சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

மோடி மீது கொண்ட நம்பிக்கையால் இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாக்., மணப்பெண்கள்

Go down

Sticky மோடி மீது கொண்ட நம்பிக்கையால் இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாக்., மணப்பெண்கள்

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 17:04

லக்னோ : வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை ஏற்று ஷெரீப்பும் பலவித எதிர்ப்புக்களை மீறி மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுடன், இரு நாட்டு பிரதமர்களும் கை குலுக்கி தங்களின் நட்புறவை பகிர்ந்து கொண்டனர். இச்சம்பவம் இந்திய குடியுரிமை பெற்று, இந்திய மணமகன்களை திருமணம் செய்வதற்காக காத்திருக்கும் பாகிஸ்தான் மணமகள்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி, பாகிஸ்தானுடன் நட்புறவை பெற விரும்புவதால் தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என சுமார் 356 பாகிஸ்தான் மணப்பெண்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் பெண்கள், இந்தியர்களை திருமணம் செய்து கொண்டு சட்டவிரோதமாக இங்கு தங்கி இருப்பதாக உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய ஆண்களை திருமணம் செய்து கொள்வதற்காக இந்திய குடியுரிமை பெறுவதற்கு முறைப்படி விண்ணப்பித்து 356 பாகிஸ்தான் பெண்கள் மட்டுமே காத்திருப்பதாகவும் உ.பி., அரசு தெரிவித்துள்ளது. உ.பி.,யின் அனைத்து மாவட்டங்களிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்கள் இருப்பதாகவும். ஆனால் அதிகபட்சமாக அலிகார் பகுதியில் மட்டும் 42 பெண்கள் இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக முறைப்படி விண்ணப்பித்துள்ளனர்.

சட்டவிரோதமாக உ.பி.,யில் தங்கி இருக்கும் பாகிஸ்தானிய பெண்கள் குறித்த பெரும்பாலான தகவல்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசின் முடிவு வந்த பிறகு நடவடிக்கை எடுக்க காத்திருப்பதாகவும் உ.பி., உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்து நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கும் மணப்பெண்களின் குடும்பத்தினர் தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகள் முடிவுக்கு வந்து, நல்லதொரு நட்புறவு ஏற்பட வேண்டும் எனவும், அவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் பெண்கள் இந்திய குடியுரிமை பெற்று இந்தியர்களை மணந்து கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும் எனவும் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள வியாபாரியான பர்வேஸ் ரகுமான் சித்திக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த பர்வேஸ், 2004ம் ஆண்டு இந்தியா வந்து இந்திய பெண்ணான ஷாம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் நீண்டநாள் விசா பெற்று, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பித்தும் வருகிறார். இவர் மோடி பற்றி கூறுகையில், மோடி மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்; தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு சார்க் நாட்டு தலைவர்களை அழைத்து, அண்டை நாடுகளுடனான நட்புறவை அவர் வலுப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது எங்களுக்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது; பா.ஜ., ஆட்சி காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நட்பு சிறப்பானதாக இருந்துள்ளது தெரிந்த விஷயம் தான் என தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டில் பாகிஸ்தானின் குஜராத்தில் உள்ள குட்ச் பகுதியைச் சேர்ந்த சுமார் 3000 குடும்பத்தினர்கள் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர். இதன் பிறகு, இப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் பாகிஸ்தான் இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, இப்பகுதியில் வசித்த பெரும்பாலான இந்துக்கள் தங்களின் வறுமை நிலையை போக்கிக் கொள்ள இந்திய எல்லை பகுதிக்கு குடியேறினர். தங்களுக்கு நிரந்தர இந்திய குடியுரிமை கிடைப்பதற்கு மோடி உதவுவார் என இப்பகுதி மக்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்துக்களுக்கு மட்டுமே தற்போது குடியுரிமை பெறும் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஆனால் இரு நாட்டு உறவும் பலப்பட்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக போக்கு நிலவினால் அனைத்து மதத்தினரும், இரு தரப்பிலும் திருமண உறவுகளை தொடர முடியும் என பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யைச் சேர்ந்த அன்வர் ஹூசைன் என்ற வழக்கறிஞர், ரேஹானா என்ற பாகிஸ்தானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வந்து சென்றதால், இந்திய குடியுரிமை பெறும் தனது விண்ணப்பம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ரேஹானா கூறுகையில், இரு நாட்டு பிரதமர்களும் கை குலுக்கிக் கொண்டதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; இரு நாடுகளுக்கு இடையே உள்ள பனிக்கட்டி நிச்சயம் உருகும்; நானும் விரைவில் முறைப்படி இந்திய குடியுரிமை பெறுவேன்; அந்த நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என தெரிவித்துள்ளார்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மோடி மீது கொண்ட நம்பிக்கையால் இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாக்., மணப்பெண்கள்

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 1:38

ரேஹானாவின் எண்ணம் மாத்திரமல்ல ...

எனது எண்ணமும் இப்படித்தான் இருக்கிறது....

பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வந்து சென்றதால், இந்திய குடியுரிமை பெறும் தனது விண்ணப்பம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ரேஹானா கூறுகையில், இரு நாட்டு பிரதமர்களும் கை குலுக்கிக் கொண்டதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; இரு நாடுகளுக்கு இடையே உள்ள பனிக்கட்டி நிச்சயம் உருகும்; நானும் விரைவில் முறைப்படி இந்திய குடியுரிமை பெறுவேன்; அந்த நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என தெரிவித்துள்ளார்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum