சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

என்னை தொடுவது கூட இல்லை, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறாரே... ஒரு பெண்ணின் பரிதாப தற்கொலை!

Go down

Sticky என்னை தொடுவது கூட இல்லை, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறாரே... ஒரு பெண்ணின் பரிதாப தற்கொலை!

Post by Muthumohamed on Wed 6 Mar 2013 - 21:39

சென்னை: தனது கணவர் தன்னிடம் அன்பு காட்டாமல், எப்போது பார்த்தாலும்
கம்ப்யூட்டரே கதி என்று கிடந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு பெண்.
தாய் தீவைத்துக் கொண்டு எரிந்ததைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்த
அவரது 3 வயது மகளும் பரிதாபமாக கருகிப் போனாள்.

சென்னையில் நடந்துள்ளது இந்த பரிதாபச் சம்பவம்...
திருச்சி
ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மோகன் (36). பி.காம். பட்டதாரியான இவர்,
துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்யூட்டர் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக
பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த கவிதா (32)
என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் வாய் பேச
முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகள்.

சென்னை தேனாம்பேட்டை
எல்லையம்மன் காலனியில் வசித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு
பெண் குழந்தை பிறந்தது. தியா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். தங்களைப்
போலவே குழந்தைக்கும் ஏதாவது குறை இருக்குமோ என முதலில் அச்சப்பட்டனர்.
ஆனால், குழந்தை தியா நன்றாக பேச ஆரம்பித்ததும் இருவரும் எல்லையில்லா
மகிழ்ச்சி அடைந்தனர். மகள் பேசுவதை பார்த்துப் பார்த்து பூரிப்படைந்தனர்.

மகளை
நன்றாக படிக்க வைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிக்கு அனுப்ப வேண்டும்
என முடிவு செய்தனர். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில்,
திடீரென புயல் வீசத் தொடங்கியது. கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து
மோதல் ஏற்பட்டது.
மனைவியிடம் சைகையால் பேசுவதைக்கூட நிறுத்திக்கொண்டார்
மோகன். நாளடைவில் கவிதா சமைத்து வைத்த உணவையும் சாப்பிடாமல் தவிர்த்து
வந்தார். இது, கவிதாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தம்பதிக்கு நேற்று
திருமண நாள். எவ்வளவு கோபம் இருந்தாலும் திருமண நாளிலாவது கணவர் தன்னிடம்
அன்பாக நடந்து கொள்வார் என எதிர்பார்த்தார் கவிதா. ஆனால், மோகன் எதையும்
கண்டுகொள்ளாமல் வேலைக்குசென்றுவிட்டார்.

விரக்தியடைந்த கவிதா,
நேற்று மாலை திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். உடல் முழுவதும்தீ பற்றி எரிந்ததில் வலிதாங்க முடியாமல்
இங்கும் அங்கும் ஓடினார்.தாயின் கதறலை கேட்டு ஓடிவந்த குழந்தை தியா,
பாசத்தில் அம்மாவை கட்டிப் பிடித்தது. அவளதுஉடலிலும் தீப்பற்றியது.

கவிதா
வீட்டுக்குள் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து
பார்த்தனர். அங்கு தாயும் மகளும் எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி
அடைந்தனர். தகவல் கிடைத்து வந்த தேனாம்பேட்டை போலீசார், கவிதாவையும்
குழந்தையையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே கவிதா இறந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை தியா,
சிகிச்சை பலனின்றி இரவு 10 மணிக்கு இறந்தாள்.

கவிதா எழுதிய கண்ணீர்க் கடிதம்
கவிதாவின்
வீட்டில் சோதனை நடத்திய போலீசார், தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி
வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். இரண்டரை பக்கத்துக்கு ஆங்கிலத்தில்
கடிதம் எழுதப்பட்டிருந்தது. கணவருக்காக கடிதத்தில் அவர் எழுதியிருந்ததாவது:

வீட்டில்
செல்லமாக வளர்ந்தேன். நகைகள் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. அதற்காகவே நகை
தொடர்பான பயிற்சி முடித்தேன். உறவினர் மூலமாகத்தான் நீங்கள் கிடைத்தீர்கள்.
திருமணமான புதிதில் என் மீது மிகுந்த பாசமும், அன்பும் காட்டினீர்கள்.
அதனால் மகிழ்ச்சி அடைந்தேன்.
போகப் போக அந்த பாசம் பொய் என்பதை தெரிந்து
கொண்டேன். என் மீது போலியான அன்பு காட்டினீர்கள். உங்கள் பாசத்தை நம்பி
மோசம் போய்விட்டேன். என்னை நேசிப்பதை விட டி.வி.யையும், கம்ப்யூட்டரில்
இன்டர்நெட் மூலம் ஆபாச படம் பார்ப்பதையும்தான் அதிகம் நேசிக்க
ஆரம்பித்தீர்கள். அதை தட்டிக் கேட்டது முதல் என் மீதான பாசம்
குறைந்துவிட்டது.

முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன்
எனக்கு முத்தமழை பொழிவீர்கள். இப்போது என்னை தொடுவதுகூட இல்லை.
கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறீர்கள். என் மீதான அன்பு குறைந்து விட்டது.
கேட்டால் சண்டை போடுகிறீர்கள்.
மற்றவர்களை திருமணம் செய்தால், என்
குறைகளை சுட்டிக் காட்டி அவமானப்படுத்துவார்கள் என்பதால்தான் என்னைப் போலவே
வாய் பேச முடியாத உங்களை திருமணம் செய்தேன். என்னை நீங்களே புரிந்து
கொள்ளவில்லை. எனக்கு உடலில் மட்டும்தான் ஊனம். உங்களுக்கு உடல்
மட்டுமின்றி, உள்ளமும் ஊனமாக போய்விட்டது.

நான் தனிமையாக இருப்பதுபோல
உணர்கிறேன். இது எனக்கு பிடிக்கவில்லை. போலியான அன்பு, பாசத்தில்
இருந்துவிடுதலை பெற விரும்புகிறேன். அதனால் என் வாழ்க்கையை முடித்து
கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கவிதா.
-
ஒன்இந்தியா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum