சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 13:25

First topic message reminder :

"சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்" கவிஞர் ஜெயபாலன்:




முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரபல தென்னிந்திய நடிகரும் ஈழத்துக் கவிஞருமான வ.ஐ.ச. ஜெயபாலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வ.ஐ.ச. ஜெயபாலன் குளோபல் தமிழ் செய்திகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்தாவது:

உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள்.

மேற்கு நாடுகளிலும் மத்தியகிழக்கிலும் வாழும் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தமிழகத்திலுள்ள தமிழ் இஸ்லாமிய தமிழர் அமைப்புகள் தென்னிலங்கை முஸ்லிம்கலைப் பாதுகாக்க தெருவில் இறங்கிக் குரல் கொடுக்கவேன்டும். தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க தவறக்கூடாது.

லண்டனிலும் ஏனைய உலக நகரங்கலிலும் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றுதிரண்டு தென்னிலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேன்டும். இவற்றுக்கான வேண்டுகோள் கூட்டமைப்பு தலைவர்களிடமிருந்தும் தலைவர் சம்பந்தரிடமிருந்தும் வரவேன்டும்.

உலகத் தமிழர்களும் தம்ழக தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சிங்கள பேரினவாதக் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றிடக் கொதித்தெழுந்து குரல் கொடுக்க வேண்டிய தருணமிது

உலகம் முழுவதிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ் ஊடகங்களும் சிங்கள பேரினவாதிகளால் அழுத்கம முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராட வேண்டும். 2009ல் முள்ளிவாய்க்காலில் எங்கள்மீது இனக்கொலையை கட்டவிழ்த்த அதே சக்திகள் கொலைவெறியோடு அழுத்கம வீதிகளில் அலைகின்றன. அந்த சிங்கள பெள்த்த பாசிச வாதிகளை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தப்ப விட்டுவிடக்கூடாது.

உலக, தமிழக வீதிகளில் இறங்கி அழுத்கம படுகொலைகளை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவேன்டுமென உலகத் தமிழகளிடம் வேண்டுகிறேன்.

சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள். எல்லா தரப்பிலும் தவறு இருக்கு. ஆனால் முதல் எதிரி ஏனையோர் என பேதப் படுதுவதில் இருந்தே வரலாறில் வெற்றிபெற்ற எல்லா அரசியல் நடவடிக்கைகளும் ஆரம்பித்தன. எல்லோரையும் முதல் எதிரியாக்கி தனிமைப் படாமல் விடுபடவேன்டும்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளோபல் தமிழ் செய்தியாளர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108258/language/ta-IN/article.aspx



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 22:12

அடுத்து பிரிந்து நிற்காதீர்கள். ஒன்று படுங்கள் என எழுதியது உங்கள் முஸ்லிம் சமுதாயத்தினரை தான்.

கடந்த காலத்தில் தமிழனென சொல்லி கொண்டு ஆயிரத்தெட்டு பெயர்களில் இயக்கங்களை உருவாக்கி ஆளையால் காட்டிக்கொடுத்து நாம் தீட்டிய கத்தியின் கூர்முனை கொண்டே நாம் அழிந்தது போல் உங்களுக்குள் பிரிவினை வேண்டாம் எனும் நோக்கில் மட்டுமே எழுதினேன்.

நீங்கள் பிரிந்து போனதாய் குற்றம் சுமத்தவில்லை. இலங்கை தமிழரெனும் முறையில் வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது குறித்து நானும் வெட்கப்படத்தான் செய்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 22:16

Nisha wrote:அடுத்து பிரிந்து நிற்காதீர்கள். ஒன்று படுங்கள் என எழுதியது  உங்கள் முஸ்லிம் சமுதாயத்தினரை  தான்.

கடந்த காலத்தில்  தமிழனென சொல்லி கொண்டு ஆயிரத்தெட்டு பெயர்களில்  இயக்கங்களை உருவாக்கி ஆளையால் காட்டிக்கொடுத்து நாம்  தீட்டிய கத்தியின் கூர்முனை கொண்டே நாம் அழிந்தது போல் உங்களுக்குள் பிரிவினை வேண்டாம் எனும் நோக்கில் மட்டுமே எழுதினேன்.

நீங்கள்  பிரிந்து போனதாய் குற்றம் சுமத்தவில்லை. இலங்கை தமிழரெனும்  முறையில் வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது குறித்து நானும் வெட்கப்படத்தான் செய்கின்றேன்!

முஸ்லிம்களுக்குள்ளும் சில கட்சிப்பிரிவினை இன்னும் சில பிரிவினை இருக்கத்தான் செய்கிறது என்றுதான் ஒன்று படுமோ இந்த சமுதாயம் கவலை ஒரு பக்கம் கோபவம் ஒரு பக்கம் வெறுப்பு ஒரு பக்கம் இதுதான் வாழ்க்கை என்று வாழ வேண்டியதுதான்

யுத்தமில்லாத தீவென்று வேண்டும் வேண்டும் அதில் நல்லவர்கள் மட்டுமே வாழ வேண்டும் கிடைக்குமா??


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 22:20

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வெளியூர் படிப்பறிவில்லா  அப்பாவிமக்கள் தான் சிந்தனை திறன் இன்றி இவர்கள்  போடும்  எலும்புத்துண்டுகளுக்கு ஆசைபட்டு வன்முறையை கையிலெடுப்பார்கள்! அதற்காக தானே குடும்பகட்டுப்பாடின்றி  வரை முறைய்ன்றி  பிள்ளைகளை பெற்றெடுங்கள் என அரசு ஊக்குவிக்கின்றது!

பள்ளிவாசல்களில் தங்கியதை சொல்கின்றீர்கள்.  உங்கள் வீடு வாசல்களை தம்முடையதென உரிமை கோரி  வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் நிலை இன்னும் வரவில்லை என சந்தோஷப்படுங்கள்.

அதற்குள்” சுதாகரித்து ஒன்றுபட்டு கொள்ளுங்கள். கடந்த காலம் போல் பிரிந்தே நிற்காதீர்கள்!
நாங்கள்தான் பிரிந்து நின்றோம் என குற்றம் சுமத்துகிறீர்கள் நாங்களாக பிரிய வில்லை பிரித்து விரட்டி அடிக்கப்பட்டோம்  )* 

பழைய கதை பேசினால்  அதன் காரண காரியங்கள்  நம் அரசியல் தலைவர்கள் நமக்கிட்டு சென்ற தவறுகள் நமக்குள் வலியையே தரும்.  பிரித்து விரட்டியது தப்புத்தான். ஆனால் ஏன் விரட்டினார்கள் என ஆராய்ந்தறிந்தோமா?

நான் இந்த உலக்த்தில் தமிழனென எவன் சொன்னாலும் அவனுக்குள் ஒற்றுமை இல்லை.  கீரைகடைக்கு எதிராய் கீரைக்கடை போட்டு  நான் அழிந்தாலும் பரவாயில்லை  நீ நல்லா இருக்க கூடாது எனும்  மனப்பாங்கு அதிகம்!

எக்காலத்திலும் எட்டர்ப்பர்களை நாம் நமக்குள் தான் நல்லா உரம் போட்டு விளைவிக்கின்றோம். அப்படி இருக்கும் போது சிங்கள அரசினை குறை சொல்லி என்ன பயன்?



ஒரு சிலரின் தவறினால் ஒட்டுமொத்த இனத்தையும் நாம் தவறாக எண்ணி விட முடியாது சரி நமது புரிதல் நமது சமூகத்தின் புரிதலாக ஆண்டவன் ஆக்கித்தரவேண்டும் ஆமீன்


பேசத்தான் வேண்டும், பேசினால் என்ன!

மலேசிய தமிழர், சிங்கபூர் தமிழர். இலங்கைத்தமிழர். ஏன் தமிழ் நாட்டை தாய்பூமியாக் கொண்ட தமிழ் நாட்டுதமிழர் கர்னாடாகாவில் படும் கொடுமை.. தமிழ் நாட்டுக்குள் வாழும் தமிழனுக்குள் ஜாதி வேறுபாடுகள் அந்தந்த இடங்களில் அடி படும் போது நான் என்றாவது நம்தமிழர் எனும் மொழி உணர்வால் இணைந்தோமா?

இது்வே ஒரு மலையாளியிடம், கன்னடனிடம் ஏன் சிங்களவன் கூட
செய்வது தவறென தெரிந்தாலும் தன் இனத்தான் எனும் நோக்கில் அவன் செய்யும் தவறுகளை மறைத்து அவனுக்கு சாதகமாகத்தானே இருக்கின்றான். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமா அரசியலில் இதுதானே நடக்கின்றது.

தமிழர் நாம் நெஞ்சை நிமிர்த்தி இப்படி சொல முடியுமா?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 22:25

நிச்சியமாக முடியாது  #* #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 22:41

அப்புறம் ஏன் ஒரு சிலர் செய்வதை வைத்து எடை போடல் கூடாது.

இன்றைக்கு இலங்கைக்கு அழுத்தம் தரகூடிய நிலையில் இருக்கும் இந்திய அரசியலில் இலங்கை குறித்த முடிவெடுக்க கூடிய ஆலோசனை சொல்ல கூடியோராய் மலையாளிகள் இருப்பதும்... தமக்கான வாய்ப்பை பயன் படுத்தி தமக்கும் சிங்களருக்குமிடையில் இருக்கும் தாயாதி உறவுக்காக தமிழருக்கு எதிரான் தீர்மானங்களை எடுக்க வைப்பதும் உங்களுக்கு தெரியுமா?

ஆனால் சர்வ அதிகாரமும் கொண்டதாய் சொல்லிகொள்ளும் நம் தமிழ் அரசியல் வாதிகள் கோடிகோடியாய் சொத்துக்களை சேர்த்து தம் குடும்பத்தினை உயத்தும் சுயனலவாதிகளாயும், புல்லுருவிகளாயும் இருந்து லஞ்ச லாவண்ய வழக்குகளில் சிக்கி முழுத்தமிழினமுமே தலை குனியும் சூழலை உருவாக்குவது புரியுமா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இரு சிலரை வைத்து ஏனையோரை எடை போடகூடாதென சொல்லி நம்மை நாம் ஏமாற்றாமல் இருப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 22:51

நிஷா மேடம் மிக அருமையாக...எழிமையாக...

கூறிய கருத்துப் பதிவு யதார்தமாகும்,,,....

 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இரு சிலரை வைத்து ஏனையோரை எடை போடகூடாதென சொல்லி நம்மை நாம் ஏமாற்றாமல் இருப்போம்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum