சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

15 வயதில் 200 பதக்கங்கள்!

Go down

Sticky 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by ராகவா on Sun 9 Feb 2014 - 12:57


15 வயதுக்குள் தடகளப் போட்டிகளில் 2 மாநிலச் சாதனைகளை முறியடித்தவர், தேசிய தடகளப் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ஓட்டத்தில் மான், நினைத்ததை செய்து முடிக்கும் அசாத்திய திறமை, கண்களில் வெற்றி தாகம் என வலம் வருபவர்.
17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை புரிந்து தங்க மங்கையாக வலம் வருகிறார் வி. தமிழ்ச்செல்வி. சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி 200 மீட்டர் தடகளத்தில் புதிய சாதனையைச் செய்துள்ளார். சுமார் 9 ஆண்டுகளாக இருந்த சாதனையை உடைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டவர்.
சென்னை ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வரவிருக்கும் தேசியப் போட்டிகளுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியுடன் பேசியதிலிருந்து...
தடகளத்தில் நுழைந்தது எப்படி...
சிறுவயதிலேயே எனக்கு தடகளப் போட்டிகள் மீது ஆர்வம். எல்கேஜி படிக்கும்போதே பள்ளி விளையாட்டுகளில் கலந்துகொண்டேன். அப்போது எனது ஆசிரியர் அளித்த ஊக்கம் காரணமாக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டேன். அதன் பின்னர் எனக்கு ஆர்வம் அதிகமாகி விட்டது. முதலில் பள்ளி விளையாட்டுப் போட்டிகள், பின்னர் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டேன். பின்னர் பயிற்சியில் ஈடுபட்டு என்னை மெருகேற்றி இப்போது மாநிலச் சாதனைகள் வரை வந்துவிட்டேன்.
சமீபத்தில் நீங்கள் முறியடித்த சாதனை குறித்து....
சமீபத்தில் கோவையில் நடந்த குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்கம் வென்றேன். இந்தப் போட்டியின் 17 வயதுக்குள்பட்டோர் 200 மீட்டர் ஓட்டத்தை 25.8 விநாடிகளில் கடந்தேன். இது ஒரு புதிய சாதனை. இதற்கு முன்பு 26.1 விநாடிகளில் இந்தத் தூரத்தைக் கடந்ததே சாதனையாக இருந்தது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சாதனையை முறியடித்துள்ளேன். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில ஓபன் தடகளப் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றேன். இது நடந்த 2012-இல். அப்போது 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்றேன். இதுவும் ஒரு மாநில அளவிலான சாதனைதான். பந்தய தூரத்தை நான் 12.6 விநாடிகளில் கடந்தேன். இதற்கு முந்தைய சாதனை 12.8 விநாடிகள். இந்த 2 சாதனைகளைச் செய்ததன் மூலம் மேலும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன்.
பயிற்சி நேரம்...
நான் இப்போது தண்டையார்பேட்டை டி.எஸ்.டி. ராஜா உயர்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். படிப்பு நேரம் பள்ளியிலும், தினமும் காலை, மாலை என 7 மணி நேரம் தீவிர பயிற்சி செய்து வருகிறேன்...
தடகளப் போட்டிகளில் நீங்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் பிரிவுகள்...
100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டங்களில் பங்கேற்று வருகிறேன்.
பங்கேற்ற போட்டிகள்.. வென்ற
பதக்கங்கள்....
இதுவரை 3 தேசியப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளேன். 2012-இல் புணேவில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 2013-இல் கொச்சியில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 2013-இல் பெங்களூரில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்றேன். மேலும் அதே போட்டியில் தொடர் ஓட்டத்தில் தங்கமும் வென்றேன். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளேன்.
எனது பள்ளி உடற்கல்வி ஆசிரியை மங்கள செந்தாமரை. அவரது தூண்டுதலின்பேரில்தான் நான் அதிக அளவில் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். இப்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி) பயிற்சியாளர் ராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறேன். விரைவில் நடைபெறவிருக்கும் மாநில ஓபன் தடகளப் போட்டிக்காகத் தயாராகி வருகிறேன். இந்தப் போட்டியிலும் அதிக சாதனைகளைப் படைக்க விரும்புகிறேன்.
- வா. சங்கர்.
படம்: எஸ். அருண்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by Muthumohamed on Sun 9 Feb 2014 - 15:00

15 வயதி 2000 பதக்கங்களா ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது இவரின் பதக்க வேட்டை தொடரட்டும்

இவரை போன்றவர்களின் செய்திகளை போடாமல் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது தான் கொடுமையிலும் கொடுமை
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by SAFNEE AHAMED on Sun 9 Feb 2014 - 15:42

ஆமா ல எப்படி உங்களால் மாத்திரம் இப்படி ஒரு யோசனை ? :/  :/
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by ahmad78 on Sun 9 Feb 2014 - 16:52

இவரை போன்றவர்களின் செய்திகளை போடாமல் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது தான் கொடுமையிலும் கொடுமை

உண்மைதான் முஹம்மத்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by ராகவா on Sun 9 Feb 2014 - 16:53

ahmad78 wrote:
இவரை போன்றவர்களின் செய்திகளை போடாமல் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது தான் கொடுமையிலும் கொடுமை

உண்மைதான் முஹம்மத்
 !_  !_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by மீனு on Sun 9 Feb 2014 - 16:56

வாழ்த்துக்கள் )( 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by rammalar on Mon 10 Feb 2014 - 17:09

இந்த புகைப்படத்தில் இருப்பது தமிழ்ச்செல்வியா..?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by ராகவா on Mon 10 Feb 2014 - 17:12

rammalar wrote:இந்த புகைப்படத்தில் இருப்பது தமிழ்ச்செல்வியா..?
-
படத்தை பார்க்க முடியல ...
இருக்கலாம் ..இல்லாமலும் இருக்க வாய்ப்பு உண்டு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 15 வயதில் 200 பதக்கங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum