சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி அருங்காட்சியகம்

Go down

Sticky முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி அருங்காட்சியகம்

Post by *சம்ஸ் on Wed 6 Feb 2013 - 7:35

முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி அருங்காட்சியகம்




எம்.எஸ்.எம். நூர்தீன்

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்



இலங்கையில் இலங்கை முஸ்லிம்களின் பண்டய வரலாற்றைப் பாதுகாத்து பேணும் நோக்கில்
காத்தான்குடியில் அரும் காட்சியகம் ஒன்றை நிறுவு வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள்
பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் ஓர் அங்கமாக கடந்த (பெப்ரவரி) 1ம், 2ம், 3ம் திகதிகளில் காத்தான்குடியில்
தேசிய கலாசாரக் கண்காட்சி ஒன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப் பட்டது.
கிழக்கு மாகாணத்தில் அனைவராலும் திரும்பிப் பார்க்கப்படுகின்ற காத்தான்குடியின்
பிரதான வீதியில் பஸ்மலா சதுக்கத்தின் முன்பாக அமைந்துள்ள மீராபாலிகா மகா வித்தியாலய
தேசிய பாடசாலையில் இக்கலாசாரக் கண்காட்சி நடைபெற்றது. இலங்கை முஸ்லிம்களின் தொன்மை
பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டன.
இலங்கை முஸ்லிம்களின் ஆரம்ப கால தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், கல்வெட்டுக்கள்,
சிலாசனங்கள், புள்ளி விபரங்கள், ஆவணச் சுவடிகள், வரலாற்றுக் குறிப்புகள்,
போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் முஸ்லிம்கள் குறித்த புள்ளிவிபரங்கள், அறிக்கைகள்
வரலாற்றுக்குறிப்பேடுகள், மலைகள், குன்றுகள், ஆவணப்படங்கள் வெளிநாட்டு வர்த்தகம்,
பட்டுப்பாதை, நாணயங்கள், உள்நாட்டு வர்த்தகம், கரவான்பாதை, விவசாயம், மீன்பிடி,
பணிக்கர் (மரபு ரீதியான யானை பிடித்தல்) மருத்துவம் யூனானி பண்டய கால அரசர்களுக்கு
ஆற்றிய மருத்துவ சேவை கட்டிடக் கலை, பள்ளிவாயல்கள் வீடமைப்பு, அரசியல் தேசிய
ஒற்றுமைக்கான முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு சுதந்திரத்திற்கு முற்பட்ட
இலங்கையின் அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு வாழ்வியல், மொழி, அரபுத் தமிழ்,
இலக்கியம் பற்றிய ஆய்வு, கல்வி பாரம்பரியம், அரபு மத்ரசாக்களின் வரலாறு ஆடை
அணிகலன்கள் மனைப் பொருட்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், திருமண சடங்குகள், பட்டய
கல்யாணம், திருக்கலியாணம் கலையும் இலக்கிய மும், பொல்லடி, சிலம்படி, நாடகம்,
வில்லுப்பாட்டு, மெத்தை வீடு கட்டுதல், இலக்கிய மரபுகள், கதை கூறுதல், பாபாடுதல்,
முஸ்லிம்கள் உலக நாகரிகத்திற்குகு ஆற்றிய பங்களிப்பு அறிவியல், மருத்துவம், கணிதம்,
கண்டு பிடிப்புகள், நாடுகான் பயணங்கள் உட்பட மேலும் பல விட யங்கள் கண்காட்சியில்
உள்ளடக்கப் பட்டிருந்தன.
கிழக்காசியாவிலேயே முஸ்லிகள் செறிந்து வாழுகின்ற காத்தான்குடியின் பல சிறப்பம்சங்களை
இதன் மூலம் அறிந்து கொண்டனர்.
இக்கண்காட்சி காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச
செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. இக்கண்காட்சி ஏற் பாட்டில்
ஒன்பது குழுக்கள் ஈடுப டுத்தப்பட்டிருந்தன.
இக்கலாசார கண்காட்சியுடன் முஸ்லிம்களின் கலை, பாரம்பரியம், வரலாற்று அம்சங்களை
அரங்கேற்றும் நிகழ்வுகளும் காத்தான்குடி ஹிஸ் புல்லாஹ் மண்டபத்திலும் கண்காட்சி
திடலிலும் நடைபெற்றது.
இதன் ஆரம்ப வைபவம் பெப்ரவரி 1ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு விழாவின்
ஏற்பாட்டுக்குழு தலைவரும் காத்தான்குடி பிரதேச செயலாளருமான எஸ்.எச். முஸம்மில்
தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் தேசிய மரபுரிமை கள் அமைச்சர் டாக்டர் ஜெகத்பாலசூரிய மற்றும் கிழக்கு
மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பொரு ளாதார அபிவிருத்தி பிரதி
அமைச்சர் எம்.
எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன்,
மட்டக்களப்பு மாவட்ட அரசா ங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், மற்றும் கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத் தான்குடி நகர சபை தலைவர் எஸ்.
எச். அஸ்பர்,
கிழக்கு மாகாண கலா சார திணைக்கள அலுவல்கள் பணிப் பாளர் வெலிக்கல உட்பட
முக்கியஸ்தர்கள், அதிகாரிகள், பிர முகர்கள் கலந்து கொண்டனர். இக் கண்காட்சியின்
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று உற்பத்தி வள ஊக்குவிப்பு அமைச்சர் பசீர்
சேகுதாவூத் கலந்து கொண்டு வைப ரீதியாக கண்காட்சியை திறந்து வைத்ததுடன்
பார்வையிட்டார்.

அதே போன்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம கேயும்
பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் வருகை தந்து
பார்வை யிட்டார்.
இக்கலாசார கண்காட்சியை கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் உட்பட பொது மக்களுமாக
இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக இதன் ஏற்பாட்டுக்குழு தலைவரும்
காத்தான்குடி பிரதேச செயலாளருமான எஸ்.எச். முஸம்மில் தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய் ந்த இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும்
வகையில் இஸ்லாமிய கலாசாரத்தின் அடிப்படையில் இக் கண்காட்சி நடைபெற்றது.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி அருங்காட்சியகம்

Post by ahmad78 on Wed 6 Feb 2013 - 13:11

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி அருங்காட்சியகம்

Post by kalainilaa on Wed 6 Feb 2013 - 13:15

நன்றி
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி அருங்காட்சியகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum