சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா

Go down

Sticky குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா

Post by Muthumohamed on Thu 30 May 2013 - 20:29

குற்றம் – நடந்தது என்ன?

இடம்: ஐ.பி.எல்.அலுவலகம்

ஹர்பஜன் சிங்கும் ஸ்ரீசாந்தும் தே.மு.தி.கவிலிருந்து அ.தி.மு.கவுக்குத் தாவிய எம்.எல்.ஏக்களைப் போல, தலைகுனிந்து, கைகட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். ஐ.பி.எல்.சேர்மன் ராஜீவ் சுக்லா உள்ளே நுழைகிறார்.

சுக்லா: என்னப்பா இதெல்லாம்? நல்லாத்தானே போயிட்டிருக்கு? இப்போ எதுக்குத் தேவையில்லாம டிவிட்டருலே போயி ’ட்வீட்’ பண்ணறீங்க?

ஸ்ரீசாந்த்: ட்விட்டருலே ட்வீட் பண்ணாம ’ஸ்வீட்டா’ பண்ண முடியும்?


சுக்லா: வரவர காங்கிரஸ் மந்திரிங்கன்னாலே யார்தான் நக்கல் பண்ணறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லாமப் போயிட்டிருக்கு! ஏம்பா ஸ்ரீசாந்த், எதுக்காக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இப்போ நடக்கலேன்னு சொல்றே?

ஸ்ரீசாந்த்: நீங்க அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சொன்னதை சொல்லவேயில்லேன்னு இப்போ பார்லிமெண்டுலே பேசலியா?

சுக்லா: ஐயோ, எந்த பவுன்ஸர் போட்டாலும் சிக்சர் அடிக்கிறானே? யோவ், இப்போ உனக்கு என்னதான் பிரச்சினை? ஹர்பஜன் சிங் உன்னை அடிச்சான். நீ அழுதே; நாங்க விசாரிச்சு ஹர்பஜனை ஆடவிடாமப் பண்ணினோம்; உங்கிட்டே மன்னிப்பும் கேட்க வைச்சோம். இப்போ எல்லாம் பொய்ன்னு சொல்றியா?

ஸ்ரீசாந்த்: எல்லாம் உண்மைதான்; ஆனா, அன்னிக்கு ஹர்பஜன் என்னை அடிக்கவேயில்லை.

சுக்லா: அடிக்கவேயில்லையா? என்னய்யா, விட்டா புளுகறதுலே எங்க நாராயணசாமியையே மிஞ்சிடுவே போலிருக்கே? தம்பி ஹர்பஜன், நீயாவது சொல்லுப்பா! நீ ஸ்ரீசாந்தை அடிச்சியா?

ஹர்பஜன்: ஆமா சார்! அடிச்சேன்!

ஸ்ரீசாந்த்: சுக்லா சார், அவன் சொல்றதை நம்பாதீங்க! அவன் ஒரு புளுகுமூட்டை; கருங்காலி; நம்பிக்கைத்துரோகி!

சுக்லா: நிறுத்துப்பா! பேசிட்டே போறியே? நீ சொல்றமாதிரி ஹர்பஜன் புளுகுமூட்டையா, கருங்காலியா, துரோகியா இருந்திருந்தா இதுக்குள்ளே காங்கிரஸுலே வந்து சேர்ந்திருக்க மாட்டானா? இல்லாட்டிப்போனா, நாங்களே கூட கூப்பிட்டுச் சேர்த்திருக்க மாட்டோமா? அபாண்டமாப் பேசாதே!

ஹர்பஜன்: ஸ்ரீசாந்த்! அன்னிக்கு உன்னை நான் அடிச்சேன்தானே? பொய் சொல்லாதே! சத்தியமா உன்னை நான் அடிச்சேன்! ஓங்கி அடிச்சேன்! இப்போ திடீர்னு நான் அடிக்கவேயில்லைன்னு சொன்னா, என்னோட இமேஜ் டோட்டலா டேமேஜ் ஆயிரும்! இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?

சுக்லா: ஆமா ஸ்ரீசாந்த்! பாரு உன்னாலே ஹர்பஜன் அழுதுருவான் போலிருக்கு! தயவு செய்து அவன் அடிச்சதை ஒத்துக்கப்பா! நீ கிரிக்கெட்டுலேருந்து ரிட்டயர் ஆனதுக்கப்புறம் எங்க கட்சிலே சேர்ந்துக்கிட்டு தாராளமா பல்டி அடி! இப்போ ஒத்துக்கப்பா, உன்னை ஹர்பஜன் அன்னிக்கு பளார்னு கன்னத்துலே அடிச்சானா இல்லையா?

ஸ்ரீசாந்த்: எண்டே குருவாயூரப்பா! எந்து ஒரு புத்திமட்டு! சார், அவன் என்னை அடிக்கலே சார்; இடிச்சான்!

ஹர்பஜன்: பொய்! பொய்! இடிக்கலே சார்; அடிச்சேன்!

சுக்லா: ஸ்டாப் இட்! ஐ.பி.எல் அதிகாரின்னா கோட்டுப்போட்டுக்கிட்டு கோலா குடிக்கிறவங்கன்னு நினைச்சீங்களா? நம்ம ஐ.பி.எல். வைஸ் பிரெசிடெண்ட் அருண் ஜேட்லி வந்திருக்காரு! சுப்ரீம் கோர்ட் லாயர்! குடைகுடைன்னு குடைஞ்சு உண்மையை வரவழைச்சிருவாரு! நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க! போரடிச்சா நிறைய தூண் இருக்கு. அதுலே தலையை முட்டிக்குங்க! அடிக்கவோ, இடிக்கவோ கூடாது சொல்லிட்டேன்!
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா

Post by Muthumohamed on Thu 30 May 2013 - 20:30

(ஹர்பஜனும் ஸ்ரீசாந்தும் வெளியே போக, அருண் ஜேட்லி உள்ளே வருகிறார்)

ஜேட்லி: என்ன ஆச்சு?

சுக்லா: ஸ்ரீசாந்த் ஹர்பஜன் அடிக்கவேயில்லை; இடிச்சான்னு சொல்றான். அதான் உங்களை விசாரிக்க விடலாம்னு பார்க்கிறேன். நீங்கதானே இடிக்கிறதுலே எக்ஸ்பர்ட்டு?

ஜேட்லி: ஹர்பஜன், ஸ்ரீசாந்த், உள்ளே வாங்க!

(இருவரும் திரும்ப உள்ளே நுழைய…)

ஜேட்லி: ஹர்பஜன், நீ ஸ்ரீசாந்தை அடிச்சியா?

ஹர்பஜன்: ஆமா, அடிச்சேன்!

ஸ்ரீசாந்த்: இல்லை; அடிக்கலை; இடிச்சான்!

ஜேட்லி: உன்கிட்டே கேட்டேனா? எதுக்கு திக்விஜய்சிங் மாதிரி சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறே?

ஹர்பஜன்: நான் சாப்புடுற மக்காச்சோள ரொட்டி, சர்ஸோன் கா ஸாத் மேலே சத்தியமா சொல்றேன். நான் ஸ்ரீசாந்தை அடிச்சேன்.

ஸ்ரீசாந்த்: நான் சாப்புடுற கட்டங்காப்பி, கப்பக்கிழங்கு மேலே சத்தியமா சொல்றேன். அவன் என்னை இடிச்சான்.

ஜேட்லி: சுக்லாஜி! பேசாம இஞ்ஜினீயரைக் கூப்பிடலாமா?

சுக்லா: எதுக்கு, அடிச்சானா இடிச்சானான்னு டேப் வைச்சு அளந்து பார்க்கவா? அஞ்சு வருசத்துக்கப்புறமும் வீங்கியா இருக்கும்? அது என்ன பணவீக்கமா?

ஜேட்லி: கடவுளே, நான் ஃபரூக் இஞ்ஜினீயரைச் சொன்னேன். அவருதானே அன்னிக்கு மேட்ச் ரெஃபரியா இருந்தாரு!

ஹர்பஜன்: கேளுங்க சார், அப்படியே ஹேமாவதி கிட்டேயும் கேளுங்க சார்! அவருதானே எங்க ரெண்டு பேரையும் விசாரிச்சாரு?

சுக்லா: கஷ்டம்! யோவ் ஹர்பஜன்! அவரு ஜஸ்டிஸ் நானாவதி; ஹேமாவதி இல்லைய்யா! நீ வேறே புதுசாக் குழப்பத்தை உண்டாக்காதே!

ஜேட்லி: ஸ்ரீசாந்த், உன்னை ஹர்பஜன் அடிக்கலே; இடிச்சான்னு சொல்றே? இடிச்சதுக்கா நீ அன்னிக்கு அப்படி அழுதே?

ஸ்ரீசாந்த்: ஒருவாட்டி அவன்கிட்டே இடிபட்டாத்தான் தெரியும். பஜ்ஜி, சாருக்கு ஒரு சாம்பிள் காட்டு!

சுக்லா: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! எம்புட்டு அடிபட்டாலும் இடிபட்டாலும் நாங்கல்லாம் அழ மாட்டோம். எங்களை என்னான்னு நினைச்சீங்க? அதெல்லாம் சூடு,சொரணை உள்ளவங்ககிட்டே வைச்சிக்கோங்க!

ஹர்பஜன்: சார், நான் அடிச்சது உண்மை சார்! என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கணும்னே இப்படி ஸ்ரீசாந்த் பொய் சொல்றான் சார்!

ஸ்ரீசாந்த்: பஜ்ஜி, நீ என்னை அடிக்கலே! இடிச்சே. நல்லா யோசிச்சுப்பாரு!

ஜேட்லி: வேறே வழியே இல்லை. நான் மோடிக்குப் போன் போட்டுப் பேசறேன்.

சுக்லா: என்னது? வரவர பா.ஜ.க.காரங்க சுஸ்ஸூ போறதுக்குக்க் கூட, மோடி மோடின்னு பறக்கறீங்க? குஜராத்துலே இருந்தவருக்கு இந்தச் சண்டையைப் பத்தி என்னய்யா தெரியும்?

ஜேட்லி: ஐயோ நீர் வேற, நான் லலித் மோடியைச் சொன்னேன்யா! அப்போ அவர்தானே ஐ.பி.எல்.சேர்மனா இருந்தாரு! லண்டனுக்கு போன் போட்டுக் கேட்கறேன்.

சுக்லா: கேட்டா சொல்லுவாரா?

ஜேட்லி: நாம என்ன அவரு சுருட்டின பணத்தைப் பத்தியா கேட்கப்போறோம்?

சுக்லா: அதுவும் சரிதான், முடிஞ்சா எப்படி அவ்வளவு பணம் சுருட்டினாருன்னு கேட்டுத் தெரிஞ்சு வைச்சுக்கோங்க! அடுத்த வருஷம் எலெக்‌ஷன் வருதில்லே!
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா

Post by Muthumohamed on Thu 30 May 2013 - 20:31

(ஜேட்லி லலித் மோடியோடு பேசுகிறார். பேசி முடித்து விட்டு…)

ஜேட்லி: சுக்லாஜி! மோடி கிட்டே சி.டியே இருக்காம்!

சுக்லா: நல்லதாப்போச்சு! நமக்கு ஒரு காப்பி அனுப்பச் சொல்லுங்க! கிடைக்கிற அமவுண்ட்டுலே அவருக்கும் ஒரு பர்ஸண்டேஜ் கொடுத்திரலாம்.

ஜேட்லி: நாசமாப் போச்சு! யோவ், ஹர்பஜன் ஸ்ரீசாந்தை அடிச்ச சி.டி அவருகிட்டே இருக்காம்யா!

சுக்லா: அதைத் தெளிவா சொல்றதில்லையா? எதுக்கு பி.சிதம்பரம் மாதிரி சுத்தி வளைச்சுப் பேசறீங்க?

ஜேட்லி: ஸ்ரீசாந்த்! நீ சொல்றதெல்லாம் பொய்! அன்னிக்கு நீ ஹர்பஜன் கிட்டே அடிவாங்கியிருக்கே! அதுக்கான ஆதாரம் மோடிகிட்டே இருக்கு!

ஸ்ரீசாந்த்: ஐயையோ, அவன் என்னை அடிக்கலே சார். இடிச்சான் சார்!

ஹர்பஜன்: புளுகறான் சார், நான் சத்தியமா அடிச்சேன் சார்! வேணும்னா ஜஸ்டிஸ் மாயாவதிகிட்டே கேளுங்க!

ஜேட்லி: அது ஜஸ்டிஸ் மாயாவதி இல்லை; ஜஸ்டிஸ் நானாவதி!

சுக்லா: இவங்களோட பெரிய பாடாவதியா இருக்கே ஜேட்லிஜீ!

ஸ்ரீசாந்த்: என்னை நம்புங்க சார், அவன் என்னை அடிக்கலை; இடிச்சான்!

ஜேட்லி: அவன் இடிச்சதுக்கா அப்படி அழுதே நீ? ஹர்பஜன், அவனை ஒருவாட்டி இடி; அழுறானா பார்க்கலாம்!

ஹர்பஜன்: சார், எனக்கு இடிக்கவே தெரியாது சார்! நல்லா உறைக்கிறா மாதிரி அடிப்பேன் சார்! என்னைப் போயி புதுசா இடிக்கச் சொன்னா எப்படி சார்?

சுக்லா: சரிப்பா, நீ ஆஃப் ஸ்பின்னர், அப்பப்போ கூக்ளி போடுறதில்லையா? அந்த மாதிரி நினைச்சுக்கிட்டு ஸ்ரீசாந்தை ஒருவாட்டி இடிச்சுத்தான் பாரேன்! நல்லா வரும்! பிற்காலத்துலே உனக்கே உதவலாம்பா!

ஹர்பஜன்: கொஞ்சம் நெட் ப்ராக்டீஸ் பண்ணிட்டு வரட்டுமா?

ஜேட்லி: என்னது, விட்டா மைக் டைஸனைக் ஓவர்சீஸ் கோச்சா அப்பாயிண்ட் பண்ணச் சொல்லுவே போலிருக்கே? ஒரே ஒரு இடி இடிக்கிறதுக்கா இம்புட்டு அழும்பு?

ஹர்பஜன் தயங்கி, பிறகு ஸ்ரீசாந்தை முழங்கையால் இடிக்க…

ஸ்ரீசாந்த்: சார், கிச்சுக்கிச்சு முட்டுறான் சார்!


ஜேட்லி: என்னய்யா, சின்னப்புள்ளத்தனமா இருக்கே!

சுக்லா: ஜேட்லிஜி, இது சரிப்பட்டு வராது! உங்க கையாலே ஒரு வாட்டி இடியுங்க!

ஜேட்லி: இதோ…

சுக்லா: ஐயோ…யோவ், என்னை இடிக்கச்சொல்லலைய்யா! ஸ்ரீசாந்தை இடிக்கச் சொன்னேன்!

ஜேட்லி: ரெண்டு பேருமே ஆளுக்கு ஒரு இடி கொடுத்தா என்ன? ஒருமித்த கருத்து ஏற்பட வசதியா இருக்குமே?

சுக்லா: வெரிகுட்!

சுக்லாவும், ஜேட்லியும் ஸ்ரீசாந்தை ஆளுக்கு ஒரு இடி இடிக்க, ஸ்ரீசாந்த் அசைவற்று அப்படியே நிற்க…

ஜேட்லி: ஏம்பா ஸ்ரீசாந்த், ஹர்பஜன் ஒரு இடி இடிச்சதுக்கு அப்படி ஓன்னு அழுதியே! இப்போ நாங்க ரெண்டு பேரு ரெண்டு இடி இடிச்சும் இடிச்ச புளியாட்டம் நிக்கிறியே! அப்போ வந்த அழுகை இப்போ ஏன் வரலே? சொல்லு! ஏன் அழலை?

ஸ்ரீசாந்த்: எப்படி சார் அழுகை வரும்? எப்படி வரும்? அன்னிக்கு ப்ரீத்தி ஜிந்தா இருந்தாங்க! நான் அழுதபோது ஒவ்வொருத்தரா வந்து கட்டிப்புடிச்சாங்க. நானும் அழுதிட்டேயிருந்தேன். கடைசியிலே ப்ரீத்தி ஜிந்தா வந்து கட்டிப்புடிச்சதும்தான் அழுறதை நிறுத்தினேன். நீங்க வேண்ணா ப்ரீத்தி ஜிந்தாவைக் கூட்டிட்டு வந்து என்னை இடிச்சுப்பாருங்க! அப்புறம் பாருங்க… நான் எப்படி அழுறேன்னு…..ஆமாம்…

ஜேட்லியும், சுக்லாவும் இடிவிழுந்தது போல அதிர்ந்து போய் நிற்க, ஹர்பஜன் மூர்ச்சையாகிறார்.

- பின்குறிப்பு : இந்தக் கட்டுரையில் வந்தவை அனைத்தும் கற்பனையே. யாரையும் புண்படுத்த அல்ல. –

நன்றி அதீதம்.காம்
ராஜு சரவணன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா

Post by பானுஷபானா on Fri 31 May 2013 - 7:01

:” :”
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum