சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அமெரிக்க உரத் தொழிற்சாலை வெடி விபத்தில் 70 பேர் பலி

Go down

Sticky அமெரிக்க உரத் தொழிற்சாலை வெடி விபத்தில் 70 பேர் பலி

Post by ansar hayath on Thu 18 Apr 2013 - 14:06



டெக்சாஸ், ஏப். 18-

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த மாரத்தான் போட்டியில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

அந்த பயங்கரத்தின் பதற்றமும், பரபரப்பும் ஓயும் முன்பே அமெரிக்காவில் மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சுமார் 70 பேரை பலி வாங்கி விட்டது.இதுபற்றிய விபரம் வருமாறு:-

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வாகோ நகரின் புறநகரில் மிகப்பெரிய உரத்தொழிற்சாலை உள்ளது. நேற்றிரவு அங்கு உர தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன.

சுமார் 8 மணியளவில் உரத்தொழிற்சாலையின் முக்கிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.ரசாயன கலவைகள் வெடித்துச் சிதறின. இதையடுத்து பயங்கர சத்தத்துடன், தொழிற்சாலைக்குள் வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த சில வினாடிகளில் மற்றுமொரு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

2 வெடி விபத்து காரணமாக உரத்தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதியில் தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த உரத்தொழிற்சாலை முழுவதும் தீ பிடித்தது.

வெடி விபத்துகள் ஏற்பட்ட சத்தம் 45 மைல் சுற்றளவுக்கு கேட்டது. மிக, மிக சக்தி வாய்ந்த இந்த வெடி விபத்துக்களால் டெக்சாஸ் உரத்தொழிற்சாலை சுற்றுப் பகுதி முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டது போல குலுங்கி, இடிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

உரத்தொழிற்சாலை அருகே இருந்த ஒரு பள்ளிக்கூடமும், நர்சிங் ஹோமும் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 60க்கும் மேற்பட்ட வீடுகளும் இடிந்து விழுந்தன. அதன் இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கி கொண்டனர்.

வெடி விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

உரத்தொழிற்சாலை அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் கால்பந்து மைதானத்தில் அவசரகால மருத்துவமனை அமைக்கப்பட்டும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன.மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல 6 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. நவீன எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

வெடி விபத்தில் சிக்கியும், இடிபாடுகளில் சிக்கியும் 60 முதல் 70 பேர் வரை பலியாகி விட்டதாக ஏஎப்பி செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் தகவல்கள் வெளியிட்டன.

டெக்சாஸ் மாகாண அவசரகால பணி நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் சுமித் என்பவரும் உரத்தொழிற்சாலை விபத்தில் 60 பேர் வரை பலியாகி விட்டதாக உறுதிபடுத்தினார்.ஆனால் 2 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்துகள் காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் ரசாயன புகை சூழ்ந்துள்ளது. அந்த நச்சுப் புகையில் ஆபத்தான ஹட்ரோஸ் வாயு கலந்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

எனவே டெக்சாஸ் நகர மக்கள் இன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று டெக்சாஸ் மேயர் டாமி முஸ்கா அறிவுறுத்தி உள்ளார். இதற்கிடையே வாகோ நகரில் இருந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 60 சதவீத மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: அமெரிக்க உரத் தொழிற்சாலை வெடி விபத்தில் 70 பேர் பலி

Post by நண்பன் on Thu 18 Apr 2013 - 16:20

தகவலுக்கு நன்றி அன்சார் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum