சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

'இனி எப்ப வேணாலும் சந்திக்கலாம்': மோடி சொல்லிட்டார் என்கிறார் விஜயகாந்த்

Go down

Sticky 'இனி எப்ப வேணாலும் சந்திக்கலாம்': மோடி சொல்லிட்டார் என்கிறார் விஜயகாந்த்

Post by ராகவா on Sun 8 Jun 2014 - 5:38

'என்னை சந்திக்க முடியாததற்கு, மோடி வருத்தம் தெரிவித்தார். இனி, எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; தொலைபேசியிலும் பேசலாம் என, உறுதியளித்து உள்ளார்' என, மாவட்ட செயலர்களிடம், விஜயகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதம் 26ம் தேதி, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு சென்ற, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மோடியை சந்தித்து பேச, தீவிர முயற்சி எடுத்தார். ஆனாலும், மோடியை சந்திக்க முடியவில்லை.அதனால், விரக்தியுடன் சென்னை திரும்பினார்.

அதிருப்தி


அதேநேரத்தில், முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் டில்லி சென்று மோடியையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து திரும்பினார்.'மோடியையும், பா.ஜ., தலைவர்களையும், விஜயகாந்தால் சந்திக்க முடியாததற்கு, அவரது அணுகுமுறையே காரணம்' என, தே.மு.தி.க., நிர்வாகிகள் கருதினர். இதனால், விஜயகாந்த் மீது அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், மாவட்ட செயலர்களிடம், கருத்து கேட்கும் கூட்டத்தை, விஜயகாந்த் நேற்று ரகசியமாக நடத்தினார். ஒவ்வொரு நாளும், 15 மாவட்ட செயலர்கள் வீதம், நான்கு நாட்களில், 59 மாவட்ட செயலர்களிடம், அவர் கருத்து கேட்க திட்டமிட்டு உள்ளார். கடைசியாக, புதுச்சேரி மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளதாக, கூறப்படுகிறது.

15 மாவட்ட செயலர்கள்


நேற்றைய கருத்து கேட்பில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட, 15 மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர்.'மாவட்ட செயலர்கள் யாரும், தங்களது வாகனத்தை கட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தக் கூடாது' என, தே.மு.தி.க., தலைமை உத்தரவிட்டிருந்தது. பத்திரிகைகள், மீடியாக்களுக்கு தகவல் தெரியாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி, கட்சி அலுவலக பின்பக்க வாயில் வழியாக, மாவட்ட செயலர்கள் உள்ளே வந்தனர். காலை 11:35 மணிக்கு, அங்கு வந்த விஜயகாந்த், ஒவ்வொரு மாவட்ட செயலர்களையும், தன் அறைக்கு அழைத்தார். 10 முதல் 15 நிமிடங்கள், தேர்தல் தோல்வி குறித்து கருத்து கேட்டார்.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தோல்விக்கு மாவட்ட செயலர்கள் தான் காரணம் என, 4ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜயகாந்த் பேசினார். இதனால், இறுகிய முகத்துடனேயே, இந்த கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர்.

நிதி குறைவு


தேர்தல் பணிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட, மாநில நிர்வாகிகள் அளித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட செயலர்களிடம், சில கேள்விகளை விஜயகாந்த் எழுப்பினார். தலைமையிடம் கூறியபடி, வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை செய்யவில்லை என, மாவட்ட செயலர்கள் புகார் கூறினர். தலைமை அளித்த தேர்தல் நிதியும் குறைவாக இருந்தது என, சிலர் குற்றம் சாட்டினர்.இதையடுத்து, கட்சியினர் மத்தியில், விஜயகாந்த் பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:தோல்வியால் துவண்டுவிட வேண்டாம். சட்டசபை தேர்தலுக்கு முன், தே.மு.தி.க., எழுச்சி பெற்று விடும். மூன்று நாட்கள் முயற்சித்தும், என்னால் மோடியை சந்திக்க முடியாதது, உங்களுக்கு வருத்தத்தை அளிக்கலாம். அதைப் பற்றி, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

புது திட்டம்


சமீபத்தில், மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர், நிர்வாக காரணங்களால், என்னை சந்திக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். 'இனி, எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; தொலைபேசியில் பேசலாம்' என்றும் கூறினார்.மத்திய அரசு உதவியுடன், கட்சியின் இழந்த செல்வாக்கை மீட்கும் வேலையை, நான் துவங்க இருக்கிறேன். அதற்கான திட்டத்தை, விரைவில் அறிவிக்கிறேன்.இவ்வாறு, விஜயகாந்த் பேசியதாக, தே.மு.தி.க., வட்டாரம் தெரிவித்தது.வெள்ளிக் கிழமை என்பதால், வழக்கமான பிரியாணிக்கு பதில், நேற்று, கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, சைவ உணவு வழங்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் - -
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum