சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

Go down

Sticky ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

Post by ராகவா on Wed 18 Jun 2014 - 20:43

புதுடில்லி : ஈராக்கில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 40 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. ஈராக்கின் மோசூல் நகரில் நடைபெற்ற கலவரத்தில் ஜூன் 10ம் தேதியன்று பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 40 இந்தியர்கள் மட்டுமின்றி ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பலரையும் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 24 மணிநேர தொலைப்பேசி சேவை மையத்தையும் இந்திய அரசு நிறுவி உள்ளது.
அமைச்சகம் உறுதி : ஈராக்கில் மோசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் 40 பேரை ஜூன் 10ம் தேதி முதல் காணவில்லை எனவும், அவர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இத்தகைய சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டதை உறுதி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் இதுவரை எந்த இந்தியரும் தாக்கப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் கடத்தலா? : ஈராக்கில் சன்னி பயங்ரவாதி அமைப்பினர் அரசுக்கு எதிராக போர் நடத்தி வருகின்றனர். இதனால் மோசூல் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மோசூல் நகரில் சுமார் ஆயிரக் கணக்கான இந்தியர்கள் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேரடி ஒப்பந்தம் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், நிர்வாகத்தால் முறையாக பதிவு செய்யப்படாமல் அவர்கள் ஈராக் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மோசூலில் பணியாற்றிய இந்தியர்கள் 40 பேரை கடத்திச் சென்றிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அவசர தொலைப்பேசி சேவை : ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்களையும், நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களையும் மீட்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அங்குள்ள தூதரகம் மூலம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்தியர்கள் குறித்து தகவல் தரவும், ஈராக்கில் இருந்து வெளியேற உதவி பெறவும், 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை இந்திய அரசு அங்கு திறந்துள்ளது. மாயமாகி உள்ள 40 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் குறித்து தகவல் அறிந்தால் அந்த எண்ணிற்கு அழைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இவர்களை மீட்பதற்காக, இந்திய விமானப்படைக்கு சொந்மான விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவைச் சேர்ந்த 46 நர்ஸ்களும் ஈராக்கில் சிக்கி உள்ளனர். தாங்கள் அங்கு கைதிகளைப் போன்று உள்ளதாகவும், தங்களை உடனடியாக மீட்குமாறும் அவர்கள் தகவல் அனுப்பி உள்ளனர்.
இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளின் நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனை அறிவதற்காக ஈராக்கிற்கு முன்னாள் இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி இன்று பாக்தாத் செல்ல உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொள்வதற்கு +91 11 2301 2113, +91 11 2301 7905, +91 11 2301 4104 ஆகிய அவசர எண்களும், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கு +964 770 444 4899, +964 770 484 3247 ஆகிய எண்களும் தரப்பட்டுள்ளது. கடைசிச் செய்தி: ஈராக்கின் பஸ்ரா என்ற இடத்தில் சுமார் 1000 இந்தியர்கள் சிக்கி தவித்து வருவதாக தூதரகத்திற்கு தகவல் வந்துள்ளது. அவர்களை மீட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 23:51

இவர்களைத்தேட  நமது சேனைப் படையும்...

கிளம்பிட்டோ....

யாறையுமே காணோம் சேனையில் ???????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

Post by Nisha on Thu 19 Jun 2014 - 0:20

அனைவரும் எந்த சிக்கலுமின்றி அவரவர் வீடு திரும்பிட நாம் பிராத்திப்போம்!

சில நாட்கள் முன் இராணுவத்தினர் 1700 பேரை சுட்டு கொன்று இணையத்தில் வெளியிட்டிருந்ததாய் அறிந்தேன். எவருக்கு கட்டுப்படாத மூலம் எங்கென இன்னும் அறியப்படாத கொடூர மனம் கொண்டவர்களாக இந்த தீவிர வாதிகள் இருக்கின்ரார்களாம்.

இந்தியர்களை கடத்திய விடயத்தில் அல்கொய்தாவே எதிர்பார்க்காத விடயம் என செய்தி வருகின்றது.

யாராயிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி வீடு திரும்ப பிராத்திப்போம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 2:07

யாராயிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள்...

 எந்த பிரச்சனையும் இன்றி வீடு திரும்ப...

 நானும் இறைவனைப்  பிராத்திக்கிறேன்!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஈராக்கில் 40 இந்தியர்கள் மாயம்: மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum