சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்

Go down

Sticky ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்

Post by *சம்ஸ் on Mon 14 Feb 2011 - 6:38


சென்னை : நடிகர்கள் ஆர்யா, கருணாஸ், சின்னி ஜெயந்த், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உள்பட 76 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். அதே போல் பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி மற்றும் சின்னத்திரை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்தது. இதே போன்று 2007,2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, கலைமாமணி மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்று விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி பேசினார். அமைச்சர் பரிதி இளம்வழுதி வாழ்த்தி பேசினார். இதில் மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்

Post by *சம்ஸ் on Mon 14 Feb 2011 - 6:40

விழாவில், பாரதி விருது &எழுத்தாளர் ஜெயகாந்தன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது &இசையமைப்பாளர் இளையராஜா, பாலசரசுவதி விருது&பரத நாட்டிய கலைஞர் பத்மாசுப்ரமணியம் ஆகியோர் பெற்றனர். 2008ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர்& கருணாஸ், ஒளிப்பதிவாளர்&ராஜீவ்மேனன், இசையமைப்பாளர்&பரத்வாஜ், இயக்குனர்& திருமுருகன் உள்பட 27 பேருக்கும், 2009ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர்& சின்னி ஜெயந்த், குணச்சித்திர நடிகைகள் ரோகிணி, சரண்யா, நடிகைகள் மாளவிகா, ரேவதி சங்கரன், நாட்டுப்புற பாடகி தஞ்சை சின்னப்பொன்னு உள்பட 23 பேருக்கும் வழங்கப்பட்டது.

அதே போல, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர்&ஆர்யா, நடிகைகள்&அனுஷ்கா, தமன்னா, பட்டிமன்ற பேச்சாளர்& திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட 26 பேர் பெற்றனர். சிறந்த கலை நிறுவனத்திற்கான விருதை மதுரை தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், சிறந்த நாடகக்குழுக்கான விருதை சென்னை முகவை கலை மன்றத்திற்கும் வழங்கப்பட்டது.

2007ம் ஆண்டிற்கான சின்னத்திரை விருதுகளில், சிறந்த நெடுந்தொடருக்கான விருது கோலங்கள் சீரியலுக்கும்,
சிறந்த சாதனையாளர் விருது& நடிகை ராதிகா, சிறந்த கதாநாயகன் விருது& விஜய் ஆதிராஜ் (லட்சுமி), சிறந்த கதாநாயகி விருது& நடிகை தேவயானி (கோலங்கள்), சிறந்த வில்லி நடிகை& நளினி (பந்தம்) ஆகியோர் உள்பட 20 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளில், நெடுந்தொடருக்கான முதல் பரிசு விருது&ஆனந்தம் சீரியலுக்கும், 2ம் பரிசு விருது&நம்ம குடும்பம் சீரியலுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது& ஒய்.ஜி.மகேந்திரா, சிறந்த கதாநாயகன் விருது& சஞ்சீவ் ( திருமதி செல்வம்), சிறந்த கதாநாயகி& சுகன்யா (ஆனந்தம்) ஆகியோர் உள்பட 21 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம், ரொக்கம், நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum