சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் சந்தேக நபர்களை தாக்கிய தேரர்

Go down

Sticky பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் சந்தேக நபர்களை தாக்கிய தேரர்

Post by Naseeb Mohammed on Fri 13 Jun 2014 - 21:59

தர்கா நகர் பிரதேசத்தில் வைத்து பௌத்த தேரரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் மீது பௌத்த தேரர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் நீதிமன்றில்

இன்று தெரிவித்ததாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் .

குறித்த சந்தேகநபர்கள் இன்று நண்பகல் களுத்துறை நீதவான் ஆயிஷா ஆப்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இளம் சட்டத்தரணிகளான எம்.ஐ.எம்.நளீம் மற்றும் சப்ராஸ் ஹம்சா ஆகியோர் சந்தேகநபர்கள் தரப்பில் ஆஜராகியிருந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர் . இன்றைய வழக்கு விசாரணைகள் குறித்து இளம் சட்டத்தரணிகளான எம்.ஐ.எம்.நளீம் மற்றும் சப்ராஸ் ஹம்சா ஆகியோர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“தர்கா நகர் பிரதேசத்தில் வைத்து பௌத்த தேரரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று முஸ்லிம்கள் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.

இன்று 12.30 மணி வரையும் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஜும்ஆ தொழுகைக்காக செல்ல வேண்டும் என நாங்கள் நீதவானிடம் வேண்டிக்கொண்டதற்கமைய உடனடியா இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் முன்னிலையில் பௌத்த தேரரொருவர் தாக்கியதாக அவர் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட போது சிறைக் காவலரொருவர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து களுத்துறை சிறைச்சாலையில் பிரதம சிறைக் காவலர் நீதவானினால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது இது குறித்து எதுவும் தெரியாது என்றார்.

எனினும் குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு தனியாக அழைத்து வருமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் சிறைச்சாலையில் தனியாக வைக்குமாறும் உத்தரவிட்டார். இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.

இவர்களினால் தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் தோரர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையினை நீதவான் கோரினார்.எனினும் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமையினாலும் அடையாள அணி வகுப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளமையினால் பிணை வழங்க முடியாது என தெரிவித்த நீதவான் 25ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியயில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்” என இளம் சட்டத்தரணிகளான எம்.ஐ.எம்.நளீம் மற்றும் சப்ராஸ் ஹம்சா ஆகியோர் தெரிவித்தனர். என விடியல் இணையத்தளம் தெரிவித்துள்ளது .

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமரச முயற்சி

அளுத்கம நகரில் நேற்றைய தினம் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சிறிவர்த்தனவிற்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது

அதன்போது உரையாற்றியுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க இப் பிரதேசத்தில் நிலைமை மேலும் மோசமடைய இடமளிக்கப்படமாட்டாது. பொலிஸார் தற்போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக முஸ்லிம்களுக்கும் பௌத்த தரப்புக்குமிடையில் நேரடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

களுத்துறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திரன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், வக்பு சபைத் தலைவர் அஹ்கம் உவைஸ், பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பதாஹ் ஹாஜி மற்றும் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஜூம்மா தொழுகை இடமாற்றம்

அளுத்கமை, தர்காநகரில் நேற்று இடம்பெற்ற இரு தரப்புகளுக்கிடையிலான முருகல் அடுத்து, இன்றும் பதற்றம் இன்றும் நீடித்தமையால் , நகர்புற ஜும்மா பள்ளிவாசலில் நடைபெறவிருந்தத இன்றைய ஜூம்மா தொழுகை ஊருக்குள் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

வாய்த்தர்க்கத்தை பூதாகாரமாக்கி சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொண்டு பொலிஸாருக்கே சவால் விடுக்கும் அளவுக்கு……. அஸாத் சாலி

அளுத்கம பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை பூதாகாரமாக்கி சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொண்டு பொலிஸாருக்கே சவால் விடுக்கும் அளவுக்கு இன்று பௌத்த அடிப்படை வாத அமைப்புக்களின் கரங்கள் ஓங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அளுத்கம நகரில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அளுத்கம நகரின் ஒரு ஒதுக்குப் புறமான பகுதியில் பெரும்பான்மையின வேன் சாரதி ஒருவருக்கும் வீதியில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்த சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பூதாகாரமாக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளுடன் பேசி உண்மை நிலையை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகளின் போது மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதமும் வீதியில் இளைஞர்கள் கூடி நின்ற விதமும் தவறானதென தெரியவருகின்றது. ஏனைய இனத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தமக்குள் மிகச் சிறந்த ஒழுக்க விதிகளைப் பேணி நடக்க வேண்டும். இல்லையேல் இன்றைய சூழலில் சிறிய பிரச்சினைகள் கூட விஷமத்தனமான பொய் பிரசாரங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வீண் பிரச்சினைகள் உருவாக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த சம்பவத்தோடு தொடர்புடைய வேனின் சாரதி எடுத்த எடுப்பிலேயே இந்த இளைஞர்களை நோக்கி முஸ்லிம்களை கேவலமாகத் திட்டத் தொடங்கியுள்ளார். இவர் உதிர்த்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்த அந்த வேனில் உள்ள பௌத்த மதகுருமார் கூட முயற்சிக்கவில்லை. இதனை அடுத்து ஒரு முஸ்லிம் இளைஞர் இந்த வேன் சாரதியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.

இதைத் தவிர அங்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் அந்த வேனில் இருந்த மதகுருமார் தாங்களும் தங்களது சாரதியும் தாக்கப்பட்டதாக ஊருக்குள் கதையைப் பரப்பி அவ்வாறே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினைக்கு காரணம். மதகுருமார் இவ்வாறு பொய்யாகவும் போலித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளமை மிகவும் வேதனைக்குரியதாகும். அது அவர்களின் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான செயலும் அல்ல.

அப்படியே மதகுருமார் தரப்பில் சொல்லப்படுவது உண்மையாக இருந்தாலும் கூட அவர்கள் காடையர்களோடு பொலிஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கோஷமிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

முஸ்லிம் பிரமுகர்களின் ஏற்பாட்டில் இது தொடர்பாக மூவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டும் உள்ளனர். இனி அவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வழி விட வேண்டும். இதில் மற்றவர்களின் தலையீடும் வற்புறுத்துலும் வேண்டத்தகாத விடயங்களாகும்.

நேற்று இரவு வரை பொலிஸாருக்கு எதிரான கோஷங்களும் வற்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளன. பொலிஸ் மா அதிபர் நேரடியாக ஸ்தலத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடும் இந்தப் பிரிவினர் அளுத்கம நகரில் உள்ள பல முஸ்லிம் கடைகளைத் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்னமும் அளுத்கமை நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள முஸ்லிம் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். எந்தநேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது. இவர்களின் அச்ச நிலை நீக்கப்பட்டு அளுத்கமை நகரில் மீண்டும் அமைதியும் சட்டமும் ஒழுங்கும் திரும்ப பொலிஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சகல மக்களினதும் வர்த்தக நிலையங்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் அமைதியாகவும் விழிப்பாகவும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

அகில இலங்கை ஜம்யஇதுல் உலமா

அலுத்கமயில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேரடியாக எமது அலுத்கம கிளையும் மூலமாக நாம் நிலவரங்களை ஆராய்ந்து , புலனாய்வு செய்து வருகிறோம் , இதற்கான எமது ஒரு பிரிவினர் வேலையில் ஈடுபாடு வருவதாக அகில இலங்கை ஜம்யஇதுல் உலமா தெரிவித்துள்ளது
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum