சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

Go down

Sticky இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 9:31

காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றது.

நேற்றைய 5ம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை அணி சார்பாக டில்சான், சங்கக்கார ஜோடி இரண்டாவது விக்கட்டுக்காக 213 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

டெஸ்ட் போட்டியில் 16 சதத்தைப் பூர்த்தி செய்த டில்சான் 126 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குமார் சங்கக்கார 105 பெற்றுக் கொடுத்ததுடன் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரு இன்னிங்ஸிலும் சதம் பெற்றமை விசேட அம்சமாகும். அத்துடன் குமார் சங்கக்கார டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி சார்பாக அதிக சதங்கள் பெற்றோர் வரிசையில் முதலவாது இடத்தை பெற்றுக் கொண்டார். மொத்தமாக இவர் 32 டெஸ்ட் சதங்களை பெற்றுள்ளதுடன் இவருக்கு அடுத்த படியாக மஹேல ஜயவர்தன 31 சதங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட்டுகளை இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய கித்ருவன் விதானகே 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அது மாத்திரமின்றி மெத்தியுஸ் 38 ஓட்டங்களையும், திரிமான்ன 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

267 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 70 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டம் முடிவுக்கு கொண்டு வந்ததை அடுத்து ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி நிறைவு பெற்றது. பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஜஹ்ருல் இஸ்லாம் 41 ஓட்டத்தையும், மொஹமட் அஷ்ரபுல் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

காலி டெஸ்ட் போட்டி பல்வேறு சாதனைகள் இடம்பெற்ற போட்டியாக நிறைவுபெற்றது. இலங்கை அணியின் குமார் சங்கக்கார இரு இன்னிங்ஸிலும் சதம் பெற்றதுடன் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய கித்ருவன் விதானகே அரைச்சதம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமின்றி இலங்கை அணியின் லஹிரு திரிமான்ன மற்றும் தினேஷ் சந்திமால் டெஸ்ட் அரங்கில் கன்னிசதத்தை பூர்த்தி செய்துள்ளனர். லஹிரு திரிமான்ன முதலாவது இன்னிங்ஸில் 155 ஓட்டங்களைப் பெற்றதுடன் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 570 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 335 ஓட்டங்களையும் பெற்றது. பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 638 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 70 ஓட்டங்களையும் பெற்றது.

பங்களாதேஷ் அணி டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றை முதல் தடவையாக சமனிலைப்படுத்தியமை விசேட அம்சமாகும். அத்துடன் பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டியில் முதல் தடவையாக 600 ஓட்ட இலக்கை அடைந்ததும் இப்போட்டியிலாகும்.

பங்களாதேஷ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் போட்டியில் முதல் தடவையாக இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். அத்துடன் பங்களாதேஷ் அணி சார்பாக முதல் தடவையாக இரட்டை சதம் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்க ளாதேஷ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மொஹமட் அஷ்ரபுல் ஜோடி 5வது விக்கட்டுக்காக 267 ஓட்டங்களைப் பெற்றமை இலங்கை அணிக்கு எதிராக பெறப்பட்ட அதிகூடிய இணைப் பாட்டமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் மொத்தமாக 8 சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இப்போட்டியில் கன்னி இரட்டைச் சதம் அடித்த பங்களாதேஷ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப் பட்டார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டவாது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum