சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Today at 14:28

» சிரி... சிரி...
by rammalar Today at 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Today at 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Today at 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Yesterday at 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Yesterday at 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Yesterday at 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Yesterday at 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Yesterday at 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Yesterday at 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Yesterday at 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Yesterday at 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
by பானுஷபானா Sat 9 Mar 2019 - 13:25

» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
by rammalar Fri 8 Mar 2019 - 0:23

» மகளிர் தினம் வாழ்த்துக்கள்
by rammalar Fri 8 Mar 2019 - 0:20

» 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
by rammalar Thu 7 Mar 2019 - 23:58

» மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி
by சே.குமார் Mon 4 Mar 2019 - 16:34

» பல்சுவை- இணையத்தில் ரசித்தவை-1
by rammalar Sun 3 Mar 2019 - 20:26

» வாழ்த்த வயதில்லை எனபதால், தலைவரை தாழத்தி பேசுவார்...!!
by rammalar Sun 3 Mar 2019 - 20:09

» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
by rammalar Sat 2 Mar 2019 - 15:10

» எஸ்.எம்.எஸ். - கவிதை
by பானுஷபானா Fri 1 Mar 2019 - 15:24

» கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!
by rammalar Wed 27 Feb 2019 - 14:34

» கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!
by rammalar Wed 27 Feb 2019 - 14:24

» கூந்தல் கீற்று! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:20

» அம்மா! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:19

.

கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா

Go down

Sticky கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா

Post by *சம்ஸ் on Tue 2 Apr 2013 - 7:59


திருவனந்தபுரம், ஏப் 2-
கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் (பி) கட்சியும் இடம் பெற்றுள்ளது. இக்கட்சியின் நிறுவனர் பாலகிருஷ்ண பிள்ளையின் மகனும், நடிகருமான கணேஷ்குமார் கூட்டணி அரசில் வனம், சினிமா மற்றும் விளையாட்டுத்துறையின் மந்திரியாக உள்ளார்.

கணேஷ்குமார் பதவிக்கு வந்த பின்பு அவருக்கும் அவரது தந்தை பாலகிருஷ்ண பிள்ளைக்கும் இடையே தகராறு மூண்டது. கணேஷ் குமாரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டுமென முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு கணேஷ்குமாரின் தந்தை பாலகிருஷ்ணபிள்ளை கோரிக்கை விடுத்தார். இதனை உம்மன் சாண்டி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கணேஷ்குமார் பதவியில் நீடித்தார்.

இந்நிலையில் கணேஷ் குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், கணேஷ்குமார் வீடு புகுந்து கள்ளக்காதலியின் கணவர் தாக்கியதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் பரபரப்பு புகார் கிளம்பியது.

இதனை கணேஷ்குமார் மறுத்தார். தனது இலாகாவில் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி புகார் கிளப்புவதாகவும், இதற்கு பின்னணியில் குடும்ப அங்கத்தினர்கள் சிலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கணேஷ்குமாரின் இந்த சமாளிப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கணேஷ்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் இதனால் தன்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக அவரது மனைவி டாக்டர் யாமினி தங்கச்சி பரபரப்பு புகார் கூறினார். இதனை முதல்-மந்திரி உம்மன் சாண்டியை சந்தித்து மனுவாகவும் கொடுத்தார்.

இதனால் கணேஷ்குமாருக்கு நெருக்கடி அதிகரித்தது. நேற்று அவர் திடீரென திருவனந்தபுரம் குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கக் கேட்டு மனு கொடுத்தார்.

அதில், மனைவி யாமினி தங்கச்சி தன்னை தாக்கியதாகவும், அவரோடு வாழ்க்கை நடத்த முடியாது என்றும் எனவே தனக்கு விவாகரத்து வழங்க வேண்டுமென்றும் கூறி இருந்தார். இதற்காக மகள் பெயரில் ஒரு வீடும் ரூ.75 லட்சமும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்டு இருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு இது தொடர்பான விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

கணேஷ்குமார் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததை அறிந்த அவரது மனைவி யாமினி நேற்று மாலை நிருபர்களை அழைத்து பரபரப்பு பேட்டி அளித்தார்.

அதில், தன்னை கணேஷ்குமார் தாக்கியதாகவும், அவருக்கும் தனது தோழிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாகவும் கூறினார். கள்ளக்காதலியின் கணவரிடம் இருந்து கணேஷ்குமார் அடி வாங்கியதை பார்த்ததாகவும் தெரிவித்தார். யாமினியின் பேட்டி உடனடி யாக ஊடகங் களில் வெளியானது. இதை பார்த்ததும் நேற்றிரவு 11.40-மணிக்கு கணேஷ்குமார் முதல்- மந்திரி உம்மன்சாண்டியின் வீட்டுக்கு சென்றார். அங்கு மந்திரி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

பின்னர் முதல்- மந்திரி உம்மன்சாண்டியின் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மனைவி யாமினி வேண்டுமென்றே பொய் புகார் கூறுகிறார். அவர்தான் என்னை அடித்து உதைத்தார். எனது கன்னத்தில் காயம் இருப்பதையும், ரத்தம் வழிந்திருப்பதையும் பாருங்கள். திருமணம் முடிந்த நாள் முதல் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதை உறவினர்கள் சிலர் வேண்டுமென்றே பெரிதுப்படுத்தி விரிசலை ஏற்படுத்திவிட்டனர். கட்சிக்குள் இருக்கும் எதிரிகளும் எனக்கு இடைஞ்சலை கொடுத்தனர். எனவேதான் யாமினி என் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் மீது உரிய விசாரணை நடத்த எனது மந்திரி பதவி தடையாக இருக்கக்கூடாது. எனவே பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அதே நேரம் எம்.எல்.ஏ. பொறுப்பில் தொடர்ந்து இருப்பேன். முதல்- மந்திரி உம்மன் சாண்டிக்கும் ஆதரவாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரியை தாக்கிய கள்ளக்காதலியின் கணவர்

போலீசில் புகார் கொடுத்த பின்பு யாமினிதங்கச்சி தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கணேஷ்குமார் பெண்கள் விஷயத்தில் மோசமாக நடந்து கொள்வார். எனது மகனின் தோழன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். இதில் அவரது தாயாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரும் அவ்வப்போது வீட்டுக்கு வருவார். இதில் எனது கணவரையும் அவருக்கு தெரியும். இருவரும் அடிக்கடி சகஜமாக பேசிக்கொள்வார்கள். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண்ணின் கணவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என்னிடம் கணேஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதை கூறினார். இதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கணேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் அந்த பெண்ணின் கணவர் சத்தம் போட்டார். உடனே கணேஷ்குமார் அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த பெண்ணின் கணவரின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை இன்னொருவர் அடிப்பதை ஒரு பெண் கண்ணால் பார்க்கும் துர்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டது. அதன் பிறகுதான் முதல்-மந்திரி உம்மன்சாண்டியை சந்தித்து கணேஷ்குமார் பற்றி புகார் செய்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தந்தை ஸ்தானத்தில் இருந்து இப்பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று எண்ணினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். கணேஷ்குமாருக்கு சாதகமாக நடந்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா

Post by Muthumohamed on Tue 2 Apr 2013 - 12:08

இருவரையும் நினைத்தால் அழுகை :!#: :!#: :!#:

இருவரைப்பற்றியும் இறைவனுக்கு வெளிச்சம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum