சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

சுட சுட செய்திகள்...ராகவா

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

Sticky சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Wed 6 Feb 2013 - 1:39

First topic message reminder :

தினசரி செய்திகள் இந்த பகுதியில் இடமெறும்...

ஆய்வை முடித்தது மத்தியக் குழு: நாளை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிப்பு


புதுடில்லி: காவிரி டெல்டா பகுதிகளில் நீரின்றி வாடும் நெற்பயிர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக, இன்று அப்பகுதிக்கு வந்த மத்தியக்குழு தனது ஆய்வை முடித்தது. இதையடுத்து இந்த அறிக்கை நாளை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகிறது.

"காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு செய்தது. இந்த வழக்கின், முந்தைய விசாரணையின் போது, "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, ஜனவரி மாத இறுதிக்குள், அரசிதழில் வெளியிடப்படும்' என, மத்திய அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும், மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி, லோதா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மாதம், 20ம் தேதிக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும். காவிரியில், உடனடியாக, தமிழகத்துக்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். அங்கு, தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காப்பதற்கு, உடனடியாக, கர்நாடக அரசு, இந்த தண்ணீரை திறந்து விட வேண்டும். மத்திய நீர் வள ஆணையம், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு, தேவையான நீர் எவ்வளவு என்பதை, அந்த மாநிலங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதன்படி, இன்று காலை மத்திய வேளாண் அமைச்சகத்தின் துணை கமிஷனர் (பயிர்கள்) பிரதீப்குமார் ஷா தலைமையில், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர்கள் ஜேக்கப், மகேந்திரன், கண்காணிப்புப் பொறியாளர் தங்கமணி அடங்கிய மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் ஓடும் உய்யக்கொண்டான் பகுதியில் தங்களது ஆய்வைத் துவக்கியது.


தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் யூனியனில் கோவில்பத்து பகுதிகளில் கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து மத்திய குழுவினர்கள் குணமங்கலம், ராயந்தூர் ஆகிய இடங்களிலும், வயல்பரப்பில் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டனர். அப்போது ராயந்தூரில் தீபன் என்ற விவசாயி, தன் வயலுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். தொடர்ந்து மத்தியக்குழுவினர் தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு, சொக்கனாவூர் ஆகிய பகுதிகளில் பயிர்களை பார்வையிட்டனர். மத்தியக்குழுவினருடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சந்தீப் சக்சேனா, வேளாண்மைத்துறை கமிஷனர் சிவதாஸ்மீனா, கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய்த்துறை நிர்வாக கமிஷனருமான ஸ்ரீதர், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

மத்தியக்குழுவை சேர்ந்த மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நெற்பயிர்களை பார்வையிட்டோம். பயிர்கள் கருகியுள்ளது தெரியவருகிறது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டுள்ளோம். பயிரை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து பாய்ச்சுவதையும் பார்த்தோம். விவசாயிகள் கஷ்டப்படுவதை பார்வையிட்டோம். தண்ணீர் தேவை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை அறிக்கை தாக்கல் செய்வோம்.

தினமலர்


Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 7:44; edited 2 times in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Sun 15 Sep 2013 - 10:46

சாலையில் கொட்டப்பட்ட 4,000 லிட்டர் அமிலம் - வாகன ஓட்டிகள் அவதி: சுற்றுச்சூழல் பாதிப்பு


திருநெல்வேலி: நெல்லையில், பறிமுதல் செய்யப்பட்ட அமிலத்தை, போலீசார் நான்கு வழி சாலையில் கொட்டியதால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, திருப்பணிக்கரிசல்குளத்தைச் சேர்ந்த ஒருவர், குடும்பத் தகராறில், ஜூலை 17ம் தேதி, தாய், மகள் மீது, அமிலம் வீசினார். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தையொட்டி, பெண்கள் மீது, அமிலம் வீசுவதை தடுக்கும் வகையில், நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில், அமிலம் விற்பனை செய்யும் ரசாயன நிறுவனங்களில், போலீசார் சோதனை நடத்தி, 12 கடைகளுக்கு, "சீல்' வைத்தனர்.
இந்நிலையில், அனுமதியின்றி விற்பனை செய்த, அமில கேன்களை பறிமுதல் செய்து அழிக்குமாறு, நெல்லை கோர்ட் உத்தரவிட்டது. இரண்டு மாதங்களுக்கு பின், நேற்று, நெல்லை போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட, 4,000 லிட்டர் அமிலத்தை, வேன்களில் எடுத்துச் சென்றனர். நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில், ரெட்டியார்பட்டி அருகே, சாலையோரமாக கொட்டினர். இதனால், நான்கு வழி சாலையில், வாகனங்களை ஓட்டிச் சென்றோர் பாதிப்பிற்குள்ளாயினர். மேலும், அப்பகுதியில், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Sat 8 Feb 2014 - 5:33

இதுதான் திருச்சி திமுக மாநாட்டின் லட்சியமா?

பொன்னான நேரத்தையும்,கைகாசையும் செலவழித்து வரும் பல ஆயிரம் தொண்டர்களுக்கு மாநாட்டில் பேசும் தலைவர்கள் கட்சியின் எதிர்கால திட்டங்கள்,கொள்கைகள், லட்சியங்கள் பற்றியெல்லாம் விளக்க வேண்டும் என்பது மாநாட்டின் விதி. ஆனால் இப்போது நடக்கும் மாநாடுகள் எல்லாம் டாஸ்மாக்கின் விற்பனையை சம்பந்தபட்ட இடங்களில் உயர்த்துவது என்பதோடு நின்றுவிடுகிறது. அதற்கு உதாரணம்தான் உளுந்துார் பேட்டையில் நடைபெற்ற தேமுதிக மாநாடு.
பரபரப்பான லோக்சபா தேர்தலை சந்திக்க நேரத்தில் திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் தொண்டர்களுக்கு தலைவர் கருணாநிதி விடுத்துள்ள செய்தி கவலை தருகிறது.
காரணம் திருச்சியில் நடக்கும், தி.மு.க., 10வது மாநாட்டின் செலவு போக, மீதித் தொகையை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்' என கூறியுள்ளார்.மேலும் அந்த கூற்றுக்கு ஏதுவாக புள்ளி விவரங்களும் தந்துள்ளார்.
கடந்த, 1951ம் ஆண்டு, முதல் மாநில மாநாடு சென்னையில் நடந்த போது, மிச்சப்பட்ட தொகை, 1.10 லட்சம் ரூபாய்.கடந்த, 1996ம் ஆண்டு, இதே திருச்சியில், தி.மு.க., எட்டாவது மாநில மாநாடு, நேரு வரவேற்பு குழு தலைவராக இருந்து நடந்த போது, மாநாடு நிதி வசூல் மொத்த தொகை, 1.32 கோடி ரூபாய்.தொடர்ந்து, 2014ல் நேரு மூன்றாவது முறையாக வரவேற்பு குழு தலைவராக இருந்து நடத்துகின்ற 10வது மாநாட்டில், மிச்சத் தொகை எவ்வளவு தரப்போகிறார் என்பதை, எல்லாரையும் போலவே, அறிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.என்று கருணாநிதி கூறியுள்ளார்.
காசு,பணம்,துட்டு,மணி,மணி.,இதைத்தவிர வேறு எந்த எண்ணமும் தலைவரிடம் இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Sat 8 Feb 2014 - 5:35

'தாவணி தினம்' கொண்டாடுங்கள்: கோ-ஆப்டெக்ஸ் அழைப்பு

சென்னை:உலக மகளிர் தினத்தையொட்டி, 'தாவணி தினம்' கொண்டாடும்படி, கல்லூரி மாணவியருக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், வேண்டுகோள் விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி ?ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, அரசு அலுவலகங்களில், 'வேட்டி தினம்' கொண்டாடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, உலக மகளிர் தினமான, மார்ச், 8ம் தேதி, 'தாவணி தினம்' கொண்டாட, கோ-ஆப்டெக்ஸ், முடிவு செய்துள்ளது.

இது குறித்து, சகாயம் கூறியதாவது:வேட்டி தினத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து, உலக மகளிர் தினம் வரை, ஏதேனும் ஒரு நாளை, தேர்வு செய்து, 'தாவணி தினம்' கொண்டாடும்படி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவியருக்கு, கோரிக்கை விடுத்துள்ளோம்.அன்றைய தினம், தாவணி அணிந்து வரும்படி கேட்டுள்ளோம். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு உள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Sat 8 Feb 2014 - 5:35

'பணாலாகிப்'போன மரக்கன்று வளர்ப்பு திட்டம்: முதல்வர் பிறந்தநாளுக்கு இந்தாண்டும் ஏற்பாடு

உத்தமபாளையம்:கடந்த ஆண்டில், முதல்வர் ஜெ., பிறந்த நாளுக்கு திட்டமிடப்பட்ட 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பராமரிப்பின்றி, நிதி மட்டும் 'ஸ்வாகா' செய்யப்பட்டதால், 'பணாலாகிப்' போன நிலையில், இந்தாண்டும் 66 லட்சம் கன்றுகள் நடுவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.

முதல்வர் ஜெ., 66வது பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், இந்த பிறந்தநாளில், குறிப்பிடும் படியான திட்டங்களை அறிவித்து, மக்களிடையை கொண்டு சேர்க்க ஏற்பாடுகள் நடக்கிறது. கடந்தாண்டு முதல்வரின் 65வது பிறந்தநாளையொட்டி, சமூகநலத் திட்டமாக, தமிழகமெங்கும் 65 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுற்றுச்சூழல் துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 602 வனச்சரகங்களிலும், தலா 7000 மரக்கன்றுகள் வீதம் நாற்றங்கால் அமைத்து தயார் செய்யவும், வனத்துறை நாற்று பண்ணைகளிலேயே 23 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கவும் உத்தரவிடப்பட்டது. இக்கன்றுகளை நடுவதற்கான இடங்களாக, அரசு அலுவலக வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், வனத்துறைக்கு சொந்தமான மலையடிவார வனப் பகுதிகள், ரோட்டோர இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. தவிர, உள்ளாட்சிகள், தன்னார்வ நிறுவனங்களின் மூலம் பிற பகுதிகளில் நடவும், கேட்கும் அனைவருக்கும் கன்றுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஒவ்வொரு கன்றுகளை உற்பத்தி செய்ய ரூ. 15 ம், அதனை தண்ணீர் ஊற்றி பராமரிக்க கன்றுக்கு ரூ. 25 செலவிடவும் சுற்றுச் சூழல் துறை வாயிலாக நிதி ஒதுக்கப்பட்டது.

நிதி மட்டும் 'ஸ்வாகா' செய்யப்பட்டு 'பணாலான' திட்டம்:

இம்மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் விஷயத்தில் அரசு சார்பில் அதிக ஆர்வமும், முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டதால், அரசு துறைகளின் சார்பிலும், பலதரப்பிலும் கன்றுகள் வாங்கி நடப்பட்டன. நடப்பட்ட கன்றுகளை முறையாக பராமரிக்காததால், 60 சதவவீதம் கன்றுகள் வீணாகிப் போயின.மரம் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட சில தன்னார்வ நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நடப்பட்ட கன்றுகளைத் தவிர வனத்துறையாலும், நெடுஞ்சாலைத்துறையாலும் நடப்பட்ட கன்றுகளில் பெரும்பாலானவை கருகிப் போயின. சுற்றுச் சூழல்துறை வாயிலாக பராமரிப்பிற்கு ஒரு கன்றுக்கு 25 ரூபாய் வீதம் அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை.வனத்துறை ரேஞ்சர் அலுவலகங்கள் பலவற்றில் நாற்றங்கால் போடப்பட்டு வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள், போதுமான போர், தண்ணீர் வசதியின்றியும், மின்தடை பிரச்னையாலும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நாற்றங்காலிலேயே கருகிப்போயின. பராமரிப்பு செலவினத் தொகை, வனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டுள்ளது.இந்த துறைகளில் இந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் 'ஸ்வாகா' செய்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி, மே மாதங்களில் மட்டும் பிறந்தநாள் ஜோரில், மொத்த இலக்கான 65 லட்சத்தில் 38 லட்சம் கன்றுகள் மட்டுமே நடப்பட்டதாகவும், பிப்ரவரிக்கு பின் இத்திட்டம் கண்டுகொள்ளப்படாமல், அப்படியே கிடப்பிலும் போடப்பட்டது.

பராமரிப்பதற்கென தனிக்குழுவை அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும். நேரடியாக வனத்துறையிடம் வழங்கியதற்கு பதில், அதில் மண்வளப் பாதுகாப்பு பிரிவையும், தன்னார்வ நிறுவனங்களையும், அந்தந்த பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளின் குழுவையும், வனக் குழுவையும் இணைத்து பராமரிப்பு குழு அமைத்திருக்க வேண்டும்.இந்த குழுவிடம் பராமரிப்பு நிதியை வழங்கி மேற்பாவையிட வைத்திருக்க வேண்டும். இக்காரணங்களினால், கடந்த ஆண்டே இத்திட்டம் 'பணாலாகி'ப் போன நிலையில், அரசு இந்த ஆண்டும் 66 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by rammalar on Sun 9 Feb 2014 - 1:30

தன்னார்வ அமைப்புகளை உற்சாகப்படுத்தினால்
இம்மாதிரியான சேவைகள் நிறைவான
பலனைத் தரும்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Fri 28 Feb 2014 - 13:58

அறிவோம் அறிவியல் ஆற்றலை: இன்று தேசிய அறிவியல் தினம்

அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

எல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி, என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான். வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல் தான்.

இரண்டும் கலந்ததே:

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் "அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான், இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள். நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப்பயிற்சியையும் இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Fri 28 Feb 2014 - 14:02

முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி? : கடந்தாண்டு சாதனை மாணவி ராஜேஸ்வரியின் "டிப்ஸ்'

ன்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி: பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி. ஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம். எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும். இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம்.
ஒவ்வொரு பாடத்திலும் கடின பகுதி என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை, அதிகாலை எழுந்தவுடன் படித்தால், வினாத்தாளில் கடின பகுதி வந்து விடுமோ என்ற கவலை, பயம் இருக்காது. குறைந்தது ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட, வினாவங்கியில் இடம் பெற்ற, கேள்விக்கான விடையை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பழைய வினாத்தாள்களில் இருந்தே, அதிக ஒரு மார்க் கேள்விகள் இடம்பெறுகின்றன. வினாத்தாள் 'புளு பிரிண்ட்' அமைப்பை, ஒவ்வொரு மாணவரும் தெரிந்து வைத்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராவதில், திட்டமிட முடியும். புளு மை பேனாவால் எழுதும் மாணவர்கள், முக்கிய பகுதியை கருப்பு மை பேனாவால் எழுதினால், நல்லது. புளு, கருப்பு மை பேனாக்கள் தவிர வேறு கலரை தவிர்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். ஒருசிலரது கையெழுத்து சுமாராக இருக்கும். அவர்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். ஒரு பக்கத்தில், 20 வரிகள் எழுதினால் போதும். அப்போதுதான் திருத்துவோருக்கு நல்லெண்ணம் ஏற்படும்.
முதலில், நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவது நல்லது. ஒருசிலர் நெடு வினாவில் இருந்து எழுத துவங்குவார்கள். ஒருசிலர் ஒரு மார்க் பகுதியில் இருந்து எழுதுவார்கள். இதுவரை நீங்கள் பின்பற்றிய அந்த அந்த முறைப்படியே, இத்தேர்விலும் தொடருவது நல்லது. படிக்கும் போது தூக்கம் வந்தால், முகத்தை கழுவி அதை விரட்டியடிக்கக் கூடாது. நன்றாக தூங்கிவிட்டு, பின் படிக்க துவங்குங்கள். தேர்வு நேரத்தில், இரவு பல மணிநேரம் கண் விழித்து படித்தால், தேர்வு அறையில் உடல் சோர்வடைந்து விடும். தேர்வு நேரத்தில் முழு வயிற்றுக்கு சாப்பிடுவதையும், துரித உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பதன் மூலம், தேவையில்லாத உபாதை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். கொடுக்கப்பட்டுள்ள மூன்று மணி நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும். பத்து நிமிடங்களுக்கு முன்பே தேர்வு எழுதி முடித்துவிட்டு, ஒரு முறை எழுதியதை திருப்பி பார்ப்பது முக்கியம்.கடந்தாண்டுகளின் வினா வங்கியில் இருந்து, அவ்வப்போது ஒரு வினாத்தாளை எடுத்து, தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதை அடிக்கடி செய்தால், தேர்வு சிரமமாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 27 Mar 2014 - 7:12

கோலாம்பூர்,

மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம் கடந்த 8–ந் தேதி அதிகாலை மாயமானது. இந்த விமானத்தை பல்வேறு நாடுகளின் கப்பல்களும், விமானங்களும் தேடி வரும் நிலையில், விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கியதாக, கடந்த திங்கட்கிழமை மலேசியா அறிவித்தது.

இந்த நிலையில் விமானம் விழுந்து மூழ்கியதாக கருதப்படும் பகுதியில், சுமார் 1 மீட்டரில் இருந்து 23 மீட்டர் நீளம் வரையிலான 122 பொருட்கள் மிதப்பதை பிரெஞ்சு செயற்கை கோள் நேற்று முன்தினம் படம் பிடித்துள்ளது. அவற்றில் சில பளபளப்பாக காணப்படுகின்றன.

இதை உறுதிசெய்த மலேசிய மந்திரி ஹிசாமுதின் உசேன், செயற்கை கோள் படங்கள் அனைத்தும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக கூறினார். எனினும் இந்த பொருட்கள் மாயமான விமானத்தின் உடைந்த பொருட்களா? என தெளிவாக கூற முடியாது என்று கூறிய அவர், இவை மீட்பு குழுவினருக்கு உதவியாக இருக்கும் என்றார்.

இதற்கிடையே விமான மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய, நியூசிலாந்து விமானங்கள், கடலில் மேலும் சில பொருட்கள் மிதப்பதை கண்டுபிடித்துள்ளன. விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் இடத்தில் தெளிவற்ற வானியிலையை தாண்டியும் கண்டுபிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Thu 27 Mar 2014 - 7:13

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடங்கியது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் விமானம் தலைமை விமானி தான் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கியது என செய்தி வெளியிட்டு வருகின்றன. அவர் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவருகின்றன

அதன் விவரம் வருமாறு:-

* விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.மாயமான விமானம் எம் எச் 370 கடத்தலுக்கு மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

* விமானத்தின் பாதை கம்ப்யூட்டர் மூலம் மாற்றி அமைக்கபட்டு உள்ளது. மாயமான விமானம் கோலாலம்பூர் முதல் பீஜிங் வரை செல்லவேண்டும் என விமான பாதை விமான கம்யூட்டரில் பதிவு செய்து வைக்கபட்டு இருக்கும். ஆனால் திட்டமிட்டு விமானபாதை கம்யூட்டரில் பாதையை மாற்றி அமைத்து உள்லனர் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

* விமானத்தில் இருந்து கடைசியாக துணை விமானியே கட்டுப்பாட்டு அறைக்கு பேசியதாக ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமானத்தை ஓட்டி சென்ற விமானி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அதுவே விமானம் மாயமானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தித்தாள் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரணையை திசை திருப்புகிறது. மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான தகவல்கலையே வெளியிட்டு உள்ளனர்.விமானம் குறித்து விசாரணை நடத்தியவர்களிம் எந்த தகவலையும் அவர்கள் சரிபார்க்கவில்லை

தற்போது இயந்திர கோளாறு காரணமாக விமானம் வெடித்திருக்கலாம் அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற கோணத்தில் திருப்புகிறது. என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

* தலைமை விமானி ஜாகாரி அகமது ஷா சரியான மன நிலையில் இல்லை எனறு கூறப்படுகிறது. அவர் தீவிர குடும்ப பிரச்சினைகளை சந்தித்து வந்தார் என அவரது நீண்ட நாள் நண்பர் கூறியதாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன அவற்றில் மேலும் கூறி இருப்பதாவது:-

அவரது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழந்தார் என்றும், மேலும் அவருக்கு மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்த்து அதனால் அந்த உறவிலும் சிக்கல் இருந்தது. தனது நிலை குறித்து அறியாத மன நிலையில் தலைமை விமானி இருந்து உள்ளார்.

அவரது மனைவி பிரிவு மேலும் அவரது காதலில் சிக்கல் இதனால் மிக மன உளைசலில் இருந்துள்ளா விமானி. என செய்தி வெளியிட்டு உள்ளன.

* இங்கிலாந்து பத்திரிகைகள் ஏற்கனவே அரசியல் காரணங்களுக்காக தலைமை பைலட் ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய கூறுகள் உள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தன .தலைமை பைலட் அரசியலில் ஆர்வமாக இருந்தார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும் தெரிவித்து இருந்தன.

* ஷா விமானத்தை 45,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்று அந்த உயரத்திலேயே 23 நிமிடம் விமானத்தை வைத்து அதன் பிறகே கீழ் நோக்கி வந்துள்ளார். அந்த உயரத்தில் 12 நிமிடங்களிலேயே ஆக்சிஜன் தீர்ந்திருக்கும். இதனால் விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பே பயணிகள் ஆக்சிஜன் இன்றி சுயநினைவை இழந்திருப்பார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

* விமானத்தின் எரிபொருளை தீரவைத்து விமானததை கீழ் நோக்கி விழவைத்து இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

* கடந்த 8-ம் தேதி விமானத்தை இயக்கும் முன்பு கேப்டன் ஷா ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகே அவர் விமானத்தை இயக்கி வேறு பாதையில் சென்றுள்ளார். அதனால் இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by rammalar on Thu 27 Mar 2014 - 8:44

விமானம் இந்திய பெருங்கடலில்
விழுந்திருக்கும் என்ற முடிவை
எட்டி விட்டார்கள்..
-
கறுப்பு பெட்டி தேடும் பணி மட்டும்
நீடிக்கிறது..!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:41

தினசரி 1.5 கிலோ மண் சாப்பிடும் மூதாட்டி


ஷாஜகான்பூர்: கடந்த, 40 ஆண்டுகளாக, தினசரி உணவாக, ஒன்றரை கிலோ மண்ணை சாப்பிடும் மூதாட்டி, ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து, மக்கள் வியப்படைந்து உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் உள்ள, நிகோஹி பகுதியில், வசிப்பவர் சுதாமா தேவி, 93.இவர், தன், 13வது வயதில் ஹேம்ராஜ் என்பவரை திருமணம் செய்து, 10 குழந்தைகளைப் பெற்றார். பிரசவத்தின் போது, ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன.

கர்ப்பத்தின்போது பழக்கம்
இவர் ஒவ்வொரு முறை கர்ப்பமடைந்தபோதும், மண் சாப்பிடுவதில் ஆர்வமாக இருந்தார். நாளடைவில், இந்தப் பழக்கம் தொடர் கதையானது.10 குழந்தைகள் பெற்ற பின்னும், மண்ணைத் தின்பதில், ஆர்வம் காட்டிய இவர், கங்கைக் கரைக்கு சென்று, மணல்களை அள்ளி வருவார்.துவக்கத்தில், தினமும் அரை கிலோ மண் சாப்பிடும் பழக்கம், பின்னர் ஒன்றரை கிலோவானது.ஓர் ஆண்டுக்கு முன், கணவர் இறந்து விட்டதால், கூலி வேலை செய்யும், தன் இளைய மகனுடன் சுதாமா தேவி வசித்து வருகிறார்.மணல் சாப்பிடுவதுடன், அவரின் சாப்பாட்டு ஆசை முடிந்து விடுவதில்லை என்றும், நான்கு பெரிய சைஸ் சப்பாத்திகளையும், 'உள்ளே தள்ளு'வதாக, அவரது மகன் கூறியுள்ளார்.

டாக்டரிடம் சென்றதில்லை
இதுகுறித்து, சுதாமா தேவி கூறியதாவது:மணல் சாப்பிடுவதால், எந்தவித நோயும் ஏற்பட்டதில்லை. இதுவரை டாக்டரிடம் சென்றதில்லை. சாப்பிடுவதற்கு மண் கிடைக்காதபோது, மனம் வேறு உணவை நாடவில்லை. எந்த வேலையும் செய்யப் பிடிக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சுதாமா தேவியை பரிசோதித்த டாக்டர்கள், பழக்கம் காரணமாக இவ்வாறு சாப்பிடுவதாகவும், இதற்கு தனியாக எந்தவித அறிவியல் காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:43

பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது; பிரதமர் மகிழ்ச்சி


ஸ்ரீஹரிகோட்டா : பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகழ்வை பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்தார். விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய பின்னர் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை ஆரத்தழுவி பாராட்டினார்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.


விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு ; ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், கவர்னர், நரசிம்மன், முதல்வர்சந்திரபாபு நாயுடு, எனது அமைச்சரவை சகாக்கள் , இஸ்ரோ ராதாகிருஷ்ணன், ராவ், கஸ்தூரிரங்கன் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்களை விஞ்ஞானிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். நமது விண்வெளி திட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை . 5 சாட்டிலைட்டு சுமந்து செல்லும், இந்த நிகழ்வு இந்தியர்களின் இதயப்பூர்வமான விஷயம் ஆகும். இன்றைய வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை தரும் விஷயம் ஆகும். நான் நேரில் பார்த்து மகிழ்ந்தேன் , பெருமைபடுகிறேன். பி.எஸ்.எல்.வி., நமது பயணத்தில் இது மேலும் ஒரு மைல்கல்.அனைவருக்கும் பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது நம்பிக்கையின் துவக்கம். வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், கனடா. ஜெர்மனி, சிங்கப்பூரின் செயற்கை கோளை இந்தியா விண்ணில் செலுத்தியிருப்பது பெருமைபடக்கூடிய விஷயமாகும். இது உலக அளவில் இந்தியாவிற்கு விண்வெளி துறையில் கிடைத்த அங்கீகாரம்.


சார்க் சாட்டிலைட் உருவாக்குங்கள் :வாஜ்பாய் காலத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் கனவு எழுந்தது. நாம் தற்போது செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்தியா அறிவியல் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. வளமான தொழில்நுட்பம் பெற்றுள்ளது. விண்வெளி டெக்னாலஜி சாமானியமக்களுக்கு பயன்படும் விஷயம் ஆகும். நகர்ப்புறம், கிராமப்புறம் இணைப்பதற்கு விண்வெளி தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருக்கிறது. இளைஞர்கள், வேலைவாய்ப்பை பெற்றிட சாட்டிலைட் டெக்னாலஜி பெரிதும் உதவியாக உள்ளது. சார்க் சாட்டிலைட் வளர்ச்சி பெற விஞ்ஞானிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும். இது நமது அண்டைய நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமைகிறது. அனைவருக்கும் மீண்டும், நன்றியும், பெருமையும் தெரிவித்து கொள்கிறேன். பாராத் மாதாக்கி ஜெ., இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், 49 மணி நேர, கவுன்ட் - டவுன் நேற்று முன்தினம் காலை, 8:52 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மொத்த எடை, 230 டன். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், பிரதான செயற்கைக்கோளாக, பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோளும், ஜெர்மனி, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் சிறிய ரக செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட, 18 நிமிடங்களில், பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 659.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.ஜெர்மன் நாட்டின், ஐசாட் செயற்கைக்கோள், விண்ணில் ஏவப்பட்ட, 18:55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 660.6 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1செயற்கைக்கோள், 19.05 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.2 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.


மற்றொரு செயற்கைக்கோள், என்.எல்.எஸ்., 7.1, 19.55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ்- 1 செயற்கைக் கோள், 19.96 நிமிடங்களில், பூமியில் இருந்து, 662.3 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.கடந்த 2013ல், பி.எஸ்.எல்.வி., சி- 20ராக்கெட் மூலம், கனடா, 2; ஆஸ்திரியா, 2; டென்மார்க், 1 மற்றும் பிரிட்டன், 1 ஆகிய, ஆறு வெளிநாட்டு, செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.கடந்த 2008ல், அதிகபட்சமாக, பி.எஸ்.எல்.வி., சி - 9 ராக்கெட் மூலம், கனடா, ஜப்பான், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஆகிய நாடுகளின், எட்டு ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
மூன்று நிமிடம் தாமதம்:பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், 3 நிமிடம் தாமதமாக தன் பயணத்தை துவங்க உள்ளது.இது குறித்து, இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், விண் வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகளுடன், ராக்கெட் மோதுவதை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே திட்டமிட்டதை விட, 3 நிமிடங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்படும். அதை கருத்தில் கொண்டு, இன்று காலை, 9:49 மணிக்கு ஏவுவதற்கு, பதிலாக 9:52 மணிக்கு (3 நிமிடம் தாமதமாக) ஏவப்படுகிறது, என்றார்.


பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி., வித்தியாசம் : பி.எஸ்.எல்.வி., என்பது, போலார் சேட்டலைட் லாஞ்சிங் வெகிகிள் எனவும், ஜி.எஸ்.எல்.வி., என்பது, ஜியோசிங்க்ரோனஸ் சேட்டலைட் லாஞ்ச்வெகிகிள் எனவும் அழைக்கப்படுகிறது.
*இரண்டுக்கும் இடையே பல வித்தியாசங்களும், மாறுபாடுகளும் உள்ளன; அதே நேரத்தில் சில ஒற்றுமைகளும் உள்ளன.இரண்டுமே ராக்கெட்டுகள் தான். பி.எஸ்.எல்.வி., பழைய முறை; ஜி.எஸ்.எல்.வி., புதிய முறை.


*பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1 டன் (1,000 கிலோ) எடைக்கு குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லக் கூடியது. ஜி.எஸ்.எல்.வி., அதிகபட்சம், 2 - 2.5 டன் எடையை சுமந்து செல்லக் கூடியது.


*ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் அதிநவீன, கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் பயன் படுத்தப்படுகிறது. இதனால், அதிக அழுத்தத்துடன் கூடுதல் எடையை சுமந்து செல்ல முடியும்.


*பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுக்கு, நான்கு நிலைகள் உள்ளன; ஜி.எஸ்.எல்.வி.,க்கு மூன்று நிலைகள் உள்ளன.பி.எஸ்.எல்.வி.,யில், ஆறு சாலிட் பூஸ்டர்கள்; ஜி.எஸ்.எல்.வி.,யில், நான்கு லிக்யுட் பூஸ்டர்கள் உள்ளன.


*பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமானது. ஏவப்பட்ட, 18 முறைகளில், 16 முறைவெற்றி பெற்றுள்ளது; இரு முறை தோல்வி அடைந்துள்ளது.


*ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட் ஏவுதல்,7முறைநடைபெற்றதில், நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது; இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை, பாதி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


எந்தெந்த நாடுகளின் ராக்கெட்டுகள்:


*பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட்டுடன், ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.


*பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோள், 714 கிலோ எடை உடையது. இந்த செயற்கைக்கோள், பூமியை ஆய்வு செய்ய பயன்படும். இதற்காக இந்த செயற்கைக் கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.


*ஜெர்மனி நாட்டின், ஐசாட் 14 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு உதவும்.


*கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1 மற்றும் என்.எல்.எஸ்., 7.2 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும், தலா, 15 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், ஜி.பி.எஸ்., அமைப்புக்கு உதவும்.


*சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ் - 1 செயற்கைக்கோள், 7 கிலோ எடை கொண்டது. இது, சென்சார் கருவியுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது.


*பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம் ஏற்கனவே வெளிநாடுகளைச் சேர்ந்த, 35 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


*இஸ்ரோ, பல முறை பி.எஸ்.எல்.வி.,ராக்கெட்டுகளை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 16:47


85 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் போட்டிருந்தால் கட்டடம் விழுந்திருக்காது: மண் பரிசோதனை வல்லுனர்கள் கருத்துசென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்துக்கு, குறைந்த ஆழத்துக்கு அஸ்திவாரம் போட்டதே முக்கிய காரணம். இப்பகுதியில், 25 மீட்டர் ஆழம் வரை களிமண் இருப்பதால், 26 மீட்டர் ஆழத்துக்கு, 'பைல் பவுண்டேஷன்' (ஆழ்துளை அஸ்திவாரம் முறை) முறையில் அஸ்திவாரம் போட்டிருக்க வேண்டும் என, மண் பரிசோதனை வல்லுனர்கள் கூறினர்.

சென்னை, போரூர் அருகே, 11 மாடி கட்டடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. 'பலத்த மழையின் போது, இடி விழுந்ததே விபத்துக்கு காரணம்' என, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் கூறி வருகிறது.ஆனால், 'இடி விழுந்தால் கட்டடத்தின் மேல் பகுதி மட்டுமே சேதமடையும். கட்டடத்தின் அஸ்திவார நிலையில் ஏற்பட்ட குறைபாடே, ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழ முக்கிய காரணம்' என, பல்வேறு கட்டுமான வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அஸ்திவாரம்


அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, அஸ்திவாரமே அடிப்படையானது. இந்த அஸ்திவாரம், எதன் மீது நிறுத்தப்படுகிறது என்பது மிகவும் முக்கியம்.சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பொறுத்தவரை, மலை பாங்கான இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில், தரையில், 20 மீட்டர் ஆழத்துக்கு அப்பால் தான் பாறை இருக்கும். இத்தகைய இடங்களில், மேல் மட்ட மண்ணை நம்பி அடுக்குமாடி கட்டடங்கள் கட்டக்கூடாது.நீர் நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில், மேல் மட்ட மண் உறுதியற்ற சேறாகவே இருக்கும். இப்பகுதிகளில், பாறை உள்ள பகுதி வரையான ஆழத்துக்கு சென்று, அஸ்திவாரம் அமைக்காமல் புதிய கட்டடங்கள் கட்டக்கூடாது.குறிப்பாக, சென்னையில், போரூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றின் சுற்றுப்புற பகுதிகளில் அண்மைக்காலமாக அதிக அளவில், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.முறையாக, மண் பரிசோதனை செய்து, எந்த ஆழத்தில், பாறை இருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, அதன் மேல், அஸ்திவாரத்தின் அடித்தளம் நிறுத்தப்பட வேண்டும்.
தவிர்த்திருக்கலாம்

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத, மண் பரிசோதனை வல்லுனர் ஒருவர் கூறியதாவது:சென்னையில், பல இடங்களில், 20 மீட்டர் வரை களிமண் பரப்பு தான் இருக்கிறது. இதில், களிமண் உறுதியாக இருக்கிறது என்று கூறி அதன் மேல், அஸ்திவாரம் அமைக்கும் பணிக்கு சில, 'ஸ்டெச்சுரல்' பொறியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இது தவறான நடைமுறை. ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு அருகில் கட்டப்பட்டது என்பதெல்லாம், ஒரு பிரச்னையே இல்லை.தற்போது விபத்து ஏற்பட்ட மவுலிவாக்கத்தில், 25 மீட்டர் ஆழம் வரை களிமண் தான் உள்ளது. எனவே, 26 மீட்டர் ஆழத்தில்,' பைல் பவுண்டேஷன்' முறையில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அமைத்திருந்தால் இது போன்று கட்டடம் சரிந்திருக்காது.எனவே, அஸ்திவாரம் அமைக்கப்பட்ட விதம் குறித்து, முழுமையாக விசாரணை நடத்தினால், பல்வேறு உண்மைகள் அம்பலமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு பணியில் 1,600 பேர்:

சென்னையில், அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், 1,600 பேர் ஈடுபட்டு உள்ளனர்.
*தீயணைப்பு வடக்கு மண்டல, துணை இயக்குனர் விஜயசேகர் தலைமையில், 300 வீரர்கள்.
*சென்னை, வேலூர், திருச்சி, திருவண்ணா மலையில் இருந்து, 30 தீயணைப்பு வாகனங்கள், 'ஸ்கை லிப்டிங்' எனப்படும், ஐந்து பெரிய தீயணைப்பு வாகனம்.
*தேசிய பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி., செல்வன், கமாண்டன்ட் எம்.கே.வர்மா தலைமையில், ஒரு குழுவிற்கு, 40 பேர் என, மொத்தம், 400 வீரர்கள்.
*சட்டம் - ஒழுங்கு போலீசார், 600 பேர்
*சிறப்பு அதிரடிப்படை போலீசார், 50 பேர்
*கமாண்டோ பிரிவினர், 50 பேர்
*'எல் அண்டு டி' நிறுவன ஊழியர்கள், 100 பேர்
*ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், 100 பேர்
*இஸ்லாமிய தொண்டர்கள்.
*சத்திய சாய் குழுவினர்.

ஆறு பேரை மீட்ட இளைஞர்


சென்னையில் இடிந்து விழுந்த, 11 மாடி கட்டடம் உள்ளே தனியே சென்று, ஆறு பேரை மீட்ட, வியாசர்பாடி இளைஞரை அனைவரும் பாராட்டினர்.சென்னை, வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர், அருண், 20; தனியார் நிறுவன ஊழியர். முகலிவாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த போது, அதன் அருகே இருந்த, தனியார் நிறுவன ஓய்வறையில், அவர் தங்கியிருந்தார்.கட்டடம் இடிந்த போது, அலறல் சத்தம் கேட்டு, அருண் அங்கு சென்றார். கட்டட இடிபாடுகளுக்குள் செல்ல, போலீசார் மற்றும் பொதுமக்கள் தயங்கி நிற்க, அருண் மட்டும் தைரியமாக உள்ளே சென்று, ஆறுபேரை மீட்டு வந்தார்.அவர்களில் நான்கு பேர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இருவர், சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த அருணை, அனைவரும் பாராட்டினர்.

ஊசி போட பயந்த டாக்டர்கள்


கட்டடத்தின் முன்பகுதியில், ஆறு பேர்; இடது புறத்தில், ஒருவர் இருப்பது கண்டறிப்பட்டது. அவர்களை, மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்களுடன், தனியார் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்களும் ஈடுபட்டனர்.அப்போது, இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு, வலி தெரியாமல் இருப்பதற்கு,'பெயின் கில்லர் இன்ஜக் ஷன்' என்ற வலி நிவாரண ஊசி போட முடிவு செய்யப்பட்டது.ஆனால், பணியில் இருந்த, டாக்டர்கள் பதற்றத்துடன் காணப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஊசி போட பயந்தனர். பின், தீயணைப்பு வீரர்கள், டாக்டர்களிடம் இருந்து ஊசியை வாங்கி, இடிபாடுகளில் சிக்கி கொண்டவர்களுக்கு போட்டனர்.

உணவு வினியோகம்


சென்னையில், அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் சார்பில், உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டன.மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் உள்ளிட்ட, 1,600 பேர் ஈடுபட்டு உள்ளனர்.அவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., சத்யசாய், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், குடிநீர், பிஸ்கட், குளுக்கோஸ், உணவு பொட்டலம் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட்டன.

வீடு வாங்கிய 72பேர் நிலை என்ன?


மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடத்தில் இதுவரை 72 பேர் வீடு வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மொத்தம் ?? வீடுகள் கொண்ட இத்திட்டத்துக்கான நிலத்தை மூன்று வெவ்வேறு நபர்களிடமிருந்து பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவனம் 2011ல் வாங்கியது. அதன்பின், இதன் பெயரில் இந்தியன் வங்கியிடமிருந்து ஆறு கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 72 பேர் வீடுகள் வாங்கியுள்ளது பதிவுத்துறை வாயிலாக தெரியவந்துள்ளது.

ராட்சத கிரேன்:


நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, 'குரோவ்' என்ற, ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. விண்ணை தொடும் அளவிற்கு இருந்த, அந்த கிரேன் மூலம், இரும்பு கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டன. கட்டடத்தின் முன்புறத்தில், 25க்கும் மேற்பட்ட கிரேன்கள், பொக்லைன் வாகனங்கள் மூலம், மீட்பு பணி தொடர்ந்து நடந்தது.

முன்பே எச்சரித்தோம்:

கடந்த,ஆறு மாதத்திற்கு முன்,அந்த கட்டட பொறியாளரை சந்தித்து, 'இவ்வளவு கட்டடத்திற்கு, தூண்களின் அகலம் குறைவாக இருக்கிறதே தாங்குமா?' என. கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள். 'நாங்கள் பொறியாளர்கள்; எங்களுக்கு தெரியாதா' எனக்கூறி, எங்களை உதாசீனப்படுத்தினர்.
சின்னா,31 கொத்தனார்.

மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. தேவைப்பட்டால், மத்திய மீட்பு படை அனுப்பப்படும். கட்டடத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி, விபத்திற்கான காரணம் குறித்து, முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர்களுக்கு, தமிழக அரசு அறிவிக்கும் நிவாரணத்தை பார்த்த பின், தேவைப்பட்டால், மத்திய அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்துவேன்.
பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்

போரூர் அருகில், 11 தளம் கொண்ட, கட்டடம் இடிந்து, மண்ணில் புதையுண்ட, சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இதில், சிலர் இறந்துள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கட்டடம் விழுந்தது குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும்.இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள், நடக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்

தமிழகத்தில், இவ்வளவு பெரிய கோரமான கட்டட விபத்து, வரலாற்று சோகமிக்க சம்பவம் இது. தண்ணீர் தேங்கும் இடத்தில், கட்டடம் கட்ட, சி.எம்.டி.ஏ., எப்படி அனுமதி கொடுத்தது; இந்த கட்டடம் கட்ட, முறையான அனுமதி பெறப்பட்டதா; விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா; நிறுவனம் தரமான பொருட்களைக் கொண்டு, கட்டடத்தை கட்டியதா என, விசாரிக்க வேண்டும்.
வைகோ, ம.தி.மு.க., பொதுச் செயலர்

பிரச்னையில் இருந்து தப்பிக்க, கட்டுமான நிறுவனத்தை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் குறை கூறுகின்றனர். அந்நிறுவனமோ, 'இடி விழுந்ததால், கட்டடம் இடிந்தது' எனக்கூறி தப்பிக்க பார்க்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு விதிகளை, கடுமையான அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்கள், இனி நடக்காமல் இருக்கும்.
விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்

இச்சம்பவம், சி.எம்.டி.ஏ., நிர்வாக சீர்கேடையே காண்பிக்கிறது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், இடத்தை நேரில் பார்த்த பின், அனுமதி வழங்கினரா அல்லது ஆவணங்களை பார்த்து, அனுமதி வழங்கினரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த, உண்மை அறியும் குழு நியமிக்க வேண்டும்.
ஜி.கே.மணி, பா.ம.க., மாநில தலைவர்

இதுபோன்று கட்டடம் இடிந்து விழும் சம்பவம், மும்பை மற்றும் வட மாநிலங்களில், அடிக்கடி நடைபெறும். சென்னையில், 11 மாடி கட்டடம், இடிந்து விழுந்திருப்பது, இதுவே, முதல் முறை. தற்போது, மீட்பு பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. எனினும், மீட்பு பணி முடிவடைய இரண்டு அல்லது மூன்று நாட்களாகலாம். அதன் பிறகே, உள்ளே சிக்கியவர்கள் குறித்த முழு விவரம் தெரிய வரும்.
டி.ஐ.ஜி., தேசிய பேரிடர் மீட்பு

ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, உறவினர்களுக்கு தெரிவிக்க, ஆந்திர அதிகாரிகள் வந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாயும், ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்து உள்ளது.

கஜபதி நகர் எம்.எல்.ஏ., ஆந்திரா
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 16:51

முதல்வர் வருகையால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது நிறுத்தம் : 11 மாடி கட்டடம் நொறுங்கியதில் 13 பேர் பலி, 21 பேர் தப்பினர்
சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், மூன்று பெண்கள் உட்பட, 13 கட்டடத் தொழிலாளர்கள் பலியாயினர் என்பது இதுவரை உறுதியாகி உள்ளது. மேலும், 58 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.இந்த நிலையில், தொடர்ந்து, விரைவாக நடக்க வேண்டிய மீட்புப் பணி, முதல்வர் வருகைக்காக பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இடையில், 10 நிமிடம் பெய்த ஆலங்கட்டி மழையும் பணிகளை பாதித்தது.மீட்பு பணிநேற்று முன்தினம் மாலை, 4:45 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் இருந்து நடந்து வந்த மீட்புப் பணி, நேற்று அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது. அதில், 32 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில், 11 பேர் இறந்து விட்டனர்; 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று காலை, 5:00 மணிக்கு மீண்டும் துவங்கப்பட்ட மீட்புப் பணி, நேற்று பிற்பகல், 2:00 மணி வரை நடந்தது. அப்போது, முதல்வர் பார்வையிட வருவதாக தகவல் கிடைத்ததால், மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களில், பெரும்பாலானோர், முதல்வர் வரும் வழியில், சாலையை சீர்படுத்தும் பணிக்கு அனுப்பப்பட்டனர். இடிபாடுகளை சரி செய்து, கட்டுமானப் பணிக்கு வைத்திருந்த மணலைக் கொட்டி, முதல்வர் வர, தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.மீட்கப்பட்டவர்கள், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நுழைவு வாயிலில், சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை, உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக, உதவி மையம் திறக்கப்பட்டது. காயமடைந்தோரை சந்தித்து, ஆறுதல் கூற, மருத்துவமனைக்கு முதல்வர் வருவதாக, தகவல் வெளியானதும், அங்கிருந்த உதவி மையம் அகற்றப்பட்டது. இதனால், உறவினர்கள் விவரம் அறிய முடியாமல் அவதிப்பட்டனர்.


மழைஇதற்கிடையில், பிற்பகல், 3:45 மணிக்கு ஆலங்கட்டி மழை பெய்யத் துவங்கியது. 10 நிமிடம் பெய்த இந்த மழையைத் தொடர்ந்து, 20 நிமிடங்கள் கன மழை பெய்தது. அதன் பின் அரை மணி நேரம் தூறல் இருந்தது. முதல்வர் வருகைக்காக பணிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டதால், ஆலங்கட்டி மழையால் மீட்புப் பணி ஊழியர்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.மாலை, 4:45 மணிக்கு மீட்புப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டன. பின், மாலை, 6:03 மணிக்கு முதல்வர் சம்பவ இடத்திற்கு வந்தார். முதல்வரிடம், 'நீங்கள் வந்ததால், மீட்புப் பணி, இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறதே?' என, நிருபர்கள் கேட்டதற்கு, ''இது அரசியல் உள்நோக்கம் கொண்ட கேள்வி. இந்த கேள்விக்கு, பதில் தயார் செய்து வரவில்லை. நீங்கள் இங்கேயே இருந்து பாருங்கள்; பணிகள் எவ்வளவு துரிதமாக நடந்து வருகிறது என்பதை பாருங்கள்,'' என்றார்.


ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு:மீட்பு பணியை பார்வையிட, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, 6:03 மணிக்கு, அங்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கை குறித்து விளக்கினர்.ஆந்திராவில் இருந்து வந்திருந்த அதிகாரிகளையும், முதல்வர் சந்தித்து பேசினார். பின், 6:20 மணிக்கு, முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெறுவோரை சந்தித்து, ஆறுதல் கூறிவிட்டு, 6:43 மணிக்கு, போயஸ் கார்டன் புறப்பட்டு சென்றார்.பின், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்டட விபத்தில் இறந்தவர்களின் உடல்களை, அரசு செலவில், அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய், காயமடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது:


சென்னை போரூர் மவுலி வாக்கத்தில் நேற்று முன்தினம் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், நேற்று இரவு, 9:45 மணியளவில், ஆண் சடலம் ஒன்றும், 8 வயது சிறுவன் சடலமும் மீட்கப்பட்டது.இதையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இரவு, 10:10 மணியளவில் மழை பெய்ததால் மீட்பு பணி முடங்கியது. பின், 15 நிமிடத்திற்கு பின் மீட்பு பணி மீண்டும் துவங்கியது.


கதறி அழுத பெண் எஸ்.ஐ., குணவதி:


சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில், சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குணவதி. இவர்,நேற்று, மீட்பு பணியில் இருந்தபோது, இடிபாடுகளில் சிக்கி இறந்த ஒருவர் உடலை பார்த்து கதறி அழுதார். அருகிலிருந்தவர்கள், ஏன் அழுகிறீர்கள் என, விசாரித்தபோது, இறந்து கிடப்பது தன் அண்ணன் லோகநாதன்,48, எனக்கூறி, கண் கலங்கினர். அடுக்குமாடி கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட, 20 பேர், போரூரில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஏழு பேருக்கு, கை, கால்களில், எலும்பு உடைந்துள்ளது. அவர்களில், நான்கு பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள் குறித்த விவரம் அறிய, ஆந்திர மாநிலம், விஜயநகர மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதன் டெலிபோன் எண்: 089222 36947. விஜயநகர மாவட்ட வருவாய் அதிகாரி கட்டுப்பாட்டு அறை மொபைல் எண்: 094910 12012.சென்னையில், மீட்பு பணிகளை கண்காணிக்கவும், ஆந்திராவை சேர்ந்தவர்களை, சொந்த ஊருக்கு அழைத்து செல்லவும், ஆந்திர மாநில அரசு அதிகாரிகள், சென்னை வந்துள்ளனர்.

சென்னை கட்டட விபத்துக்கான காரணத்தை, நன்கு, அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இதுபோன்ற அதிர்ச்சி தரத்தக்க சம்பவங்களை கட்டாயம் தவிர்க்க, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.என, தி.மு.க., தலைவர்கருணாநிதி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

விபத்தில் இறந்தவர்கள்
1. மருதுபாண்டி, 25, பேறையூர், மதுரை
2. சாந்தகுமாரி, 25, விஜயநகரம், ஆந்திரா
3. சங்கர், 27, விஜயநகரம், ஆந்திரா
4. ராமு, 36, விஜயநகரம், ஆந்திரா
5. கவுரி, 22, விஜயநகரம், ஆந்திரா
6. அமர்குமார் ராவட், 26, ஒடிசா
7. நிரஞ்சன்தாரி, 35, ஒடிசா
8. அலி, 19, ஒடிசா
9. லோகநாதன், 45, அம்பத்தூர், சென்னை
10. கணேசன், 38, மவுலிவாக்கம்
11. அன்பழகி, 29, இளையனார்குப்பம், விழுப்புரம்

- நமது நிருபர் குழு -

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 7:41

அல்ப சந்தோழத்துக்காக அரை நூற்றாண்டை சாகடித்து என்ன பயன்??

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமான மற்றொரு சீனியர் மாணவி கோடீஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த யோகலட்சுமி என்பவர் படித்து வந்தார். 2ஆம் ஆண்டு மாணவியான யோகலட்சுமியை 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவி கோடீஸ்வரி ராகிங் என்ற பெயரில் சித்ரவதை செய்துள்ளார்.
இந்த சித்ரவதையை பொறுக்க முடியாமல் நேற்று யோகலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் தமது மரணத்துக்கு சீனியர் மாணவி கோடீஸ்வரியே காரணம் என்றும் அவர் தமக்கு பாலியல் ரீதியாக ராகிங் தொல்லை கொடுத்ததாகவும் டைரியில் வாக்குமூலமாகவும் யோகலட்சுமி எழுதி வைத்துள்ளார். ——

முகநூல்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum