சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் காம்பீர் சதம் அடித்தார்

Go down

Sticky ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் காம்பீர் சதம் அடித்தார்

Post by *சம்ஸ் on Sun 17 Feb 2013 - 7:45


சென்னை, பிப்.17-


இந்தியா ஏ-ஆஸ்திரேலியா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி சென்னை
வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் ஜெயித்த இந்திய ஏ அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில்
பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதன்படி காம்பீரும், ரஞ்சியில் கலக்கிய ஜிவான்ஜோத் சிங்கும் இந்திய ஏ
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலியாவின்
அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில்,
ஹென்ரிக்ஸ் ஆகியோரை கவனமுடன் எதிர்கொண்ட தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு
67 ரன்கள் (24.3 ஓவர்) சேர்த்து பிரிந்தது.

ஜிவான்ஜோத்சிங் 24 ரன்களில் (72 பந்து, 4 பவுண்டரி), முதலாவது ஸ்லிப்பில்
நின்ற வாட்சனிடம் கேட்ச் ஆனார்.
இதன் பின்னர் காம்பீருடன், ரோகித் ஷர்மா இணைந்தார். இருவரும்
ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சை நொறுக்கியெடுத்தார்கள். புதுமுக இடதுகை
சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் பந்து வீச்சில் அடிக்கடி பவுண்டரிகளாக
ஓடின. அவரது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர் விளாசி காம்பீர் அரைசதத்தை
கடந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தன்னை நீக்கிய முடிவு தவறானது என்பதை
நிரூபிப்பது போல் காம்பீரின் ஆட்டம் அமைந்தது. தொடர்ந்து அபாரமாக ஆடி
முதல்தர கிரிக்கெட்டில் தனது 33-வது சதத்தை எட்டிய கம்பீர் 112 ரன்களில்
(162 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) ஹென்ரிக்சின் பந்து வீச்சில்
வாட்சனிடம் கேட்ச் ஆனார்.


இதைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவுடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்து அணியின்
ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்கள். ரோகித் ஷர்மா 77 ரன்களில் (144 பந்து, 8
பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த அபிஷேக் நாயர் (4 ரன்)
தாக்குப்பிடிக்காவிட்டாலும், அவருக்கு பிறகு களம் கண்ட விக்கெட் கீப்பர்
கர்நாடகாவை சேர்ந்த முரளிதரன் கவுதம் நிலைத்து நின்றார்.


முதல் நாள் முடிவில் இந்திய அணி ஏ அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4
விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. மனோஜ் திவாரி 77 ரன்களுடனும்
(106 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), கவுதம் 34 ரன்களுடனும் (53 பந்து, 5
பவுண்டரி) களத்தில் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் டோஹர்த்தி 3 விக்கெட்டுகளும்,
ஹென்ரிக்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், சிடில் இணைந்து 9 மெய்டனுடன் 30
ஓவர்கள் வீசிய போதிலும் விக்கெட் எடுப்பதில் சோபிக்க தவறினர். இதேபோல்
சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன் 20 ஓவர்களில் 97 ரன்களும், ஆஷ்டன் அகர்
13 ஓவர்களில் 78 ரன்களும் வாரி இறைத்தனர்.


பின்னர் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் டோஹர்த்தி நிருபர்களிடம்
கூறுகையில், காம்பீரின் ஆட்டம் மிக நேர்த்தியாக இருந்தது. அவர் மிகச்சிறந்த
பேட்ஸ்மேன். குறிப்பாக சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடக்கூடியவர். எனவே
அவர் இன்றைய நாள் (நேற்று) பேட் செய்த விதத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்றைய நாள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல நாளாக அமையவில்லை.
காம்பீரும், ரோகித் ஷர்மாவும் சுழற்பந்து வீச்சை அடிக்க ஆரம்பித்ததும்,
எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறி போனார்கள் என்றார்.


ஸ்டேடியம் அருகே ஒரு கட்டிடத்தில் தீப்பிடித்ததால் பயிற்சி ஆட்டம் சில
நிமிடங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2-வது நாள் ஆட்டம் இன்று
நடக்கிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் காம்பீர் சதம் அடித்தார்

Post by மீனு on Sun 17 Feb 2013 - 9:28

:) :)
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் காம்பீர் சதம் அடித்தார்

Post by ansar hayath on Sun 17 Feb 2013 - 11:02

:.”:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் காம்பீர் சதம் அடித்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum