சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலக்கும் ஒர்க்ஷாப் தொழிலாளி..!

Go down

Sticky மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலக்கும் ஒர்க்ஷாப் தொழிலாளி..!

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:20



திருநெல்வேலி : நெல்லையை சேர்ந்த இளைஞர் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் வெற்றிபெற்று சாதனைகளை எதிர்நோக்கியிருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள நந்தகோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் திரவியம், அன்னக்கொடி தம்பதியின் மூன்றாவது மகன் ராமகிருஷ்ணன். கன்கார்டியா பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். குடும்ப சூழல் காரணமாக, பெற்றோரின் குடும்ப சுமையை பங்குபோட்டுக்கொள்ள தமது 14 வயதிலேயே வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தார். வழக்கமாக இதுபோல வேலையை கற்றுக்கொள்பவர்கள், புதிதாக பக்கத்திலேயே இடம் பார்த்து இன்னொரு ஒர்க்ஷாப் வைப்பதில்தான் குறியாக இருப்பார்கள். ஆனால் ராமகிருஷ்ணனோ, மோட்டார் சைக்கிளின் தொழில்நுட்பத்தை ஆர்வமாக கற்றுக்கொண்டதோடு அதனை வேகமாகவும் லாவகமாக ஓட்டக்கற்றுக்கொண்டார். அவரது ஆர்வம் காரணமாக இன்றைக்கு தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பங்கெடுத்து பரிசுகள் பெற்றுவருகிறார். கடந்த மார்ச் மாதம், கோவையில் நடந்த இந்திய அளவிலான ஐஎம்எல் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 130 சிசி பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தார். முறையாக பயிற்சி எடுத்துக்கொள்ளாமல் தாம் பங்கேற்ற முதல்போட்டியிலேயே மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து பந்தய நுட்பங்களை கற்றுத்தேரும் ராமகிருஷ்ணன் வரும் ஜூலை ஆறாம் தேதி ஆறாம் தேதி முதல் மூன்று நாட்கள் சென்னையில் நடக்கும் எப்எம்எஸ்சிஐ அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்க வருபவர்கள் பணக்கார வீட்டு வாரிசுகளாகவும், பொழுதுபோக்கிற்காகவும் பங்கேற்கிறார்கள். பயிற்சிக்காகவும் தங்களது வண்டிகளை தயார் செய்யவும் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் ராமகிருஷ்ணனுக்கு அத்தகைய வசதியில்லை. சென்னையில் போட்டி நடக்கும் டிராக் வளாகத்திலேயே தங்கியிருந்து பயிற்சிபெற்றுவருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெரிய அளவில் படிப்பறிவு இல்லை. இருப்பினும் பைக் ரேசில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதற்காக சில நண்பர்களின் உதவியோடு சென்னை சென்றேன். முதல் போட்டியிலேயே சாதித்தேன். ஸ்பார்க் ரேஸிங் என்ற அமைப்பின் சார்பில் பங்கேற்கிறேன். சென்னையில் வசிப்பவர்கள், எளிதாக பயிற்சி பெற முடியும். நான் ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் பயிற்சி எடுத்துக்கொள்ள நெல்லையில் இருந்து சென்று வர ஆயிரக்கணக்கில் செலவாகிறது. வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்தடுத்து நிலைகளுக்கு கொண்டுசெல்ல ஸ்பான்ஷர்ஷிப் கிடைக்கிறது. ஆனால் நான் அதற்கு முயற்சிக்கவில்லை. இருப்பினும் நடக்க இருக்கும் போட்டிகளில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். கோவையில் இவர் வெற்றிக்கோப்பையோடு திரும்பியதை பார்த்த ஒரு திருநெல்வேலி தொழிலதிபர், நீ நம்மூராடே..பரவாயில்லையே மக்கா..நல்லா பயிற்சி எடுத்திருக்கிறாயே என பாராட்டினாராம். நெல்லையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் குறித்த புரிதலோ, பயிற்சிக்கான களமோ இல்லாத நிலையில் பயிற்சிக்காக சென்னை சென்றுவருகிறேன் என்றார்.

நெல்லை வள்ளியூரில் தமது மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் தொழிலையும் பார்த்துக்கொண்டு தமது 24 வயதில், தேசிய அளவில், சர்வதேசஅளவில் சாதிக்க துடிக்கும் ராமகிருஷ்ணனுக்கு நீங்களும் உத்வேகமளிக்க நினைத்தால் 9994961028 என்ற எண்ணில் பகிரலாமே..!

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலக்கும் ஒர்க்ஷாப் தொழிலாளி..!

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 23:03

நெல்லை வள்ளியூரில் தமது மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் தொழிலையும் பார்த்துக்கொண்டு தமது 24 வயதில், தேசிய அளவில், சர்வதேசஅளவில் சாதிக்க துடிக்கும் ராமகிருஷ்ணனுக்கு நாமும் சேனையின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்......
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum