சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Go down

Sticky கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் on Thu 3 Feb 2011 - 14:01


கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமையைக் கொண்ட உருத்திரபுரீஸ்வர ஆலய மகா கும்பாபிசேகம் 2011 ஆம் ஆண்டு தை மாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது. இச் சிவாலயம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.

இலங்கையின் தொல்பொருட்காட்சி சாலையில் நீண்ட காலமாகக் காணப்பட்ட "நடராஜர்' சிலையும், மட்பாண்டச் சிதைவுகளும், கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற குறிப்புடனேயே காணப்பட்டன. ஆனால் இப்பொழுது அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

உருத்திரபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆவுடையார், சற்சதுச வடிவுடைய ஆவுடையார் ஆகும். இச் சற்சதுர வடிவுடைய ஆவுடையாரானது ராஜராஜ சோழன் காலத்திற்கு முற்பட்ட சிவவழிபாட்டுடன் தொடர்புபட்டது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

1952 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து உருத்திரபுர குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு இச் சிவாலயம் தவத்திரு. வடிவேல் சுவாமிஜி அவர்களின் "கனவின்' அடிப்படையில், கிலசமடைந்துகிடந்த ஆலய இடிபாடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. ஈழத்துச் சித்தர் "யோகர்' சுவாமிகளின் ஆலோசனைகளுடன் கோவில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இக்கோவிலின் நன்மைகருதி அக்காலத்தில் யாழ். அரசாங்க அதிபராக இருந்த அமரர். ம. ஸ்ரீகாந்தாவும், அப்போதைய உதவி அரசாங்க அதிபராகவும் காணி அலுவலராகவும் பதவி வகித்த அமரர். முருகேசம்பிள்ளையும், 250 ஏக்கர் வயல் காணியை கோவிலின் வருமானத்திற்காக கோவிலுக்கு எழுதிக் கொடுத்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் on Thu 3 Feb 2011 - 14:01

இந்தவயல் நிலங்களை எல்லாம், அக்காலத்தில் தன்னுடைய சொத்துக்களையும், பணத்தையும் செலவு செய்து துப்பரவு செய்து சீராக்கிய செயல்வீரர் இன்றைய மகாதேவ ஆச்சிரம முதல்வர் தவத்திரு. கனேசானந்த சுவாமி ஆவார்.. யாழ்ப்பாணப் பெரியார்களும், உருத்திரபுரப் பெரியார்களும் ஒன்றுசேர்ந்து வரலாற்றுப் பெருமை கொண்ட உருத்திரபுரீஸ்வர சிவாலயத்தை சீராக்க அயராது முயற்சி செய்தனர்.. இலங்கையின் சப்த ஈஸ்வரங்களில் ஒன்றாகவும் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருச்சம் ஆகியன ஒருங்கே அமையப்பெற்ற சிறப்பும் இச் சிவாலயத்திற்கு உண்டு.

வன்னியில் ஆதித் திராவிடர்கள் சிறப்புடன் விளங்கினார்கள் என்பதற்கு நீண்ட வரலாற்று ஆதாரமாக இச்சிவாலயம் காணப்படுகின்றது. இச் சிவாலயத்தின் வரலாற்றுப் பெருமைகளை உள்ளடக்கிய மலரொன்றும் இன்று வெளியிடப்படுகின்றது. அம் மலரில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் தி. இராசநாயகமும், உருத்திரபுரம் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் கா. நாகலிங்கமும், மகாதேவா ஆச்சிரம முதல்வர் தவத்திரு. கணேசானந்த சுவாமிகளும் எழுதியுள்ள கட்டுரைகள் உருத்திரபுரீஸ்வரரின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்தியம்புவனவாக உள்ளன.

உருத்திரபுரம் பல்வேறு சைவ அமைப்புக்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. மகாதேவா ஆச்சிரமம், காந்தி நிலையம், குருகுலம், மாதாஜி இல்லம் போன்றவை தொண்டு நிறுவனங்களாக உருத்திரபுரீஸ்வரரின் ஆசியுடன் இப்பிரதேசத்தை ஆத்மீக பலத்துக்கு உள்ளாக்கி நிற்கின்றன. பல்வேறு அழிப்புக்களுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் ஆலயத்தை புனருத்தாரணம் செய்தார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் on Thu 3 Feb 2011 - 14:02

இன்றைய கும்பாபிசேகம் நீண்ட இடம்பெயர்வுகளுக்கும், பாரிய யுத்தத்திற்கும் பின் நடைபெறுகின்றதொன்றாகும். கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் தி. இராசநாயகம் அவர்களின் அயராத முயற்சியாலும், வழிகாட்டலினாலும் இன்றைய அறங்காவலர் சபையால் கும்பாபிசேக நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர்களுக்கென்றொரு இருப்பு, அவர்கள் பண்பாட்டோடு வாழ்ந்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் இத்தகைய ஆலயங்களினாலேயே முன்னெடுத்துக் காட்டப்படுகின்றது. இங்கு கண்டெடுக்கப்பட்டிருக்கும் இடிபாட்டிற்குள்ளான தூண்களும், எச்சங்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மிகச்சிறந்த கட்டடக்கலை நிபுணத்துவத்துடன் ஆலயங்கள் அமைத்து வாழ்ந்தனர் என்பதற்கு சான்றாக அமைகின்றன. யாழ்ப்பாண மன்னர்களும், வன்னி மன்னர்களும் இத்தகைய ஆலயங்களை முறைப்படி பரிபாலித்து வந்ததற்கான சான்றாதாரங்கள் உண்டு.

அந்நிய ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டும், உள்ளுர் முரண்பாடுகளினாலும், போட்டி பொறாமைகளாலும் சிதைக்கப்பட்டும் கிலசமடைந்தபொழுதும் காலத்திற்கு காலம் இவ்வாலயம் உயிர்புப் பெற்று தலைநிமிர்ந்து நின்றது. கிளிநொச்சி நிலப்பரப்பில் உள்ள மாபெரும் சிவாலயமாகிய உருத்திரபுரீஸ்வரி சமக உருத்திரபுரீஸ்வரர் இன்று கும்பாபிசேகம் காண்கின்றார் என்ற செய்தி, எம்மவர்களால் "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று அன்றாடம் வழிபட்ட புராதன சிவாலயம் மீண்டும் புத்துருப் பெறுகின்றது என்ற புளகாங்கிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சிவாலயத்தில் ஆவுடையாரோடு இருந்த லிங்கம் அந்நியர் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புக்கருதி பொறிக்கடவை அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டது எனவும், அது பின்னர் காணாமல் போனதாகவும் இங்குள்ள பெரியார்கள் கூறுகின்றார்கள். அந்த லிங்கம் கண்டுபிடிக்கப்படல் வேண்டும். இக்கோயிலின் வரலாறு ஆய்வு நூலாக வெளிக்கொண்டுவரப்படல் வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இக்கோவில் பற்றிய வரலாற்றை முறையாக ஆராய வேண்டும். எமது மூத்தபரம்பரை வாழ்ந்த வாழ்க்கை முறையை செவ்வையுற ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் on Thu 3 Feb 2011 - 14:02

"கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்' என்ற பொன்மொழிக்கேற்ப இப்பிரதேசத்தில் எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும், மக்கள் இன்னும் ஒழுங்காக மீளக்குடியமராத போதும் இவ்வாலயம் சீராக்கப்பட்டு குடமுழுக்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கும் அறங்காவலர் குழுவினரை வாழ்த்துகின்றோம். இப்பணி இவ்வாலயம் உள்ளளவும் பேசப்படும்.

இக்கோயிலும், அதனோடு சேர்ந்த மக்களும் இப்பிராந்தியத்தின் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக்காட்டும் பிரதிவிம்பங்கள். ஒழுக்கமும், உயரிய வாழ்வும், பண்பாட்டு நெறிகளும், கலாசாரமும் இத்தகைய சிறப்பு வழிபாட்டுத்தலங்களினூடாகவே முன்னெடுக்கப்பட்டன.

அதனை மனத்திடைக் கொண்டு வரலாற்றுப் புகழ் மிக்க இச்சிவாலயத்தை கும்பாபிசேகம் காணச்செய்யும் தங்களது முயற்சிகள் "அவனருளாலே அவன் தாள் வணங்கி' வெற்றியும் பெருமையுறுமாறும் பிரார்த்திக்கின்றோம்.

மா. கணபதிப்பிள்ளை
கிளிநொச்சி. _

நன்றி வீரகேசரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum