சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மும்பை நீர்மூழ்கி கப்பல் வெடித்து தீப்பிடித்தது18 கடற்படை வீரர்களை மீட்க தீயணைப்பு படையினர்

Go down

Sticky மும்பை நீர்மூழ்கி கப்பல் வெடித்து தீப்பிடித்தது18 கடற்படை வீரர்களை மீட்க தீயணைப்பு படையினர்

Post by *சம்ஸ் on Wed 14 Aug 2013 - 8:22

மும்பை, ஆக. 14–




மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பல் நிறுத்தும் தளத்தில் ஐ.என்.எஸ்.சிந்து ராக்ஸாக் என்ற அதி நவீன நீர்மூழ்கி கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதில் 3 அதிகாரிகள் உள்பட 18 கடற்படை வீரர்கள் இருந்தனர். நேற்று இரவு திடீர் என்று இந்த நீர்மூழ்கி கப்பலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே கப்பலில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது.
கப்பலின் அடித்தளம் கடல் தண்ணீரில் மூழ்கி இருக்க மேல் தளம் மட்டும் வெளியே தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கப்பலின் வெளியே உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும்.
கப்பலில் தீப்பிடித்ததும் மும்பையில் இருந்து 16–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் கடற்படை தளத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கப்பல் அடியோடு எரிந்து நாசமானது. தீப்பிடித்ததும் உள்ளே இருந்த ஆக்ஸிஜன் பயங்கரமாக எரிந்தது. இதனால் கப்பல் முழுவதும் எரிந்து மூழ்கி விட்டது.
தீப்பிடித்த நீர்மூழ்கி கப்பலில் இருந்த 18 கடற் படைவீரர்கள் உள்ளே சிக்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தீப்பிடிக்க தொடங்கியதும் அவர்கள் உயிர்தப்ப கடலில் குதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 18 வீரர்களும் மாயமாகி விட்டார்கள். அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. கடல் பகுதியில் தத்தளித்தபடி இருக்கிறார்களா? அல்லது நாசமான நீர்மூழ்கி கப்பலில் சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி நடை பெறுகிறது.
கப்பலில் தீப்பிடிக்கும் முன் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது பற்றி துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் கூறும் போது, ‘‘நான் வேலை செய்து இருந்த போது திடீர் என்று பயங்கர வெடிச்சட்டம் கேட்டது, நான் பார்த்த போது வானம் சிகப்பு நிறத்தில் மாறியது. அங்கு நீர்மூழ்கி கப்பல் எரிந்து கொண்டு இருந்தது’’ என்று தெரிவித்தார்.
கப்பலில் வெடிச்சத்தம் கேட்டதால் இது தீவிரவாதிகள் நாச வேலையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்கும் செயலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
மேலும் குஜராத் கடல் பகுதியாக தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் இருப்பதால் கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கராச்சியில் இருந்து குஜராத் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினார்கள்.
எனவே அதே மாதிரி இப்போதும் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் இந்த தகவல் எந்த மட்டத்தில் இருந்தும் உறுதிப்படுத்தப்படவில்லை.
நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்த கடற்படையும், கப்பல் வாரியமும் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கப்பலில் தீப்பிடித்ததற்கான தெளிவான காரணம் தெரியவரும்.
நீர்மூழ்கி கப்பலில் தீப்பிடித்ததும் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு நீர்மூழ்கி கப்பல் வேகவேகமாக வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அவை தப்பின. நள்ளிரவில் பிடித்த தீ அதிகாலை 3 மணிக்கு முற்றிலும் அணைக்கப்பட்டதாகவும் 18 வீரர்களை தேடும் பணி நடைபெறுவதாகவும் கடற்படை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தீவிபத்து ஏற்பட்ட நீர்மூழ்கி கப்பலின் துணை அதிகாரி பி.எஸ்.ரகன்தலே மும்பை இந்தியா கேட் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் நீர்மூழ்கி கப்பல் வெடித்து தீப்பிடித்தது. உடனே அவர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தினரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கப்பலில் பிடித்த தீ தெற்கு மும்பையின் பெரும்பாலான பகுதியை சூழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மும்பை துறைமுகத்திலும், மும்பையிலும் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum