சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தற்போது முஸ்லிம்களுக்கே அதிகளவு பிரச்சினை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

Go down

Sticky தற்போது முஸ்லிம்களுக்கே அதிகளவு பிரச்சினை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

Post by Muthumohamed on Tue 12 Mar 2013 - 21:00




தற்போது முஸ்லிம்களுக்கே அதிகளவு பிரச்சினை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டிருப்பதாகவும் இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் இதுவரை தீர்வு காணவில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் முன்னர் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததாகவும் இப்போது
முஸ்லிம்கள் அதிகளவான பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர்
தெரிவித்தார். மதங்களிடையே சௌஜன்யமற்ற நிலைமை அதிகரித்து வருவதாகவும் சில
இடங்களை சில குழுக்கள் தாக்கி வருவதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் இத்தகைய விடயங்கள் இடம்பெற்றன.
ஆயினும் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் ஆட்களைக் கைது
செய்ததாகவும் அவர் கூறியதுடன், மதஸ்தலங்களைத் தாக்குவதற்கு
முயற்சித்ததற்காக பிக்குகளைக் கூட தாங்கள் கைது செய்ய வேண்டிய
நிலைமையிருந்ததெனக் கூறுவதையிட்டு கவலையடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவந்த போது அதனை அரசாங்கம் உடனடியாக
தலையிட்டு கையாண்டது. ஆனால், இப்போது அவ்வாறு இடம்பெறுவதாக தென்படவில்லை.
மதங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் அற்ற நிலைமை
காணப்படுகிறது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்கள்
தொடர்பாக அரசியல் தலைவர்களை சார்ந்திருப்பதற்குப் பதிலாக சிவில் சமூகம்
மதத்தலைவர்கள் மற்றும் ஏனையவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென அவர்
வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை தனது பிள்ளைகள் ஒருபோதும்
அரசியலுக்குள் பிரவேசிக்க மாட்டார்களெனத் தெரிவித்த அவர். அரசியல்
பிரவேசித்திற்கு எதிராகவே தான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகக்
கூறியுள்ளார்.

எனது பிள்ளைகள் இந்த நாட்டை நேசிக்கின்றனர். ஆனால்,
அரசியலில் பிரவேசிக்க வேண்டிய தேவை இல்லையென அவர்களுக்கு தொடர்ந்து நான்
கூறிவந்துள்ளேன். நாட்டிற்கு சேவையாற்ற அவர்கள் விரும்பினால் அதற்கு பல
வழிகள் உண்டு என்று நான் கூறியுள்ளேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் தான் தொடர்ந்தும் வேறு பல
வழிகளில் நாட்டிற்கு சேவையாற்றி வருவதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். சில
சமயங்களில் இடையூறுகளைத் தவிர அரசாங்கத்திடமிருந்து நான் எந்தவொரு
உதவியையும் பெற்றுக்கொள்வதில்லை.

ஆனால், நான் தொடர்ந்து
சமூகத்திற்காக எதைச் செய்ய விரும்புகிறேனோ அதனை செய்து வருகிறேன்.
தனிப்பட்டவர்கள் மற்றும் ஏனையோர் ஊடாக அவர்களின் உதவியைப் பெற்று
சேவையாற்றி வருகிறேன் என்று திருமதி குமாரதுங்க கூறியுள்ளார்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum