சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Go down

Sticky ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 9:01

ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி
கர்நாடகத்தில் 7 மாநகராட்சிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பா. ஜ. க. மாபெரும் தோல்வியை சந்தித் துள்ளது. காங்கிரசுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. மைசூர், மங்களூர், தாவணகெரே, பெல்காம், ஹ¥ப்ளி தார்வாட், பெல்லாரி, குல்பாகா ஆகிய மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை திங்கள் நடந்தது. பா. ஜ. க.வுக்கு ஒரே ஒரு இடம் இதில், ஹ¥ப்ளி தார்வாட் தவிர மற்ற 6 இடங் களிலும் பா. ஜ. க. மண்ணைக் கவ்வி யுள்ளது. தாவணகெரே மாநகராட்சியில் மொத்தமுள்ள 41 இடங்களில் காங்கிரஸ் 36 இடங்களை வென்றுள்ளது. பா. ஜ. க.வுக்கு ஒரே ஒரு இடமே கிடைத்துள்ளது.

பெல்லாரியில் பா. ஜ. கவுக்கு சாவு மணி பெல்லாரியில் மொத்தமுள்ள 35 இடங்களில் 26 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இங்கு ஒரு இடத்தைக் கூட பா. ஜ. க. வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா. ஜ. கவுடன் இருந்து அந்தக் கட்சி வெற்றி பெற உதவிய ரெட்டி சகோதரர்களின் ஏரியாவான இங்கு, பா. ஜ. கவுக்கு இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெட்டி சகோதரர்களுடன் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீராமுலு உருவாக்கிய தனிக் கட்சியும் மண்ணைக் கவ்வியுள்து. அதே நேரத்தில் மாஜி முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் 7 இடங்களைப் பிடித்துள்ளது. மொத்தத்தில் பெல்லாரியில் பா. ஜ. கவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. மைசூரில் பா. ஜ. கவை பின் தள்ளிய கெளடா மைசூரில் மொத்தமுள்ள 65 இடங்களில் காங்கிரஸ் 22 இடங்களிலும், தேவகெளடா வின் மத சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் வென்றுள்ளன. பா. ஜ. க. வெறும் 12 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

பா. ஜ. கவிலிருந்து பிரிந்து சென்று அந்தக் கட்சிக்கு துரோகமிழைத்த எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் இங்கு ஒரே ஒரு இடத்தில் வென்றுள்ளது.

கர்நாடகத்தில் பா. ஜ. க. முதன் முதலில் காலூன்றிய இடமான மங்களூரில் அந்தக் கட்சி பெரும் தோல்வி அடைந் துள்ளது. கர்நாடகத்தில் பா. ஜ. க. ஆட்சிக்கு வரும் முன்பே தொடர் வெற்றிகளைப் பெற்ற பகுதி இது. இங்கு நடந்த மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் வெறும் 20 இடங்களையே அந்தக் கட்சி பிடித்துள்ளது.

காங்கிரஸ் 35 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வென்றுள்ளன. எடியூரப்பாவின் லிங்காயத்து சமுகத்தினர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் அவருக்கு தோல்வி தான் கிடைத்துள்ளது. பெல்காமில் பா. ஜ. க. - காங்கிரஸ¤க்கு தோல்வி: மகாராஷ்டிராவை ஒட்டிய பெல்காம் மாநகராட்சியில் பா. ஜ. க., காங்கிரஸ், கெளடாவின் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அங்கு மகாராஷ்டிர ஏகிகிரண சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் 34 இடங்களில் வென்றுள்ளனர். மற்ற இடங்கள் அனைத்துமே சுயேச்சைகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹ¥ப்ளி - தார்வாடில் மட்டும் பா. ஜ. க. ஆறுதல் வெற்றி ஹ¥ப்ளி-தார்வாட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 67 இடங்களில் முடிவு தெரிந்த 65 இடங்களில் பா. ஜ. க 31 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும், ஜனதா தளம் 9 இடங்களிலும் வென்றுள்ளன.

குல்பாகாவிலும் காங்கிரஸ் அதேபோல் 55 இடங்கள் கொண்ட குலுபாகாவில் காங்கிரஸ் 23 இடங்களிலும் ஜனதா தளம் 10 இடங்களிலும் வென்றுள்ளன. பா. ஜ. க. வெறும் 7 இடங்களில் தான் வென்றுள்ளது. 318ல் 164 காங். வசம். இந்த மாநகராட்சிகளில் மொத்த முள்ள 318 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 379 இடங்களில் காங்கிரஸ் 164 இடங்களைப் பிடித்துள்ளது.

ஆளும் கட்சியான பா. ஜ. க. 71 இடங்களிலும் மத சார்பற்ற ஜனதா தளம் 42 இடங்களையும் பிடித்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடியூரப்பாவின் கட்சி வெறும் 9 இடங்களைப் பிடித்துள்ளது. தென்னகத்தில் கர்நாடகத்தில் தான் பா. ஜ. க. முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், முதல்வர் பதவிக்கு நடந்த சண்டை, 3 முதல்வர்கள் மாற்றப்பட்டது. அமைச்சர்கள் பதவிக்கு நடந்த சண்டை, பல அமைச்சர்கள் நீக்கப்பட்டது. கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த சண்டை பல தலைவர்கள் மாற்றப்பட்டது, மாபெரும் ஊழல்கள், முதல்வர்கள் அமைச்சர்களின் நில ஆக்கிரமிப்புகள் பல அமைச்சர்கள் மீதான பாலியல் புகார்கள் என மாநிலத்தில் பா. ஜ. கவின் பெயர் நாறிவிட்டது. இந் நிலையில் தான் அடுத்த இரண்டு மாதங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் பா. ஜ. க. மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரசுக்கு லாட்டரி அடித்துள்ளது. அதேபோல 43 நகராட்சிகள், 63 பேரூராட்சிகள், 92 பஞ்சாயத்துகளுக்கும் நடந்த தேர்தலில் காங்கிரசே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மதசார்பற்ற ஜனதா தளமும், பா. ஜ. க மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Post by Muthumohamed on Wed 13 Mar 2013 - 9:24

இவர்களின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இந்த தேர்தல் காண்பிக்கிறது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Post by எந்திரன் on Wed 13 Mar 2013 - 12:16

Muthumohamed wrote:இவர்களின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இந்த தேர்தல் காண்பிக்கிறது
@. @.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Post by ansar hayath on Wed 13 Mar 2013 - 12:33

:)) :))
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ஆளும் பா. ஜ. க. தோல்வி: காங்கிரஸ் மாபெரும் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum