சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காங்கிரஸ் தலைவரின் விடுதலையை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட சீக்கியர்கள் முயற்சி

Go down

Sticky காங்கிரஸ் தலைவரின் விடுதலையை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட சீக்கியர்கள் முயற்சி

Post by நண்பன் on Tue 7 May 2013 - 10:17

காங்கிரஸ் தலைவரின் விடுதலையை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட சீக்கியர்கள் முயற்சி
காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். பஞ்சாபில் ரயில் மறியல் காரணமாக பல ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டன.

இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்கள் நடந்தன. டெல்லியில் நடந்த ஒரு தாக்குதலில் 5 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் சமீபத்தில் டெல்லி கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார்.

சஜ்ஜன் குமார் விடுதலையை கண்டித்து சீக்கியர்கள் டெல்லி, பஞ்சாப் உட்பட பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி பாராளுமன்ற சாலையில் இருந்து பிரதமர் வீட்டை முற்றுகையிட சீக்கியர்கள் பேரணியாக புறப்பட்டனர். ஆனால் அவர்களை பொலிசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

அவர்களுடன் சீக்கியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீக்கியர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து புதிதாக ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் மனு கொடுக்கப் போகிறோம் என்று கூறினார்கள். ஆனாலும் அவர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை. டெல்லியின் மற்றொரு பகுதியில் 1984 வன்முறையில் பாதிக்கப்பட்ட ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். பல முக்கிய சாலைகளில் மறியல் நடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சிரோமணி குருத்வாரா பிரபந்த குழு மற்றும் சீக்கிய மாணவர் அமைப்பு இணைந்து பஞ்சாப் மாநிலம் பாடாலா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த மறியலால் சதாப்தி எக்ஸ்பிரஸ், ஜம்மு - சென்னை எக்ஸ்பிரஸ் உட்பட பல முக்கிய ரயில்கள் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டது.

லூதியானாவில் சீக்கிய டங்கா பீரட் சமூகம் மற்றும் அகில இந்திய சீக்கிய மாணவர் கூட்டமைப்பு இணைந்து முக்கிய ரயில் பாதையான டெல்லி - அமிர்தசரஸ் பாதையில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் 1984 தாக்குதலில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதில் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவர் அவ்தார் சிங் மக்கார் கலந்துகொண்டு பேசினார்.

இதன் காரணமாக அந்த பாதையில் ரயில் போக்குவரத்து 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது. அதேபோல லூதியானா - டெல்லி ரயில் பாதையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லி - அமிர்தசரஸ், அமிர்தசரஸ் - சண்டிகார், டெல்லி – ஜம்மு ரயில்கள் உட்பட பல ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டன. ரயில்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக ஆயிரக் கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் காத்து நின்றனர். பில்லாவுர் ரயில் நிலையத்தில் கரிப்ராத் ரயிலையும், பக்வாரா ரயில் நிலையத்தில் சதாப்தி ரயிலையும் போராட்டக்காரர்கள் மறித்தனர். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராடம் இன்னும் தீவிரமாகும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காங்கிரஸ் தலைவரின் விடுதலையை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட சீக்கியர்கள் முயற்சி

Post by Muthumohamed on Tue 7 May 2013 - 10:33

என்னமோ நடக்கிறது ஒன்றும் புரிவதில்லை
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum