்தை வழங்க உள்ளது, இளையதலைமுறையினரிடையே, சமூக
வலைத்தளங்களின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் இணையத‌ளத்தில்
வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போஸ்டன் எனர்ஜி
நிறுவன உயர் அதிகாரியாக இருப்பவர் பால் பையர், இவரது விடலை வயது மகள் ரசேல்
பையர், எந்நேரத்திலும், எப்போதும் பேஸ்புக்கிலேயே மூழ்கியிருப்பார். அவள்
பேஸ்புக்கிலிருந்து வெளியேற, 200 டாலர்கள் வர தயாராக இருப்பதாக தந்தை
கூறியதையடுத்து, சட்டப்பூர்வ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன்படி, வரும்
ஏப்ரல் மாதத்தில் முதற்கட்டமாக 50 டாலர்களும், ஜூன் மாதத்தில், மீதமுள்ள
150 டாலர்களும் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 20:17

உலகின் மிகப்‌பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு


லண்டன் : 17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்‌பெரிய முதன்மை
எண்ணை அமெரிக்காவின சென்ட்ரல் மிசோரி பல்கலைக்கழக அறிவியலாளர்
கண்டுபிடித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பெரிய முதன்மை எண், 4
மில்லியன் இலக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


-தினமலர்avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 20:46

குழந்தையை ஈன்ற 9வயது குழந்தை!! – தந்தைக்கு பொலிஸார் வலைவீச்சு!மெக்சிகோவின், ஜாலிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகியுள்ளார்.குறித்த சிறுமி தனது 8- ஆவது வயதில்
கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம், இந்த சிறுமிக்கு ஆரோக்கியமான
பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு தந்தை, 17 வயது சிறுவன் என, குறித்த சிறுமியின் தாய்
கூறியுள்ளார். எனினும் பிறந்த குழந்தைக்கு, தந்தை யார் என இன்னும் உறுதியாக
தெரியவில்லை.

உண்மையில் என்ன நடந்தது என்பதை, குழந்தை பெற்ற சிறுமிக்கு, சொல்ல தெரியவில்லை.

பாலியல் பலாத்காரம் மூலம், இந்த குழந்தை பிறந்ததாக சந்தேகிக்கும் பொலிசார், தலைமறைவான சிறுவனை தேடி வருகின்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 20:48

பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியுடன் கொழும்புக்கு புறப்பட்ட கணவரை மடக்கிப் பிடித்தார் மனைவி
தனது பக்கத்து வீட்டில் குடியிருப்பவரின் மனைவியுடன் கொழும்புக்குச்
செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது மனைவி கையும்
களவுகமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம்
செவ்வாய்க்கிழமை மாலை 6. 30 மணியளவில் பண்ணையிலிருந்து கொழும்பு
புறப்பட்டுச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ;

இளம் கணவனும் மனைவியும் போல ஆணொருவரும்
பெண்ணொருவரும் கொழும்பு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளளனர். நடத்துனரிடம்
பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் அருகருகில் உள்ள
இருக்கைகளில் அமந்திருந்துள்ளனர்.

சற்று நேரத்தில் சத்தமிட்டுக் கொண்டு
பஸ்ஸின் உள்ளே தனது பெண் பிள்ளையுடன் வந்த இளம் பெண்ணொருவர் உரத்துக்
கூச்சலிட்டுள்ளார். இதன்போது தான் தன்னுடைய மனைவியல்லாத ஒரு பெண்ணுடன் அவர்
கொழும்பிற்குச் செல்ல முயற்ச்சித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பஸ்ஸின் உள்ளே இருந்த
பெண்ணுடன் சண்டையிட்ட அந்தப் பெண், தன்னுடைய கணவரை ஏன், எங்கே அழைத்துச்
செல்கிறாய் என்று தகாதவார்த்தைகளால் ஏசியுள்ளார்.

இதன்பின்னர் தான் இருவரும் ஏற்கனவே
திருமணம் செய்தவர்கள் என்பதும் பக்கத்து வீட்டில் குடியிருக்கின்றனர்
என்பதும் தெரியவந்தது. இதன் பின்னர் சண்டை முற்றியதைத் தொடர்ந்து குறித்த
குடும்பத்தவர் தனது சொந்த மனைவியுடனும் பிள்ளையுடனும் வீட்டிற்கு
திரும்பிச் சென்றார். அவருடன் வந்த பெண்ணும் பஸ்ஸில் இருந்து ‘இறங்கிச்
சென்றுள்ளார்.
நன்றி:நடப்பு.காம்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 20:50

பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ் .. ரஷ்யாவில் களேபரம்!மாஸ்கோ: ரஷ்யாவில்
விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில்
சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம்
வெளியான காரணத்தால்.


அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான
ஏரோபிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.

இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது
பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக
வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது
காட்டுத் தீ போல பரவி விட்டது.

பலர் இதை எடுத்து ட்விட்டரில் போட அவ்வளவுதான், எங்கு பார்த்தாலும் இந்தப் படம்தான்.

இதனால் ரஷ்யாவில் பெரும் சர்ச்சையாகி
விட்டது. பயணிகளை தாத்யானா அவமதித்து விட்டார் என்று எதிர்ப்புகள்
கிளம்பின. இதையடுத்து தாத்யானவை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்து
உத்தரவிட்டது. அதேசமயம், அந்த விரலைக் காட்டும் பெண் நான் அல்ல என்று
மறுத்துள்ளார் தாத்யானா.

இருப்பினும்
இதுதொடர்பான விசாரணையின்போது, அது தான்தான் என்றும், அதேசமயம்
வேடிக்கையாகத்தான் இப்படிச் செய்ததாகவும் கூறியுள்ளாராம் தாத்யானா..

நல்லவேளையாக, பயணிகளின் பின்புறமாக இருந்தபடி நடுவிரலைக்காட்டினார்
தாத்யானா. பயணிகளுக்கு முன்பா காட்டியிருந்தால் என்ன நட்திருக்குமோ…

வேடிக்கைக்காக இப்படியாம்மா செய்வது…??

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Fri 8 Feb 2013 - 7:36

திருஆவினன்குடி கோயிலுக்கு வைகாசியில் கும்பாபிஷேகம்
பழநி:முருகனின் மூன்றாம் படை வீடாகிய பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு,
வரும் வைகாசியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கோயிலில்
கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ.94 லட்சம் மதிப்பீட்டில், ராஜகோபுரம் உள்ளிட்ட 5
கோபுரங்கள், மடப்பள்ளி, தரைத்தம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடந்து
வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் வைகாசியில் நடைபெற உள்ளது.
"ஊர்கோயில்' என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில்
கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ. 2 கோடியில் திருப்பணிகள் செய்ய திட்ட மதிப்பீடு
தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணை ஆணையர் பாஸ்கரன் கூறினார்.
-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Fri 8 Feb 2013 - 7:41

மருத்துவமனை மூடல்; நோயாளிகள் ஏமாற்றம்
சென்னை: முறையான அறிவிப்பின்றி, பல்நோக்கு மருத்துவமனை மூடப்பட்டதால்,
சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை, அரசினர்
தோட்டத்தில், கடந்த மாதம் 30ம் தேதி, பல்நோக்கு மருத்துவமனையின்
புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செயல்பட
துவங்கிய இம்மருத்துவமனை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால
உத்தரவையடுத்து, நேற்று மூடப்பட்டது. மருத்துவமனை மூடப்பட்டதற்கான காரணம்
அறிவிக்கப்படாததால், அரசு அறிவிக்காததால், நேற்று, பல்நோக்கு
மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வந்த, 15க்கும் மேற்பட்ட நோயாளிகள்
ஏமாற்றம் அடைந்தனர்.


-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Fri 8 Feb 2013 - 7:43

ஜாம்பியாவில் சாலை விபத்து ; 53 பேர் பலி
லுசாகா : ஆப்ரிக்க நாடான, ஜாம்பியாவில், பஸ்சும், லாரியும் நேருக்கு
நேர் மோதியதில், 53 பேர் பலியாயினர். ஜாம்பிய தலைநகர் லுசாகாவிலிருந்து,
100 கி.மீ., தூரத்தில், தபால் துறையின் பேருந்தும், லாரியும், நேற்று,
ஒன்றோடு ஒன்று வேகமாக மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில், 53 பேர்
பலியாயினர். பஸ்சில், 70 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள்
நடக்கின்றன.


-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Fri 8 Feb 2013 - 7:45

புதிய தலைமை செயலகம் ஏன் ? கருணாநிதி விளக்கம்
திருச்சி: திருச்சியில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில்
கருணாநிதி பேசியதாவது: சென்னையில் புதிய தலைமை செயலகம் எம்.எல்.ஏ.,க்களின்
வசதிக்காக கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட 800 கோடி
செலவானது. இதனை பயன்படுத்த தமிழக அரசு மறுக்கிறது. இலங்கை தமிழர்களின்
உணர்வுகளை உலகிற்கு கொண்டு செல்லும் பணியை தி.மு.க.,செய்தது இவ்வாறு
பேசினார்.


-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum