சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Tue 13 Nov 2012 - 3:04-
வீட்டுக்குப் போற வழியிலே அப்படியே…கோயிலுக்குப் போயிட்டு
போகலாம்…!
-
ஏன் மாலா?
-
சேலை நல்லபடியா செலக்ட் ஆனா, உங்க தலையில தேங்காய்
உடைக்கிறதா வேண்டியிருக்கேன்..!
-
>அ.ரியாஸ்
-
——————————————
-
தலைவர் ஒவ்வொரு வருஷமும் தீபாவளியை ஜெயில்லே
போய் கைதிகளுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடுவார்..!
-
இந்த வருஷம்?
-
கைதியாவே ஜெயில்ல இருந்து கொண்டாடுறார்..!
-
>கே.ஆனந்தன்
-
——————————————

என்னதான் பட்டாசு ஆலை நிலமா இருந்தாலும், அதுக்குப்
பட்டாதான் வாங்கமுடியும், ‘பட்டாசு’ வாஙக முடியாது..!
-
>அ.பேச்சியப்பன்
-
—————————————
-
ஏன் தீபாவளி முடிஞ்சு ஒரு வாரம் ஆகி,  ஜோரா பட்டாசு
வெடிக்கிறீங்க?
-
என் மாப்பிள்ளை ஊருக்கு கிளம்பிட்டார்..!
-

—————————————
தீபாவளி தத்துவம்
—————

என்னதான் லேட்டஸ்ட் டெக்னாலஜி பட்டாசா இருந்தாலும் அதுலயும்
‘திரி’தான் இருக்கும்,  ..ஃபோர், ஃபைவ் எல்லாம் இருக்காது..!
-
>அ.பேச்சியப்பன்
-
—————————————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sat 5 Apr 2014 - 15:41


பொய்தான் பிடிக்கும் போலும் அரசியல்வாதிகளுக்கு...!
-
எப்படி சொல்றே?
-
கதராடையை பொன்னாடை என்று சொல்லித்தானே
அவர்களுக்கு போர்த்தாறாங்க..!
-
-------------------------------------------
-
தலைவர் ஏன் பொதுக்குழுவை உடனே கூட்டணும்னு
சொல்றாரு?
-
அவருக்கு மகளிர் அணித் தலைவியைப் பார்க்கணும்
போல இருக்காம்..!

-
----------------------------------------
-
என்ன தைரியம் இருந்தா கார்ல போயி நகைக்கடைல
திருடியிருப்பே?
-

அவங்கதான் எசமான் 'கார் பார்க்கிங்' வசதி உண்டுன்னு
விளம்பரம் பண்ணியிருந்தாங்க...!
-
------------------------------------

(படித்ததில் பிடித்தது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sat 5 Apr 2014 - 15:42


-
நான் வீணை வாசிக்க கத்துக்கிட்டா, என் மாமியாரும்
வீணை கத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க...!
-
அப்ப அந்த ஒரு வீணைக்கும் எதிர் வீணை உண்டுன்னு
சொல்லு...!
-
-----------------------------------------
-
தளபதியாரே...இம்முறை எதிரி மன்னன் நம்மீது தரை
வழித்தாக்குதல் நடத்தப் போகிறானா...வான் வழித்
தாக்குதல் நடத்தப் போகிறானா?
-
நாம் வழக்கமா எஸ்கேப் ஆகும் ரூட் தெரிந்து விட்டதாம்...
அதனால் குறுக்கு வழித் தாக்குதல் நடத்தப் போகிறானாம்
மன்னா..!

-
-----------------------------------------
-
ஏன் எதிர்கட்சிக்காரங்க எல்லாரும் தலைவர் பக்கத்துல
போய் முண்டி அடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க..?
-
அவருக்கு நெருக்கடி தர்றாங்களாம்..!
-
-------------------------------------------

(படித்ததில் பிடித்தது)
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sat 5 Apr 2014 - 15:45‘மன்னர் ஏன் அரண்மனைப் பணியாளர்களிடம் கத்திக்

கொண்டு இருக்கிறார்?’’ ‘‘

போர்க்களத்திலிருந்து வருவதற்குச் சிறிது தாமதமானாலும்
 மன்னரின் படத்துக்கு மாலை மரியாதை செய்து
விடுகிறார்களாம்!’’
-
-----------------------------------------------------
-


‘‘தங்கள் வீரத்தைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளே
கிடையாது மன்னா!’’ ‘

நன்றி புலவரே! தங்கள் புலமையைப் பாராட்டிப் பரிசளிக்க
என்னிடமும் பொற்காசுகள் கிடையாது!’’

-
என்.ராஜேந்திரன்
-
------------------------------------------
-
தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய நமது வீரர்களை
எல்லாம் மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?’’ ‘‘

ஆமாம்! அவர்கள் தோண்டிய சுரங்கம் அரண்மனையின்

தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது!’’

- வாராவதி  
-
-----------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sat 5 Apr 2014 - 15:49‘மன்னா! நமது படைக்கு தலைமை தாங்கிச் செல்ல
ஒரு பெண்ணை ஏன் நியமித்தீர்கள்?’’ ‘‘

அதனால் என்ன அமைச்சரே?’’

‘‘வீரர்கள் ‘தளதள’பதி என்றுஜொள்ளுவிட்டு
அவர் பின்னாலேயே சுற்றுகிறார்கள்!’’
-

--சென்னிமலை சி.பி.செந்தில்குமார்
---------------------------------------------

‘‘அந்தப்புரத்தில் பிரிவு உபசார விழாவா?’’

‘‘ஆமாம்! மன்னருக்கு வயதாகிவிட்டதால்
இனிமேல் அங்கு போக மாட்டாராம்!’’

- அ.ரியாஸ் 
-
---------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sun 6 Apr 2014 - 10:15

அரண்மனையில் இன்று என்ன விசேஷம்..?

-

துச்சாதன்னுக்கு 'சேலை உரிஞ்சான்' னு

பட்டம் வழங்கும் விழா நடக்கப் போகுதாம்..!
-
>.ராஜாஜி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky சிரிப்பலையில் நனையலாம் வாங்க..!

Post by rammalar on Sun 6 Apr 2014 - 10:18


-
    ""ராதாவுக்கு பத்து ரூபாய் கடன் கொடுத்தேன். அதில்
      ஒரு ரூபாய் திருப்பித் தந்துவிட்டாள்...ஒன்பது ரூபாய்
     தரவில்லை. அவளை என்ன சொல்லுவ''

    ""நயன்'தாரா''

    .................................................. .
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sun 6 Apr 2014 - 10:19


    ""உங்க பேங்க்ல கால்நடைக்கு லோன் கொடுப்பீங்களா?''

    ""கண்டிப்பா!''

    ""அப்படின்னா நான் பக்கத்து ஊர்ல இருந்து கால்நடையா
      18 கிலோமீட்டர் நடந்த வந்திருக்கேன்; எனக்கு உடனே
      லோன் கொடுங்க'!:

    ..................................................
-
    ""உங்க ஆஃபீஸ்ல மரம் நடுவிழா கொண்டாடுனீங்களே
      என்ன மரம் நட்டீங்க?''

    ""தூங்கு மூஞ்சி மரம்''


    ..................................................

    ""உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே,
      காஞ்சிப்பட்டா?ஆரணிப்பட்டா?''

    ""கடன் பட்டு "

    ..................................................

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sun 6 Apr 2014 - 10:19


    ""ஆபரேசனுக்கு பின்னாடி கண் நல்லாத் தெரியும்னு
       டாக்டர் சொன்னார்''

    ""நல்லாத் தெரியுதுங்களா?''

    ""பின்னாடி எங்க தெரியுது. இப்பவும் முன்னாடிதான் தெரியுது''

    ..................................................

    ""பயில்வானுக்கு இரண்டு குழந்தைகளா?''

    ""ஆமாம். ஆஸ்திக்கு ஒண்ணு, குஸ்திக்கு ஒண்ணு''

    ......................................


    ""நீயும் உன் தம்பியும் எப்பவும் ரொட்டி சாப்பிடுறீங்களே''

    ""நாங்க ரொட்டி சகோதரர்கள்''
    ..................................................

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sun 6 Apr 2014 - 10:21    'பேங்க் மேனேஜர்: என்னை ஏன்யா கட்டிப் பிடிக்கிறாய்?'

    வந்தவர்: உங்களைப் பிடிச்சா லோன் கிடைக்கும்னு
    சொன்னாங்க'

    ...............................................

    வேலைக்காரன்: சாவியை என்னிடம் பொறுப்பாக
   வைத்திருக்கச் சொல்லி குடுத்தீங்களே...

    வீட்டுக்காரர்: அதுக்கென்ன?

    வேலைக்காரன்: இந்த சாவி எந்த பூட்டுக்கும் சேரலையே...

    ..................................................

    ""பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?''

    ""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!''

    .................................................
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky உடம்பு கொஞ்சங்கூட வத்தல .குண்டாவேதான் இருக்கு''

Post by rammalar on Sun 6 Apr 2014 - 10:24

.    ""அவர் ஏன் ஒளிந்து ஒளிந்து மாவு அரைக்கிறார்?''

    ""நைஸா அரைச்சிட்டு வரச் சொன்னாங்களாம்
     அவரின் மனைவி''

    ..................................................

    ""டாக்டர், நீங்க எழுதிக்கொடுத்த மருந்தில உடம்பு
      கொஞ்சங்கூட வத்தல .குண்டாவேதான் இருக்கு''

    ""அப்படியா? உங்களுக்கு எந்த ஊருன்னு சொன்னீங்க?''

    ""வத்தல குண்டு''

    ..................................................


    ""தலைவருக்கு பொதுஅறிவு கம்மின்னு எப்படிச் சொல்ற?''

    ""ஃபேஸ்புக் எந்தக் கடையில கிடைக்குமுன்னு கேட்கிறாரு''

 
    ""இதுதான் சங்ககாலம்னு எப்படிச் சொல்றீங்க?''

    ""இந்தக் காலத்திலதான் எல்லாத்துக்கும் சங்கம்

       வச்சிருக்காங்களே, அதான்''
-
    .................................................. ......
-
    ""ஏம்பா! சர்வர் சரக்கு மாஸ்டர் ஸ்பெஷலா என்னப்

      போட்டிருக்கார்?''

    ""லீவ் போட்டு இருக்கார் சார்!''
-

---------------------------------------------------------------


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky சில நகைச்சுவைகள் - இணையத்தில் படித்தது

Post by rammalar on Sun 20 Apr 2014 - 8:35

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sun 20 Apr 2014 - 8:38


முதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய

கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.
-
-----------------------------------------------------
-
தங்கை: பாட்டியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு

கொடுப்போம்?
-
அண்ணன்: கால்ப்பந்து.

-
தங்கை: பாட்டி கால்பந்து விளையாடமாட்டா!

-
அண்ணன்: எனது பிறந்த நாளுக்கு அவ மட்டும்

புத்தகம் பரிசாகத் தரலாமா?
-
---------------------------------------------------
-
கணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள்.

கணவன் மன்னிப்புக் கேட்டான்.மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான்.

மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக்

கேட்டான்
-
---------------------------------------------------
-

லஞ்சம் பற்றிய கீழ்கண்ட ஜோக் சிரிப்பை
வரவைத்தாலும் சிந்திக்கவும் வைத்தது......

-

ஒரு பிச்சைக்காரன் நூறு ரூபாத்தாள் ஒன்றைக்
கண்டெடுத்தான். ஆடம்பர உணவகத்திற்கு சென்று
மூவாயிரம் ரூபாக்களுக்கு உணவருந்தினான்.
பணம் கொடுக்காததால் உணவகம் அவனை காவற்
துறையிடம் ஒப்படைத்தது. காவற்துறைக்கு நூறு
ரூபாவைக் இலஞ்சமாகக் கொடுத்துத் தப்பித்துக்
கொண்டான்.
இது இந்திய நிதி முகாமைத்துவம்.
-
--------------------------------------------------------

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky பிரிக்கவே முடியாதது ஊறுகாயும் உற்சாகபானமும்..!

Post by rammalar on Sun 20 Apr 2014 - 18:36

-
தலைவருக்கு சமயோசித அறிவு அதிகம்னு எப்படி
சொல்றே?
-
பிரிக்கவே முடியாதது எதுன்னு கேட்டதுக்கு,
ஊறுகாயும் உற்சாகபானமும்னு ரைமிங்கா பதில்
சொல்றாரே...!

-
>லெ.நா.சிவகுமார்
-
---------------------------------- ---------------
-
தலைவர் விவரம் புரியாதவரா இருக்காரு..!
-
எப்படிச் சொல்றே?
-
கட்சிக் கட்டுப்பாட்டை மீறினவங்க மேல்
நடவடிக்கை எடுக்கச் சொல்லி, போலீஸ்
கட்டுப்பாடு அறைக்கு போன் செய்யறாருப்பா..!
-

>பி.கார்த்திகேயன்
-
-------------------------------------------------
-
தலைவர் வீட்டுல ஆரத்தி தட்டோட நிக்கிறாங்களே..யார்
அவங்க?
-
ரெய்டுக்கு வர்றவங்கள வரவேற்கிற வரவேற்புக் குழுவாம்..
!
-
>ஷிவானி
-
--------------------------------------------------------
நன்றி: வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sun 20 Apr 2014 - 18:50

கூட்டணித்தலைவர் கிட்ட என்ன கோரிக்கை
வைக்கிறார் தலைவர்?
-
கூட்டணியிலே சீட் தரலைனாலும் பரவாயில்லை.
உங்க கட்சி மகளிரணித் தலைவியின் மொபைல்
எண்ணாவது குடுங்கன்னு கேட்கிறார்..!

-
>வி.சகிதா முருகன்
-
--------------------------------------------------
-
கட்சி ரொம்பவும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்குது?
-
எப்படிக் கண்டு பிடிச்சே?
-
தலைவர் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்யும்போது
உங்களின் விலையில்லா ஓட்டுக்களை எங்களுக்கு
செலுத்துங்கன்னு சொல்றாரே..!

-
>கிருத்திகா
-
-----------------------------------------------
-
உனக்கு எப்படி சீட் கிடைச்சுது?
-
தலைவரைப் புகழ்ந்து 'கருத்துக் கணிப்பில் வென்ற
பிரதமரே'ன்னு பேனர் வெச்சேன்..!
-

>க.மனோபால்
-
===================================================
நன்றி: வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by ராகவா on Mon 21 Apr 2014 - 13:26

அத்தனையும் மிக அருமை...என் நன்றிகள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by ahmad78 on Tue 22 Apr 2014 - 15:50

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 22 Apr 2014 - 15:57

அருமையான தொகுப்பு ரசித்து ருசித்தேன் பாராட்டுகள் நன்றி
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by நண்பன் on Tue 22 Apr 2014 - 16:00

சிரிப்பதற்கு சில நொடிகள் இங்கு வந்து சென்றால் போதும் அருமை அருமை தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Wed 23 Apr 2014 - 15:22


“ஜெயிலுக்குள்ள இருக்குற தலைவர்கிட்ட
குழந்தைக்கு பேர் வைக்கச் சொன்னது தப்பாப்
போச்சு”
-
“”அப்படி என்ன பேர் வச்சுட்டார்?”
-
“”கம்பிராஜன்”

அ.பேச்சியப்பன்,
-
—————————————
-
பக்கத்து வீட்டுக்காரி எறிந்த பூரிக்கட்டை என்
வீட்டுக்குள் இருந்த என் புருஷன் மீது விழுந்து
அடிபட்டிருக்கு.
-
எல்லை தாண்டிய பயங்கரவாதம்னு சொல்லு

-
நெ.இராமன்,
-
———————————-
-
யோவ், என்னய்யா இது ஜெயில் மாதிரி மேடை
முகப்பு போட்டிருக்கே?
-
தலைவா! நீங்கதானே மத்தகட்சிக்காரங்க போடற
மேடை மாதிரி இல்லாம வித்தியாசமான கெட்டப்புல
போடச் சொன்னீங்க!

-
மேகலா ராஜ்குமார்,
-
————————————–
-
காதலன்: யாருப்பா நீ?

சிறுவன்: நீங்க காதலிக்கிறீங்களே ரமா அவங்களோட
தம்பி, அக்காவால இன்னிக்கு பீச்சுக்கு வர முடியலை,
அவ பங்கு சுண்டலை வாங்கிட்டு வரச் சொன்னா!
-
>வி.சகிதா முருகன்,

————————————–.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Wed 23 Apr 2014 - 15:24


“”பொண்ணு நல்லா ஆடுவா, நல்லா பாடுவான்னு
சொன்னவங்க பொண்ணு நல்லா ஓடுவான்னு
சொல்லாம விட்டுட்டாங்க”
-
“”என்னவாச்சு?”
-
“” ஒரே வாரத்துல பழைய காதலனோட ஓடிட்டா!”

-
வி.சகிதா முருகன்,
-
—————————————
-
“எதுக்கெடுத்தாலும் மனைவியைக் கேட்டுச்
சொல்றேங்கிறாரே.. கட்சித் தலைவர் அவரா?
அவர் மனைவியா?”

-
என்.வைத்திலிங்கம்,
-
———————————–
-
“என்ன அவரு தலையிலே முடியையே காணோம்?”
-
“”முடி கொட்டுதேன்னு கவலைப் பட்டிருப்பாரு.
அதான்”

-
தாமெரியோன்,
-
————————————-
-

“இப்படி அடிக்கிறாரு… ஒரு அடி கூட உன் மேல பட
மாட்டேங்குதே”

“”கல்யாணத்துக்கு முன்னாடியே கராத்தே
கத்துக்கிட்டவளாச்சே நான்”
-
தாமரை,
-
—————————————-
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by நண்பன் on Wed 23 Apr 2014 - 15:33

அனைத்தும் அருமை அதிலும் அக்காவுக்காக தம்பி சுண்டல் வாங்கியது இன்னும் நகைச்சுவையாக இருந்தது தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by றஸ்ஸாக் on Wed 23 Apr 2014 - 15:36

அனைத்தும் அருமை நல்ல நகைச்சுவையாக இருந்தது தொடருங்கள்
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Thu 24 Apr 2014 - 3:42


தமிழ் நாட்டில் தாய்மொழிப் பற்று எந்தளவு உள்ளது?

-
சூரியன்னா என்னம்மா ? - சன் குட்டி...
பலாச்சுளைன்னா - ஜாக் ப்ரூட் செல்லம்
எதிர்பார்க்கிறதுன்னா ... எக்ஸ்பெக்ட் பண்றது
ஆராரிரோ பாட்டுன்னா - லல்லுபிடா...
-
அப்போ தாய்மொழின்னா - மதர் டங்..!

-
>கீதா ஆனந்த்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by றஸ்ஸாக் on Thu 24 Apr 2014 - 15:07

இது தமில்மொழிப்பற்றா ?
 இல்லை ஆங்கில மொழிப்பற்றா ?
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum